Showing posts with label vellaippookkal review. Show all posts
Showing posts with label vellaippookkal review. Show all posts

Tuesday, June 16, 2020

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )



காதல் திருமணம் -பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரண்டுக்கும் என்ன வித்யாசம்? காதல் திருமணத்தில் ஆண் அந்தப்பெண்ணை மட்டுமே பார்ப்பான். ஆனால் பெற்றோர்  நிச்சயிக்கும் திருமணங்களில் பெண்ணின் பின் புலம், குடும்பப்பின்னணி எல்லாமே பார்ப்பாங்க இப்போ  எதுக்கு சம்பந்தம் இல்லாம இதை சொல்றேன்? தெரில 

+ஹீரோ போலீஸ் ஆஃபீசர் , ரிட்டையர் ஆகிட்டார், ஆனாலும் ஏதாவது கேஸ்னா அவரைக்கூப்பிடுவாங்க . அவருக்கு ஒரு பையன் , ஃபாரீன் ல இருக்கான்.  திடீர்னு அங்கேயே ஒரு பொண்ணை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான். கோபத்துல அப்பா 3 வருசமா பேசாம இருக்கார் . பிறகு ஃபாரீன் போய் பையன் கூட தங்கி இருக்கார்.


அங்கே அவங்க குடி இருக்கற இடத்துல 30  வயசுப்பொண்ணும் , கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ஸ்கூல் பையனும் கடத்தப்படறாங்க. அந்த 2 கடத்தலுக்கும் ஏதோ  லிங்க் இருக்குனு ஹீரோ நினைக்கறார். அது பற்றிய துப்பு துலக்கும்போது அவரோட மகனும் கடத்தப்படறார். இந்த மூன்றையும் செஞ்சவர் ஒரே ஆளா? வெவ்வேற ஆளா?  அதைக்கண்டு பிடிப்பதுதான் கதை \

ஹீரோவா , போலீஸ் ஆஃபீசரா சின்னக்கலைவாணர் விவேக் . புது ரோல் . மாறுபட்ட நடிப்பு ஆங்காங்கே அவரது டைமிங் ஜோக்குகள் உதிர்க்கவும்  தயங்க வில்லை போலீஸ் ஆஃபீசருக்கே  உரித்தான சந்தேக புத்தி , உண்மையைக்கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லாம்  அருமை . அவருக்கு சண்டைக்காட்சி எல்லாம் வைக்காமல் விட்டது  புத்திசாலித்தனம் 


அவரோட மகனா வர்றவர்  யதார்த்தமான நடிப்பு. மருமகளா வர்றவர் நிஜமாவே  ஒரு ஃபாரீன் பொண்ணு, பிரமாதமான நடிப்பு . முதல் பாதியில்  விவேக் ராஜ்ஜியம் எனில் பின் பாதியில் அல்லி ராஜ்ஜியம்   


சார்லி யும் படம் முழுக்க வருகிறார், அங்கங்கே சிரிக்க வைக்கிறார். விவேக்கும், சார்லியும் மட்டுமே தெரிந்த முகங்கள் , மற்றவர்கள் அனைவரும்  ஃபாரீன் முகங்கள் 


 ஒளிப்பதிவு பிரமாதம் என சிலாகிக்க முடியலைன்னாலும் ஓக்கே ரகம் , வேட்டையாடு விளையாடு டைப்பில் கதை , ஒளிப்பதிவு  இரண்டுமே 


ஒரு சிறுமி , அவரது அம்மா இருவரும் வில்லனின் பங்களாவில் அடைபட்டிருக்கும் கிளைக்கதை படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் வருது. அதை  கடைசியில் கனெக்ட் பண்ணிய உத்தி அபாரம் 


யூகிக்க முடியாத திருப்பம் தான் க்ரைம் த்ரில்லர்களின் பிளஸ். அந்த  வகையில்  இது டபுள் பாசிட்டிவ்


இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகி விடும் எனு,ம் ஒரே ஒரு பாடல் இதம் , இசை , பிஜிஎம்  இரண்டும் அபவ் ஆவரேஜ்


 சபாஷ் இயக்குநர்

Vellai Pookal Movie Stills – Chennaionline


1  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத முதல் காட்சி கொலை கேஸ் துப்பு துலக்கல் அருமை 


2   வழக்கமாக எல்லா படங்களிலும் கொலை எப்படி நடந்திருக்கும்? என்ற போலீஸ் ஆஃபீசரின் மைண்ட் வாய்சில் அல்லது கற்பனையில்  சம்பந்தப்பட்ட  கிரிமினல் மூலமாகத்தான் காட்சிகள்  விரியும் , இதில் ஒரு புதுமை .அந்தக்கொலையை அவரே செய்வது போல கற்பனை பண்ணுவது  திடுக்


3   நாய்களை  திசை திருப்பும்  ஆப் பற்றிய விளக்கம் அருமை , அதை க்ளைமாக்சில் யூஸ் பண்ணிய விதம் குட் 


4   வழக்கமாக நாயகி அழும் காட்சிகளில்  கிளிசரின் யூஸ் பண்ணுவதுதான் வழக்கம். அல்லது பிப்பெட்டில் நீர் விட்டு காட்டுவாங்க. இதில் கண் மை வைத்த நாயகி அழும்போது  கண்ணீருடன் மை வ்யும் கரைந்து  வருவது  புதுமை 

5   கதைக்கு சம்பந்தம் இல்லைன்னாலும்  இங்கே இருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனை போல அங்கே இருக்கும் அகதிகள் வாழ்வு பற்றி ஒரு கோடி காட்டியது 

6  ஹீரோ தான் சந்தேகப்படும் நபர்களை வரிசையாக மனக்கண் முன் நிறுத்தி அவர்களுடனான கான்வோ காட்சி தமிழுக்கு புதுசு. ஷெர்லக் ஹோம் ஸ்பெஷல் 




 நச் வசனங்கள் 


1   அப்பாவைப்பிடிக்கலைனு சொல்றவனை நம்பிடலாம், ஆனா அப்பா கிட்டே ஃபிரண்ட் மாதிரி பழகறேன்னு சொல்றவனை நம்பக்கூடாது 


2 மூளையால யோசிக்கறதை விட இதயத்தால  யோசிக்கறதுதான் நல்லது, அதனால எல்லா (ர் ) பிராப்ளங்களும் சால்வ் ஆகும் 


3  நம்மை மாதிரி வயசானவங்க  ஃபாரீன்ல பார்க்கற ஃபுல் டைம் ஜாப் என்ன தெரியுமா?


 ?

 வாக்கிங் 



4  வயசாகிடுச்சு , விட்ருங்க 

 அப்டி ஒண்ணும் தெரில , ஒரு 30 தான் இருக்கும்

 வயசாச்சுனு நான் சொன்னது அவளுக்கில்லை, நமக்கு


5   ரூபீஸ் க்யூப்ல  5 பக்கம்  சால்வ் பண்ணிட்டம்னா 6 வது பக்கம் தானா சால்வ் ஆகிடும்


6 ரிட்டையர்மெண்ட்ங்கறது 20-20  மேட்ச் இல்லை , அடிக்கடி ஃபோர், சிக்சர் அடிச்ட்டு இருக்க முடியாது


நிஜம் தான் , ஆனா டெஸ்ட் மேட்சிலும் சிக்சர் அடிக்கலாம்


7  போலீஸ்  என்பது  வெறும் ஒர்க் மட்டும் இல்லை , அது ஃப்ரேம் ஆஃப் மைண்ட்



8   நான் போலீஸ்

‘ ஆனா ரிட்டையர்டான போலீஸ்

 ஒரு டாக்டர் ரிட்டையர்டாகிட்டா ஒருவேளை திடீர்னு உனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா  ரிட்டையர் ஆனவர்தானேனு உதவி கேட்காம இருப்பியா? 


9   காலைல 10 மணிக்கு எனக்காக காத்திரு, நான் சரியா பத்தரைக்கு வந்துடறேன்


10   என்ன? பாகிஸ்தான் கேப்டன் மாதிரி முறைக்கிறான்?



லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைகதையில் சில ஆலோசனைகள் 



1   ஃபாரீன் போலீஸ்    சீன் ஆஃப் க்ரைம்ஸ்  ஸ்பாட்க்கு  அடிக்கடி வரும்போதெல்லாம்  ஹீரோ அங்கே தட்டுபப்டுவது  சும்மா வாக்கிங் வந்தேன் என சமாளிப்பது அதை அவங்க நம்புவது காதுல பூ ரகம் 


2  கொலையாளி பலசாலி ஆன ஆள் இல்லை , கடத்தப்பட்டவனை இழுத்துச்செல்லும்போது ஒரேயடியாக இழுத்து செல்லாமல் அங்கங்கே  ஓய்வெடுத்து நின்னு பின் இழுத்தான் என காட்சியில் வசனம் வருது. ஆனா கொலையாளி கடத்தும் சீன் காட்டப்படும்போது  வேகம் அபாரமா இருக்கு 


3  கொலையாளி காரில் ஆளை அடிக்கடி கடத்தி  வேறு ஒரு இடத்தில் வைப்பதெல்லாம் எப்படி? போலீஸ் செக்கிங் எல்லாம் இருக்காதா? முதல் கடத்தல் நடந்தபோதே செக்யூரிட்டி டைட் பண்ணி இருப்பாங்களே? தொடர்ந்து  3 ஆள் கடத்தல் கள் ஒரே காரில் ஒரே ரூட்டில்  எப்படி சாத்தியம்?


 சி.பி கமெண்ட் -   மாறுபட்ட க்ரைம் த்ரில்லர்கள் பார்க்க விரும்புவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  யூகிக்க முடியாதது . அமேசான் பிரைம் ல கிடைக்குது . ரேட்டிங்  3.25  / 5