1. தலைவருக்கு கிரிக்கெட் மோகம் ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?
மகளிர் அணித்தலைவியை ஏலம் போட்டுடலாமா?ன்னு கேட்கறாரே?
-------------------------------------------
2.பிரபுதேவா- நயன் தாரா 2 பேரும் ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன டைட்டில் வைப்பாங்க?
கள்ளக்காதலுக்கு மரியாதை
------------------------------------
3.என் கட்சில கோஷ்டிப்பூசலே கிடையாது...
விளையாடாதீங்க தலைவரே... உங்க கட்சில இருக்கறதே 2 பேரு. 1. நான். 2. நீங்க.
---------------------------------
4. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
தலைவரே... பொது மக்களுக்கா? உங்களோட வாரிசு மக்களுக்கா?
---------------------------------------
5. தன்னை கேவலப்படுத்தறது தெரியாம டி வி யை ரசிச்சுப்பார்த்துட்டு இருக்காரு தலைவரு.
புரியலையே..?
தலைவரோட டாப் டென் ஊழல்கள் பற்றி புரோக்ராம் நடக்குது.....கை தட்டி ரசிக்கறாரே..?
-----------------------------------
6. தலைவருக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு சொன்னியே.. அது அவர் காதுக்கு கேட்டுடுச்சு.. கோவிச்சுக்கிட்டாரு...
அய்யய்யோ. அப்புறம்?
சின்ன பங்களான்னு தான் இனி சொல்லனுமாம்.
------------------------------------
7. டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட்டை திறந்து வைக்க தலைவர் ஒத்துக்கலை.
பிராஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட்னா உடனே ஓக்கே சொல்லி இருப்பாரு.
-------------------------------
8. இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டதைப்பற்றி தலைவர்ட்ட கருத்து கேட்டது தப்பா போச்சு.
ஏன்?
நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள் கால்ல கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....
------------------------
9. நம்ம தலைவர் அரெஸ்ட் ஆனதும் டில்லில இருக்கற 40 மினிஸ்டர்களுக்கு ம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே.. ஏன்?
அப்ரூவர் ஆகிடறதா தலைவர் சி பி ஐ கிட்டே வாக்கு குடுத்துட்டாராம்.
----------------------------------
10. தலைவர் அப்ரூவர் ஆகிடறதா வாக்கு குடுத்தும் யாரும் பயப்பட்ட மாதிரி தெரியலையே....?
எந்தக்காலத்துல கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தி இருக்காருங்கற தைரியம் தான்.
-----------------------------------
டிஸ்கி -1 : இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதால ஆஃபீஸ்ல கண்காணிப்பு அதிகமா இருக்கும். அதையும் தாண்டி நடுநிசி நாய்கள்,காவலர் குடி இருப்பு, ஆடு புலி, மார்கழி 16,உட்பட ரிலீஸ் ஆகி இருக்கற 5 படங்கள்ல ஏதாவது ஒரு படத்தை கட் அடிச்சுட்டு பார்த்துடனும்.ஸ்கூ;ல் லைஃப்,காலேஜ் லைஃப்,ஆஃபீஸ்லைஃப்னு பல கால கட்டங்கள்லயும் கட் அடிச்சுட்டு படம் பார்க்கறது ஒரு த்ரில்லிங்க் அனுபவம் தான்.
டிஸ்கி 2 - இந்த 7 மாசத்துல முதன் முதலா பயணம் படத்துலதான் என் கணிப்பு 100% மேட்ச் ஆகி இருக்கு.ஆனந்த விகடன் மார்க்கும், என் எதிர்பார்பு மார்க்கும் 42 தான்.ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்... அந்த கெஸ்ஸிங்கையாவது கரெக்ட்டா பண்ணலாம்னுதான்.