Showing posts with label vijay sethupathi. Show all posts
Showing posts with label vijay sethupathi. Show all posts

Monday, December 03, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

http://starmusiq.com/movieimages/Naduvula-Konjam-Pakkatha-Kaanom_B.jpg 

தமிழ் சினிமாவின் கலக்கலான காமெடி படங்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் இளைய தலைமுறையின் கண்களுக்கு உள்ளத்தை அள்ளித்தா முதல் இடத்தில் இத்தனை நாள் வந்தது .இனி இந்தப்ப்டமும் அந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்.ஸ்டார் வேல்யூ இல்லாமல் லோ பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான வெற்றிப்படம் கொடுத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள் .


ஹீரோவுக்கு இன்னும் 2 நாள்ல கல்யாணம் .ஃபிரண்ட்ஸ் கூட ரூம்ல அவர் கவலையா இருக்காரு . பல டென்ஷன்ஸ், ஏன்னா அது ஒரு லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ் . ரிலாக்ஸா இருக்க கிரிக்கெட் விளையாடறாங்க.ஹீரோவுக்கு தலைல அடிபட்டு கடந்த 2 வருட வாழ்க்கையை மட்டும் மறந்துடறாரு .அவங்க ஃபிரண்ட்ஸ் ஹீரோவுக்கு வந்த வியாதியை மறைச்சு மேரேஜை நடத்த போடும் காமெடி கலக்கல் டிராமா தான் கதை . 


முத்ல்ல இயக்குநரை எழுந்து நின்று மரியாதையுடன் மான்சீகமா கை குலுக்கிக்கறேன்.என்னா ஒரு தன்னம்பிக்கை ? தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள் இதுல கம்மி . இல்லைன்னு கூட சொல்லலாம். கதையோட ஒன் லைன் கேட்பவங்க இது சாதா கதைதானே? அப்டினு நினைப்பாங்க. ஆனா  ரெண்டே முக்கால் மணி நேரம் இவர் நடத்திய காமெடி  ராஜாங்கம் ஆஹா!!! 

http://cdn4.supergoodmovies.com/FilesFive/naduvula-konjam-pakkatha-kaanom-movie-stills-598909a4.jpg

 ஹீரோ விஜய் சேதுபதி அபாரமான அண்டர் ப்ளே ஆக்டிங்க். படம் முழுக்க இவர் பேசும் ஒரே வசனம் 17 முறை வருது - “ நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் ஸ்லிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சு?  பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா?  அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும் -இதை சீரியசாக அவர் சொல்ல அதற்கு நண்பர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புது ரீ ஆக்‌ஷன் குடுக்க  பி ஜி எம்மில் கலக்கி விட்டார்கள் .


 க்ளைமாக்சில் ரிசப்ஷனில் ஹீரோயின் ஓவர் மேக்கப் முகத்தைப்பார்த்து “அய்யய்யோ , பேய் , மாதிரி இருக்காடா. யார் இவ? என கேட்கும் காட்சிகள் குபீர் ரகம் .

 ஹீரோயின் காயத்ரி   காஜில் அகர்வாலுக்கு சித்தி பொண்ணு மாதிரி ஒரு முகச்சாயல் .செம கலர் . ஹோம்லி லுக் . நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு . குட் ஆக்டிங்க் . நல்ல எதிர்காலம் உண்டு . 


நண்பர்களாக வரும் மூவரும் நடிப்பில் கலக்கல் .யாருமே செயற்கையாக நடிப்பது போல் தெரியலை . 


http://moviegalleri.net/wp-content/gallery/gayathri-hot-stills/tamil_actress_gayathri_hot_stills_ponmaalai_pozhudhu_audio_release_0463.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தோட ஓப்பனிங்க் கில் நிதானமாக வரும் கிரிக்கெட் மேட்ச் காமெடி செம காமெடி . படத்தைப்பற்றிய கவலையே இல்லாமல் கிரிக்கெட் ஆட்டம் பிடிக்காதவர்கள் கூட சிரித்துப்பார்க்கும் அளவு சிச்சுவெஷன் காமெடி.. அதிலும் ஒவ்வொரு முறை அவுட் ஆகும்போதும் அதை ஒத்துக்கொள்ளாமல் சாக்கு சொல்வது செம 


2. படத்தின் சீரான திரைக்கதை அமைப்பு அபாரம் .ஹீரோ - ஹீரோயின் டூயட்டோ , அவங்களுக்கான காதல் எபிசோடை காட்ட ஏகப்பட்ட வாய்ப்பு இருந்தும் புத்திசாலித்தனமாக அதைத்தவிர்த்த விதம்  அருமை .


3. காரில் அட்ரஸ் கேட்டு வந்த ஆளிடம் உள்ளங்கையில் மேப் போட்டு குழப்பும் இடம் 


4. ஹாஸ்பிடலில் ஹீரோவின் நண்பர் ஃபோனில்  பேசும்போது ஹாஸ்பிடலில் உள்ள அனைவரும் அவரை மெண்டல் என எண்ணுவது போல் வசனம் பேசும் காட்சி  அதகளம்


5. ஹீரோ சலூனில் ஃபேசியல் பண்ணும்போது   சலூன்காரர் , நண்பர்கள் அடிக்கும் அலப்பறை காமெடி 15 நிமிஷம் கலக்கல் 


6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் க்ளைமாக்சில் ரிச்பஷன் சீன், மேரேஜ் எபிசோடு செம காமெடி .. சீரியசாக முகத்தை வைத்து அனைவரும் சோக வசனம் பேசறாங்க, ஆனா ஆடியன்ஸ்க்கு செம சிரிப்பு . இந்த வகைக்காமெடி கமல் மும்பை எக்ஸ்பிரஸ்ல முயற்சி பண்ணி இருந்தார். தமிழ் மக்களுக்கு இது புது வகை அனுபவம் 


7. ஹாஸ்பிடலில் ஜே பி க்ளினிக் ரிசப்ஷன் ஆக வரும் ஃபிகர் , தோழி  லக்‌ஷ்மியாக வரும் ஃபிகர் இரண்டு பேருக்கும் தனி ஹீரோயினாக நடிக்கும் அள்வுக்கு அழகு இருக்கு பிளிச் பிளிச்  சாரி பளிச் பளிச்


8. க்ளைமாக்ஸ் முடிச்சை அவிழ்த்த விதம் அருமை. நான் கூட பீட்சாவில் வருவது போல் ஹீரோவின் டிராமா என சொல்வாங்க என எதிர்பார்த்தேன். ஆனா நிகழ்தக்வு , தற்செயல் சாத்தியக்கூறுகள் மூலம் பிரச்சனையை முடித்த விதம் அழகு 


9. நீ என் பேச்சை கேட்பியா? மாட்டியா? என நண்பன் கேட்கும் 13 முறையும்  ஹீரோ “ டேய். நீ சொன்னா பில்டிங்க்ல இருந்து கூட குதிப்பேண்டா” என சொல்வதும் அதை அங்குசமாக வைத்தே காரியத்தை சாதிப்பதும் கலக்கல் காட்சிகள் 


10 . அதே நண்பன் சந்தர்ப்ப வசத்தால் மேடையை விட்டு செல்ல நேரும்போது இன்னொரு நண்பன் அதே டயலாக் மூலம் கட்டுப்படுத்த நினைக்கும்போது “ நீ யார்டா? நான் ஏன் உன் பேச்சை கேட்கனும்? என ஹீரோ திரும்புவது வெடிச்சிரிப்பு . அவர் ஏன் அவரிடம் மட்டும் கட்டுப்படறார் என்பதற்கான ஃபிளாஸ்பேக் கதை செம காமெடி 


11. ஒளிப்பதிவாளர் பிரேமின் வாழ்க்கையில் நடந்ததைத்தான் படமாக்கியிருக்கிறார்கள் , உண்மைசம்பவம் என்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்.  


12. மன்ஸ்தாபத்தால் பிரிந்த அண்ணன்  வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு வருவதும் பழசை மறந்த ஹீரோ அவரைக்கொஞ்சுவதும் அதைக்கண்டு அண்ணன் உருகுவதும் காமெடி கலட்டாக்கள் 


13. கஜினியில் ஏ ஆர் முருகதாஸ் கொண்டு வந்த ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் மேட்டரை இப்படியும் காமெடி ஆக்க முடியும் என்று நிரூபித்த விதம் மார்வலஸ்

http://www.lateststills.com/wp-content/uploads/2012/05/Mathappu-Actress-Gayathri-Cute-Photos1-300x300.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கிரிக்கெட் கிரவுண்ட்டில் ஹீரோ நிற்கும் இடத்தை லாங்க் ஷாட்டில் காட்டும்போது மணல் இருக்கு. பின் க்ளோசப்பில்  கேட்ச் பிடிக்கும் காட்சியில் செங்கல் இருக்கு, அதில் தட்டி விழுந்து  அடி படுது. பொதுவா கிரிக்கெட் மேட்ச் ஆடும் முன் க்ளீனாக கல் எல்லாம் பொறுக்கி போட்றுவாங்க 



2. ஹீரோவின் நண்பர் வீட்டில் ஒரு ரூமில் 4 பேர் இருக்காங்க. அங்கே அடிக்கடி மீட் பண்ற இடம். அங்கே ஒரு வாட்டர் கேன் கூட இருக்காதா? அடிக்கடி வெளீல வந்து தண்ணீர் எடுத்துட்டு வருவாங்களா? 



3. ஹீரோவை அந்த ஹாஸ்பிடலில் இல் இருந்து எஸ் ஆக வைக்கும் சீன் நம்ப முடியலை . ஃபீஸ் ஏதும் கட்டாம எப்படி விடறாங்க? இத்தனைக்கும் அந்த நர்ஸ் வாசல்ல அவங்களை பார்த்துடறா. பார்த்ததும்,  செக்யூரிட்டி கிட்ட சொன்னா பிடிச்சுடப்போறான், அதை விட்டுட்டு உள்ளே ஓடுது 


4. ஹீரோவுக்கு பழசு எல்லாம் மறந்துடுது . ஹீரோயின் ஃபோட்டோவைக்காட்டினா நினைவு வருமா? என பார்க்க அறை முழுவதும் தேடுறாங்க ஏன்? ஹீரோ செல் ஃபோன்ல இருக்காதா? இந்த காலத்துல நேத்து பார்க்கும் நல்ல சைட்டின் ஃபோட்டோவைக்கூட ஸ்க்ரீன் சேவரா வெச்சிருக்காங்க.. தான் கட்டிக்கப்போகும் காதலியின் ஃபோட்டோ செல் ஃபோன்ல இருக்காதா? 


5. ஹீரோவுக்கு நினைவு தப்புன மேட்டரை பொண்ணு வீட்டுல சொல்லாம இருப்பது ஓக்கே , மேரேஜை நிறுத்திட்டா என்ன பண்ண? ஒரு காரணம் இருக்கு. ஆனா உயிருக்கு உயிரா பழகிய காத்லியும் மணப்பெண்ணுமான ஹீரோயின் கிட்டே ஏன் சொல்லலை? அது கூட தேவலை. ஹீரோவின் பெற்றோருக்கு சொல்லலை ஏன்? 


6. ஹீரோயின் 86 மிஸ்டு கால் விட்டும் ஹீரோவை ஃபோனை எடுக்க விடாம சைலன்ட் மோடில் போட்டிருக்காங்க நண்பர்கள். ஓக்கே , ஆனா ஹீரோயினுக்கு டவுட் வராதா? நண்பர்களை தொடர்பு கொள்ள முடியுது, நாயகனை பிடிக்க முடியலை  ஏன்னு?


7. ரிசப்ஷன் ல  ஹீரோயின் பக்கம் ஹீரோ நிக்கும்போது பார்க்கும் நமக்கே டவுட் வருதே . லவ் பொண்ணுன பொண்ணால ஏதோ வித்தியாசம் தெரியுதே? என்ன? என உணர முடியலையா? 


8. கல்யாண முகூர்த்தத்துக்குத்தான் பொண்ணுக்கு அதீத மேக்கப் போடுவாங்க, ரிசப்ஷனுக்கு அதை விடக்கம்மியா இருக்கும். இது பொது. ஆனா ஹீரோயின் ரிசப்ஷன்ல செம மேக்கப் , மேரேஜ் முகூர்த்தத்தின் போது சோ சிம்ப்பிள் ,ஏன்?


9. மேரேஜ் டைம்ல ஹீரோயின் கைல மருதாணியோ , மேஹந்தியோ வைக்கவே இல்ல. மற்ற பட்ங்களுக்கு ஓக்கே. ஆனா படத்தின் பெரும்பகுதி மேரேஜ் ரிலேட்டடா ஓடும்போது இது முக்கியம் இல்லையா?


10. ஹீரோயின் அத்தனை டைம் கால் பண்ணியும் ஹீரோ அட்டெண்ட் பண்ணலை. ஏன் என்னாச்சு என் மேல கோபமா? என ஒரு டைம் கூட ஹீரோயின் மெசேஜே அனுப்பலையே? ஏன்?


11. ஹீரோவிடம் அவர் காதலியுடன் இருக்கும் ஃபோட்டோவைக்காட்டி இதுதான் உன் லவ்வர் , நீ பழசை எல்லாம் மறந்துட்டே என்று சொன்னால் மேட்டர் ஓவர் , ஏன் யாருமே அதை ட்ரை பண்ணலை? 

http://tamil.cinesnacks.net/photos/actress/Gayathri/gayathri-actress-054.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.நீங்க மட்டும் சரியான ஆம்பளைங்களா இருந்தா ஃபர்ஸ்ட் எங்களை வின் பண்ண விடுங்கடா பார்ப்போம் 


2. ஏ ஆர் ரஹ்மான் மியூசிக்ல சிவாஜியா? அது எப்போடா நடந்துச்சு? 

சிவாஜிதான் செத்துப்போய்ட்டாரே?

 என்னது? சிவாஜி செத்துட்டாரா? அது எப்போ? 



3. தெரிஞ்ச டாக்டரைப்போய் பார்ப்போமா? 


 நமக்கு ஏதுடா தெரிஞ்ச டாக்டர்?



4. டாக்டர் -  கிரிக்கெட் ஆடும்போது கீழே விழுந்து அடி பட்டுடுச்சு, அவ்ளவ் தானே? இதுக்கு ஏன் இப்படி இழுத்து சொல்றீங்க? 


5. வாய்ல எதுக்கு வெள்ளரிக்கா?

 குளிர்ச்சிக்கு


 கண்ல தானே வைப்பாங்க? 


அது வந்து ம் வாய் சிவக்கும் 



6. என் பிள்ளை எப்பவும் இப்படித்தான். எதையும் மனசுல வெச்சுக்க மாட்டான் , எல்லாத்தையும் மறந்துடுவான் 



7. உள்ளே தாழ்ப்பாழ் போட்டு மாப்ளை என்ன பண்ணிட்டு இருக்கார்? 


 குளிச்சுட்டு இருக்கார் 


 ஆனா  கதவை தட்டுற சத்தம் கேட்குதே? 

 ஹி ஹி வெ:ளி;ல தாழ்ப்போட்டு உள்ளே குளிக்கிறார்



8. லைஃப்ல செட்டில் ஆகறீங்களோ இல்லையோ கல்யாணத்தை மட்டும் கரெக்டா பண்ணிடுங்கடா 



9. மச்சி , டிரஸ் எடுத்து தர்றியா? அவ்ளவ் நல்லவனா உன்னால இருக்க முடியுமாடா?



10 . அய்யய்யோ , பேய் , மாதிரி இருக்காடா. யார் இவ? 

 அண்ணே, அவர் என்ன சொல்றாரு?

 ஒண்ணுமில்லை, பாப்பாவை 

 ஓ பொண்ணு பேரு பாப்பா வா? 


11. எங்க வழக்கப்படி பொண்ணு மாப்ளை மேரேஜ்க்கு முன்பே ஒண்ணா உக்காந்து சாப்பிட  விட மாட்டோம் 


ம்க்கும் , ஒண்ணா சேர்ந்து ஊரையே சுத்தியாச்சு 



12. டாக்டர் - உண்மையை சொல்ல மாட்டேன், அதே சமயம் பொய்யும் சொல்ல மாட்டேன் 


http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/c116.0.403.403/p403x403/77041_500008860032248_1951892264_n.jpg



ஆனந்த விக்டன் எதிர்பார்ப்பு மார்க் - 45

 குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங்க் - நன்று


சி பி கமெண்ட் - கமல் கிரேசிமோகன் கூட்டணியில் எடுக்கப்பட்டிருந்தால் நகொப காணோம் இன்னும் பிரம்மாண்டமான காமெடி ஹிட் மூவி ஆகி இருக்கும். ஆனாலும் இது தமிழ் சினிமாவில் முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட் . 2012 இன் டாப் டென் படங்கள் லிஸ்ட் எடுத்தால் அவசியம் இடம் பிடிக்கும் படம் . ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்

அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html
 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD__Qhv-ZWDezNA81HENNEjM9d3Ja2_Kb9gnUkf8UIiqVVaUlkYxhd3_S_ejseuGd2PNeOZV-hWkOuBURK4rAuAW050q_ENClFWFAuwbuT1vijR8tQejpyMR_Qp2GMkUdE64lrFGZYn4eW/s640/Naduvula+Konjam+Pakkatha+Kaanom+Movie+Stills+Gallery+(2).JPG

Friday, November 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்


http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/c0.0.403.403/p403x403/305539_522349147778113_1533270271_n.jpg
லியோ விஷன் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரிக்கும் படம், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். விஜய் சேதுபதி, காயத்ரி நடிக்கிறார்கள். வேத்சங்கர் இசை அமைக்கிறார். சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியதாவது:


நல்ல கதை புத்தகம் படிக்கும்போது நடுவில் சில பக்கங்கள் காணாமல் போனால் அந்தக் கதையின் தொடக்கமும் முடிவும் அறுந்து போகும். அதுமாதிரி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இடையில் சில காலம் மறந்து போனால், என்னாகும் என்பதுதான் கதை. படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் எங்கள் நண்பர். சிறுவயதில் ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு சில வருடம் என்ன நடந்தது என்பது மறந்துவிட்டது. நாங்கள் நண்பர்கள் இணைந்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் அவருக்கு அந்த காலகட்டம் நினைவுக்கு வரவில்லை. இதை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை காமெடி கலந்து கொடுக்கிறோம். ஒளிப்பதிவாளர் பிரேமாக, விஜய் சேதுபதி நடிக்கிறார். எனது கேரக்டரில் ராஜ்குமார் என்பவர் நடிக்கிறார். சம்பவத்தில் தொடர்புடைய சிலர், அவர்கள் கேரக்டரிலேயே நடிக்கிறார்கள். தமிழில் இந்தப் படம் புது முயற்சியாக இருக்கும்.


நன்றி - விகடன்


புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படமான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் கடந்த 14ந் தேதியே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் சரியான தியேட்டர் கிடைக்காமல் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். முதலில் திரையிட ஒப்புக் கொண்ட தியேட்டர்கள். கடைசி நேரத்தில் வேறொரு பெரிய படத்துக்கு தியேட்டர்களை ஒதுக்கி நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்துக்கு காலைக் காட்சி, பகல் காட்சி என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனால் பயந்து போன தயாரிப்பாளர் படத்தை வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டார். பத்திரிகையாளர் காட்சியும் திரையிடப்பட்டுவிட்ட நிலையில் இப்போது விமர்சனம் எழுதி விடாதீர்கள். என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார். ஒரு சிறிய விபத்தால் சில வருடங்களை நினைவு இழக்கும் ஒருவனின் நிஜக் கதையை சொல்லும் படம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்,நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்ற பாடலின் 50 செகன்ட்ஸ் ஓடக் கூடிய வீடியோ இன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலைப் பார்க்கும் போதே, முழுப் பாடலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாடலின் பின்னணி இசை, படமாக்கப் பட்ட விதம் ஆகியவை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான அதிர்ச்சியாக, மைனா படத்தில் இடம் பெற்ற ஜிங்ஜிக்கா என்ற

குத்துப்பாடலுக்கு நடனம் ஆடிய டான்ஸ் மாஸ்டர் பாபி இந்தப் பாடலுக்கும் ஆடியுள்ளார். ஜிங்ஜிக்கா பாடலுக்குப் பின் வேறு எந்த பாடலுக்கும் முகத்தைக் காட்டாத பாபி, நீண்ட இடைவெளிக்குப் பின் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலுக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கூறிய பாபி," மைனா படத்திற்குப் பிறகு வேறு பாடல்களில் ஆடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன்.ஆனால் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலைக் கேட்கும் போதே, அது நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் 2012 ஆம் ஆண்டின் வெற்றிப் பாடலாகவும் இருக்கப் போகிறது” என்று கூறினார்.


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்,நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்ற பாடலின் 50 செகன்ட்ஸ் ஓடக் கூடிய வீடியோ இன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலைப் பார்க்கும் போதே, முழுப் பாடலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாடலின் பின்னணி இசை, படமாக்கப் பட்ட விதம் ஆகியவை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான அதிர்ச்சியாக, மைனா படத்தில் இடம் பெற்ற ஜிங்ஜிக்கா என்ற குத்துப்பாடலுக்கு நடனம் ஆடிய டான்ஸ் மாஸ்டர் பாபி இந்தப் பாடலுக்கும் ஆடியுள்ளார்.


ஜிங்ஜிக்கா பாடலுக்குப் பின் வேறு எந்த பாடலுக்கும் முகத்தைக் காட்டாத பாபி, நீண்ட இடைவெளிக்குப் பின் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலுக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கூறிய பாபி," மைனா படத்திற்குப் பிறகு வேறு பாடல்களில் ஆடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன்.ஆனால் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலைக் கேட்கும் போதே, அது நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் 2012 ஆம் ஆண்டின் வெற்றிப் பாடலாகவும் இருக்கப் போகிறது” என்று கூறினார்.

நன்றி - தினமலர்




அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html