Showing posts with label sharukkhan. Show all posts
Showing posts with label sharukkhan. Show all posts

Friday, April 15, 2016

FAN (HINDI) - சினிமா விமர்சனம்

இயக்குநர் கே பாக்யராஜ் பல வெற்றிப்படங்களைக்கொடுத்திருந்தாலும் 1983 ல் ரிலீஸ் ஆன முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி எம்ஜி ஆரையே மிரள வெச்சது.என் கலை உலக வாரிசு நீ தான் என அறிவிச்சார்.அப்பேர்ப்பட்ட ஜனரஞ்சகமான இயக்குநர் கம் ஹீரோவின் முகச்சாயலில்  யோகராஜ் என்பவர் 1989 ல் சம்சாரமே சரணம் என்ற ஒரு படம் நடித்தார்.படம் பாக்யராஜ் சாயலுக்காகவே ஓடியது


 ரஜினியின் சாயலில் நளினி காந்த் கொஞ்சம் படங்களில்  நடித்தார்  பின் காணாமல் போனார்.ஆர்க்கெஸ்ட்ராக்களில்  எம்ஜிஆர் போல் சிவாஜி , ரஜினி போல் பல நாடக கலைஞர்கள் ஆடி பாடி மக்களை மகிழ்வித்து  இருக்காங்க.


என்ன சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கான். பார்த்தது ஹிந்திப்படம்,. விமர்சனத்துல  தமிழ் ஆளுங்க விபரமா வருதுன்னு யோசிப்பவர்களுக்கு இதோ வந்துட்டேன்.


பிரபலமான சினிமா ஹீரோவின் முகச்சாயலில் இருக்கும் ரசிகன் ஒருவன்  ஹீரோவை ஆஹா ஓஹோ என கொண்டாடுகிறான். ஹீரோவைப்பார்க்க திருட்டு ரயில் ஏறி வர்றான் ( கலைஞர் எத்தனை பேருக்கு முன் உதாரணமா இருந்திருக்கார்?!!!)

ஆனா ஹீரோ வீட்டு முன்னால் ஆயிரக்கணக்கான பேரு.பார்க்க முடிய;ல.ஏமாற்றத்தோட போய்டலாம்னு நினைக்கும்போது போலீஸ் கிட்டே மாட்டிக்கறான். 

அப்போ ஹீரோவை  சந்திக்கும் வாய்ப்பு வருது. ஹீரோவே லாக்கப்ல நேர்ல சந்திக்கறார். ஆனா ரசிகனை உதாசீனமா பேசிடறார்.

 கடுப்பான ரசிகன் வில்லனா ஆகறான்

ஹீரோ மாதிரியே உருவத்தோற்றம் உள்ள அவன்  எப்படி  ஹீரோவை பழி வாங்கறான். ஹீரோ சம்சாரத்தை கரெக்ட் பண்றானா? என்பதை வெள்ளித்திரையில் காண்க


ஹீரோவா ஷாருக்கான்.  2 மாறுபட்ட தோற்றம். ரசிகனா 20 வயசு ஆளா வித்தியாசமான தோற்றத்தில் ( சூர்யா,  விக்ரம் , கமல் உழைப்பு போல்)கல்க்கிட்டார்.

50 வயசான இவர் இவ்வ்ளவு இளமையா தோன்ற என்ன டெக்னிக் யூஸ் பண்ணாரோ?

இடைவேளை வரை  மிக மெதுவாக நகரும்  திரைக்கதை பலவீனம். அதன் பின்  வில்லன்  ஆன பின் காட்சிகள் யூகிக்க வைக்கின்றன. பிரமாதமான வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட படம்  மிக சாதா படமாக அமைய திரைக்கதை செதுக்கப்படாததே. சூப்பர் ஸ்டார் இருந்தும் இப்டி.ம்ம்

ரசிகனின் காதலியா வரும் நபருக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. ஹீரோ வின் மனைவியாக வருபவர் 3 சீன் தான் வருகிறார்.முழுக்க முழுக்க 2 கெட்டப்  ஷாரூக்கான் தான் ஆக்ரமிக்கிறார்

 பாடல்கள் எடுபடலை. இசையும்  சுமார் ரகம் தான் . ஒளிப்பதிவு பக்கா


சபாஷ் டைரக்டர்


1   இளமையான ஷாரூக்கான் நடிப்பு  மேக்கப் பாடி லேங்குவேஜ் எல்லாமே பிரமாதம்


2  வில்லன் ஷாருக்  வாலி ஸ்டைலில்  ஹீரோ ஷாருக் மனைவி இருக்கும் பங்களா போகும்போது ஆடியன்ஸ் அப்ளாஸ் அபாரம் ( அடுத்தவன் சம்சாரத்தை ஒருத்தன் கரெக்ட் பண்றான்னா அவ்ளோ ஆர்வம்)


3  ஹீரோ வில்லனை மடக்க  வில்லனோட லவ்வரை   மேடைல  நெருக்கமா இருக்கும் காட்சி


 லாஜிக் மிஸ்டேக்ஸ் & மைனஸ்


1  முதல் பாதி யில் முதல் 40 நிமிடங்கள் செம போர்.  இருவர்  , குசேலன் ஆகியவற்றில் பார்த்த காட்சிகள் சலிப்பு 


2  ஆள் பலம், பண பலம் , படை பலம் உள்ள சூப்பர் ஸ்டார் ஒரு சாதாரண ரசிகனை எதிர்கொள்ள அவ்ளோவ் சிரமப்படுவதாக காட்டுவது

3   ஏர்போர்ட் செக்கிங்கில் செக்யூரிட்டி ஆஃபீசர்  வில்லன் ஷாருக்கை அசால்ட்டாக போக விடுவது

4   ஹீரோவின்  மனைவிக்கு  வில்லனின் அரவணைப்பில்  வித்யாசம் தெரிந்தபின் காட்டும்  முக பாவனை பதற்றமாக இருக்க வேண்டாமா? ரொம்ப நுணுக்கமான அமைதியாக அண்டர்ப்ளே ஆக்டிங் எதுக்கு அப்போ? 

5  சொதப்பலான க்ளைமாக்ஸ்

 தியேட்டரிகல் அப்டேட்டட் ட்வீட்ஸ்



ஷாரூக் கான் ன் FAN (hindi) =142 minutes


2 திரைக்கதையில் குசேலன் வாசம் (HINDI)

நச் டயலாக்ஸ்




1 உனக்குன்னு தனி ஸ்டைலை உருவாக்கிக்கொள். அடுத்தவங்க ஸ்டைலை நீ பின் பற்றாதே (HINDI)




2 ரசிகத்தன்மை ,அபிமானம் இதெல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.வரையறை உண்டு.அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை உண்டு (HINDI)







FAN (hindi)- குசேலன் 25% + வாலி 25% +சைக்கோத்தனம் 50% = முன் பாதி சுமார் பின் பாதி படு சுமார்.ஷாருக்கான் சறுக் GONE.ரேட்டிங் =2.25 / 5

பி கு = இந்தப்படத்தை பல மீடியாக்கள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அபாரம் என புகழ்ந்து 4 / 5 ரேட்டிங்க் குடுத்து இருக்கு. நான் எப்பவும் ஆடியன்சுடன் அமர்ந்து படம் பார்த்து அவங்க பல்சுக்கு ஏற்றார்போல் தான் ரிசல்ட் சொல்வேன். கவர் வாங்கி ஜால்ரா போட தெரியாது.


CAST:Shah Rukh Khan, Deepika Amin, Yogendra Tiku, Shriya Pilgaonkar, Waluscha de Sousa, Sayani Gupta
DIRECTION:Maneesh Sharma
GENRE:Thriller
DURATION:2 hours 22 minutes