Showing posts with label the transporter. Show all posts
Showing posts with label the transporter. Show all posts

Wednesday, July 02, 2014

விக்ரம் படத்தின் கதை தி டிரான்ஸ்போர்ட்டர் பிரெஞ்சுப்படத்திலிருந்து சுடப்பட்டதா ?

தி டிரான்ஸ்போர்ட்டர் பிரெஞ்சுப்படத்திலிருந்து சுடப்பட்டதா விக்ரம் படத்தின் கதை?
1

Is Vikram movie copy of The Transporter
கடந்த இரண்டு வருடங்களாக ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்து வந்த விக்ரம், அப்படத்தை முடித்துவிட்டு, தற்போது கோலிசோடா இயக்குநர் விஜய்மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கடந்த மாதம் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, டெல்லி போன்ற வட இந்தியாவில் நடைபெறுகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையைப் பற்றிய பரபரப்பு செய்தி அடிபட ஆரம்பித்திருக்கிறது. தி டிரான்ஸ்போர்ட்டர் என்ற பிரெஞ்சுப் படத்திலிருந்து சுடப்பட்ட கதை என்பதே அந்த செய்தி. தி டிரான்ஸ்போர்ட்டர் படம் ஒரு டிரைவரைப் பற்றிய படம். 2002 ஆம் ஆண்டு வெளியான படம் இது. படத்தின் ஹீரோ ஒரு டிரைவர். இவர் தன் தொழிலில் மூன்று கொள்கைகளை தவறாமல் கடைபிடிப்பவர்.

ஒன்று - சரக்கை எடுத்துச் செல்ல ஓப்புக்கொண்டுவிட்டால் அந்த முடிவை மாற்றிக்கொள்ளவே மாட்டார்.
இரண்டு - பார்சலில் என்ன பொருள் இருக்கிறது என்று கேட்க மாட்டார்.
மூன்று - எக்காரணத்தைக் கொண்டும் பார்சலை பிரித்துப்பார்க்க மாட்டார்.

இப்படியொரு கொள்கை உடைய ஹீரோவின் வேனை சிலர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய், ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் தப்பிச் சென்றுவிட, ஹீரோ மாட்டிக்கொள்கிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்னைகள்தான் தி டிரான்ஸ்போர்ட்டர் படத்தின் கதை. இந்தக் கதையைத்தான் உல்டா பண்ணி இருக்கிறார்களாம்.

இதில் பெரிய தமாஷ் என்ன தெரியுமா? தி டிரான்ஸ்போர்ட்டர் படத்தை வெளியிட்டது டுவென்டியத் செஞ்சரி ஃபாக்ஸ் நிறுவனம். அதே ஃபாக்ஸ் நிறுவனத்தின் இந்திய நிறுவனமான ஸ்டார் ஃபாக்ஸ் உடன் இணைந்துதான் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

சாரு தைரியசாலிதான்..!
 
 
 thanx - dinamalar 
 
 
a




a