7 மாசம் கர்ப்பமா இருக்கற நாயகி காணாமப்போன தன் மகனைத்தேடிட்டு இருக்கா . அந்த சம்பவம் நடந்து 6 வருசங்கள் ஆகுது. ஆனா அவன் உயிரோட இருப்பான்னு நம்பறா.முதல் குழந்தை காணாமப்போனப்ப நடந்த கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிந்து வாழ்றாங்க . நாயகி இப்போ வேற ஒருவரோட இருக்கா . . குழந்தைகளைக்கடத்திக்கொலை செய்யும் சீரியல் கில்லர் , வேற ஒரு சீரியஸ் கில்லர் என இரு வில்லன்கள். எப்படி நாயகி தன் குழந்தையை மீட்டாள் என்பதை இரண்டு காதுகளிலும் 4 முழம் மல்லிகைப்பூ சுற்றி சொல்லி இருக்காங்க
நாயகியா நடிகையர் திலகம் படத்துல பிரமாதமான நடிப்பை வழங்கிய கீர்த்தி சுரேஷ். குறை சொல்ல முடியாத நடிப்பு . பல இடங்களில் உச் கொட்ட வைத்தாலும் இயக்குநரின் கேரக்டர் ஸ்கெட்சில் ஏற்பட்ட பிழையால் பல இடங்களில் கடுப்பை ஏற்படுத்தும் சூழல்
சீரியல் கில்லர் நடிப்பு ஓக்கே , க்ளைமாக்ஸில் அவர் நடத்தும் கேம் ஷோ கேனத்தனமா தோன்றினாலும் தமிழுக்கு புதுசு
இன்னொரு சீரியஸ் கில்லர் நடிப்பு சுமார்தான் , சும்மா மிரட்டி இருக்க வேணாமா?
முதல் கணவன் முதல் தர நடிப்பு , இரண்டாவது கணவன் இரண்டாந்தர நடிப்பு . வரிசைப்படி செலக்சன் பண்ணி இருக்காங்க போல
அந்த மகன் கேரக்டர் ல நடிச்சவர் நல்ல நடிப்பு . தமிழ் சினிமாவில் 1987ல் ரிலீஸ் ஆன பூ விழி வாசலிலே படத்துக்குப்பின் ஒரு குழந்தை யை மையமாக வைத்து புனையப்பட்ட க்ரைம் த்ரில்லர் இது
படத்தின் பெரிய பிளஸ் ஒளிப்பதிவு . மிகப்பெரிய மைனஸ் இசை, பின்னணி இசை . க்ரைம் த்ரில்லர் படங்களில் முத்திரை பதித்த விடியும் வரை காத்திரு , மூடுபனி , சிகப்பு ரோஜாக்கள் ,பூ விழி வாசலிலே , நூறாவது நாள் , நாளை உனது நாள் , டிக் டிக் டிக் படங்களின் பிஜி எம் மை எல்லாம் ஒரு முறை பார்த்து விட்டு ஹோம் ஒர்க் பண்ணி இசை அமைச்சிருந்தா நல்லா ரீச் ஆகி இருக்கும்
சபாஷ் இயக்குநர்
1 மிகப்பிரமாதமான ஒளிப்பதிவும் , நல்ல லொகேஷன் செல்க்சனும் பெரிய பிளஸ்
2 ஃபாரன்சிக் மலையாளப்படத்தை நினைவு படுத்தினாலும் அந்த இடைவேளை ட்விஸ்ட் அபாரம் . நாயகியின் முதல் மகன் கையில் கத்தியை எடுத்து அருகில் இருப்பவனை காயப்படுத்தி பார்க்கும் பார்வை..!!!
3\ நாயகிக்கு டூயட்டோ , காமெடி டிராக்கோ வைக்காமல் காப்பாத்துனது
நச் டயலாக்ஸ்
1 தனியாவா இருக்கீங்க?
தனிமைல இருக்கேன், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
2 கேட்கப்படாத கேள்விகள்தான் தீர்க்கப்படாத பல புதிர்களுக்குக்காரணம்
3 சில மிருகங்களுக்கு பார்க்கறது எல்லாம் இரையா தெரியும் , சில மிருகங்களுக்கு செலக்டிவாதான் இரையை சாப்பிட பிடிக்கும்
4 கடலுக்குள்ள தத்தளிச்ட்டு இருக்கும்போது கரை கண்ணுக்குத்தெரியலையேனு கவலைப்படக்கூடாது
5 உலகத்துலயே மோசமான தண்டனை எது தெரியுமா?
நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாம அடுத்தவங்க மாதிரி வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுதான்
6 பிடிக்காத ஒண்ணை ஒருத்தங்க மேல திணிக்கறதுக்குப்பேரும் வன்முறை தான்
7 நீ என்னோட அடையாளத்தை அழிச்சுட்டே , நான் எனக்கான அடையாளத்தை நானே உருவாக்கிக்கிட்டேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ்-
1 குழந்தையை தவற விட்ட சோகத்தில் இருக்கும் நாயகியிடம் ஆறுதல் சொல்லும் ஒரு பெண்ணின் வசனம் = உன் நிலைமைல நானா இருந்தா தற்கொலை பண்ணி இருப்பேன் அப்டிங்குது, இதுதான் ஆறுதல் வார்த்தையா? தற்கொலைக்கு ஐடியா கொடுக்கற , மாதிரி இருக்கு
2 சீரியல் கில்லர் மழையே வராத இடத்துல நைட் டைம்ல லூஸ் மாதிரி ஏன் குடை பிடிச்ட்டு வரனும்? குழந்தைகளைக்கவர , கடத்த டோரா புச்சி மாஸ்க் போதாதா? எதுக்கு காமெடி ஆக்டர் சார்லி சாப்ளின் மாஸ்க்? அது பயம் ஏற்படுத்த முதல் தடை
3 வில்லனின் இருப்பிடத்தை அறிந்த நாயகி டக்னு போலீஸ்க்கு ஃபோன் பண்ணா மேட்டர் ஓவர்., ஏன் கேனம் மாதிரி பங்களாவுக்குள்ளே அசட்டுத்துணிச்சலா போகனும்? 7 மாச கர்ப்பிணி வில்லன் துரத்துனா ஓட முடியாது, அடிச்சா தடுக்க முடியாது எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்டி?
4 குழந்தையை ஒரு டைம் தவற விட்டு மீட்ட பின்பு கூடுதல் ஜாக்கிரதையா இருக்க வேணாமா? ஆடியன்ஸ் பல்ஸ் எகிற வைக்க அடிக்கடி அஜாக்கிரதையா இருப்பது எப்படி?
5 நாயகியின் முதல் கணவன் இவ்ளோ பிரச்சனை நடந்த பின்பும் நாம பொது இடத்துல சந்திக்கலாம், உன் வீடு வேணாம்கறான். ஆப்சன் 1 அவன் வீட்டுக்கு கூப்பிட்டிருக்கலாம் 2 . தனிமையான ஹோட்டல் வரச்சொல்லலாம் . எல்லாம் விட்டுட்டு கூட்டமான இடத்துக்கு குழந்தையோட வர்றது அபாயம் ஆச்சே?
6 நாயகியின் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்ன முதல் கணவன் அதுக்கு அடுத்தடுத்த சீன்களில் அடிக்கடி வந்துட்டுதான் இருக்கான்
7 வில்லனின் பங்களாவுக்குள் நுழைந்த நாயகி ஒரு டவுட் வந்து தனிமையில் துப்பறிய வாய்ப்பு வேண்டி நாயை வாக்கிங் கூட்டிட்டுபோறீங்களா?னு வில்லன் கிட்டே கேட்க அவன் என்னமோ நாயகி வீட்டு வேலைக்காரன் மாதிரி சரிங்கறான். அட்லீஸ்ட் ரக்சிய அறைக்கு பூட்டாவது போட்டிருக்கானா? அதுவும் இல்ல
8 க்ளைமாக்ஸ்ல இன்னொரு வில்லன் அதைக்குடினு ஒரு திரவம் காட்னதும் கர்ப்பிணியான நாயகி கொஞ்சம் கூட யோசிக்காம குடிப்பது ஆச்சரியம்
9 க்ளைமாக்ஸ் ல வில்லன் எடுக்கும் முடிவும் மடத்தனமானது . கைல ரிவால்வர் இருக்கு, நாயகியை சுட்டுட்டு எஸ் ஆகி இருக்கலாம்
10 ஓப்பனிங்கில் பேசாமல் இருக்கும் மகன் இரவில் வைதேகி காத்திருந்தாள் வெள்ளைச்சாமி மாதிரி பாடுவது எப்படி? எந்த சிகிச்சையும் இல்லாமல் க்ளைமாக்ஸில் பேசுவது எப்படி?
penquin -பென்குயின் = 50% (The Silence of the Lambs-1991) + 25% HIT ( telugu) + 10 % சைக்கோ +5% பொன் மகள் வந்தாள் + 5% ராட்சசன் + 5 % சொந்த சரக்கு. ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்களுடன் கூடிய க்ரைம் த்ரில்லர் .
விகடன் எதிர்பார்ப்பு மார்க் -40. ரேட்டிங் 2.25 / 5 . கர்ப்பிணிப்பெண்கள் , இளகிய மனம் கொண்டோர் படம் பார்ப்பதை தவிர்க்கவும்
-