Showing posts with label sketch - tamil film review. Show all posts
Showing posts with label sketch - tamil film review. Show all posts

Saturday, January 13, 2018

ஸ்கெட்ச்- சினிமா விமர்சனம்

Image result for sketch tamil film

பிரைவேட் பேங்க், பிரைவேட் ஃபைனான்ஸ் , களில்  கஸ்டமர் ட்யூ சரியாகக்கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் சீசர் ஏஜெண்ட் தான் ஹீரோ , அவர் ஒரு முறை வில்லனின் வண்டியை சீஸ் செய்கிறார் , அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.


 ஹீரோவா சீயான் விக்ரம் . நல்ல சுறுசுறுப்பான நடிப்பு , ஆக்‌ஷன்  காட்சிகளில் கம்பீரம் , ஸ்டைல் காட்டி இருக்கிறார் , ஆனால் 1980 களில் வருவது போல் இன்னமும் அவர் 4 நண்பர்கள் , நாயகி பின் சுற்றுவது , பல்பு வாங்குவது என டெம்ப்ளேட் காட்சிகளில் நடிப்பது சலிப்பு . போதாததுக்கு ஜெமினி பட ஓ போடு ஸ்டைல் ,மேனரிசத்தை இதிலும் காட்டுவது அலுப்பு


ஹீரோயினா கோல்டு ஃபிஷ் , லெமனா வந்த தமனா, காமனா எல்லாருக்கும் எளிதில் பிடிச்சுப்போகும் கலக்கல் கலர் , ஆனா அந்த வாய் தான் சரி இல்லை , சரி , நாம எந்தக்காலத்துல வாயை ரசிச்சோம்?பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் , காலம் காலமாக சினிமாக்களில் நாயகியின் தோழியாக வருபவர் நாயகியை விட அழகாக இருப்பார் , இதிலும் டிட்டோ 


ரஜினி , விஜய் க்குப்பின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலைக்காட்டி ரசிகர்களை கெடுக்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் நல்லது, டாக்டர் ராம்தாசின் வேண்டுகோளுக்குப்பின் பாபா வுக்குப்பின் ரஜினி தம் அடிக்கும் சீன்களில் நடிப்பதில்லை , ஆனால் விஜய் இப்போ புதுசா தம் சீன் வெச்சுடறார்


 வில்லனாக வரும் பாபுராஜ் பற்றி ஒரு சுவராஸ்ய தகவல் ,  புதுப்பாட்டு பட நாயகி வாணி விஸ்வநாத் தோட ஒரிஜினல் புருசன் இவர். ஆனால் அதிக வாய்ப்பில்லை


சூரி படம் பூரா ஹீரோ கூடவே சுற்றும் ரோலாக இல்லாமல்  5 சீன் மட்டும் வருவது ஆறுதல் , அதிலும் 2 மரண மொக்கை ஜோக்ஸ் அதுவும் அரதப்பழசானவை


 ஆர்ட் டைரக்டர் கேரளா வாசி போல ,. மோகன் லால் ஹீரோவாக நடிச்ச ஜனதா கேரேஜ் தெலுங்குப் படத்தில்  யூஸ் பண்ணின செட்டையே காப்பி அடிச்சுட்டார்


ஸ்ரீமன் , பிரியங்கா நடிப்பு ஓக்கே ரகம்


பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை , பின்னணி இசை செம ,. எடிட்டிங் உள்ளேன் ஐயா சொல்லுது


 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் மொத்தப்படத்தையும் காப்பாத்தப்போகும்  துருப்புச்சீட்டு என்பதை இயக்குநர் உணர்ந்தே இருக்கிறார்

Image result for tamana


நச் டயலாக்ஸ்

சந்தர்ப்பம் ,சூழ்நிலை ,நேரம் இந்த 3ம்தான் ஒரு மனுசனோட வாழ்வைத்தீர்மானிக்கும்

எனக்குப்பிறகு என் இடத்துக்கு யார் வரனும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்

கீர் வெச்ச வண்டி பொண்டாட்டி மாதிரி,நாம சொல்றதை கேட்கும் ,கீர் இல்லாத வண்டி வெப்பாட்டி மாதிரி ,அது பாட்டுக்கு போகும் சூரி பன்ச்

4 அது அய்யர் வீட்டுப்பொண்ணு,உனக்கெல்லாம் செட் ஆகாது


எப்டி சொல்றே?
பொண்ணோட ஷேப்பை வெச்சே அது தயிர் சோறா?கறி சோறா?னு கண்டுபிடிச்சிடுவோமில்ல?


இவ யார்றா?
என் ஆளு
இவ ஆள் இல்லடா,ஹல்க்

இப்பவெல்லாம் பொண்ணுங்களுக்கு அடிக்கறவனை விட அடி வாங்கறவனைத்தான் பிடிக்குது

எல்லாரும் எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் ஜெயிச்சுட்டே இருக்க முடியாது,உலகத்துல எங்கேயாவது எப்பவாவது தோல்வியை ஒவ்வொருத்தனும் சந்திச்சே ஆகனும் (very good dialogue)

8 கொக்கரக்கோ னு கூவற கோழியை குக்கருக்குள்ள வந்து விழச்சொல்ற?

ஒருத்தன் யார் கிட்ட தொழில் கத்துக்கிட்்டான்கறது முக்கியம்"இல்ல,எப்டி தொழில் பண்றான்?கறதுதான் முக்கியம்

10 ஒருத்தர் மேல அதிகமா ஆசை வெச்சாலும் அன்பு வெச்சாலும் பாதிப்பு"நமக்குதான்

11 கடவுள் கொடுக்கற வாழ்க்கையை வாழ தயார் ஆகறவ நான் இல்ல,எனக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழ்வேன்

12 எதுக்கு எனக்கு வாட்ச் கிப்ட்?எனக்கு வாட்ச் கட்ற பழக்கம் இல்லைனு தெரியாதா?

எப்போ என்னை மிஸ் பண்றதாத்தோணுதோ அப்போ கட்னா போதும்

13 அடுத்தவனுக்கு கிடைச்சிடுச்சே நமக்கு இன்னும் கிடைக்கலையே னு மனுசன் ஆசைப்படாத (பொறாமைப்படாத)ஒரே விஷயம் சாவு தான்



Image result for tamana
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஓப்பனிங்"சாங் லுக் லைக் ஜெமினி யின் ஓ போடு + பிரபு தேவா வின் காத்தடிக்குது

மாநிறமா இருக்கற நாம பவுடர் போட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு,கலர் ல லெமனா இருக்கற தமனா எதுக்கு ரோஸ் பவுடர் 2 கோட்டிங் அடிச்சிருக்கு?

சேது,அந்நியன்,ஐ மாதிரி படங்களில் கலக்கிய விக்ரம் இன்னும் அரதப்பழசான 4 பிரண்ட்ஸ் ,ரவுடி,ஹீரோயினை கரெக்ட் பண்ண பின்னாலயே சுத்தும் மாமூல் கதைல நடிப்பது ஏனோ?

இந்த நடிகைங்க எல்லாம் முதுகை காட்றக்காக டாட்டு குத்திக்கறாங்களா? டாட்டுவைக்காட்றக்காக முதுகை காட்றாங்களா? தமனா ஓப்பனா

May be = இருக்கலாம் .ஆனா போலீஸ் ஆபிசர் அடிக்கடி may be இருக்கலாம் கறாரு.மேஜர் சுந்தர்ராஜன் ரசிகரோ?



Image result for tamana

சபாஷ் டைரக்டர்


1 நாயகி தமனா அணிந்து வரும் ஒவ்வொரு காட்சி புடவையும் கண் காட்சி , அழகு , பெண்களை கவரும் , கிட்டத்தட்ட 27 வகையான வெரைட்டி சேலைகள் , ஜாக்கெட்கள் , ஜாக்கெட் டிசைனும் சூப்பர்

2 ஆக்சன் ஸ்டண்ட் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பு 


3 \ க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

4 பின்னணி இசை அதகளம்


Image result for tamana
லாஜிக் மிஸ்டேக்ஸ்    திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  விக்ரமின் நண்பர்கள் இருவர் வரிசையாக கொலை செய்யப்படுகின்றனர் , நண்பர்கள் சாகும் தருவாயில் அட்லீஸ்ட் விக்ரமுக்கு ஒரு மெசேஜ் கூடவா அனுப்ப மாட்டார்கள் , இன்னார் தான் கொலையாளி என ? 


2  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கான ஒரு க்ளூ அந்த செல் ஃபோன் உடைக்கும் காட்சியில் லேசாக தெரிந்து விடுகிறது 

3 நாயகி காட்டும் காதலுக்குப்பின்னான கெத்து அழகு , ஆனால் அவர் ஹீரோவை அவ்வளவு தூரம் அலைய வைப்பது , ஒரு ரவுடி  அவ்வளவு தூரம் இறங்கி வந்து அலைவது நம்பும்படி இல்லை 

4  க்ளைமாக்சில் போடும் நீதிக்கதை , வசனம்  எடுபடவில்லை 


5  வாலு பட இயக்குநரின் 2ம் படம் என்பதை நம்ப முடியலை , காமெடி அதில் ஒர்க் அவுட் ஆன அளவு இதில் ஆகலை 


Image result for tamanna hot


சி.பி கமெண்ட் -ஸ்கெட்ச் − ஸ்லோவான திரைக்கதைதான்.ஆனா ஸ்லோ & ஸ்டெடி வின் த ரேஸ் பார்முலா.ஆக்சன் த்ரில்லர்.க்ளைமாக்ஸ்"ட்விஸ்ட் பிரமாதம் .பிஜிஎம் பட்டாசு .விகடன் 43 , ரேட்டிங் 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3.75 / 5 





ஸ்கெட்ச் @கேரளா திருவல்லா "சிலங்கா தியேட்டர் 63 பேர்