திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்-ன் இன்றுபோய் நாளை வா படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம்.படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறக்காரணங்கள் 2. முதல் காரணம் பவர் ஸ்டார். அடுத்தது இது சந்தானத்தின் சொந்தப்படம்.ஒரு காமெடி நடிகர் சொந்தப்படம் எடுத்து இந்த அளவு ஹிட் ஆனது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் ( தமிழில்)
நண்பர்கள் 3 பேர் . அந்த தெருவில் புதுசா குடி வரும் ஒரு ஃபிகரை லவ் பண்ணலாம்னு பிளான் பண்றாங்க.ஒருத்தர் அந்த வீட்டு வேலை எல்லாம் செஞ்சு இம்ப்ரஸ் பண்ணப்பார்க்கறார். ஒருவர் ஹீரோயின் சித்தப்பாவிடம் பாட்டு கத்துக்கறேன் பேர்வழி என வீட்டுக்குள் புகுந்து அலப்பரை பண்றார். இன்னொருவர் ஹீரோயினின் அப்பாவிடம் டான்ஸ் கத்துக்கறேன்னு ரீல் விட்டு உள்ளே புகுந்துடறார். இவங்க பண்ற காமெடி அலப்பறைகள் தான் படம் .
இந்தப்படத்தின் பெரிய ஹிட்டுக்கு முதல் க்ரெடிட் பவர் ஸ்டாருக்குத்தான். தியேட்டரில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே ஆரவாரம், கைதட்டல் . இத்தனைக்கும் அவர் பெருசா எந்த எக்ஸ்பிரசனும் காட்டலை , பிரமாதமான நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது . ஆனாலும் அவரை ரசிக்கிறார்கள் . பல காட்சிகளில் சந்தானத்தையே ஓவர் டேக்குகிறார்.
அடுத்து சந்தானம் . சொல்லவே வேணாம் , சொந்தப்படம் வேற . இவரை 2 விஷயங்களுக்காகப்பாராட்டலாம் . தன் படம் என்பதால் ஜோடி தனக்கு செட் ஆகற மாதிரியோ , தனக்கு தனி டூயட்டோ வைக்கலை . சராசரி ஆள்ங்க அப்படித்தான் செய்வாங்க . இவர் கேரக்டர் அனலைஸ் பண்ணி சொந்த டயலாக்கை அளி விடுவது , டக் டக்னு கவுண்ட்டர் கமெண்ட் அடிப்பது அழகு. ஒரு கல் ஒரு கண்னாடியில் மொத்தம் 104 ஜோக்ஸ் இருந்தன. இதில் 112 ஜோக்ஸ் . அதில் சந்தானம் மட்டும் 86 ஜோக்ஸ் சொல்றார். வெல்டன்
ஹீரோவாக புதுமுகம் சேது . இவர் பெருசா எடுபடலை . கே பாக்யராஜ் மாதிரி அப்பாவி முகம் செட் ஆகலை . இன்னொன்னு காமிரா எப்பவும் சந்தானத்தையும் , பவரையும் கவர் பண்ணி இருப்பதால் இவர் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகிறார். ஹீரோயின் யாருக்கு ஜோடி சேர்ந்தா என்ன ? ஜாலியா சிரிச்சமா? வந்தமா?ன்னு இருக்கனும்னு ஒரு மெண்ட்டாலிட்டிக்கு ஆடியன்சை கொண்டு வந்தது இயக்குநர் சாமார்த்தியம் .
ஹீரோயின் புடிச்சிருக்கு பட ஹீரோயின் விஷாகா . த்ரிஷா விளம்பரத்தில் டல் திவ்யா தூள் திவ்யாவாக ஆவாரே அந்த ஃபிகர் தான் என நினைக்கிறேன். உதடு ரொம்ப சின்னது , கண்ணும் . தனித்தனியா பார்த்தா அழகாக இருப்பவை மொத்தமா முகமா பார்க்கும்போது ஏதோ ஒரு வசீகரம் மிஸ்ஸிங்க் . டிரஸ்சிங்க் சென்ஸ் நல்லாருக்கு . யு நெக் ஜாக்கெட்டுக்கும், வி நெக் ஜாக்கெட்டுக்கும் இடையில் இஸ்பேட் ஃபிராண்ட் நெக் ஜாக்கெட் போட்டு கலக்குகிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் பேக் நெக் இஸ்பேட் மாடல் ஜாக்கெட் போட்டிருக்காங்க, ஆனா முன்னால் இப்படி அணிவது இதுவே முதல் முறை . ஸ்லீவ் மட்டும் ட்ரான்ஸ்பேரண்ட் மாடல் வேற . இவர் வரும் எல்லா காட்சிகளிலும் காதுக்கு போடும் ஸ்டெட் ஒவ்வொரு முறையும் புதுப்புது மாடலில் போட்டு நதியாவுக்கு சவால் விடுகிறார். ( உயிரே உனக்காக படத்தில் நதியா போட்டு வந்த ஸ்டெட் மாடல்கள் மட்டும் 87 )
இவர் இடை அழகியாக வர நல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா தொப்பையை குறைக்கனும். நடிப்பு ஓரளவு வருது . முயற்சித்தால் முன்னணி ஹீரோயின் ஆகலாம் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. டைட்டில் போடும்போதே கே பாக்யராஜ்க்கு க்ரெடிட் கொடுத்தது நல்ல விஷயம் . 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர் கோர்ட்டுக்குப்போனபோது நைச்சியமாகப்பேசி 60 லட்சம் ரூபாய் கொடுத்து காம்ப்ரமைஸ் பண்ணீயதும் குட்..
2. அதான் ரீமேக் படமாச்சே என காட்சிக்கு காட்சி ஜெராக்ஸ் எடுக்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு சில கேரக்டர்களை மாற்றியது
3.பவர் ஸ்டாரின் ரியல் லைஃபில் அவர் பண்ணும் அலப்பறைகள் , காசு கொடுத்து ஆள் கூட்டி வருதல் , பணம் செலவு பண்ணும் ஜாலித்தனம் எல்லாவற்றையும் சாமார்த்தியமாக படத்தில் சேர்த்து அதுக்கும் மக்களை கை தட்ட வைத்தது .
4. ஒரிஜினல் படமான இன்றுபோய் நாளை வா படத்தில் ஹீரோயின் ராதிகா அதில் குணச்சித்திரமாக வந்து போவார் , இதில் கிளாமராய் , இன்னும் அழகாய் காட்டி இருப்பது பாராட்டக்கூடியது
5. ஆசையே அலை போல ரீமிக்ஸ் பாட்டு , அடியே என் அன்னக்கிளியே பாட்டு இரண்டும் ரசிக்க வைக்கும் மெட்டு ( இசை - தமன் ) . பின்னணி இசையும் நல்லாருக்கு
6. இந்தப்படத்தில் நடிக்க பவர் ஸ்டாரிடமே 10 லட்சம் ரூபாய் , புது முக ஹீரோ சேதுவிடம் 3 லட்சம் கறந்ததாக ஒரு தகவல் . அது உண்மையாக இருந்தால்
இது செம லாபம். படமும் ஹிட் . வசூலும் அள்ளிடும் . எல்லாம் லாபம்/.
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. அரங்கத்தில் ஒரு இடத்தில் சந்தானம் பாட்டு பாடுகிறார். அப்போ ஆடியன்ஸ் எல்லாரும் 100% தங்கள் 2 கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கை தட்றாங்க . நிறைய படத்தில் இதே மாதிரி காட்சி வந்துட்டே இருக்கு. எப்போதும், எங்கேயும் தலைக்கு மேலே உயர்த்தி எல்லாம் கை தட்ட மாட்டாங்க. உங்க கேமரா ஆங்கிள்க்கு வசதியா இருக்கட்டும், பிரம்மாண்டமா இருக்கனும்கறதுக்காக இஷ்டப்படி எடுக்கறது தப்பு
2. ஹீரோயின் யாரை லவ் பண்ணப்போறார் என்ற எதிர்பார்ப்பே வரவில்லை
3. ஹீரோவிடம் ஹீரோயின் லவ் வருவதற்கான சிச்சுவேஷன் ஓக்கே , ஆனா அந்த சீனில் ஹீரோயின் முகத்தில் காதலையே காணோம் . ஹீரோ டக்னு பிடிச்சு முத்தம் தர்றாரே தவிர ,முகத்தில் ஒரு அபார சந்தோஷம் , காதல் பொங்கி வழிய வேணாமா?
4. ஓப்பனிங்க் ஷாங்க் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஒரு கொண்டாட்டப்பாடல், செம ஸ்பீடா பட்டையைக்கிளப்பி இருக்க வேணாமா? ரொம்ப மெதுவான இசை . சொய்ங்க் சொய்ங்க் ( கும்கி) மாதிரியோ ,ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி பாட்டு ( மைனா) மாதிரியோ கொண்டாந்திருக்கலாம். மிஸ்டு
5. இப்போ நான் சொல்லப்போவது சிலருக்கு சாதாரணமா இருக்கலாம். ஆனா ரொம்ப சென்சிட்டிவ் மேட்டர். சந்தானம் என்னதான் காமெடி கிங்க்கா இருந்தாலும் , கவுண்டமணி மாதிரி தானே பண்றார் என்றாலும் அவர் தன்னை விட சீனியர்களை , குறிப்பா பவர் ஸ்டாரை ரொம்ப நக்கல் அடிப்பது தப்பு . காமெடி என்றாலும் அதுக்கும் ஒரு வரை முறை இருக்கு
6. படத்தில் மொத்தம் 2 மணி நேரம் 20 நிடங்கள் காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஆனா கே பாக்யராஜ் படங்கள்ல பல காட்சிகள் நெஞ்சில் நிலைத்து நின்றது . லவ் செண்ட்டிமெண்ட் காட்சிகள் 2 வெச்சிருக்கலாம்
எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 42
எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே
ரேட்டிங்க் 6.5 / 10
சி.பி கமெண்ட் - காமெடிப்பிரியர்கள் , பெண்கள் , ஆண்கள் எல்லாரும் குடும்பத்தோடு பார்க்கலாம். இன்று போய் நாளை வா படத்தை அடிக்கடி டி வி யில் பார்த்தவர்கள் , பவர் ஸ்டாரை அதிக அறிமுகம் இல்லாதவர்கள் பெரிதாக ரசிக்க முடியாது .
உள்ளத்தை அள்ளித்தா விற்குப்பின் ஒரு முழுநீளகாமெடிப்படம் 100 நாள் படம் ஆகுது. தியேட்டர் ஓனர்ஸ் ரிப்போர்ட் # பவர் ஸ்டார் , சந்தானம் ராக்ஸ்
ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்
சி பி எஸ் சின் வீடியோ விமர்சனம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா? - http://www.youtube.com/watch?v=9VnGEvbu_eQ&feature=youtu.be …
சி பி எஸ் சின் வீடியோ விமர்சனம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா? - http://www.youtube.com/watch?v=9VnGEvbu_eQ&feature=youtu.be …
டிஸ்கி - காமெடி டயலாக்ஸ் மொத்தம் 114 இருக்கு. டைப் பண்ணவே ஒண்ணே முக்கால் மணி நேரம் ஆகும், எனவே அது தனி போஸ்டா பின்னர் வரும்
சமர் - த்ரில்லர் வித் லவ் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2013/01/blog-post_13.html …
அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2013/ 01/blog-post_3065.html
சமர் - த்ரில்லர் வித் லவ் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2013/01/blog-post_13.html …
அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2013/