Showing posts with label siruththai. Show all posts
Showing posts with label siruththai. Show all posts

Saturday, January 15, 2011

சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAT9rtlW-A73SoPcBXfcFMt4yrG7gEFmlAKeFApv39nJCT9X48EICMI-uMIRleiyMHY2hWyCQd91jcxR_Iv8F99CPI-8z1iso0OWsMTN9lEQHDG8xbvb7-l-jm2R0L6WSleWfUOBwEXdHI/s1600/SIRUTHAI+%25285%2529.jpg 
20 வருஷங்களுக்கு முன் வந்த சிரஞ்சீவி படங்கள் ,பழைய எம் ஜி ஆர் படங்களில் வந்த டபுள் ஆக்ட் ஹீரோ சப்ஜெக்ட்தான் படத்தோட KNOT என்றாலும் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில படம் காமெடி பாதி,ஆக்‌ஷன் மீதி என கலக்கலான கமர்சியல் மசாலாவாய் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


ஜாலிபாயாக இதுவரை கலாய்த்து வந்த கார்த்திக்கு இதில் போலீஸ் ஆஃபீசர் ரத்தின வேல் பாண்டியாக வெரைட்டி நடிப்பு காண்பிக்க வாய்ப்பு.மனிதர் பின்னி எடுத்து விட்டார்.அவரைப்போலவே இருக்கும் இன்னொரு கார்த்தி அவரது தம்பி என்று ஒரு ஃபிளாஸ்பேக் வைக்காமல் விட்டது ஒரு ஆறுதல்.                       ( ஃபிளாஸ்பேக் வைக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு.. படம் பர பர என பறக்குது..)

படம் போட்ட முதல் 40 நிமிடங்கள் சந்தானம் கார்த்தி கூட்டணி செய்யும் காமெடிக்காட்சிகள் கலக்கல் ரகம்.நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்ல, ஏய் ராஜா ராஜா ..ராக்கெட் ராஜா பாட்டு செம டப்பாங்க்குத்து.. தியேட்டரில் ஆடியன்ஸ் ஒரே ஆட்டம் பாட்டம்தான் அந்தப்பாட்டுக்கு..

காமனா (COMMON) எல்லாருக்கும் பிடிச்ச தங்க நிற லெமனா அழகு காட்டும் இடை அழகி தமனா ஓப்பனிங்க் சீன்ல ரோஜாப்பூக்கள் மேலே கொட்ட என்ன ஒரு கை தட்டல்.. ( ஓப்பனிங்க் சீன்ல இருந்தே அவங்க எல்லாமே ஓப்பனா இருக்கறது மனசுக்கு ரொம்ப ஆறுதல்)
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/01/Siruthai-New-Stills-42.jpg
திருடனாக வரும் கார்த்தி  யாரைப்பார்த்தாலும் ,எந்தப்பொருளைப்பார்த்தாலும்  என்ன ரேட்டுக்கு போகும் என பிரைஸ்டேக்குடன் கற்பனை பண்ணிப்பாக்கும் சீன் செம கலகல.

யாரோட முதலிரவு அறைக்குள்ளோ எதேச்சையாக நுழையும் கார்த்தி அங்கே இருக்கும் நகைகளை ஆட்டையைப்போடும் சீனும் தூள்தான். கண்ணா லட்டு திங்க ஆசையா? இன்னொரு லட்டு திங்க ஆசையா? விளம்பரத்தை சாமார்த்தியமாய் யூஸ் பண்ணியதற்கு இயக்குநருக்கு பாராட்டு.

கூட்டுக்களவாணிகளாக களம் இறங்கும கார்த்தி சந்தானம் கூட்டணி தமனாவைப்பார்த்ததும் பல்டி அடித்து திருடனைத்துரத்தறேன் பேர்வழி என சந்தானத்தையே பிடித்து மாட்டி விடும் காட்சி காமெடி களேபரம்.

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ளே ராக்கெட்டு பாட்டும்,ஆட்டமும் தூள்மா.கார்த்தி என்னா உற்சாகமாய் படம் முழுக்க கலக்கறார்?தமனாவுக்கும் இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆவதும், படத்தின் தேவைக்கு மீறி இருவரும் அந்நியோன்யமாய் இழையோடுவதும் சிவகுமார் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். ( பத்த வெச்சுட்டியே பரட்டை..?)

இடைவேளை வரை காமெடி ,ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என செம ஸ்பீடாய் பாயும் சிறுத்தை இடைவேளைக்குப்பிறகு ஆக்‌ஷனுக்கு மாறுது,. அதுக்குப்பிறகு தமனா அம்போ என விடப்படறார்.வன்முறைக்காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். 

போலீஸ் ஆஃபீசர் கார்த்தியின் மகளாக வரும் பேபி கொள்ளை அழகு, அஞ்சலிப்பாப்பா பேபி ஷாம்லி மாதிர் சாயல்.நடிப்பும் அருமை.எதிர்காலம் இந்தபேபிக்கு நல்லாருக்கும்.
http://gallery.nkl4u.in/wp-content/gallery/shuruthi-1/siruthai_new_stills-1.jpg
வசனகர்த்தாவாக இயக்குநர் சீறிப்பாய்ந்து கோல் அடித்த இடங்கள்.

1. உன் வீட்ல ஸ்ரீதேவி குடி இருக்கா..

போன வாரமே அவ காலி பண்ணீட்டு போயிட்டாளே...

மூதேவி.. அந்த ஸ்ரீதேவி இல்லை... அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீதேவி...

 2.  செலவே இல்லாம மொட்டை போடறது எப்படி?

சந்தானம் - பிளேடே இல்லாம கூட மொட்டை போடலாம்.

எப்படி?

சந்தானம் - உன் மண்டைல இருக்கற ஒவ்வொரு முடியா  பிடுங்கி..


3.  மொட்டைய போடாம ஆட்டைய போட்டால் நிறைய கில்மாக்கள் சிக்கிடும் போல இருக்கே.. அய்யய்யோ 300 பருத்தி வீரர்கள் மாதிரி இத்த்னை பேர் துரத்திட்டு வாராளுகளே..

4. ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன்.. கணக்கு விஷயத்துல ஃபிரண்டு பார்க்க மாட்டேன்..

5. நல்ல குடும்பத்துல பொறந்த யாரும் பொம்பளைங்க மேல  கை வைக்க மாட்டாங்க..( அடிக்க)

ரொம்ப் தாங்க்ஸ் தம்பி...

ஆனா நான் நல்ல குடும்பத்துல பிறக்கல.. இப்போ பாரு.. ஒரே மிதிதான்.

6. ஒரு அட்டு ஃபிகரு - எதுக்கு என்னை கட்டிப்பிடிச்சே..?

சந்தானம் - இந்தக்கூட்டத்துலயே நீதான் சுமாரா இருந்தே.. இந்தா பூ..

த்தூ..

சந்தானம் - எதுக்கு இப்போ பூவுக்கு தண்ணி ஊத்தறே..?

7. சந்தானம் - டேய்.. வாழ்க்கைல நான் எத்தனையோ ஷாப்ல திருடி இருக்கேன்... ஆனா முத முறையா என்னை மெடிக்கல் ஷாப்ல திருட வெச்சுட்டியே..? என்னா ஒரு அடி.. பின்னீட்டாங்களே..

8. கார்த்தி - மேடம் .. நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பிரைட்டா இருந்தீங்களா?இல்ல இடைல இப்படி ஆனீங்களா?

9. சந்தானம் - அவன் என்ன சொன்னாலும் இவ நம்பீடறாளே.. சச்சின் டெண்டுல்கர் நான் தான்ன்னு சொன்னாக்கூட நம்பிடுவா போல இருக்கே..
சக்க ஃபிகருன்னு பார்த்தா இப்படி மக்கு ஃபிகரா இருக்கே..

10. கார்த்தி -ஹி ஹி நான் லவ் பண்றேன்..

சந்தானம் - நீ என்ன கிரகத்தை வேணாலும்  பண்ணீக்கோ..ஆனா இப்படி வெக்கப்படாதே..


11.. சந்தானம் - டேய் .. போதும் கையை எடுடா.. ஜாக்கெட்டை அவுத்துடப்போறே..

12.  பொடியன் - அண்ணே .. என் கூட விளையாட வர்றீங்களா?

சந்தானம் - டேய்.. பவுடர் அடிச்ச பன்னிக்குட்டி மாதிரி இருந்துட்டு.. என்னை விளையாடக்கூப்பிடறியா..?

13. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலங்க.. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லவனா வளர்ந்துட்டேன்..

14. கார்த்தி -  டேய்.. அந்தப்பாப்பா என்னை அப்பான்னு கூப்பிடுதே..

சந்தானம் - எனக்கு என்ன தெரியும்.? நான் என்ன விளக்குப்பிடிச்சா பார்த்தேன்..?எங்கெங்கே போனியோ?

15.      தமனா - ஏன் இந்த ரூட்ல போறீங்க? மெயின் ரூட்ல போலாமே.. 

கார்த்தி - ஹி ஹி இந்த ரூட்லதான் நிறைய ஸ்பீடு பிரேக்கர்ஸ் இருக்கு.. 
( நோட் பண்ணுங்கப்பா) 

16. ஆம்பளைங்க நாங்க எதுவுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவோம்..ஆனா பொம்பளைங்க நீங்க எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணுமே தெந்ரியாத மாதிரி நடந்துக்குவீங்க..  ( செம கிளாப்ஸ்)


17. சந்தானம் - ஆளாளுக்கு ஏன் டேய்-ங்கறீங்க.. டேய்ங்கறது ரவுடிங்களோட ரிங்க் டோனா? ( கலக்கலான கவுண்ட்டர் டயலாக்)

18. மக்கள் மனசுல 100 வருஷம் நிலைச்சு வழனும்னா 100 வருஷம் உயிர் வாழனும்னு அவசியம் இல்ல..ஒரு நாள் ஒரே ஒரு நாள் நல்ல படியா வாழ்ந்தா போதும்.

19. வில்லன் - சார்.. அவன் அப்படி பண்ணீட்டு போறான்.. கண்டுக்காம நிக்கறீங்களே..

பானுச்சந்தர் - ஊர்ல எந்த அநியாயம் நடந்தாலும் கண்டுக்காத மாதிரி இருந்துக்கோன்னு நீங்கதானே சொன்னீ ங்க ..

20.  பயம் இல்லாதவன் மனுஷனே கிடையாது.. பயத்துக்குன்னு ஒரு மரியதை இருக்கு.
 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/10/apoorva.jpg
பொதுவா டபுள் ஆக்ட் படத்துல ஆள்மாறாட்டம் பண்றப்போ 2வதா வர்றவர் முதல் ஆள் ,மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுவார்,ஆனா இதுல போலீஸ் ஆஃபீசர்  கார்த்தி மாதிரி நடிக்க வேண்டிய சூழல்ல திருடன் கார்த்தி காமெடியா திருடன் ஸ்டைல்லயே நடந்துக்கறது புதுசு..

    இயக்குநர் சறுக்கிய இடம் 

தமனாவின் இடையில் ஒரு மச்சம் இருப்பது மாதிரி அடிக்கடி காண்பித்து விட்டு ஒரு பாடல் காட்சியில் அந்த மச்சம் இல்லாதது மாதிரி காண்பித்தது  கண்ட்டின்யூட்டி மிஸ்சிங்க்.. ( ஹி ஹி நாங்க எல்லாம் படத்தை ரொம்ப உன்னிப்பா பாக்கறவங்க.)

                                                                                                                                                                இந்த மசாலா ஃபார்முலா ஒர்க் அவுட் ஆனதால் கார்த்தி இதே திசையில் பயணிக்காமல் வெரைட்டி ரோல் நடிப்பது நல்லது..இயக்குநர் சிவா கோலிவுட்டின் முக்கியமான கமர்சியல் மசாலா டைரக்டர் ஆகி விட்டார்.

ஏ செண்ட்டர்களில் 92 நாட்கள் ( ஏப்ரல் 14 வருதே)

பி செண்ட்டர்களில்  50 நாட்கள், சி  செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

டிஸ்கி -1. நேற்று தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை, ஓட்டுப்பட்டை வேலை செய்யலை.. அதனால அதுல யாரும் ஓட்டுப்போடலை..டைம் இருந்தா போய் போடுங்க

ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 - காவலன்  இன்னைக்கு ரிலீஸ் ஆகிடுச்சு. 4 மணிக்கு விமர்சனம் போடறேன்

டிஸ்கி 3 - கடைசியா போட்டிருக்கற ஸ்டில் படத்துல கெஸ்ட் ரோல்ல வர்ற அபூர்வா.