Showing posts with label tamil film review. Show all posts
Showing posts with label tamil film review. Show all posts

Monday, December 23, 2019

தம்பி - சினிமா விமர்சனம்

thambi movie के लिए इमेज परिणाम

த்ரிஷ்யம் படம் கேரளா சினி  இண்டஸ்ட்ரியையே புரட்டிப்போட்ட பிரமாதமான  படம், லோ பட்ஜெட் ல எடுக்கப்பட்டு ஹை கலெக்சன் பார்த்த மலையாள க்ரைம் த்ரில்லர் . அதே இயக்குநர் ஜீத்து  ஜோசப் அதை தமிழில் பாபநாசம் என எடுத்தார் . அதுவும் ஹிட் அவர் இப்போ  த பாடி என ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் பண்ணார் , இது 2016ல வந்த ஒரு மெல்லிய கோடு எனும் தமிழ் படத்தின் அதிகார பூர்வ ரீமேக்  ( அதிகாராப்பூர்வ ரீமேக்னா அட்லீ, முருகதாஸ் மாதிரி ஆட்டையைப்போடாம காசு கொடுத்து உரிமையை விலைக்கு வாங்கி பண்றது )


 இப்போ தமிழில் தம்பி எடுத்திருக்கார் . இது  சீமான் இயக்கத்தில் மாதவன் நடிச்ச தம்பி கதை அல்ல ., வேற புதுக்கதை 

மேட்டுப்பாளையத்தில்  ஒரு அரசியல் தலைவர்  ( சத்யராஜ்) தன் மனைவி (சீதா) ,  மகள் ( ஜோதிகா) வுடன் வசித்து வருகிறார். அவரோட மகன் 15 வருசத்துக்கு முன்னாடி  காணாம போய்ட்டான்., காணாமப்போன  மகன் இப்போ கோவாவில் இருப்பதா தகவல் வருது , கோவா போய் மகனை அழைச்ட்டு வர்றார். ஆனா அவன் நிஜமான வாரிசு இல்லை , ஃபிராடு


 அவன்  ஊருக்கு வந்ததும்,  அந்தக்குடும்பத்துல என்ன மாற்றம் நிகழுது ? அவனை கொலை செய்ய யார் திட்டம் போடறா.? காணாமப்போன நிஜ மகன் கதி என்ன? என அடுக்கடுக்காக ச்ஸ்பென்ஸ் முடிச்சுகள் .


முதல் பாதி  கலகலப்பா போகுது.  ஃபிராடு பார்ட்டியா கார்த்தி விக் வெச்ட்டு வர்ற காட்சிகள் சகிக்கலை ,. அவருக்கு விக்கும் பொருந்தலை ,  வீட்ல ஒவ்வொரு கேரக்டர் கூடவும் ஹீரோ எப்படி மிங்கிள் ஆகறார். அல்லது ஆகலை என்ற கோணத்தில் முதல் பாதி பெரிய அளவில் சுவராஸ்யமா இல்லாட்டியும்  பரவால்லாம போகுது. 


 நிஜ வாழ்வில்  அண்ணியான ஜோதிகா சினிமாவில் அக்கா ரோல் . கார்த்தி அளவுக்கு இல்லைன்னாலும் நல்லாவே பண்ணி இருக்கார் ஜோ. இவருக்கான ஸ்கோப் கம்மி , ஆனா இவருக்கு காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கலக்கல் 


 குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு கேரக்டர்  இளவரசு , இவர் குணசித்திர வேடமாகட்டும்  வில்லன்  ரோல் ஆகட்டும் அடிச்சு தூக்கறார்

சத்யராஜின் அனுபவம் மிக்க நடிப்பு அங்கங்கே படத்தை தொய்வில் இருந்து காப்பாத்துது 


சவுகார் ஜானகிக்கு ஒரு ரோல் , ஓவர் மேக்கப் , க்ளோசப் காட்சிகள்ல படுத்துது ..


நாயகியாக  நிகிலா விமல் ,  வந்தவரை குட் 


க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  பிரமாதம் இல்லை என்றாலும்  ரசிக்க வைக்கிறது 

 96 பட இசை அமைப்பாளர்  கோவிந்த் வசந்தா தான் இதுக்கும் இசை , பிரமாதம் என சொல்ல முடியலை


thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम

நச் வசனங்கள்

1   மீனுக்கு இரையைக்குடுத்து தரைல விட்ட மாதிரி.... #thambi



2  பசியைக்கூட சமாளிச்சுடலாம், ஆனா தனிமையை.....



3   எங்கே வெளீல போனாலும் வீட்டுக்கு வர்றப்ப சாப்பிட்டாச்சா?னு கேட்க 2 ஜீவன் இருக்கனும்

4  அன்பு எல்லாத்தையும் மாத்தும்


5  வாழ்க்கை பூரா இரண்டாவது இடத்துலயே இருக்கறது ரொம்ப சிரமம் , கஷ்டம் 

6   ஒரு குடும்பம் உடஞ்சு போகாம இருக்க எத்தனை பேர் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டியதா இருக்கு ?


7  ஒரு அக்காங்கறது 2 அம்மாவுக்கு சமம்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1   சபாஷ் டைரக்டர் − ரியல் லைப்ல கார்த்தி யின் அண்ணியான ஜோதிகா வை படத்தில் அக்காவாக நடிக்க வைத்தது நல்ல ஐடியா,ஆடியன்ஸ் நல்லா ரசிக்கறாங்க,குறிப்பா ஜோதிகா வின் டிரஸ்சிங்சென்ஸ் அழகு,கார்த்தியின் குறும்புத்தன நடிப்பு படத்தின் +,இடைவேளை வரை ok #thambi


2  ஒரு கேரக்டருக்கான பில்டப்பை மத்தவங்க குடுக்கனும்,அவரு அப்டியாக்கும் ,இப்டியாக்கும்னு ,அதான் கெத்து,அந்த கேரக்டரே தற்குறிப்பு ஏற்ற அணியில் விளக்கீட்டு இருக்கக்கூடாது,சத்யராஜ்கேரக்டர் #thambi

3  விக் வெச்ச கெட்டப் கார்த்தி க்கு எடுபடலை,இப்ப எல்லாம் யார் சார் விக் வைக்கறாங்க? #thambi



சபாஷ் டைரக்டர்

 1  முதல் பாதியை ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் காமெடியாக கொண்டு போனது


2 இளவரசு , சத்யராஜ்  கேரக்டர் வடிவமைப்பு


3   பின் பாதி முழுக்க த்ரில்லராக திரைக்கதையை நகர்த்திய விதம் 



thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1− ஆள்மாறாட்ட பிளானில் இளவரசும்,கார்த்தியும் ஈடுபடுவதற்கு பொய்யான DNA டெஸ்ட் ரெடி பண்றாங்க,ஆனா வாரிசு இவர்தானா?என சந்தேகப்படும் போலீஸ் கேரக்டர் தனியா வேற ஒரு ஹாஸ்பிடல்ல அவர் மேற்பார்வை ல நடத்த ஏன் முயற்சிக்கல? #thambi


2  தம்பி படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப் (த்ரிஷ்யம் ,பாபநாசம்) கே.பாக்யராஜ் சாரோட ரசிகர் போல.8/5/1981 ல ரிலீஸ் ஆன விடியும் வரை காத்திரு மாதிரி கொஞ்சம்

14/4/1991 ல ரிலீஸ் ஆன பவுனு பவுனு தான் பட கதைக்கரு னு ட்ரை பண்றாரு போல.பத்தாததுக்கு முந்தானை முடிச்சு ல வந்த தவக்களை கேரக்டர் மாதிரி பிரமாதமான சுட்டிப்பையன் கேரக்டர் வேற #thambi



4 படத்துல போலீஸ் ஆஃபீசர் முதல் ஹீரோ வரை யாருமே டூ வீலர்ல போறப்போ ஹெல்மெட் போடறதில்லை , கார்ல போறப்ப சீட் பெல்ட் போடறதில்லை


5 நட்ட நடு ராத்திரில திருடனுங்க வீட்ல மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணி கரண்ட் கட் பண்றாங்க , அப்போ ஃபேன் எல்லாம் ஆஃப் ஆகி வியர்த்து எல்லாரும் எழுந்திருக்கனு மே? 6 பேரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க


6 ஒரு சீன்ல சவுகார் ஜானகி வெணும்னே கீழே விழற மாதிரி ஆக்ட் பண்றாரு அப்போ ஃபேமில இருக்கும் எல்லாரும் அவர் பக்கம் வர்றாங்க எல்லாரும் அவரையே பார்த்துட்டு இருக்கும்போது ஹீரோ க்கு மட்டும் சிக்னல் கொடுத்து அந்த ரூம்ல இருக்கற லெட்டரை எடுனு கண் அடிக்கறார். கிது க்ளோசப் ஷாட் ல , ஆனா லாங் ஷாட்ல எல்லாரும் அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்காங்க


7   கொலை செய்யப்பட்ட டெட் பாடியை  வீட்லயோ , அருகாமை இடத்துலயோ புதைப்பது பாதுகாப்பா ? கார்ல டிக்கில வெச்சு அதை போர்த்தியோ , மறைச்சோ கொண்டு போகாம  பெப்பரப்பேனு பப்ளிகா ஊரெல்லாம்   ரவுண்ட் அடிச்சு கொண்டு போறது பாதுகாப்பா? 


8  டெட்பாடியை புதைச்சு பல வருடங்கள் ஆன நிலைல அது எலும்புக்கூடாகி மண்ணோட மண்ணா கலந்திருக்கும், ஆனா 15 வருசம் கழிச்சு அந்த இடத்துல ரியல் எஸ்டேட் வர்றதால தோண்டுனா தன் குட்டு  வெளிப்பட்டுடும்னு கொலைகாரன் பயப்படுவது எந்த வகையில் ?


nikhila vimal hot के लिए इमेज परिणाम



 விகடன் மார்க் ( யூகம்)   43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5  / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3 /5  ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-  தம்பி −(2019) முதல்பாதி நமக்குப்பழக்கமான குடும்ப வாரிசு ஆள்மாறாட்டக்காமெடி "பேமிலி டிராமா".பின் பாதி ஜீத்து ஜோசப்பின் ஸ்பெஷல் பிராண்ட் க்ரைம் த்ரில்லர், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓரளவு எதிர்பார்த்ததே,லேடீஸ் ஆடியன்சைக்கவரும் ஜோதிகா,கார்த்தி நடிப்பு குட் . க்ரைம் த்ரில்லரில் சென்ட்டிமென்ட்ஸ் ஒர்க் அவுட் ஆவது அபூர்வமே,விகடன் 43 ,ரேட்டிங் 3 /5 ,ஏ,பி சென்ட்டர்களில் ஹிட் அடிச்சிடும் ,சி.கா வின் ஹீரோ படத்துக்கு இந்தப்படத்தின் வெற்றி மேலும் ஒரு பின்னடைவு #thambi


Sunday, November 24, 2019

ஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்

adithya varma posters के लिए इमेज परिणाम

ஹீரோ  ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ்ல ஹவுஸ் சர்ஜன் படிப்புல இருக்கார் , அவருக்கு ஜூனியரான ஹீரோயினை பார்த்ததும் காதல் வருது. இதயம் முரளி மாதிரி  எல்லாம் பம்மாம அடுத்த சீன்லயே கிஸ் அடிச்சுடறாரு. ஹீரோயினும் தேமேனு அதை வாங்கிக்குது, என்னமோ ரேஷன் கடைல குடுக்கற இலவச கோதுமை யை வாங்கற மாதிரி, ஹீரோயின் ரொம்ப அமைதியான டைப் , அதனால கில்மா க்கு கூப்பிட்டப்பக்கூட ஹீரோவை எதிர்த்து எதுவும் பேசல , அதான் அமைதியான டைப் ஆச்சே? 2 பேரும் காலேஜ் முடிக்கறதுக்குள்ள 549   தடவை தப்பு பண்ணீடறாங்க , இதை வேலை வெட்டி இல்லாம எண்ணிட்டு இருந்திருக்கான் பாருனு என்னை யாரும் கேட்டுடாதீங்க , அந்த கவுண்ட்டிங்கை ஹீரோ , ஹீரோயின் 2 பேருமே சொல்றாங்க 

அதான் மேட்டர் முடிஞ்சுதே , இனி என்னத்தை திரைக்கதைல சொல்லிடப்ப்போறாங்க அப்டினு யாரும் அல்ப சொல்பமா நினைக்க வேண்டாம்.


 லவ் மேட்டர் , மேட்டர் பண்ண மேட்டர் எல்லா மேட்டர்களும்  வீட்டுக்கு தெரிஞ்சுடுது, அடுத்த நாளே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி ஹீரோயினுக்கு மேரேஜ் பண்ணீ வெச்சுடறாங்க , கல்யாண மண்டபம் எல்லாம் 6 மாசம் முன்பே புக் ;பண்ணனும், எப்படி அவங்களுக்கு மட்டும் மண்டபம் கிடைச்சுது?னு மடத்தனமா யாரும் கேட்க வேண்டாம், சினிமான்னா அப்டித்தான்


 அதுக்குப்பின்  திரைக்கதைல ஒரு பெரிய தொய்வு . ஹீரோ தம் அடிக்கறாரு , சரக்கு அடிக்கறாரு .கஞ்சா அடிக்கறாரு , அபின் அடிக்கறாரு, மொத்தத்துல நம்மை நோக அடிக்கறாரு


2 வது பாதில ஒரு கிளு கிளு வேணாமா , ஹீரோ ஒரு நடிகையை சந்திக்கறாரு. 

 என்னமோ பிளஸ் டூ ;படிகறப்ப உங்க பிசிக்ஸ் புக் தர்றீங்களா>னு கேட்கற மாதிரி ஹீரோ நடிகை கிட்டே எனக்கு பிசிக்கலா ஒரு ஹெல்ப ;பண்ண முடியுமா?னு ஹீரோ ஒரு பிட்டைப்போடறாரு, நடிகைக்கு அதிர்ச்சி


 இப்போ ஹீரோ நடிகை கூட மேட்டர் பண்ணாரா?? க்ளைமாக்ஸ் யார் கூட பர்மணண்ட் க்ளைமாக்ஸ் ரெகுலரா பண்ணப்போறார் என்பதை வெண் திரையில் காண்க 

ஹீரோவா த்ருவ் விக்ரம்  புதுமுகம் மாதிரியே தெரியல அவ்ளோ இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சிருக்காரு , பல காட்சிகள் அப்பா விக்ரம் நடிச்ச சேது படத்தை  நினைவு ”படுத்தறார்.:குறிப்பா தண்ணீ அடிக்கற காட்சி , தம் சீன் எல்லாம் உணர்ந்து நடிச்சிருக்காரு 
\
 படத்துல மொத்தம் 29 லிப் டூ லிப் சீன்கள்  தமிழ் சினிமால இதுக்கு முன் கிஸ் சாதனை நிகழ்த்தியவர் கமல் படம் சூரசம்ஹாரம், நாயகி நிரோஷா 19 லிப் கிஸ் + நாக்கு கிஸ் 1

ஹீரோயினா  பனிதா சந்துனு ஒரு ஃபிக்ர். பாவமா இருக்கு, ட்விட்டர் ச்ந்து அவரை க;லாய்க்கப்ப்லோகுது


 தமிழன் நடிகைக்கு எது பெருசா இருந்தாலும் பொறுத்துக்குவான் , பல் பெருசா இருந்தா பொறுத்துக்க மாட்டான் ( புன்னகை அரசி கே ஆர் விஜயா, புன்னகை இளவரசி சினேகா இவங்களுக்குக்கூடக்த்தான் பல் பெருசு, ஆனா நாம ரசிக்கலைல்யா?னு கேட்கக்கூடாது )

ஹீரோயின் இடது கண் இமை மேல ஒரு ம்ரு இருக்கு அழகா இருக்கு . மற்றபடி நடிப்பு சுட்டுப்போட்டாலும் வர்லை


 ஒரிஜினல் வெர்ஷன் அர்ஜூன் ரெட்டி ஹீரோயின்   ஷாலினி பாண்டே நடிச்சதுல , ஹிந்தி வெர்ஷன் கபிர்சிங்க் நாயகி  க்யாரா அத்வானி நடிச்சதுல பாதி கூட இந்த பாப்பா நடிக்கல. அவருக்கு நடி[ப்பு வர்லைங்கறதுக்காக முக்க்கியமான க்ளோசப் ஷாட்களில் அவரது முகத்தைக்காட்டாமயே  படம் பிடிச்ச இயக்குநருக்கு ஒரு கொட்டு , இதே ; பாலாவா இருந்தா முகரையைப்பேத்து  இருப்பாரு 


ஹீரோவுக்கு நண்பரா வர்ற அன்புதாசன் கவனிக்க வைக்கறார்


 நடிகையாக வரும் ப்ரியா ஆனந்த் ரொம்ப இளைச்சிருக்கார் ., மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்,காதுனு  பழமொழி சொன்ன  ஆளை தேடிட்டு இருக்கேன்

 நடிகையா எத்தனையோ பேரை சந்திச்சவரு சிடுமூஞ்சி டாக்டர் கிட்டே ஏன் காதல்ல விழறார் என்பதற்கு பதில் இல்லை 

 இசை சுமார் தான். ஒளீப்பதிவு ஓக்கே ரகம் 

  படம் நீளம் அதிகம் நீலமும் அதிகம்



 படத்தில் கவனிக்க வைத்த மற்ற நடிகர்களில் கடலோரக்கவிதைகள் ராஜா ஹீரோவுக்கு அப்பாவா வர்றார், பாட்டியா லீலா சாம்சன்

adithya varma heroin के लिए इमेज परिणाम

நச் வசனங்கள்

1  அழகான பொண்ணுங்க Loyal லா இருக்க மாட்டாங்க ,மீரா,உன் பக்கத்து சீட்ல ஒரு குண்டு பொண்ணை உட்கார வைக்கறேன்,அவங்க கடைசி வரை நட்புக்கு நம்பிக்கை யா இருப்பாங்க ( சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ,சிவப்பு+கறுப்பு டிரஸ் போட்டவன் திருட மாட்டான்கற மாதிரி இருக்கு ) #aadhithyavarma


2  நீ பொறுமையாவே இருக்க மாட்டியா? உன்னை பெத்தாங்களா?  நீயே எகிறிக்குதிச்சு வந்துட்டியா?


18 +
ஓ,இங்கேதான் நம்ம பர்ஸ்ட் நைட்டா?
என்னது?பர்ஸ்ட்நைட்டா? 549 வது நைட்னு நினைக்கறேன்
அடப்பாவி! எண்ணிட்டு இருந்தியா?எப்படி கரெக்டா சொல்றே?
கரெக்டா னு நீ எப்டி கண்டுபிடிச்சே?நீயும் எண்ணிட்டு இருந்தியா? #Adhithyavarma


4  டியர்  என் கிட்டே உங்களுக்கு பிடிச்சது என்ன?

 உன் சுவாசிக்கும் ஸ்டைல் , உன் ப்ரீத்திங் ஸ்டைல் எனக்குப்பிடிக்கும்

5  ஏண்டா அவ  ஃபோனை எடுக்கலை

 தெரில, அவ எடுத்தா ஏன் ஃபோனை எடுக்கலை?னு நீயே கேட்டுக்கோ


6 நாம் சந்தோஷமா இல்லாத உலகத்துல யாருமே சந்தோஷமா இருக்கக்க்கூடாது

7  பொண்ணுங்க காதல்ல விழுந்தா அவங்களுக்கான ப்ரியாரிட்டிகள் மாறுபடும்

8  நாம விரும்பறவங்க இறந்து போறதுங்கறது வேற ,நம்மை விட்டுட்டுப்போறதுங்கறது வேற. விட்டுட்டுப்போனதுல வலி அதிகம் ( மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்தறது இந்த ஒத்த டயலாக் தான்) #Adhithyavarma

9  (குடிகாரனா இருந்தாலும் சரி ,தம் அடிக்கறவனா இருந்தாலும் சரி )
லைப்ல ஒரு தடவை பெல் அடிக்கும் நம்ம பாடி ,இனி எனக்கு தாங்கற கெப்பாசிட்டி இல்லைனு ,அத்தோட எல்லாத்தையும் நிறுத்திடனும் #aadhithyavarma



10 என் கிட்ட எனக்கேபிடிச்ச ஒரே விஷயம் என்னோட பர்பெக்சன்தான்.என்னோட முன்னேற்றத்துக்காக என் தனித்துவத்தை இழக்க மாட்டேன்""#Adhithyavarma

11   நாள் பட்ட சோகத்துக்கு குட் பை சொல்லிட முடியாது , ஃபிளாஸ்பேக் நம்மை துரத்திட்டே இருக்கும்


12   குடிச்சுட்டியா?

 ம்


முடிச்சுட்டியா?

 டேய், ஓவரா திங்க் பண்ணாத , ஓவர் ஸ்மார்ட்னெஸ் உடம்புக்கு ஒத்துக்காது


\
priya anand hot के लिए इमेज परिणाम

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  தமிழ் சினிமாக்குனு ஒரு செண்ட்டிமெண்ட்ஸ் உண்டு.ஹீரோ போதைப்பழக்கத்துக்கு ( குடி,தம் அல்ல , ட்ரக் அடிக்ட்) அடிமை ஆனவனா காட்னா அந்தப்படம் பிளாப் ,உதா− சூரசம்ஹாரம் (விதிவிலக்கு − தூங்காதே தம்பி தூங்காதே) . அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகப்போகுதுனு தெரில

2  படத்துக்கு ஓப்பனிங் சுத்தமா இல்லை ., 18 பேருதான் , அட்லீஸ்ட் 18+ படத்துக்கு ஒரு 19 பேராவது வந்திருந்தா மேட்சிங்கா இருந்திருக்கும்



சபாஷ் டைரக்டர்

1  ஈ அடிச்சான்  காபிம்பாங்களே சீன் பை சீன் கேமரா ஆங்கிள் முதற்கொண்டு அர்ஜூன் ரெட்டியை காப்பி பண்ணிய திறமை 

2  தமிழ்க்கலாச்சாரத்துக்கு  ஒத்து வராத சில காட்சிகளை வெட்டியது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − ( கன்ட்டினியூட்டி மிஸ்சிங்)

ஹீரோ பைக் ல ஹீரோயின் முத முத ஏறும்போது ஒரு ஹேர் ஸ்டைல் , பைக்ல ட்ராவல் பண்றப்ப ஒரு ஹேர்ஸ்டைல் ,பைக்கைவிட்டுஇறங்கும்போது ஒரு ஹேர்ஸ்டைல் ( காத்துல கலைஞ்சிருக்கும்னு சால்ஜாப் சொல்ல வழியில்லை, டோட்டலி டிப்ரண்ட் ) #Aadhithyavarma



லாஜிக் மிஸ்டேக் 2 − ஹீரோ வும் ,ஹீரோயினும் மொட்டை மாடி மாதிரி ஒரு லொக்கெஷன்"ல மெத்தையைப்போட்டு ,மேல மெத்தை விரிப்பை விரிச்சு விட்டு ரொமான்ஸ் பண்றாங்க ,சந்தோஷம்,ஆனா 2பேரும செருப்பை/கட்ஷூ வை கழட்டவே இல்லை. ஒரிஜினல்ல தெலுங்குல,ஹிந்தி ல அப்டி இருந்தா இருக்கட்டும் ,தமிழ்க்கலாச்சாரப்படி செருப்பை கழட்டிட்டு ரொமான்ஸ் பண்ணி இருக்கலாம் (எடு செருப்பை னு யாரும் கமெண்ட் போட வேணாம் ) #AdhithyaVarma

3  க்ளைமாக்ஸ் ல ஹீரோயின் சொல்றாரெ  நீ நடிகை கூட நெருக்கம்கறதை  பேப்பர்ல பார்த்தேன்னு அதை விஷூவலா  காட்டி இருக்கனும்.பேப்பர் நியூசோ அல்லது டி வி நியூஸ்லயோ கிசு கிசு வர்றதை காட்டனும்


4 ஹீரோயின் உடம்பு பூரா ஹோலி பொடி தடவுன வில்லனுக்கு ஹீரோ தண்டனை தர்றாரு ஓக்கே ஆனா காலேஜ் நிர்வாகம்   கண்டுக்கவே இல்லையே?


5  க்ளைமாக்ஸ்ல ஹீரோயினோட அப்பா தப்பெல்லாம் என் மேல தான் என டிராமா வசனம் பேசுவது எடுபடலை


6 பொறுப்பே இல்லாத முன் கோபக்காரரான கஞ்சா பார்ட்டியான ஹீரோ தன் அப்பாவோட அம்மா இறந்ததுக்கு அப்பாக்கு ஆறுதல் சொல்லும் வசனங்கள் கூட பொருந்தலை

7  ஹீரோ என்ன சொல்ல வர்றாருனு ஈசியா நமக்கெ புரியுது, ஆனா ஹீரோவோட அப்பா டேய் இவன் என்னடா சொல்ல வர்றான்?னு திரும்ப் திரும்ப கேட்பது கொடுமை 


8 ஹீரோயின்  க்ளைமாக்ஸ் ல  தன்னிலை விளக்கம் தர்றாரு அதையும் விஷூவலா காட்டி இருக்கனும்,  என் புருசன் என்னை தொடவே இல்லை என புனிதம் காட்டுவது எல்லாம் நாடகத்தனம்



 விகடன் மார்க் ( யூகம்)   42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்  3/ 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-
ஆதித்ய வர்மா − அர்ஜூன் ரெட்டியின் அச்சு அசல் ரீமேக்.சில"சீன்கள் ஒரிஜினலில் உள்ளது இதில் இல்ல,புதுசா,எதையும் சேர்த்தலை .( அப்படி சேர்த்ததாலதானே பாலா வை தூக்கிட்டாங்க) துருவ் விக்ரம் நடிப்பு குட்.நாயகி நடிப்பு ,தோற்றப்பொலிவு ஓகே ரகம்.க்ளைமாக்ஸ் ல நாயகி இன்னும் நல்லா நடிச்சிருந்திருக்கலாம்,ஓவர் ஆல்"படம் ஓகே தான் ,விகடன் 42 , ரேட்டிங் 3 /5 ,முக்கியமான காட்சிகளில் ஹீரோயினுக்கு க்ளோசப் ஷாட் வைக்காமல் ஹீரோவுக்கு"மட்டுமே க்ளோசப் ஷாட் வைத்தது உறுத்தல் ,லிப் டு லிப் சீன்கள் 19. கமல் கூட இவ்ளோ பண்ணலை #AdhithyaVarma


 கேரளா  கோட்டயம் தன்யா தியேட்டரில் படம் பார்த்தேன், தியேட்டர் கெபாசிட்டி 259 சீட்ஸ், ஃபுல் ஆனது 18 சீட்ஸ்,  இடைவேளை முடிஞ்சதும் ஓடிப்போனவங்க 6  பேர். படம் முடியும் முன்னே போனவங்க 4 பேர்


priya anand hot के लिए इमेज परिणाम

Thursday, March 28, 2019

ஐரா - சினிமா விமர்சனம்


நாயகி மீடியா ல ஒர்க் பண்ணுது, வீட்ல  மாப்ளை பார்க்கறாங்க , ஃபாரீன் மாப்ளை, பேசிப்பார்த்தா பிடிக்கலை. மேரேஜ்ல இருந்து எஸ் ஆக வீட்டை விட்டு ஓடிப்போய் கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு வருது. அந்த பங்களால பேய் நடமாட்டம் இருக்கு.இதை வெச்சு நாயகி காண்ட்ரவர்சியா டூப்ளிகேட்டா சில வீடியோ க்ளிப்ஸ் போட்டு ஃபேமஸ் ஆகுது. ஒரு கட்டத்துல அவரோட பாட்டியே பேயால் கொல்லப்படறாங்க

பேயோட டார்கெட் நாயகிதான். ஏன்? எதனால? ஒரு ஃபிளாஸ்பேக்
மிச்சத்தை வெண் த்ரையில் காண்க


 நாயகியா பட்டர் ஃபிகர் நயன் தாரா. ஓப்பனிங் சீன்ல அவரோட காரக்டர் என்னமோ ஜான்சி ராணி  மாதிரி காண்பிச்ச்ட்டு பின் வ்ழக்கமான பயந்தாங்கொள்ளியா காட்டியது சொதப்பலான கேரக்டரைசேஷன். இயக்குநரின் சறுக்கல் இங்கே ஆரம்பிக்குது

பின்னணி இசை , ஒளிப்பதிவு நல்லாருக்கு

நயன் தாரா மாறுபட்ட இரு வேடங்களில் முடிஞ்சவரை சைன் பண்ணி இருக்கு, இந்தப்படத்தில் ஒரே ஆறுதல் கலையரசன் தான். நல்ல கேரக்டர். குட்

 யோகி பாபு இடை வேளை வரை சம்பந்தம் இல்லாம வந்து மொக்கை போடறார், ஒரு ஜோக் கூட சிரிக்கற மாதிரி இல்லை. இவரும் மதுரை முத்து , ஈரோடு மகேஷ் மாதிரி டி வி ஷோ போய்டலாம்

 ஃபிளாஷ்பேக் சீன் கறுப்பு வெள்ளையில் எடுத்தது நல்ல ரசனை



நச் டயலாக்ஸ்


1  மீடியா ல ஒர்க் பண்றே,நாலஞ்சு பேரையாவது அட்ஜஸ் பண்ணாமயா இந்த நிலைமைக்கு வந்திருப்பே?


உன்னை மாதிரி ஆளுங்களாலதான் பெண்களுக்கு ஆதரவா அவங்க குடும்பத்தாரே பேச முடியாத சூழல் ஏற்படுது,உனக்கு ஆதி னு பேர் வெச்சதுக்குப்பதிலா..... ( sv சேகர் தாக்கப்பட்டார்)



2 என் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நாலஞ்சு வாழ்க்கை வாழ்ந்துட்ட மாதிரி இருக்கு

( சிம்பு
பிரபு தேவா
ஆர்யா
உதயநிதி
விக்னேஷ்சிவன்)

3  எப்பவும் நம்ம கூட சண்டை போடறவங்க என்ன திட்றாங்கனு காது கொடுத்துக்கேட்கக்கூடாது,நம்ம நிம்மதி போயிடும்

எந்த அப்பாவும் தன் பொண்ணுகிட்ட தன் கோபத்தைக்காட்ட மாட்டாரு

5  பாகுபலியே எடுத்தாலும் ப்ளூசட்டை குறை சொல்லித்தானே முன்னேறுனாரு?


பாத்தேன் பாத்தேன்,கழுவிக்கழுவி ஊத்துவாரே? ( தாக்கறதா நினைச்சு இலவச விளம்பரம்)


6 கான்ட்ரவர்சியா எதாவது பேசுனாதான் புகழ்பெற முடியும்,அட்டென்சன் சீக்கிங் தேவை

7  என் வாழ்க்கைல நடந்த ஒரே நல்ல விஷயம் நீதான் #ஐரா

8  வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? போதும் போதும்கற அளவுக்கு ஒருத்தனுக்கு எல்லாமே கிடைக்குது, இன்னொருத்தனுக்கு எதுவுமே கிடைக்கறதில்லை, கடவுள் தூங்கிட்டாரா? #ஐரா




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஓப்பனிங் சீன்ல தலைவி நயன்தாரா வண்டியை ஒருத்தன் இடிச்சுடறான்,டேய் பொறம்போக்கு னு திட்டுது.குறியீடு.ராதாரவி ரசிகர்கள் ,உடன்பிறப்புகள் கடுப்பாயிடுவாங்க


2 நேத்து ப்ரீவ்யூ ஷோ பாத்துட்டு பலரும் ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்சுக்கு பாராட்னாங்க, அப்டி ஒண்ணும் ஸ்பெஷலா  இல்லையே? டெம்ப்ளேட் பேய்ப்பட ஃபார்முலா தான், க்ளிஷே தான் #ஐரா@ இடைவேளை




சபாஷ் டைரக்டர்


1  லட்சுமி கில்மாப்பட இயக்குநர் அந்தப்பட புகழை வெச்சு நயன் கிட்டே கால்ஷீட் வாங்குனது, அறம் மாதிரி பிரமாதமான படம் பண்ணிட்டு இது மாதிரி சாதா கதைல நடிக்க ஓகே பண்ண வெச்சது

2  பட ரிலீஸ் டைம்ல ராதாரவி யை காண்ட்ரவர்சியா பேச வெச்சு படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக்கிட்டது






லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

லாஜிக் மிஸ்டேக் 1 − ஊருக்கு ஒதுக்குப்புறமா இவ்ளோ பெரிய பங்களாவா?னு அந்த ஏரியா போலீசே வியக்குது.அதெப்பிடி ஒரு போலீசுக்கு அவங்க ஏரியா பங்களாவே பரிச்சயம் இல்லாம போகும்?


2  லாஜிக் மிஸ்டேக் 2 -ரீசென்ட் டெத் பவானி இன் சென்னை அப்டினு இங்க்லீஷ்ல டைப்ம் பண்ணி கூகுள் சர்ச் பண்ணுது தலைவி, ஆனா மேட்டர் ( சாதா மேட்டர்தான் )தமிழ்ல வருது  #ஐரா

3  ஃபிளாஸ்பேக்கில் வரும் பவானி கேரக்டர் பொண்ணு முகச்சாயல் நயனுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருக்கு

4  நாயகியின் பாட்டிக்கும் பேய்க்கும் சம்பந்தமே இல்லை. கண்ணு தெரியாத பாட்டியை எதுக்கு பேய் கொல்லுது> பேய்க்கும்  கண் தெரியலையா?

5 நயன் தாரா வின் ஒப்பனை யார் பண்ணது? புருவங்களில் ஓவரா மை அப்பி அழகான புருவத்தை நாஸ்தி பண்ணி வெச்சிருக்காங்க

6  லாஜிக் மிஸ்டேக் 3 - 5 1/2 அடிக்கு மேல் உயரமாக இருக்கும் நயன் தாரா வைப்பார்த்து ஒரு பேக்கு பொண்ணு குள்ளமா இருக்கே னு டய;லாக் #ஐரா


7  லாஜிக் மிஸ்டேக் 4 - நீண்ட இடைவெளிக்குப்பின் காதலியை (கிராமத்துப்பொண்ணு)சந்திக்கும் காதலன் ? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?னு கேட்கறார் . இந்துவான நாயகி கழுத்தில் தாலி இல்ல , கால் விரலில் மெட்டி இல்லை, நெற்றி வகிட்டில் சுமங்கலி ஸ்பெஷல் குங்குமம் இல்லை, இதை  எல்லாம் நோட் பண்ண மாட்டாரா?#ஐரா

8  லாஜிக் மிஸ்டேக் 5  - குப்பன் சுப்பனை  எல்லாம் பழி வாங்கும் பேய் தன்னை அபாண்டமா புகார் செய்த அதுவும் தன்னை கரெக்ட் பண்ண பார்த்தானு புகார் சொன்ன ஆளை ஏன் பழி வாங்கலை? #ஐரா






சி.பி கமெண்ட் -ஐரா - முதல் பாதி வழக்கமான டெம்ப்ளெட் பேய்ப்பட ஃபார்முலா, பின் பாதி ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுபட;லை, திரைக்கதையை நம்பாம இயக்குநர் நயன் தாராவை நம்பி இருக்கார், விகடன் 38  ரேட்டிங் 2.25 / 5 .கமர்ஷியல் வெற்றி மிக மிக அரிது #ஐரா

Friday, March 01, 2019

தடம் - சினிமா விமர்சனம்

Image result for thadam movie
பங்களாவுல ஒரு பணக்காரர் கொலை செய்யப்படறார், அவரை யார் கொலை பண்ணி இருக்கக்கூடும்கற சந்தேக லிஸ்ட்ல 2 பேரை போலீஸ் கைது ப்ண்ணுது, அந்த 2 பேருல  ஒரு ஆளு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோட பழைய பகையாளி. அவரோட பொண்ணு லவ் மேரேஜ்க்கு உதவி செய்தவர். அந்த காண்டுல அந்த இன்ஸ்பெக்டர் இந்த கேசை எப்படியாவது அவன் பேருல எழுதிடனும்னு துடிக்கறாரு, அவருக்கு உதவியா இருக்கும் லேடி சப் இன்ஸ்பெக்டர்  அவரது எண்ணத்தைப்புரிஞ்சுக்கறாரு. இந்த கொலை கேஸ் எப்படி துப்பு துலக்கப்பட்டது என்பதே திரைக்கதை


 சும்மா சொல்லக்கூடாது, இயகுநர் மகிழ் திருமேனி சும்மா மிரட்டி இருக்கார்  திரைக்கதைல, ராட்சசன் படத்துக்குப்பின்  ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லரில் நிறைய ஹோம் ஒர்க் செய்து படம் எடுத்த இயக்குநர்களில் இவர் நிச்சயம் இடம் பெறுவார், இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை , இயக்கம்,நடிப்பு உட்பட பல விருதுகள் காத்து இருக்கு, அனைவருக்கும் வாழ்த்துகள்


ஹீரோவா  அருண் விஜய், ஆள் சும்மா மெடிக்கல் ரெப் கணக்கா இருக்காரு, இவரோட ஜிம் பாடி கூடுதல் பிளஸ், இவரோட லைஃப் டைம் மூவிஸ் லிஸ்ட்ல பாண்டவர் பூமி , தடையறத்தாக்க, என்னை அறிந்தால், தடம் இவை இடம் பெறும், ஆக்சன் காட்சிகளில் இவரது ஸ்டண்ட் அபாரம்


இவருக்கு அடுத்ததா மனம் கவருபவர் அந்த  லேடி எஸ் ஐ , கிட்டத்தட்ட ஆட்டோகிராஃப், திருப்பாச்சி மல்லிகா சாயல். அருமையான நடிப்பு, சிறந்த துணை நடிகைக்கான விருது நிச்சயம்



இரு நாயகிகள். காதலன் ஏமாத்தறார்னு தெரிஞ்சும் ரூ 1.5 லட்சம் கொடுப்பதும் அதைத்தொடர்ந்து வரும் வசனங்களும் கவிதை


ஒரு கப் காபி குடிக்கலாமா? என நாயகன் கேட்கும்போது அந்த கேள்வில ஒரு பிழை இருக்கு, அதை சரி செஞ்சு கரெக்டா கேட்டா வர்றேன் என சொல்லும் நாயகி அழகு, அதுக்காக நாயகன் மண்டையை உடைத்து தப்பைக்கண்டறிவது சுவராஸ்யம்


இன்ஸ்பெக்டராக வருபவர் அசத்தி விட்டார். ஓவர் ஆக்டிங் இல்லாத நுட்பமான நடிப்பு , பாடி லேங்க்வேஜ்



 ஃபிளாஸ்பேக் காட்சிகளில் சோனியா அகர்வால். கச்சிதம்


கொலை வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு   திரையில் காட்டப்படும் இதே போல் உலகம் முழுக்க நடந்த கேஸ் விபர பட்டியல் அபாரம்


காஸ்ட்யூம் டிசைனர்  முதற்கொண்டு,, ஒளிப்பதிவாளர், எடிட்டர் என தொழில் நுட்ப ஜாம்பவான்களும் இயக்குநருக்கு கை கொடுத்து இருக்கின்றனர் 


Image result for thadam movie heroine

நச் டயலாக்ஸ்


1  தெரியாத உத்தமன் கிட்ட பிஸ்னெஸ் பண்றதை விட தெரிஞ்ச கம்மனாட்டி கிட்ட பிஸ்னெஸ் பண்றது நல்லது என்பது என் பாலிசி


வாழ்க்கைல மேஜிக் இருக்கனும்,அப்பதான் சுவராஸ்யம்


3  மனுசனாப்பொறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ்.சீட்டாட்டம் அவங்க வீக்னெஸ் அதுக்காக அவங்களை கெட்டவங்க னு சொல்ல முடியாது






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரசிகர்கள் வரவேற்பு தியேட்டர்ல கிடைக்கும்கறதுக்காக பெண்கள் தம் அடிப்பது போல் காட்டுவது தவறு


நர்ஸ்களை யூனிபார்முடன் டான்ஸ் ஆடவிட்டு க்ருப் டான்சர்கள் ஆக்கிவிட்டது தவறான முன் உதாரணம்


3  நாயகன்,நாயகி இருவருக்குமான ஆடை வடிவமைப்பு அபாரம்.ஒரு நபரின் கேரக்டரை அவர் அணிந்திருக்கும் ஆடையே வெளிப்படுத்தி விடும் ( அரசியல்வாதிகளின் வெள்ளை வேட்டி ,சட்டை விதிவிலக்கு)


4 நான் சின்னப்பையனா இருக்கும்போது தமிழ் சினிமாக்களில் கமல் படங்கள்ல மட்டும்தான் லிப் கிஸ் இருக்கும்,இப்ப வர்ற படங்கள் 100 ல 95 படங்கள்ல லிப் கிஸ் அசால்ட்டா வருது,எக்ஸ்ட்ரா பேட்டா உண்டாம்


5  விசாரணைக்கைதியை அடிச்சதுக்கு சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஸ்டேஷன்கள் புள்ளிவிபரங்களை (குஜராத்,ஹரியானா ஸ்டேஷன்) ஹீரோ லாக்கப்ல பட்டியல் இடும்போது தியேட்டர்ல கைதட்டல் அள்ளுது


6  கொலையை யார் செய்தது? மாதிரி ராஜேஸ்குமார் டைப் கதைதான்,ஆனால் திரைக்கதை கட்டமைப்பு சுஜாதா பாணி,அபாரம் ,ஒவ்வொரு கேரக்டரையும் வடிவமைத்திருப்பது சாண்டில்யன் பாணி. இடைவேளை வரை படம் விறுவிறுப்பு


7  பினாமி சொத்துக்கள் வெச்சிருந்தா,நிரூபிக்கப்பட்டா 7 வருசம் தண்டனை னு அரசு செய்தி படம் தியேட்டர்ல போடறாங்க,கலைஞர்,ஜெ,சசிகலா,தினகரன் க்ரூப்க்கெல்லாம் தண்டனை கிடைச்சுதா?


8 ஒரே கருமுட்டையில் உருவான இரட்டையர்களுக்கு(identical twins) டிஎன்ஏ ஒரே மாதிரி இருந்தாலும் கைரேகை வித்தியாசப்படும்


காலம் எவ்ளவ் கொடுமையானது?காதல் கொண்டேன் ல சைட் அடிச்ச மென்சோக ஐ ஸ்பெஷலிஸ்ட் சோனியா அகர்வால் அம்மா கேரக்டர்ல...


சபாஷ் டைரக்டர்


1  படத்தின் கதையை யூகிக்க வைக்கும் ஒரு அடை மொழி டைட்டிலை இயக்குநர் பட ப்ரமோவிலோ , போஸ்டரிலோ, டைட்டில் கார்டிலோ தராமல் சாமார்த்தியமாக செயல்பட்ட விதம்


2 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டை யாராலும் யூகிக்க இயலாதவாறு மறைத்தது


3  நாயகன் , நாயகி காதல் காட்சிகள் கவிதை


4  யோகிபாபு வை சரியான இடத்தில் உபயோகித்தது





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

1  லாஜிக் மிஸ்டேக் 1− இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் இருவரும் இருக்கும்போது அங்கே வரும் காவலாளிகள் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் சல்யூட் வைக்கறாங்க,சப் இன்ஸ்பெக்டரைக்கண்டுக்கவே இல்ல?


2  லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு கொலை கேஸ் விஷயமா S.I குற்றவாளியோட பேங்க் ஸ்டேட்மெண்ட்டை விசாரிக்க சொல்றாரு,ஒருவைளை போஸ்ட் ஆபீஸ்ல SB a/c வெச்சிருந்தா எப்டி தெரியும்?


ஹீரோவுக்கு கூரான மூக்கு,அவரது சின்ன வயசு கேரக்டரா தேர்ந்தெடுக்கப்பட்ட பையனுக்கு பெரிய சப்பை மூக்கு,கேரக்டர் தேர்ந்தெடுப்பில் இயக்குநர் சறுக்கிய இடம்



4  லாஜிக் மிஸ்டேக் 3− இன்ஸ்பெக்டரோட பொண்ணுக்கு பண உதவி செய்ய ஹீரோ ஒரு ஊருக்குப்போய் குடுத்துட்டு வந்ததா விசாரணைல சொல்றாரு,நெப்ட் பண்ண மொபைல் போதுமே?எதுக்கு சேர் ,டேபிளை எல்லாம் உடைக்கனும்?





சி.பி கமெண்ட் -தடம்−கடந்த 10 வருடங்களில் வந்ததில் சிறந்த க்ரைம் த்ரில்லர்−2019−ன் சிறந்த திரைக்கதை,இயக்குநரின் நெறியாள்கை அற்புதம்,ஆல் சென்ட்டர் ஹிட்,விகடன் 50+, ரேட்டிங் 3.75 / 5 ,பிளாஸ்பேக் காட்சிகள் நீளம் என்ற சிலரின் வாதம் வீண்