Showing posts with label rajesh. Show all posts
Showing posts with label rajesh. Show all posts

Saturday, January 19, 2013

சிவா மனசுல சக்தி ( 2009) - சினிமா விமர்சனம்

http://cineidentity.com/wp-content/uploads/2011/08/Siva-Manasula-Sakthi.jpgகூரியர் ஆஃபீஸ்ல வேலை செய்யற ஹீரோவை ஹீரோயின் மிலிட்ரிமேனா?ன்னு லூஸ் மாதிரி கேக்குது ,  இதுக்கு முன்னால மிலிட்ரி ஆளுங்களையே பார்க்காதவர் போல . கூரியர் பாய் ஆன ஹீரோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஆமாங்கறார். ஹீரோயின் அவர் பங்குக்கு தான் ஒரு ஏர் ஹோஸ்டல்னு ஒரு பொய்யை அள்ளி விடறார். முதல் ரயில் சந்திப்புல இவங்க 2 பேரும் சந்திப்பு பின் அடிக்கடி  மீட்டிங்க், கலாட்டா , ஊடல் , காதல் ஆகுது . இவங்களோட ஜாலி கலாட்டா சந்திப்புகள் தான் கதை 

எம் ராஜேஷ் தான் இந்தப்படத்தோட முதல் ஹீரோ . இவரோட படங்கள்ல எப்பவும் கதை 1 தான் , திரைக்கதை சம்பவங்கள் மட்டும் கொஞ்சம் மாறும் , ஆனா எல்லாப்படங்களும்  ஹிட் .


ஜீவா தான் ஹீரோ . இவருக்கு ரொமாண்டிக் காட்சிகளை விட சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் காட்சிகள் நல்லா கை கொடுக்குது. டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப மோசம் இதுல . நல்லா நீட்டா பண்ணி இருந்திருக்கலாம்,. 


 அனுயா தான் ஹீரோயின். பெரும்பாலான தமிழர்களுக்குப்பிடிக்காத சதுர முகம். அளவில் மாறுபட்டாலும் அழகில்  ஒன்று பட்ட இரு உதடுகள் . இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் அபாரம். எந்த டிரஸ் போட்டாலும் டைட்டா போடனும் என்ற இவரது உயரிய லட்சியம் வாழ்க . பாட்டம் லெக்கின்ஸ் டைட்டா போடுவது போல டாப்ஸும் டைட்டாவே போடறார்.  இவர் லோ கட் பனியனில் வரும் காட்சிகள் 7 . லோ ஹிப்பில் வரும் காட்சிகள் 5 .  ( காட்சியை மட்டும் தான் எண்ணுனேன், வேறு எதையும் பார்க்கலை ) 


 காமெடிக்கு சந்தானம் .  ஷூட்டிங்க் ஸ்பாட்டையே கலகலப்பாக்கி விடும் சுபாவம் உள்ளவர் படத்தை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு போவதில் மன்னன்.  படத்துல 48 காமெடி விட் அடிக்கறார்.. 



ஹீரோவின் அம்மாவாக வரும் ஊர்வசி கலக்கல் காமெடி நடிப்பென்றால் , ஹீரோயின் அப்பாவாக வரும் பேராசிரியர் கு ஞான சம்பந்தன்  செம குணச்சித்திரம்


 http://www.kollyfans.com/wp-content/uploads/2009/06/2151.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1.  எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் காட்சியில் அனுயாவின் டிரஸ்ஸிங்க் அபாரம் .டார்க் ப்ளூ சார்ட்ஸ் , லைட் ஸ்கை ப்ளூ டாப்ஸ்ல அவர் ஸ்டைலாக நடந்து போகும்போது  கேமரா மேன் அவர் பின்னாலயே ஃபாலோ பண்ணி நம்மையும் அழைத்து செல்கிறார். 


2. எல்லா பாடல்களுமே ஹிட் .  எம் ஜி ஆரு இல்லீங்கோ  நம்பியாரு இல்லீங்கோ நாங்க எல்லாம் நடுவிலங்கோ ,  ஒரு அடங்காப்பிடாரி உன் மேல நான் ஆசை வெச்சேன் , எப்படியோ மாட்டிக்கிட்டேன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ( சூப்பர் ஹிட் )  , தித்திக்கும் தீயாய் , ஒரு பார்வையில்  என 6 பாடல்களும் ஓக்கே 



3. ஹீரோ ஹீரோயினிடம் சமாதானம் பண்ணும் சீனில் 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயின் தன் காதில் மாட்டி இருந்த வாக் மேன்  ஒயரை கழட்டிகாட்டி அவனை நோஸ் கட் பண்ணும் காட்சி , அப்போது காட்டப்படும் ரிவர்ஸ் ஒயிட் & பிளாக் காட்சி  குட் . அந்த சீனுக்கு காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பி ஜி எம் அழகு 



4. சந்தானத்தின்  புது செல் ஃபோனை ஹீரோ உடைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் காமெடி கலாட்டா 




5. ஹீரோயினின்  அண்ணன் சத்யன் காதலுக்கு ஹீரோ உதவுவது , அதுவும் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் கொள்ள ஒரு காரணம் என மென்மையான முக முறுவலில்  சொல்வது கிளாசிக் 



6. க்ளைமாக்சில் ஊர்வசி & கோ ஹீரோயின் வீட்டில் செய்யும் அலப்பரைகள்  செம . ஹீரோவின் தங்கை கேரக்டர் எப்போதும் ஒரே ஒரு பனியனுடன் வருவதும் இளமைக்கண்காட்சி


7. ஹீரோயின் உட்பட பல பெண் கேரக்டர்கள் ஸ்லீவ் லெஸ்ஸில் வருவதும் அவர்கள் கூந்தலை சரி செய்யும் காட்சியும் போனஸ் போஸ் 

http://www.cinemahour.com/gallery/gossip/54549503anuya.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோ ஹிப்பி தலையுடன் , தாடியுடன் இருக்கார் , அவரைப்பார்த்து ஹீரோயின் நீ மிலிட்ரி மேனா? என கேட்பது.. இத்தனைக்கும்  ஹீரோ அப்போதான் கேம்ப்ல இருந்து வர்றதா சொல்றார். 




2. ஹீரோயின் மவுண்ட் ரோட்டில் ஆட்டோ கிடைக்குமா? என பார்க்கறார். மவுண்ட் ரோட்ல ஊர்வலம் என்று ஹீரோ சொல்லி பைக்கில் லிஃப்ட் தர்றார். பின் ஹீரோயின் ஹீரோவை கழட்டி விட்டுட்டு அவர் பாய் ஃபிரண்ட்டிடம்  ஜாயின் ஆகறார். எதுக்கு தலையை சுத்தி மூக்கைத்தொடனும் . அந்த பாய் ஃபிரண்ட் கூடவே பைக்ல வரலாமே? 




3. ஒரு சீனில் ஹீரோயின் “ உன்னைத்தவிர என்னை யாரும் இவ்வளவு உரிமையா நீ வா போ என ஒருமைல கூப்டதே இல்லை , எல்லாரும் வாங்க போங்க என மரியாதையா தான் கூப்பிடுவாங்க என  ஹீரோவிடம் உருகறார். ஆனா அந்த தாடிக்காரன் எப்பவும் ஹீரோயினை “ ஒருமைல நீ வா போ என தான்  அழைக்கிறார். அப்போ ஹீரோ பக்கத்துலயே தான் இருக்கார். டக்னு ஏன் ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதும் கேட்கலை? 




4. மாடர்ன் கேர்ள் ஆன ஹீரோயின் முதல் முறை விசிட் செய்யும் ஹீரோவின் வீட்டில் ஹீரோவின் அம்மா தண்ணீர் தரும்போது ஏன் கவ்விக்குடிக்கறார்? அண்ணாந்துதானே குடிக்கனும்? 



5. ஹீரோ கலைஞர் மாதிரி ஒரு பொய்யர் எனவும் , டாக்டர் ராம்தாஸ் மாதிரி மாத்தி மாத்தி பேசற ஆள் எனவும் ஹீரோயினுக்கு ஓப்பனிங்க்லயே தெரிஞ்சுடுது. மிலிட்ரி ஆஃபீசர்னு பொய் எக்சட்ரா.  அப்படி இருக்கும்போது அவரோட பிறந்த நாள் எப்போன்னு சொன்னதை  மட்டும் எப்படி நம்பி ஏமாறுகிறார்? அவர் வீட்டுக்கு வந்தவர் ஒரு வார்த்தை கூட  ஹீரோவோட அம்மா கிட்டேயோ தங்கை கிட்டேயோ அதை ஏன் கன்ஃபர்ம் பண்ணலை?



6. ஹீரோயின் கோபத்துல க்ரீட்டிங்க்ஸை அவர் வீட்டு மாடில இருந்து தூக்கி வீசறார் , அப்போ காட்டுவது சாதா பேப்பர்ஸ் , கீழே விழுந்து கிடப்பது கலர் க்ரீட்டிங்க்ஸ் ( காரணம் க்ரீட்டிங்க்ஸ் லேசா இருக்காது எஃபக்ட்டோட பறக்காது என்பதால் பேப்பரை தூக்கி போட்டு ஷூட் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன் )



7. மேரேஜ்க்கு முன்பே மேட்டர் முடிக்கறேன், அப்போதான் மேரேஜ் என்ற ஹீரோவின் கண்டிஷனுக்கு ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கொள்வது அபத்தம் . எதேச்சையா மேட்டர் நடந்தா அது சகஜம், ஆனா பிளேன் பண்ணி கண்டிஷன் போட்டு இந்தக்காலத்துப்பொண்ணுங்க அதுக்கு ஒத்துக்குவாங்கன்னு தோணலை ( நான் யார்ட்டயும் கேட்கலை, எனக்கா தோணுச்சு )


8. ஹீரோயின் மேட்டர் முடிஞ்ச பின் நடக்கும் ஊடலில் பிரிவது ஓக்கே , ஆனா ஹீரோ போய் ஓவரா பம்முவது நம்ப முடியல . மாசமா இருப்பது ஹீரோயின். பம்ம வேண்டியது அவர் தானே?

 http://wetactress.files.wordpress.com/2010/11/anuya-sundarc-nagaram-tamil-movie-wet-saree-photo-pics-stills-gallery-0001.jpg





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மிஸ் , ஓடற ட்ரெயின்ல படிப்பது கண்ணுக்கு நல்லதில்லை , பேசலாமே?



2. மிலிட்ரில இருக்கறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

 ரொம்ப தாங்கஸ்ங்க


 நான் ஜெனரலாத்தான் சொன்னேன்


 அந்த பொது வுல நானும் வந்துடறேனே?




3.  நான் ஏர்ஹோஸ்டலா இருக்கேன்


 ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சாக்லேட் கொடுத்து லட்டு மாதிரி இருப்பாங்களே அவங்க தானே?



4. எப்போ நாம மறுபடி மீட் பண்ணலாம்?


 2 நாள்ல காஷ்மீர் போகனும்னு சொன்னீங்க?


 அது பிராப்ளம் இல்லை , ஆஃபீசர் கிட்டே பேசிக்கலாம்




5. பக்கத்துல ஒரு ஃபிகர் வந்துடக்கூடாது , ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க




6.  டேய்.. ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டியா?


 ஏண்டா இப்படி லோக்க்கலா பேசறே?



7.   ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சரக்கு  கொடுத்து ஸ்மைலி பண்ணுவாங்களே அவங்க தானே?  டேய் டேய் இண்ட்ரோ குடுடா.


 உனக்கு ஒத்து வராது விடுடா..




8.  சத்யன் - டென்ஷனா இருக்கேன் , அதான் தண்ணி அடிச்சுட்டு இருக்கேன்

 நீ அடிக்கறதுக்குப்பேரு தண்ணின்னா . நாங்க அடிக்கறதுக்குப்பேரு.. 




9.  நான் ஒரு முஸ்லீம் ஃபிகரை லவ் பண்றேன்


 பிரியாணிக்கு ஆசைப்பட்டு ...?




10.  வண்டலூர் ஜூவுக்கு


 பிக்னிக்கா போறோம்? சைட் அடிக்கப்போறோம். எதுக்கு ஃபேமிலி?



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHwb-hvtu1z-jip752Mdn-XDzJ5QbQgobi8tOsb5XtuM0HPeebWVnXppASfzfzXBFzkyzUBtjw4NARp2G9FjpisK1rDqpyerAw8HX7miTcasVa4MCqgd0kr5rjpuwE5WJDRnoC5cUl0E/s1600/Anuya9.jpg



11. எங்கடா இங்கே?

 திருப்பதில மொட்டை அடிக்க இங்கே டோக்கன் தர்றதா சொன்னாங்க




12,.  நம்ம கண்ட்ரிலயே ஏன் இந்த உலகத்துலயே ஃபிகரை கரெக்ட் பண்ண ஃபேமிலியோட வந்த முத ஆள் நீ தான்



13.  இங்க்லீஷ்   புக் ? பொம்மை தானே பார்க்கறே? உண்மையை சொல்லிடு




14.  ஜூராசிக் பார்க் ல வர்றது மாதிரி தண்ணீர் டம்ளர் எல்லாம் அதிருது  ஏதோ பூகம்பம் வருது போல, எல்லாரும் தாழ்வான இடத்தை  நோக்கி போங்க..


 அட ஷகீலா



15.  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபிலிங்க்



`16.  ஷகீலா -   என் பேக் கிரவுண்ட் தெரியாம பேசாதீங்க


டேய், பேக்ல ஏதோ கிரவுண்ட் இருக்காம் , வாங்கி வளைச்சிப்போட்றலாமா?


17.  நீங்க ஏர் ஹோஸ்டல்னு பொய் சொன்னது கூட ஓக்கே , ஆனா ஃபிளட் சவுண்ட் வெச்சே அது எந்த கம்பெனி ஃபிளைட்னு சொன்னீங்க்ளே ஒரு ரீலி முடியல




 18.  ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்ளவ் ஃபாஸ்ட்டா ரைமிங்க் சொன்னதில்லையே? நீ? எப்படிடா?



19.  மச்சி ஃபோன்ல ஸாரி கேட்கறாடா


 கேட்டா ஸாரியோட பிளவுசும் வாங்கிக்குடுடா மச்சான்



20. பச்சைத்தண்ணி குடிக்கறதைக்கூட பாயாசம் குடிப்பது மாதிரி சீன் போடும் வேலை எல்லாம் இங்கே வெச்சுக்காதே



 http://media.mademan.com/chickipedia/uploaded_photos/8/88/Anuya_Bhagvath-skin-eyes-lovely-hot-chickipedia_thumb_585x795.jpg



21. லேட்டஸ்ட் மாடல் ஃபோனா?  அவ கட் பண்ண பிறகும் அவ பேசறது கேட்குதே?



22.  என்ன வேண்டிக்கிட்டே?


 உனக்கு 40 வயசு வரை மேரேஜே ஆகக்கூடாதுன்னு



23.  நீ என்ன வேண்டிக்கிட்டே>?


 என்னை மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு புருஷனா வரனும்னு



24. நீங்க என்ன வேண்டிகிட்டீங்க? சொல்லப்பிரியம்னா சொல்லலாம்


 சொல்லலைன்னா விடவா போறீங்க?


25.  அந்தப்பொண்ணால நீ பிளாக்ல டிக்கெட் வைக்கும் நிலைமைக்கு வருவே நு சத்தியமா  நான் நினைச்சுப்பார்க்கலை , ஆனா நீ சத்யம் தியேட்டர் வாசல்ல டிக்கெட் வித்துட்டு இருக்கே


26. சாரி , நான் ஆம்பளைங்களோட சினிமா பார்ப்பதில்லை



27. எனக்கு வர்றதெல்லாம் இங்க்லீஷ் கால் தான், ஐ டோண்ட் நோ ஒய்? ஆட்டோமேடிக்கலி கம்மிங்க் யூ நோ ?



28.  என்னது ? நைட் ஷோ போலாமா?னு கேட்கறா? அவங்கப்பன் வாட்ச்மேனோ?



29.  ஓடாத நல்ல படத்துக்கு கூட்டிட்டு வந்து ஓரமா உக்கார்ந்து படம் பார்க்கனும்


30. அய்யய்யோ இப்போ என்ன பண்றது?

 இந்த ஸ்க்ரீனை கிழிச்சு தூக்குப்போட்டுக்க


 http://s2.hubimg.com/u/3636329_f520.jpg



 31.  அதிகமா ஆஃப் அடிக்கற ஆம்பளையும் , அதிகமா பீர் குடிக்கும் பொம்பளையும்  வாமிட் எடுக்காம வீட்டுக்குப்போனதா சரித்திரமே இல்லை


32,.  என்ன சொன்னா?

 திருந்திடறேன், ஒரு வாரம் டைம் குடுன்னு கேட்டா


33. போற பாதை தப்பா இருந்தாலும் போய்ச்சேரும் இடம் கோயிலா இருக்கனும்


 எவ்ளவ் பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க ?


34.  ஓ! உனக்குத்தான் கல்யாணமா?

 ஏன் குரு? எனகெல்லாம் மேரேஜே ஆகக்கூடாதா?



35.  உனக்காக அவனுங்களை அடிச்சதா நினைச்சியா? நமீதா, அசின்,, த்ரிஷா இவங்களை எல்லாம் மொக்கை ஃபிகர்னு சொன்னானுங்க.. அதுக்குத்தான் அடிச்சேன்

 அப்போ எனக்காக அடிக்லையா? டொண்ட்ட டொண்ட்ட டொண்ட்டடொயிங்க்  ( நாயகன் தீம் மியூசிக் )




36.  என்னைக்கேக்காமலேயே கேக் வாங்கிட்டு வந்திருக்கே?


 37. இதுவரை எந்தப்பெண் கிட்டேயும் நான் சாரி கேட்டதில்லை, யூ ஆர் வெரி லக்கி யூ நோ?

38. லவ் பண்றவனுங்க கூட மட்டும் தண்ணி அடிக்கக்கூடாது


39.  உங்க லவ் ஸ்டோரியை எடுத்து விடுங்க


ஆடோகிராஃப் மாதிரி 7 மணீ நேரம் இழுக்கும்..


40 பொண்ணுங்களை நம்புனா நடு ரோட்டுக்குத்தான் வரனும்

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/ce/SMS_Poster.JPG/220px-SMS_Poster.JPG





41.  வீட்டுக்குப்போய் சேர்ந்துட்டியா? நடு ரோட்ல கிடக்கிறயா? அதை தெரிஞ்சுக்கத்தான்  கூப்பிட்டேன்

 எப்டி மச்சி கரெக்ட்டா கண்டு பிடிச்சே? நடு ரோட்ல தான் கிடக்கேன்




42.  எனக்கு உனை பிடிக்கலை .. உவ்வே



43.  டேய் அவ போய் 6 மாசம் ஆகுது. யார் கிட்டே பேசிட்டு இருக்கே?


44.  கோயில் கோயிலா ஏன் என்னை அலைய விடறே?  கல்யானம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா சொல்லிட வேண்டியதுதானே?


 சரி இஷ்டம் இல்லை


45,.  உன்னை நம்ப முடியாது . நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்தா
க்கூட இது நமக்குப்பிரந்ததா?ன்னு கேட்டு நக்கல் அடிப்பே , அப்புறம் எல்லாம் தமாஷ்ம்பே..


46. மாமா , என்னை மன்னிச்சுடுங்க


 நான் என்ன கட்சியா நடத்தறேன்? என் கால்ல போய் விழுந்துட்டு?




 சி பி கமெண்ட் - காமெடி பிரியர்கள் , சந்தானம் ரசிகர்கள் , காதலர்கள் என அனைவரும் பார்க்கலாம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx991AN8j03faWXhM7oSkS_JfSSpxxyVJplb9F08RQdcYocL_vmxxBKo_P6g6TT-gTOKrY1PiPTg5rc8SxGM_S1dPGfcQMtynGThkYLkiqU3I3FfkqAcOAYoi6cqY4xJCdgnrQvnLaipOj/s1600/Anuya_Bhagvath_Hot_Photo_Stills_01.jpg