1. 2001 பொங்கல் ஃபிரண்ட்ஸ் பொங்கல்,2005 பொங்கல் திருப்பாச்சி பொங்கல்
2007 பொங்கல் போக்கிரி பொங்கல்,2011 பொங்கல் காவலன் பொங்கல்,
நான் என்ன கேக்குறேன்ன்னா தமிழன் சந்தோஷமான பொங்கலை கொண்டாடவே
முடியாதா? # டவுட்
2.நவீன திருவிளையாடல் ஆர்கியூமெண்ட் இன் டாஸ்மாக்
அன்புக்கு - பார் ,அறிவுக்கு - பீர், அழகுக்கு - ஒயின் , பண்புக்கு - பிராந்தி,
பாசத்துக்கு - குவாட்டர், நேசத்துக்கு -நெப்போலியன் ,சண்டைக்கு - ஃபுல்
நட்புக்கு - கட்டிங்க் ,வம்புக்கு - ஓல்டு மங்க் ,வெறுப்புக்கு -விஸ்கி
வாங்க - நீ, குடிக்க - நான்
3. டீச்சர் - நான் இங்கே நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன்..லாஸ்ட்
பெஞ்ச்ல ஆளுங்களையே காணோமே..?
உங்களுக்கு பொறை பிஸ்கெட் வாங்க போய் இருக்காங்க..
4. வைவா எக்சாம் 5 நிமிஷம்தான்னு சொன்னாங்களேன்னு நம்பி போனேன்,
அங்கே 5 பேரும்மா,மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க,என்னால முடிஞ்ச வரை
பதில் சொன்னேன்,திடீர்னு ஒருத்தன் ஹெச் ஓ டி -க்கு ஃபோனைப்போட்டு
மச்சான் ஃபிரியா இருந்தா வாடா ,ஒருத்தன் சிக்கி இருக்கான் அப்படின்னு
சொன்னான்,அவன் பிஸியா இருக்கானாம் என்னை கிரவுண்ட் ஃபுளோருக்கு
வரச்சொன்னான்.ஹெச் ஓ டி தானே கூப்பிடறார்னு நானும் நம்பி
கிரவுண்ட் ஃபுளோருக்கு போனேன்,அங்கே மொத்தம் 8 பேரும்மா,
அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொஸ்டீன்ஸ் கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம்தான் ஆன்சர் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது?
அதுல ஒருத்தன் சொன்னான் - எவ்வலவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறாண்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு...அவ் அவ்
5. ஒரு ஸ்கூல்ல குழந்தைகளுக்கான போட்டி நடந்தது,
போட்டியோட தலைப்பு -அப்பா எனக்காக செய்த அழகான விஷயம்
பரிசு பெற்ற பதில் - எங்கம்மாவை கல்யாணம் பண்ணுனது
6. சுயநலம் இல்லா பொது நலம்
கடவுளே,எனக்குன்னு நான் எதுவும் உன் கிட்டே கேட்கலை,
எங்கம்மாவுக்கு மட்டும் நல்ல சூப்பர் ஃபிகர் மருமகளா வேணும் அவ்வளவுதான்.
7. காதல் என்பது பீர் போல ,கூலிங்க் இல்லை என்றால் கசக்கும்
ஆனா ஃபிரண்ட்ஷிப் என்பது சரக்கு மாதிரி,கூலிங்க்
இல்லைன்னாலும் கிக் இருக்கும்.
8. மரணம் மனிதனின் கண்களுக்கு தெரிவதில்லை,அதனால்தான் அவன்
பெண்களை நேசிக்கிறான்.
9. விஜய் சார் ! ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்துல ஏன் நடிச்சீங்க?
டி வி லயாவது நான் நடிச்ச படம் 100 நாள் ஓடட்டும்னுதான்.
10. பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் ஜோக்
பெற்றோரை விட பெரியவங்க,மரியாதைக்கு உரியவங்க யாரும் இல்லை
so சீக்கிரமா கல்யாணம் பண்றோம்,பெற்றோர் ஆகறோம்.
டிஸ்கி -1 : கேட் வின்ஸ்லேட்டுக்கும், இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேக்காதீங்க.. ஏன்னா எனக்கும் பதில் தெரியாது. சும்மா கிளாமருக்கு...
டிஸ்கி 2 - விஜய் ரசிகர்கள் இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது..சும்மா ஜாலிக்குத்தான்...(ஃபோன் பண்ணி திட்டறாங்க...அவ் அவ்)