Showing posts with label story. Show all posts
Showing posts with label story. Show all posts

Tuesday, March 20, 2012

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்



பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்-னு ஒரு பதிவை போட்டாலும் போட்டுத் தொலைச்சேன்..,  மெயிலிலும், போன்லயும் மகளிர் அணிகள் குமுறி எடுத்துட்டாங்க. எப்படி இப்படி ஒரு போஸ்ட் போடலாம்ன்னு. அதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட என் வீட்டம்மாவும், உனக்கு எம்புட்டு தெகிரியம் இருந்தா இப்படி ஒரு போஸ்ட் போடுவே சோறும் கிடையாது, ஒண்ணும் கிடையாது வெளி திண்ணைல போய் படுய்யான்னு சொல்லி வெரட்டி விட்டுட்டாங்க.நான் வீட்டுக்குள்ள போக வேண்டி புருசன்மார்களிடம் பொண்டாட்டிகளிடம் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது  வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும்  டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே  அது எப்படிங்க?



5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?




6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு  வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன்  அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?


10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?





11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.


12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?


13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.


14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு  ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?


15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு...,  ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ  செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க..  சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு..., பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?


http://farm1.staticflickr.com/9/15602667_877f52006a_z.jpg?zz=1

 டிஸ்கி - முதல் பாகம் படிக்காதவர்களுக்காக   http://www.adrasaka.com/2012/02/blog-post_4359.html?m=0

Saturday, February 25, 2012

பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzyO4CB7LH80XXlTD7zKk5wg7Su1LXR-fG_1SB4VIOhoZYK-z1GYArajgoThD3suOnbnlGwaMH1Vi-5cXTGFeQxGZ9iokonJAGjMyY55r5CQsxnc2pdNdbVq9bYaEofjNqo0vshg1gfMI/

சாத்தான் சொல்லை தட்டாதேன்ற  படத்துல செந்தில் பூதமாவும், ஜனகராஜ், சந்திரசேகர்,பாண்டியன் ஹீரோக்களாகவும், கனகா ஹீரோயினாகவும் நடிச்சிருப்பாங்க. அந்த படத்துல ஒரு சீன், ஹி ஹி அந்த சீன் இல்லை. இது வேற சீன். எங்க மூணு பேருல யாரை கனகா லவ் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லுன்னு அந்த பூதத்துக்கிட்ட சொல்வாங்க. பூதமும் கொஞ்ச நேரம் டிரை பண்ணி பார்த்துட்டு..., ஓன்னு அழும், அப்போ மூணும் பேரும் என்ன விஷயம், ஏன் அழுகுறேன்னு கேட்பாங்க.



 மாளிகை கட்டி குடுங்கன்னு கேட்டீங்க, கட்டி குடுத்தேன், கடல் ஆழத்தை கண்டுபிடிக்க சொன்னீங்க அதையும் ஈசியா செஞ்சு முடிச்சேன். ஆனால் ஒரு பொண்ணு மனசுல இருக்குறதை என்னன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லி அழுவும்.

ஜெகஜ்ஜால வித்தை படைச்ச அந்த பூதத்தாலயே முடியாத விஷயம் சாமான்ய மனுஷங்களான நம்மால மட்டும் முடியுமா என்ன? அதனால, அவங்களா   மனசு விட்டு சொன்னாதான் உண்டு. எனக்கு தோணுன சந்தேகத்தை நான் உங்ககிட்ட கேட்குறேன். அதுக்கு யாராவது விளக்கம் சொல்லி வெளங்க வைங்க...

1. கல்யாணம் நிச்சயம் பண்ண பிறகு, மிஸ்டு கால் குடுத்து நாங்க போடுற  போன்ல உங்க அம்மாவை கொசு கடிச்சது, உங்க வீட்டு ஜிம்மி குட்டி போட்டதுன்னு மணிக்கணக்கா கடலை போடுற நீங்க ஒரு நிமிசம் செலவு பண்ணி அத்தை நல்லா இருக்காங்காளா? மாமா உடம்பு நல்லா இருக்கா? மச்சினன் பரிட்சையில பாசான்னு ஏன் கேட்க மாட்டேங்குறீங்க.

2. கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு கிளம்பும்போது என்னமோ ஆப்பிரிக்காவுக்கும், அண்டார்டிக்காவுக்கும் போற மாதிரி அழுது தீர்க்குற நீங்க, தனிக்குடித்தனம் போகும்போது அம்மா அப்பாவை நினைச்சு ஒரு வார்த்தை பேசினால் கூட ”அம்மா கோண்டு”, என்னை ஏன் கட்டிக்கிட்டீங்கன்னு ஒப்பாரி வைக்குறது ஏன்?

3. உங்க அம்மா, அக்கா, ஒண்ணுவிட்ட தம்பி, ரெண்டு விட்ட அத்தைகள்கிட்டலாம் மணிக்கணக்கா போன்ல பேசும்போது பொங்காத பாலும், போகாத டவரும் எங்க அம்மா, அக்காகிட்ட பேசி இரண்டாவது நிமிசத்துல பால் பொங்கிடுது, சிலிண்டர்காரன் வந்துடுறானே எப்படி?

4. உங்க த்த்தூதூதூரத்து சொந்தங்காரங்க வீட்டு விசேசம்னா மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே புடவை, பிளவுஸ் இஸ்திரி பண்ணி, மேட்சிங் நகைலாம் எடுத்து வச்சுட்டு  பண்ணி சாய்ந்தரம் ஏழு மணி பங்க்‌ஷனுக்கு காலை அஞ்சு மணில இருந்து ரெடியாவுற நீங்க, எங்க வீட்டு பக்கம் விசேஷம் காலை பத்து மணிக்குன்னா புடவை இஸ்திரி பண்ணலை, பிளவுஸ் மேட்சில்லைன்னு சொல்லி திட்டிக்கிட்டே   வேண்டாவெறுப்பா 9.50க்கு  கிளம்புறிங்களே எப்படி?

5. உங்க அண்ணனோட மச்சினிச்சியோட சகலை பையன் வீட்டுக்கு வந்தால் நெய் மணக்க கேசரி,  முந்திரி, திராட்சை மிதக்க பாயாசம், மெதுவடை, மசால்வடைன்னு வகைக்கொணா, சாம்பார், காரக்குழம்புன்னு சமைக்குற நீங்க,எங்க அப்பா வரும்போது தலை வலிக்குதுங்க ஒரு சாம்பார், ரசம் வச்சுடுறேன், கடையில் பக்கோடா வாங்கி வந்துடுங்கன்னு சொல்றீங்களே. உங்க வீட்டு மனுசாளுங்க வரும்போது வராத ஒத்தை தலைவலி எங்க வீட்டு மனுசாள்ங்க  வரும்போது மட்டும் எப்படி கரெக்டா வருதே அதெப்படிங்க?

6.  நாள் முழுக்க கடையே தலைக்கீழாய் புரட்டி உங்க அக்கா, தங்கச்சி, அண்ணிக்கெல்லாம் சேலை எடுக்கும் நீங்க, எங்க அக்கா, தங்கச்சி, அம்மாக்கு எடுக்கும்போது பத்தே நிமிசத்துல புடவை செலக்ட் பண்றீங்களே எப்படி?

7.  கடைவீதியில் இண்டெர்வியூக்கு வந்த உங்க ஊர் பையனை பார்த்து, ஏங்க ஒரு வாரம்தானே  நம்ம வீட்டுலயே தங்கட்டும்ங்க அவன்  ஊருக்கு புதுசுங்கன்னு சொல்லும் உங்களுக்கு..., அக்கா மகன் ஏதோ ட்ரெய்ன் மிஸ் பண்ணிட்டு நைட் தங்கிட்டு காலையில போய்டுறேன் மாமான்னு பெட்டியும் கையுமா வந்து நிக்கும்போது  பொண்ணு வயசுக்கு வந்து வீட்டில் இருக்கு. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கனுமான்னு தோணுதே எப்படிங்க?

8.  கூட பிறந்த தோசத்துக்காக அக்கா சமையலை புகழ்ந்து பேசிவிட்டு வந்த நைட்டே அதேபோல் சமைக்குறேன்னு வாய்லயே வைக்க முடியாத சமையலை சகிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, முன்ன பின்ன சாப்பாடையே பார்க்காத ஆளு மாதிரி ரசம் சூப்பர்க்கா இன்னும் கொஞ்சம் ஊத்துன்னு 4 தரம் கேட்டு வாங்கி குடிக்க தெரியுது. இங்க மட்டும் வாயில் எதோ ஒட்டிக்கிட்ட மாதிரி எதுவுமே சொல்லாம சாப்புடறதை பாருன்னு ஏழரையை கூட்டுறீங்களே எப்படி?

9.  உங்க வீட்டு விசேஷத்துக்கு நமக்குன்னு ப்ரு ஸ்டேட்டஸ்  இருக்குங்கன்னு சொல்லி இருக்குற லோன்ல போட்டு சீர் செய்ய தெரிஞ்ச உங்களுக்கு நாமளும் வீடு கட்டனும், பையனை படிக்க வைக்கனும், பொண்ணை கட்டி குடுக்கனும் அதனால் பணத்தை தண்ணியா செலவு பண்ணாஆதீங்க உங்க அக்கா பொண்ணு சடங்குக்கு சிம்பிளா சீர் பண்ணா போதும்ன்னு சொல்றீங்களே. அப்போலாம் “நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குங்குறதை மறந்துடுறீங்களே எப்படீங்க?


10.பிளாக், பேஸ்புக், ட்விட்டர், பத்திரிகைன்னு மத்த ஆம்பிள்ளைங்க படுற இம்சையை படிச்சு  எம்புட்டுதான் ஜாக்குறதையா நடந்துகிட்டாலும் எதாவது குத்தம் கண்டுபிடிச்சு நைட் எட்டு மணிக்கு மேல கரெக்டா கண்ணை கசக்குறிங்களே எப்பட்?

டிஸ்கி: இந்த பதிவை படிச்சு மகளிர் அணிலாம் சிபி மன்னிப்பு கேட்கனும் மான நஷ்ட வழக்கு போடுவோம்  இல்லாட்டி டீ குடிப்போம்  சாரி தீக்குளிப்போம்ன்னு போராட்டம்லாம் பண்ணாதீங்க. அதுக்குலாம் எனக்கு டைம் இல்ல. ஒரு நாளைக்கு 3 போஸ்ட் ரெடி பண்ணவே எனக்கு சரியா இருக்கு.இதுல கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகுது. நண்பர்கள் பிளாக் போக டைம் இருக்கறதில்லை. இங்கனயே, இப்பவே மன்னிப்பு கேட்டுக்குறதோட பிராயசித்தமா புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு போஸ்ட் போட்டுடுறேன்.

டிஸ்கி 2 - முதலில் இருக்கும் ஃபோட்டோ கனகா வந்த புதுசுல எடுத்தது, கீழே இருப்பது லேட்டஸ்ட் ஃபோட்டோ :((



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimV4xQCaQyA6mfpfHrnmbe4qTgHd9Qw7vmoUf2dSgF_ev-6_hVDxFDzNgwpIPR4zpGFoy8ivX3kDkcn2GEZwE9LFdcZqDpP7fvqauiJ_N3XPSDLgJIcF9mvhyphenhyphenvX_SzfFAnrTcI4D8xEw4c/s1600/kanaka2.gif

Tuesday, February 21, 2012

சிவ ராத்திரி,நவ ராத்திரி,ரதி ராத்திரி,பார்வதி ராத்திரி -ஜோக்ஸ்

http://www.telugupedia.com/wiki/images/2/29/Nayanatara.jpg

1.நண்பரின் நண்பர், சிநேகிதியின் சிநேகிதி என்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் நாம் அனுசரித்துப்போகவேண்டி இருக்கிறது


---------------------------------------

2. கல்யாணம்  ஆகாத பெண் தன் மோகத்தை வெளில் கொட்டிடக்கூடாது, கல்யாணம்  ஆன ஆண் தன் கோபத்தை வீட்ல காட்டிடக்கூடாது # வீட்ல செம மாத்து எனக்கு 

---------------------------------

3. நான் கல்யாணம் செய்து வைத்த நடராஜன் கைதானது வருத்தம் -கலைஞர்.# நான் பிரித்து வைத்த சிம்பு-நயன் ஜோடி மீண்டும் சேருதே-பி தேவா வருத்தம்


--------------------------------

4. வாடகை வீட்டை காலி செய்து போகும்போது உடன் அழைத்துச்செல்ல முடிவதில்லை தோட்டத்து செடிகளை

--------------------------------

5. உச்சி வெயில் போல கோபத்தில் நீ என் மீது தகிக்கையில் ஆல மர நிழல் போல உன் மடியில் நான் சரணம் அடைகிறேன்

------------------------------------

6. நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்வதில்

---------------------------

7. வீட்டை காலி பண்ணிட்டு போறப்ப பக்கத்து வீட்டு ஃபிகரை ஏன் அம்போன்னு விட்டுட்டு போறே?

 காலி பண்ணச்சொன்னதே அவங்கப்பா தான்

----------------------------------

8. டாக்டர், என் புருஷன் 4 நாளா லொக் லொக்னு இருமிட்டே இருக்கார்..

 உங்க புருஷன் மட்டும் இல்ல, தம் அடிக்கற எல்லா புருஷன்களும் அப்படித்தான்

-------------------------------

9. டியர், இன்னைக்கு சிவராத்திரி.. என்ன பண்ணலாம்?

 வழக்கமா அவசர அவசரமா நாம போடற சண்டையை நிதானமா விடிய விடிய போடலாம்

-----------------------------

10. பெண்ணியவாதிகள் யாராவது கிளம்புவாங்க பாருங்க.. அது ஏன் பார்வதி ராத்திரின்னு வைக்காம சிவன் ராத்திரின்னு வெச்சாங்க?ன்னு கேட்டு

--------------------------


http://www.nayanthara.net/uploaded_files/photo_gallery/Nayanatara-2.JPG

11. ஏம்மா டோரா.. காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராம்னே,இங்கே யார் கூடவோ கடலை போட்டுட்டு இருக்கே? 

டாடி, இது அக்ரிகல்ச்சுரல் புரோகிராம் ஹி ஹி

-----------------------------

12. உடன் பிறப்பே! பொறுத்திரு.. சங்க இலக்கியத்தில் தோசைக்கதை ஏதும் சொல்லப்பட்டிருக்கறதா? என தேடிக்கொண்டு உள்ளேன்,இட்லிக்கு மாற்று,உலகை ஏமாற்று

-----------------------------------

13. டியர், நீ என்னை மறந்துடுவியா?

 ச்சே! ச்சே! நீங்க தான் என்னோட 25 வது வெள்ளி விழா லவ்வர், எப்படி மறக்க? # 9 தாரா எஃபக்ட்

--------------------------------------

14. இவ்ளவ் மோசமா எக்ஸாம் எழுதி இருக்கியே, ஃபெயில் ஆகிட்டா என்ன செய்வே? 

நோ பிராப்ளம் டீச்சர், எக்சாமில் சொதப்புவது எப்படி?னு படம் எடுப்பேன்

--------------------------------------

15. மேடம், நீங்க யாரை லவ் பண்றதா இருந்தாலும் அவங்க இனிஷியலை பச்சை குத்திக்கறீங்களே, ஏன்? 

பேர் குத்துனா அப்புறம் அழிக்க சிரமம்,

-------------------------------------

16. மேடைல 70 கன்னிப்பெண்கள் இருக்காங்களே, எதுக்கு? 

தலைவரோட 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே எல்லாரையும் மேரேஜ் பண்ணிக்கப்போறாராம்

--------------------------------

17. நான் போடற மொக்கை ட்வீட்ஸை RT  செஞ்சா நானும் பதில் மொய் வைப்பேன். டீலா? நோ டீலா? பை குறுக்கு வழி குஷ்பூ சுந்தர்

--------------------------------

18. பிரபல ட்வீட்டர்  நவீன்- மிஸ்!உங்க ட்வீட்ஸ் எல்லாம் பிரமாதம் !

லேடி ட்வீட்டர் வீல் பொண்ணு - தம்பி! நான் இன்னும் ட்வீட்ஸே போட ஆரம்பிக்கலை

--------------------------------

19. சங்கரன்கோவிலில் திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-அழகிரி# அண்ணன் டெபாசிட் வாங்கறதையே வெற்றின்னு நினைக்கறார் போல 

-------------------------------

20.உன் புருஷன் சாப்பாட்டு ராமனாமே?


 நல்லா சாப்பிடுவாரு, ஆனா ராமரா? கிருஷ்ணரா?ன்னு இனிமேத்தான் கண்டு பிடிக்கனும்


-------------------------------------

http://happyhyderabad.files.wordpress.com/2009/05/nayanatara-in-orange-saree.jpg

Monday, February 20, 2012

கோர்ட்டில் சசிகலா - மெஸ்சில் ஜெ - இட்லி, ஜெட்லீ, நெட்லீ - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/01/jayalalitha-sasikala-tamil-cartoon.jpg 

64 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கணவன் - மனைவி அன்பு குறித்து இட்லி கதை ஒன்றைக்கூறினார்.


 சி.பி - இன்னொரு ஜோடியை சேர்த்திருந்தா கூட்டுத்தொகை 9 வந்திருக்கும், ராசியன நெம்பர்,.. அடடா ஜஸ்ட் மிஸ்..

"
வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சி.பி - அதெப்பிடி? இப்போவெல்லாம் மினிமம் 2 டம்ளர் அரிசி ஊறவெச்சாக்கூட  2 எடசு ( 24 இட்லி) வருமே?

சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே

 சி.பி - அது ரொம்ப ஈஸி ஆச்சே, கிச்சன் ரூம்ல போய் நங்க்னு  டம்ளரை வைக்கலாம், 3 குண்டாவை உருட்டலாம், புருஷன் புரிஞ்சுக்குவான் ( ஹி ஹி எங்க வீட்டுல அப்படித்தான்)

 இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க,

சி.பி - கணவனின் நண்பன் பேரு அண்ணாத்துரையா? சுருக்கமா அண்ணான்னு  கூப்பிடறாரா? 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


 

கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

சி.பி - இந்தக்கதை நடந்து 50 வருஷங்கள் இருக்கும்னு நினைக்கறேன், ஏன்னா இந்தக்காலத்துல சம்சாரங்க எல்லாம் அடுப்புல 2 தோசைக்கல் வெச்சு தோசை சுட்டுட்டே டக டகன்னு கிச்சன் ரூம்லயே சாப்பிட்டு முடிச்சுடறாங்க... அவங்க எப்ப சாப்பிடராங்க அப்டிங்கறதை  கண்டு பிடிக்கவே முடியறதில்லை

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

சி.பி - போயஸ் தோட்டத்துல ஏதோ ஸ்டோரியோ போபியா பீதியா அப்டினு ஒரு பழக்கம் இருக்கு போல, சூப்பர் ஸ்டார் ஆகட்டும், புரட்சித்தலைவி ஆகட்டும் மேடை ஏறும்போதே கதை சொல்ல ரெடி ஆகிடறாங்க.. 


சொத்து குவிப்புக்கும், ஜெ.,வுக்கும் சம்பந்தமில்லை: தானே பொறுப்பு என சசிகலா கண்ணீர்


பெங்களூரு: ""ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தாலும், நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டவில்லை. நானே முழுமையாக பொறுப்பை கவனித்தேன். சொத்து குவிப்பு குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு,'' என, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலா தெரிவித்தார்; அத்துடன் கண்ணீர் விட்டு அழுதார்.


சி.பி - எனக்கு என்ன டவுட்னா புரட்சித்தலைவி முன்னாள் நடிகை அதனால அவங்க அழுதாக்கூட ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு அசால்ட்டா விட்டுடலாம், ஆனா நடிகையர் திலகம் சாவித்திரி ரேஞ்ச்க்கு அக்கா அழுது இருக்காங்கன்னா உண்மையிலேயே அவங்க நடிப்பை பாராட்டனும்.. 



http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-1.jpg
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது

 சி.பி - ஆமா, அந்த கேஸ் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.நடந்து வருகிறது.நடந்து வரும்.. முப்பொழுதும் உன் கேஸ்கள்


 இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, தனக்கு ஆங்கிலம் தெரியாது. தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, தமிழில் கேட்டு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியதை, பெங்களூரு சிறப்பு கோர்ட், கர்நாடக ஐகோர்ட் நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


சி.பி - சசிகலா அக்கா ஒரு தப்பு பண்ணிட்டாங்க, எனக்கு தமிழும் தெரியாது, பேச மட்டும் தான் தெரியும், படிக்கத்தெரியாது, அதனால கேஸ் விபரங்களை யாராவது டெயிலி ஒரு பக்கம் மட்டும் படிச்சு காட்டுங்க  அப்டின்னு சொல்லி இருந்தா 18,780 பக்கம் உள்ள அந்த கேஸ் டீட்டெய்லை படிக்கவே  47 வருஷங்கள் ஆகி விடும் எஸ் ஆகி இருக்கலாம் ஜஸ்ட் மிஸ்..

இந்நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர், சுதாகரன் வழக்கறிஞர் சரவணகுமார், இளவரசி வழக்கறிஞர் அசோக் ஆகியோர் ஆஜராகினர். சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, மார்ச் 2ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, அவரிடம் மார்ச் 3, 4ம் தேதிகளில் விசாரணை வைத்துக் கொள்ள வேண்டும் என, அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
ஆச்சார்யா கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. சிறப்பு கோர்ட் விசாரணை செய்ய தடை எதுவும் கூறவில்லை. எனவே, இன்றே விசாரணை துவங்க வேண்டும்' என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சசிகலா கோரிக்கையை நிராகரித்தார். இன்றே விசாரணை துவக்கப்படுகிறது' என்றார். இதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் மூலம் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் பெயர், அப்பா பெயர், முகவரி, என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.


சி.பி - என்ன தொழில்? கேள்விக்கு ஊரை அடிச்சு உலையில் போடறது, நிலங்களை அபகரிச்சு ஆட்டமா ஆடறதுன்னு உண்மையை சொல்லி இருப்பாங்களா?  
நீதிபதி: இவ்வழக்கில் சாட்சிகள் கூறிய வாக்கு மூலங்களின் விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?

சி.பி - சாரி யுவர் ஆனர் எனக்கு ஆதி மூலம், நதி மூலம், ரிஷி மூலம் மட்டும் தான் தெரியும் ஹி ஹி 
சசிகலா: என் வக்கீல்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.

சி.பி - அக்காவுக்கு ஒரு வக்கீல் வெச்சா பத்தாது போல, பல கேஸ்ல மாட்டுன கேஸ்ங்க எல்லாம் பல வக்கீல் வெச்சுத்தானே ஆகனும்? ஹி ஹி 


கேள்வி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக உள்ளீர்களா? ஜெயலலிதாவும் பங்குதாரராக உள்ளாரா?


சி.பி - எஸ் யுவர் ஆனர், நாங்க 2 பேரும் எல்லாத்துலயும் 50 -50 பார்ட்னர்ஸ்.. ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி சீன் போடுவோம், பிரச்சனை சரி ஆனதும் பழைய படி சேர்ந்துக்குவோம் ஹி ஹி 
பதில்: நான் பங்குதாரராக உள்ளேன். ஜெயலலிதாவும் பங்குதாரராக இருக்கிறார். நிர்வாகத்தை முழுமையாக நானே கவனித்து வருகிறேன். அவர்கள் (ஜெயலலிதா) இந்த நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்.


சி.பி - ஜெ எந்த முடிவும் எடுக்க மாட்டார், எல்லாமே இவங்க தான் எடுப்பாங்கன்னா இப்போ பொம்மை யாரு? ரிமோட் கண்ட்ரோல் யாரு?  


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/IN19_JAYA_SASI_OPS_868555g.jpg
இதைத் தொடர்ந்து, சசிகலாவிடம் சென்னை தி.நகர், ஆலந்தூர், செய்யூர், தி.வி.., தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டடங்கள், நிலங்கள், வீடுகள் வாங்கப்பட்டது குறித்தும், எந்த பணத்தில் வாங்கப்பட்டது, பல இடங்களில் சொத்துகள் வாங்கியபோது, அவற்றின் மதிப்பை குறைவாகப் போட்டு, முத்திரைத் தாள் கட்டணம் குறைவாகச் செலுத்தப்பட்டது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சசிகலா பதிலளிக்கையில், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் நிறுவன வருமானத்திலும் சில சொத்துகள், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை சந்தா, விளம்பரப் பணத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன் ஒன்றரை கோடி ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் 75 லட்சம் ரூபாயும், வங்கிகளில் 20 லட்சம் ரூபாயும் அதிக பற்று பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தில் தான் இந்த சொத்துகள் வாங்கப்பட்டன என்றார்.
தி.நகர், முருகேஷ் தெருவில் கோபால்சாமி என்பவரின் வீட்டை, சுதாகரன் நேரில் சென்று விலை பேசினார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 29 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, இரண்டு லட்சம் ரூபாயை கோபால்சாமியிடம் அட்வான்சாக கொடுத்தார். அப்போது இந்த வீடு, சசிகலாவுக்கு என, சுதாகரன் மிரட்டி வாங்கினார் என கேட்டதற்கு, எனக்கு ஒன்றும் தெரியாது என, சசிகலா கூறினார். செய்யூரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கியது குறித்து கேட்டதற்கு, சிக்னோரா எண்டர்பிரைசஸ், ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவன வருமானத்தில் தான் வாங்கப்பட்டது என்றார்.

 சி.பி - ஆச்சரியமா இருக்கே? என்ன விலை நிலவரமோ அதுல பாதிக்கு பாதி ரேட் குடுத்திருக்காங்க, ஆனா தெலுங்கு டப்பிங்க் படத்துல  எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கறாங்களே.. ?



விசாரணையின் போது, இரண்டு, மூன்று முறை அனைத்து நிர்வாகத்தையும் நானே கவனித்து வருகிறேன். இதில், ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. சொத்துகள் வாங்கிய குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவும் தன்னிடம் விசாரணை நடத்திய போது தான், "சைலன்ட் பார்ட்னர்' என கூறியுள்ளார் என்பதையும் விளக்கினார். இவ்வாறு கூறிய போது, சசிகலா கண் கலங்கினார்.


சி.பி - சைலண்ட் பார்னர்னா சத்தம் இல்லாம கூட்டாளி கழுத்தை கடக்குனு வெட்டறதா?
* சசிகலாவிடம் காலை 11.35 மணிக்கு, கேள்விகள் கேட்கும் பணி ஆரம்பமானது.
* சசிகலா பதில் கூற ஆரம்பிக்கும் முன், தன் இரு கைகளையும் கூப்பி வணங்கி கொண்டார்.

சி.பி - என்னது? அக்கா வணக்கம் எல்லாம் போட்டாங்களா? அடேங்கப்பா, பணிவுதான்
* அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். குரல் வலிமை மிகவும் குறைந்து இருந்தது. அவரது சத்தம் குறைவாக இருந்ததால், கூறும் பதில், மொழி பெயர்ப்பாளருக்கு சரியாக கேட்காமல், பல முறை திரும்பிக் கேட்டார்.
* கண்களில் இருந்து கண்ணீர் வந்ததால், அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தபடி இருந்தார். சில நேரங்களில் கண்களில் இருந்து தண்ணீர் வடிந்தது.


சி.பி - அது என்ன பிரச்சனைன்னா கிளிசரின் போடறப்ப இங்க் பில்லர்ல 2 சொட்டு மட்டும் போடனும், அக்கா அவசரத்துல ஸ்பூன்ல நிறைய போட்டுட்டாங்களாம்.. 
* காலை 11.35 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை 25 கேள்விகளும், மூன்று மணியிலிருந்து 3.45 வரை 15 கேள்விகளும் என, மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.
* மாலை 6 மணிக்கு சென்னை விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்ததால், அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
* இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்.
* சசிகலா வழக்கறிஞர் கூறுகையில், "ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது' என்றனர்.

சி.பி - ஜட்ஜய்யா வீட்ல இருந்து புளி சாதம் கழறி எடுத்துட்டு வந்து தந்து வழக்கை விசாரிக்கனும் அடங்கொய்யால
* கடந்த முறை போன்றே இம்முறையும் சசிகலா அமைதியாக வந்து, அமைதியாகச் சென்றார்.
* .தி.மு.., வினர் யாரும் வரவில்லை. இரண்டு போலீசார் மட்டும் அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.


http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg

 மக்கள் கருத்து 

1. மதுரை விருமாண்டி -ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது" என்றனர். - ஜெயில் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்று கொடநாட்டிலே தங்குறதுக்கும் பெர்மிஷன் வாங்கியிருங்க.. இவ்வளவு செஞ்ச நீதிபதி, இதைக் கூட செய்ய மாட்டாரா என்ன ?

2. காவேரிப்பட்டனம் முனியண்டி -ஆஹா.. சசி இப்படி சொன்னதற்கான பரிசு.. இன்று அவர் கணவர் நடராஜன் கைது நாடகம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாடகமே நாட்டை ஆள்வதைப் பார்த்ததில்லை. இது தமிழனுக்கு கொடுமையிலும் கொடுமை. பெங்களூர் நீதிபதி மல்லிகார்ஜூனே மற்றும் வழக்கறிஞர் ஆச்சார்யா இருவரும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்டுக்கொண்டிருக்கும் கேனயர்களா என்ன.? இறைவன் ஒருவன் இருக்கின்றான்.. இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் பதுங்கியே இருக்கின்றான் என்பதை மட்டும் இந்த நாட்டையாளும் நாடகக் கோமளவல்லிகள் புரிந்துகொண்டால் சரி.. நீண்ட நாட்களுக்கு கிளிசரின் வேலைசெய்யாது. பாட்டியம்மா எனக்கு ஒன்றும் தெரியாதென்பாராம்.. அவரது தோழியை தன்னைவிட்டு விலக்கிவைத்து அவரையே கைகாட்டிவிட்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவாராம்.. அவரது தோழியும் அதையே ஒப்புக்கொள்வாராம்.. ஆனால் தோழியின் சுற்றங்கள் சுற்றிவளைக்கப்படுவார்களாம்.. இந்தக் கதையையும் இளிச்சவாயத் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்று நம்பி நாடகம் ஆடுகிறார்களே.. என்னத்தைச் சொல்ல.. தமிழா விழித்துக்கொள்

3. திண்டுக்கல் சாரதி -தன் கூட இருந்த உயிர் தோழி நல்லவளா கெட்டவளா என தெரிந்து கொள்ளவே இருபது வருடம் ஆகி இருக்கிறது ஒருவருக்கு. அவரை மிக சிறந்த நிர்வாகி ,administravite பவர் அதிகம் என்று சிலர் சொல்லுகிறார்கள்

4, அமெரிக்கா ஆல்பர்ட் - இந்த செய்தியை விட தமிழர்கள் இச்செய்தியை எடுத்துக்கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கறது. ஒன்று மட்டும் நிச்சயம், தமிழர்கள் அறிவாளிகள், புத்திசாலிகள் என்ற வர்ணனை எல்லாம் ஹம்பக். ஐ.எஸ்.ஐ குத்தப்பட்ட அக்மார்க ஏமாளிகள். எதற்க்கு இவர்களுக்காக நம் முன்னோர்கள் விடுதலையும், ஜனநாயகத்தையும் வாங்கி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு கொஞ்சம் நடிப்பு திறன் உடைய கொடூர சர்வாதிகாரியே போதும். They deserve that much. உலகத்தின் மிக பிந்தங்கிய நாடுகள், கலாசரங்கள் இன்னும் 100 அல்லது 300 வருடங்களில் வளம் பெற்றுவிடும், ஆனால் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவம் வராது. வாழ்க தமிழ் மக்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ2su8tlN9MGOw7wkONgUuwUc5uXDozY04L0cENJAbz1KRqEOf8qXyDvfHpcBhXAjvJJTbrWNdM8bZgTkxzEJuW2_N-eZLy7biy2F3VcwpAXacAsfbwCwUUUgR9xJI7X7LO2JcI2JsnX4F/s1600/WR_202612.jpeg