![http://www.manoranjanmovies.com/images/suhasini_laura_2.jpg](http://www.manoranjanmovies.com/images/suhasini_laura_2.jpg)
கடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்
சிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே போட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள் எழுந்தன.கண்டனங்கள் விழுந்தன.மாதர்சங்கங்கள் பொங்கின.
இப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக வாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல விமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிறந்த டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.
இவ்வளவு திறமைசாலி இப்போது தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரிய
கேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த
சர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.
இந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்?
தன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.