Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Saturday, August 10, 2013

தலைவா - தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்

A





A


A

சமுதாயத்தை திசைதிருப்பும் வண்ணம் சட்டத்தை கையில் எடுக்கும் கதாநாயகன்'' - தலைவா படத்துக்கு வரிவிலக்கு ஏன் இல்லை? தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்.A




விஜய்யின் தலைவா பிற மாநிலங்கள் - வெளிநாடுகளில் ரிலீஸானது - தமிழகத்தில் 22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு!

Thalaivaa released in other states and Foreign country - Tamilnadu may be 22 release
நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்

டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு

இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.

ரசிகர்கள் கலாட்டா!

"தலைவா படம் நேற்று வெளியிடப்படும் என, நினைத்த விஜய் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு நேற்று காலை வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், "படம் இன்று வெளியாகாது என, ரசிகர்களை திரும்ப அனுப்பினர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தனர்.புதுக்கோட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்கள், 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இடைப்பாடி - சேலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆத்தூரில், விஜய் ரசிகர்கள் மறியலில் ஈடுபட முயன்றதோடு, தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அதனால், தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேலூர், திருவண்ணாமலையில், விஜய் ரசிகர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை கலைத்து அனுப்பினர்.

அலைக்கழிக்கப்பட்ட ரசிகர்கள்

மதுரையில் நேற்று இரண்டு தியேட்டர்களில் தலைவா படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு ரசிகர்க‌ளும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களி‌லே‌யே படம் வெளிவரவில்லை அதனால் ரசிகர்களை வெளியேறும்படி ‌அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதேசமயம், தங்களை இப்படி அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபோது வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க தொடங்கினர் ரசிர்கள். அதேப்போல் தலைவா படமும் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வருவதால் விஜய்யின் ரசிகர்கள் வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு ரசிகர்கள் சென்று படம் பார்க்க தொடங்கியுள்ளனர்
 
 
 
.THANX-DINAMALAR
 
 
DISKI -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 

 

தலைவா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html

 

Wednesday, January 02, 2013

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்




Thursday, December 20, 2012

குஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கலங்க வைத்தார்

http://lalitkumar.in/blog/wp-content/uploads/2011/09/narendra_modi.jpgகுஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
Posted Date : 07:33 (20/12/2012)Last updated : 12:33 (20/12/2012)
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால், ஆளும் பா.ஜனதா  ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

குஜராத் முன்னணி நிலவரம் 


பா.ஜ. க  - 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)

காங்கிரஸ்  - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )

மற்றவை - 6    ( 3  வெற்றி + 3 முன்னிலை )


குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.


இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.


மோடி வெற்றி 


மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இமாச்சல் முன்னணி நிலவரம்:


காங்கிரஸ்   - 39  ( 13  வெற்றி +  26 முன்னிலை )

பா.ஜ.க.  - 24      (  7 வெற்றி + 17 முன்னிலை )

மற்றவை -  6   ( 1 வெற்றி + 5 முன்னிலை )




இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது.  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.


முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.பகல் 12  மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில்  முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.

பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும்,  மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும்  காணப்பட்டன.


திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர் சட்டத்திலும் திருத்தம்! 
Posted Date : 07:42 (20/12/2012)Last updated : 07:42 (20/12/2012)
சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.

மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.


புதிய திட்டங்கள் 
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.

இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி  அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.

பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.

அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.

தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.

அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.

புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.
நன்றி - விகடன் 


மக்கள் கருத்து 

1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என் நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என் வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .... மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில் நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
.. வழியில் ஒரு உடுப்பி ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும் அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014 தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் .... மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
2.  முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின் வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன் தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி) வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும் கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின் ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார். 
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும் பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50% மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின் வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங் ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது. 
ஆனந்த ரீஜனில் சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது. (5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும் அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும் உண்மையில் இது வெற்றி இல்லை. 
3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார். மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற அளவில் வெற்றி பெறுகிறார். 
ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப் பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு, முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர் பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர். 
4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி... இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது.. நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை ( மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே சமயத்தில்... 
பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்.. இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு... வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன் ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும். 
5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர். இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால் அது ஆச்சரியமான விசயமே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
. தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும். அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான கூட்டனியாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல. தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது.... 
இரண்டு விசயம் தான் உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல் இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என் மனமார்ந்த வாழ்த்துகள்... 
6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ் பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான் நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால் நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல் கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும் எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.? 
நன்றி - விகடன் , தினமலர்


Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari



New DelhiBJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.

He said it was a vote for "development and Mr Modi's leadership."

"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said

"People have voted for the BJP for the fifth time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six  more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
 
 
THANX - NDTV

Tuesday, November 06, 2012

மின்வெட்டு - பொட்டில் அடித்தாற்போன்ற 10 கேள்விகள்- டாக்டர் ராம்தாஸ் டூ ஜெ

சென்னை: நீலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:



தமிழ்நாட்டில் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. 5 முதல் 7 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. 969 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது 7,500 மெகாவாட் உற்பத்தியாகிறது. 4,000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணம் பல மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததும், எண்ணூர், குத்தாலம் மின் நிலையங்களை மூடியதுதான்.



ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் தொடங்க 15 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டது. இதுவரை அந்த திட்டம் கிடப்பில் உள்ளது



டெல்லியில் உபரியாக ஒப்படைக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது கிடைத்தால் கூட 230 மெகாவாட்தான் பயன்பாட்டுக்கு வரும். பெரும்பான்மையான மின்சாரம் இரவில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அது நமக்கு பயன்படாது. எனவே இந்த வாதங்கள் எல்லாம் தங்களை திசை திருப்பும் முயற்சியில்தான்.



நிலம் புயலால் டெல்டா மாவட்டங்களில் 5லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதே போல் வேலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.



சென்னையில் புயலின் போது தரை தட்டிய கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு கப்பல் நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் ராமதாஸ்.





மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?




ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?



முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?


4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?


ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?



6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?


58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?



8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?


ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?



10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?



 thanx - thats tamil

Wednesday, July 04, 2012

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk5xTG8IHZcOOoKMIQKsKayp3YL5BOgumoUeVzruTtYiCI3hbp6TWiVeA0_gnFYHys7bEW6nB12aJUf__IiYkXp_srecbaHKdi7fZCY5Owf-75SsIZFmMJDf3R3jXSV1s7RGf7qAYd6ko/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjhAJ0jhTdeGBtlZseiGFOKIelH4FG1Eu6q3QcuAepn4w-UkxKZjP8mqWUfAYPv7Yh9Z2HtXpuYSWXCxtYAOH9zYVKj6Eyx5QZLKQIZqS8AnvDa28ofaqXsy46sLqic-5LyoK_wSMu0DU/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------



2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. 



------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. 



-----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..



--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. 



-----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்



--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் 



-----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

Thursday, May 31, 2012

மத்திய அரசின் மடத்தனமான பெட்ரோல் விலை உயர்வு

ந்த பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாதது என்கிறார்கள். ஆமாம். 7.98 விலை உயர்வு வரலாறு காணாததுதான். பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருப்பது இதுவரை வரலாறு காணாதது. 




ஒரு பிரதமராக மன்மோகன் சிங்கின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலகட்டத்துக்குள் பெட்ரோலின் விலை 90 சதவிகிதம்  உயர்ந்து இருப்பது தனி வரலாறு. ஆனால், மக்கள் நொந்து வெந்து மாற்று வழியோ, மாற்றுத் தேர்வோ இல்லாமல் வதைபடுவது மட்டும் வரலாறு மீண்டும் மீண்டும் பார்ப்பது. இது இந்தியர்களுக்கான சாபக்கேடு!


பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகள், ஏழை நாடுகள் என எந்தக் கணக்கில் பார்த்தாலும் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை?
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, ''ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது சர்வதேசரீதியிலானது. நமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது'' என்கிறார்.


ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படுவது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை அம்பலப்படுத்துகிறார் பங்குச் சந்தை நிபுணரான நாகப்பன்.


''இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என யார் சொன்னது? நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமாவது பங்குகளை வாங்கியவர்களுக்கு 140 சதவிகிதம் பங்குத் தொகையைக் கொடுக்க முடியுமா? ஆனால், அதுதான் நடக்கிறது. 2011-ல் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ ஒரு பங்குக்கு வழங்கிய பங்குத் தொகை 9. பாரத் பெட்ரோலியம் வழங்கிய தொகை 14. ஹிந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய தொகை 15. இந்த நிறுவனங்கள் லாபத்தில்தான் இயங்குகின்றன என்பதற்கு இதற்கு மேல் சாட்சி வேண்டுமா?'' என்கிறார் நாகப்பன்.



உண்மை என்னவென்றால், அரசு இந்த பெட்ரோல் விலை உயர்வை அறிவித்த காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பா யின் விலை 92 டாலர்கள்தான். அதாவது, நம்முடைய அரசு அபாய விலைக் குறியீடாக நிர்ணயித்து இருக்கும் 115 டாலர்களைவிட இது குறைவு.



உள்ளபடி அரசுக்கு இதில் மூன்று பிரச்னைகள்.



முதலாவது, பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதீதமான வரி. பெட்ரோல் விலையில் 39 சதவிகிதமும் டீசல் விலையில் 18 சதவிகிதமும் வரியாக அரசின் கஜானாவுக்குப் போகிறது.


பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மண்ணெண்ணெய்க்கும் கேஸ் சிலிண்டருக்கும் மட்டும் இடத்துக்குத் தகுந்த மாதிரி 8 வகை வரிவிதிப்புகள் இருக்கின்றன. ஆக, மாநில அரசு நினைத்தாலும், இந்த வரிகளைக் குறைத்து மக்களை ஓரளவு காப்பாற்றலாம்.



இரண்டாவது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருப்பது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 20 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்து இருக்கிறது. இதற்குக் காரணம், அரசின் தவறான செயல்பாடுகள்.




மூன்றாவது, மானியங்களைக் குறைக்க அரசு திட்டமிட்டு இருப்பது. அரசின் மானியங்களில் ஏறத்தாழ 40 சதவிகிதம் 83 ஆயிரம் கோடி பெட்ரோலியப் பொருட்களுக்காக வழங்கப்படுகிறது. இதைக் குறைக்கும் திட்டத்திலேயே பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்திவருகிறது அரசு. பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைப்பதுபற்றி யோசிப்பது நல்லதுதான். ஆனால், அத்தியாவசிய பஸ், லாரிகளுக்கும் ஆடம்பர எஸ்யூவி கார்களுக்கும் ஒரே விலையில் டீசல் வழங்குவது தேவையா என்று அரசு யோசித்தால், அது ஆரோக்கியப் பாதை. பொத்தாம்பொதுவாக விலையை உயர்த்தி னால் என்னவாகும்?



''பெட்ரோல் டீசல் விலை ஏறும்போது அதோட விலை மட்டுமா ஏறுகிறது? போக்குவரத்துச் செலவுகள் கூடுவதைக் காரணம் காட்டி... அரிசி, பால், பருப்பு, காய்கறி என அனைத்தும் விலை ஏறும். என்ன பண்ணப்போறோம்னே தெரியலை. பைத்தியக்காரங்க மாதிரி ஆயிடுச்சு நிலைமை'' என்கிறார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி குப்புசாமி.



கோவை விவசாயியான வழுப்பாறை பாலு, ''ரசாயனப் பூச்சிக்கொல்லி வாங்குவதில் ஆரம்பிச்சு பலவித வேலைகளுக்காக டவுனுக்கு வந்தே ஆகோணுமுங்க. அதுவும் பொசுக்குனு போய் வர்றதுக்கு பஸ்ஸை நம்பாம மொபெட்டதான் எடுத்துட்டுத் திரியுறோமுங்க. விளைஞ்ச பொருளைச் சந்தைப்படுத்துறதுக்கு பெட்ரோலுக்கு மட்டும் நூத்துக்கணக்குல செலவு பண்ணி டவுனுக்கு வர்றோம். ஆனா, லாபத்தைப் பார்த் தீங்கன்னா, அடுத்த கொள்முதலுக்குக்கூட இழு பறியாதான் இருக்குது'' என்கிறார்.


''மத்தவங்க மாதிரி இல்லை. இது எங்களுக்கு உசுருப் பிரச்னை. ஏற்கெனவே, நாங்க அதிக வாடகை வாங்குறோம், அது இதுனு சொல்லி சவாரி குறைஞ்சுகிடக்கு. இனிமே என்ன நடக்கும்னு தெரியலை. இந்தப் பொழைப்புக்குப் பேசாம மாடு மாதிரி வண்டி இழுக்கலாம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஷாகுல் ஹமீது.


''காலையில பத்தரை மணிக்கு வந்தேன். மூணு மணி நேரம் நின்னு பெட்ரோல் வாங்கி இருக்கேன். ஒரு ஆளுக்கு நூறு ரூபாய்க்கு மேல குடுக்க மாட்டேங்குறாங்க. இதாச்சும் கெடச்சுதேனு வாங்கிக்கிட்டேன். பெட்ரோல் விலை ஏறிடுச்சுனு திட்டுறோம்ல. பெட்ரோல் கிடைச்சாதானே திட்டுவீங்கனு எல்லா பங்க்கையும் மூடிட்டாங்க. இப்போ என்ன விலைன்னாலும் வாங்கித்தானே ஆகணும்? ஓட்டு போட்டதுக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி.


''பெட்ரோல் விலையை நிர்ணயிக் கிற உரிமையை எண்ணெய்நிறுவனங் களுக்குக் கொடுத்ததே தப்பு. தில்லு இருந்தா, விளைபொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிச் சிக்கிடலாம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். முதலாளிகள் கொடுக்கிற நன்கொடைக்காக நாக்கைத் தொங் கப்போட்டுக்கிட்டுத் திரியுறவங்க, எப்படி மக்களுக்கு விசுவாசமா ஆட்சி நடத்துவாய்ங்க?'' என்று ஆவேசப்படுகிறார் மதுரையைச் சேர்ந்த முத்துகுமார்.



மக்கள் எதிர்ப்பும் போராட்டங்களும் அரசைச் சூழ்கின்றன. ஆனால், அரசு அலட்டிக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன; மக்கள் அதற்குள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள் என்ற மமதையில் இருக்கலாம். ஆனால், மக்களின் நினைவாற்றல் குறித்து அவர்கள் வியக்கும் காலம் வரும்!

 நன்றி - விகடன்

Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


Sunday, March 18, 2012

பொது பட்ஜெட் 2012-13 அப்டேட்ஸ்: முக்கிய அம்சங்கள்


தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் ரூ.20,000-ஐ உயர்த்துவது உள்ளிட்ட நடுத்தர மக்களின் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், சேவை வரி உயர்வு, கலால் வரி உயர்வின் தாக்கங்களைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது, பொது பட்ஜெட் 2012-13.
2012-13 பொது பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலையானதாக இருக்கும்.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 


* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.


* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.
* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.
* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.
* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.
* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)
* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.
* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.
* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.
* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.
* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.
* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* பாதுகாப்புத் துறைக்கு ரூ.1,93,407 கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்.
* போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கு தலா ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீடு ரூ.15,888 கோடி.
* மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துடன் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டுகளில் யூரியா தேவையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் ப்ராஜகட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற இடத்தில் தொடங்கி வைக்கப்படும்.
* நிதி சீர்திருத்த மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
* உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடரும்.
* சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்குவதில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
* உரம் மானியம் வழங்குவதில் அரசு புதிய திட்டத்தை கடைபிடிக்கும்.
வருமான வரிவிலக்கு வரம்பு..
* தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு, ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்‍கு 10 சதவீதம்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம்.
* ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்‍கு 30 சதவீதம் வரியும் விதிக்‍கப்படுகிறது.
* வங்கி சேமிப்புக்‍ கணக்‍குகள் மீதான வட்டித் தொகைக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்‍கு.
* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.
வேளாண் கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி!
* உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு முழு மானியம் அளிக்‍கப்படும்.
* வேளாண் துறைக்‍கான ஒதுக்‍கீடு 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.20,208 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விவசாயத்துக்‍கான கடனுதவி 5.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாயிகளுக்‍கான கடனுதவி மீது 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி.
* நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* நபார்டு சட்ட திருத்த மசோதா நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
* நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை நீர் பாசனம், நுண்ணுயிர் பாசனத்துக்கு கடன் வழங்க தனி அமைப்பு.
* விவசாயத்தை பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாய கடன் அட்டைகளை ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வரை திரட்ட இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது
* பங்குச்சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்‍கப்படும்.
* சென்னை அருகே தொற்று நோய் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அரசு, தனியார் துறைகள் மூலம் 6,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 150 மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3 லடசம் கடன் உதவி.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.25,555 கோடி
* மதிய உணவு திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
வருமானவரியை சேமிக்க புதிய திட்டம்...
* சிறு முதலீட்டார்கள் பயன் பெறும் வகையில் ராஜீவ் காந்தி பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்‍கப்படும். இதில் 5 லட்சம் வரை முதலீடு செய்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்‍கு பெறலாம்.
* கச்சா எண்ணெய் மீதான மானியச் செலவு அதிகரிப்பு
* விமான எரிபொருளை நேரடியாக இறக்‍குமதி செய்ய அனுமதி; விமானப் போக்‍குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்‍கத் திட்டம்;  விமான போக்‍குவரத்துத்துறைக்‍கு நடைமுறை மூலதனமாக 100 கோடி டாலர் திரட்ட திட்டம்.
* பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டுக்‍கு ரூ.15,890 கோடி ஒதுக்‍கீடு.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி.
* 8,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த ரூ.25,360 கோடி ஒதுக்‍கீடு
*  10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்‍க திட்டம்
* நுண் கடனுதவி நிறுவனங்கள் நெறிமுறை மசோதா கொண்டுவரப்படும்.
சேவை வரி அதிகரிப்பு...
* சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு. இதன் மூலம் ரூ.18,660 கோடி கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு.
* சேவை வரி விதிப்பில் இருந்து ப்ரீ ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிக் கல்வி, சினிமா துறை முதலியவற்றுக்கு விலக்கு.
* கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு.

* வேளாண் சாராத பொருள்களுக்கான சுங்கவரி அதிகபட்சமாக 10 சதவீதம்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, உற்பத்திப் பிரிவுகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு.

* சில குறிப்பிட்ட வகை சிகரெட்டுகள், பீடிகளுக்கு கூடுதல் கலால் வரி, பெரிய வகை கார்களுக்கு சுங்கவரி உயர்வு,

முத்திரையிடப்படாத நகைகளுக்கும் கலால் வரி, சிறிய கலைஞர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் கலால் வரியிலிருந்து விலக்கு

*  வரி விதிப்பு மூலம் நிகர வருவாய் ரூ.41,440 கோடி
பல்வேறு வரிவிதிப்புகள் அடங்கிய பொது பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்:
புற்றுநோய், எச்.ஐ.வி. மருந்துகள்
சோலார் பவர் விளக்குகள், எல்.இ.டி. பல்புகள்
அயோடின் உப்பு
சோயா உணவுப் பொருட்கள்
தீப்பெட்டிகள்
எல்.இ.டி மற்றும் எல்.சி.டி. டிவிக்கள்
பொது பட்ஜெட் எதிரொலியால் விலை அதிகரிக்கும் பொருட்கள்:
ஏ.சி. சாதனங்கள்
ஃபிரிட்ஜ்
சைக்கிள்கள்
ஜி.எஸ்.எம்., பி.டி.ஏ. மொபைல்கள்
தங்கம், பிளாட்டினம்
கார்கள்
சிகரெட்டுகள்
உயர்தர ஓட்டல் உணவுகள்
விமானக்கட்டணங்கள்
2012-13 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுகள்:

* மொத்த வரி வருமானம் - ரூ.10,77,612. கோடி (2011-12) ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டைவிட 19.5 சதவீதம் கூடுதலாகும்.

* மத்திய அரசுக்கான நிகர வரி வருமானம் ரூ.7,71,071 கோடி (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்)

* வரியல்லாத வருவாய் - ரூ.1,64,614 கோடி

* கடனல்லாத வருவாய் - ரூ. 41,650 கோடி

* மொத்த செலவீனம் - ரூ.14,90,925 கோடி

* திட்ட செலவு - ரூ.5,21,025 கோடி

* திட்டமிடாத செலவு - ரூ. 9,69,900 கோடி

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும்.

* தொழில்துறை வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

* முதல் காலாண்டில் ஏற்றுமதி 23% ஆக உயரும்.
* இந்திய பங்கு வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலைமை சீரானதாக இருக்கும்.

* வேளாண் மற்றும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக உள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
* உணவு மற்றும் உரம் மானியங்கள் மிகப் பெரிய அளவில் செலவினத்தை ஏற்படுத்துகின்றன.

* உணவுப் பாதுகாப்பு மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் புராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் தொடங்கி வைக்கப்படும்.
* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு நேரடி நிதி மானியம்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

* பங்குச்சந்தைகளில் ரூ.50,000 ஆயிரம் வரை முதலீடு செய்வதற்கு சலுகைகள்.

* பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளுக்கு ரூ.15,888 ஒதுக்கீடு.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழே இருப்பவர்கள், ரூ.50,000 வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், 50 சதவீத வரிமான வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர்.

* மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய நில வங்கி மற்றும் கடன் மேலாண்மை மசோதாக்கள் வரும் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கான ஒதுக்கீடு 14 சதவீதம் உயர்வு. வரும் நிதியாண்டில் 8,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.

* வேளாண் கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* நபார்டு வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* ஏ.டி.எம்.களில் கிஸான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

* குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பரிசு.

* உணவு தானியங்களை சேமிக்க புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.

* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.

* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.

* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.

* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 6,000 பள்ளிகள் கட்டப்படும்.

* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)

* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.

* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் திட்டம்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.

* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.

* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.

* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
*  நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.

* தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரப்பு ரூ.2 லட்சமாக உயர்வு. இது, ரூ.1.8 லட்சமாக இருந்து வருகிறது.


* ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை - 10 சதவீதம்

* ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை - 20 சதவீதம்

* ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி.
* சேமிப்பு கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரும் வட்டிக்கு வரி கிடையாது.

* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


விலை உயரும், குறையும் பொருட்கள்...

* அயோடின் உப்பு, தீப்பெட்டி, சோயா பொருட்கள் விலைகள் குறைகிறது.

* சோலார் லைட்டுகள், எல்.இ.டி. பல்புகள் விலை குறைகிறது.

* கைவினைப் பொருட்களின் விலைகள் குறைகின்றன.

* புற்றுநோய், எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்துகள் விலை குறைகின்றன.

* 10%-ல் இருந்து 30% ஆக வரி உயர்வதால், சைக்கிள்களின் விலை உயர்கின்றன.

* ஏ.சி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

* ஆடம்பரப் பொருட்கள், விமானக் கட்டணங்கள் உயர்கின்றன.

* சிகரெட்டுகள் விலை அதிகரிக்கின்றன.

* தங்கம், வைரங்களின் விலைகள் உயர்கின்றன.