Showing posts with label nayanthara. Show all posts
Showing posts with label nayanthara. Show all posts

Friday, May 27, 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்


நயன் தாரா கூட ஊடல், நிஜ வாழ்வில் தாலி கட்ட வாய்ப்பிலை, பார்த்தாரு சிம்பு, சொந்தப்படம் எடுப்போம் , படத்துலயாவது தாலி கட்டுவோம்னு முடிவு பண்ணாரு. அதான் இது நம்ம ஆளு


ஹீரோ ஹீரோயினை பொண்ணுப்பார்க்கப்போறாரு. பார்த்ததும் ஓக்கே ஆகிடுது.பொதுவா பொண்ணுங்க நம்ம வாயைப்பிடுங்கி எதுனா போட்டு வாங்குவாங்க,    அந்த ஃபார்முலா படி  மாப்ளை கிட்டே பொண்ணு உங்க பழைய லவ் எதுனா இருக்கா?னு கேட்குது.

 ஹீரோ ஒரு லவ் பற்றி சொல்றாரு, ஃபிளாஸ்பேக்.

ஹீரோயின் பற்றி விசாரிக்க ஹீரோ ஃபிரண்ட் ஒரு டிடக்டிவ் வைக்கறாரு. அது தெரிஞ்சு ஹீரோயின் கடுப்பாகிடுது. இவங்க ஊடல் என்னாச்சு? ஹீரோ யாரைக்கல்யாணம் பண்ணாரு என்பதுதான் மிச்ச மீதி கதை


 படத்தின் முதல்  ஹீரோ வசன கர்த்தா தான் . பிரமாதமான கவுண்ட்டர் டயலாக்ஸ், ஷார்ப்பான் கவுண்ட்டர்ஸ், 10 பேர் கொண்ட குழு தான் இப்டி எழுதி இருக்க முடியும்.


ஹீரோவா சிம்பு. 3 விதமான கெட்டப் , 3 ஜோடி . இப்பவெல்லாம் ஒரு ஜோடியோட நடிச்சா யாரும் ஹீரோவை மதிப்பதே இல்லை. டிரஸ்ஸிங் சென்ஸ்  பக்கா . வழக்கமா அவர் செய்யும் விரல் சேட்டைகள் எல்லாம் இல்ல. பக்கா ஜெண்ட்டில்மேன் லுக்,  ஐ டி கம்பெனி ஒர்க்கர் போலவே தோற்றம் டீசண்ட், டான்ஸ் ஸ்டெப்பில் இன்னும் கலக்கி இருக்கலாம்.



ஹீரோயினா மேல் உதட்டு மச்ச அழகி , அஞ்சே முக்கால் அடி உச்ச அழகி நயன் தாரா, காதலிக்க இவருக்கு சொல்லியா தரனும் . அதுவும் ஆல்ரெடி காதலிச்சவரை காதலிப்பது போல் நடிக்க 2 கோடி சம்பளம். இதுவல்லவா வாழ்க்கை? பட்டாசைக்கிளப்பி இருக்கார் .


2 வது  ஹீரோயினா ஆண்ட்ரியா. சிம்பு அருகே க்ளோசப்  காட்சிகளில் இன்னும் யூத்தா காட்டிக்க மெனக்கெட்டிருக்கலாம். ஆண்ட்டி போல் இருக்கார் .

சூரிதான் காமெடி , நீண்ட இடைவெளிக்குப்பின் செம ஒர்க் அவுட். இவர்து ஒன் லைனர்களுக்கு சந்தானம் காமெடிக்கு இணையான்  கைதட்டல்கள்


 சந்தானம் கெஸ்ட்  ரோல்.  பெரிதாக  எடுபடவில்லை. இன்னும்  போர்சன் கொடுத்திருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் அப்பா கேரக்டர்கள்  நல்ல குணச்சித்திர நடிப்பு . வெல்டன்.


இசை  டி ஆர் குறளரசன். 2 பாட்டு செம ஹிட்டு . பிஜிஎம்  நீட்.


பாண்டிராஜ்  திரைக்கதை வசனம் இயக்கம்.  குட்.

க்ளைமேக்சில் உங்க 2 பேரையும் வெச்சு படம் எடுத்து முடிப்பதற்குள்  ஷப்பா என புத்திசாலித்தனமான ரியலிஸ்டிக் டயலாக்


நச் டயலாக்ஸ்

GOD மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ CARD மேல CREDIT CARD மேல நம்பிக்கை இருக்கு # இ ந ஆ

2 ஏன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க?



பார்க்கற மாதிரி இருக்கறதால # இ ந ஆ


3 கவுச்சி பிடிக்கும்னு சொன்னேன்.ஆனா கவர்ச்சி பிடிக்கும்னு சொல்லலையே?# இந ஆ

4 மடியற பிகருங்களை கடவுள் உனக்காக படைச்சதா நினைச்சுக்கோ.மடியாத பிக்ரை மத்தவங்களுக்காக படைச்சதா நினை


5 நயன் = தம் அடிப்பீங்களா?
சிம்பு.= எனக்கு வேணாம்.நீங்க வேணா அடிங்க

6 நம்ம கிட்டே இருந்து வாந்தியும் நம்மைப்பத்தி வதந்தியும் எப்பவும் வரவே கூடாது # இ ந ஆ


7 சிம்பு டூ சூரி = எவன் எவனோ நடிக்கறான்.நீ நடிச்சா என்ன குத்து

8 லவ் பண்ணப்போறேன்


எத்தனை நாளுக்கு?
பார்ட் டைமா?புல் டைமா?


வாட்?

லைப் டைம் # இ ந ஆ

9 லவ் பண்றது கஷ்டம் இல்லை.கஷ்டம் இல்லைன்னா லவ்வே இல்லை # இ ந ஆ

10 வாழ்றான்யா.1 போனா 1 வருது .1 வந்தா 1 போகுது # இ ந ஆ


11 இம்மீடியட்டா இம்ப்ரெஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறீங்களா?

12 சில குடும்ப குத்து விளக்குங்க புது நெம்பர் வந்தா எடுக்க மாட்டாங்க

13 பொண்ணோட ஜடையை வெச்சே அவ ஜாதகத்தையே சொல்றவன் நான்.எங்கப்பா பொண்ணோட நடையை வெச்சே # இந ஆ


14 இவ தான்னு ஹார்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டா எவ வந்தாலும் கேட்டுக்கு வெளியே தான்


நாங்கெல்லாம் பூட்றதே இல்ல
யார் வேணாலும் வரலாம் போலாம்,ஓப்பன் #இந ஆ--

15 நீங்க அழகா இருக்கீங்கன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க , பட் உங்கள நான் அழகு -னு சொல்ல மாட்டேன்

ஆனா அவங்க சொல்றது accept பண்றேன் #இந ஆ

16 நாம யாருக்காச்சும் கொடுத்தோம்னு தான் இருக்கனும்.
நாம யாரையும் கெடுத்தோம்ன்னு
இருக்க கூடாது.#இந ஆ

17 காம்பினேசன் நல்லா இருக்கும்ன்னு பார்த்தா . இவ

டாமினேசன் அதிகமா இருக்கும் போலயே # இ ந ஆ


18 நீங்க ரொம்ப நல்லவங்க தான் ப்ரதர்.எல்லாரும் 2 ,3 லவ் பண்றாங்க
ஆனா நீங்க எதையும் மறைக்கிறதில்ல
உங்க கட்ஸ் எனக்கு புடிக்கும் # இ ந ஆ

19 டியர், நமக்குக் கல்யாணம் ஆன பிறகு என்னை எங்கே கூட்டி போகப் போற?
பெட்ரூம்க்கு தான்..# இ ந ஆ


20 உன் பக்கத்துல நான் இருந்தா என்ன பண்ணுவ.?



அப்படியே கட்டிப்புடிச்சு.....
டேய்,இது யு சர்ட்டிஃபிகேட் படம் ஏ சர்டிஃபிகேட் ஆக்கிடாதீங்கடா # இ ந ஆ


21 என்னப்பா, இவ எஸ் ஜே சூர்யா பட ஹீரோயின் மாதிரி இருக்கா? # இ ந ஆ



22 பாத்ததுக்கே ஒரு புல் அடிச்சது போல் இருக்கே?





கல்யாணத்துக்குப்பின் பாரு.பேய் அடிச்சது போல் இருக்கும் # இந ஆ


23 நயன் = எத்தனை பேரைடா லவ் பண்ணுவே?


சிம்பு = முதல்ல நீங்க நிறுத்துங்க # அப்ளாஸ் டயலாக்


24 நானும் எத்தனை நாள் தான் வெர்ஜினாவே சுத்திட்டு இருக்க?# இ.ந ஆ



25 டேய்.நானே கடுப்புல இருக்கேன்
அதைக்கொஞ்சம் விடுப்புல அனுப்பு


26 கில்மா பிகருக்கு இவ்ளோ பில்டப்பா? # இந ஆ



27 ஏண்டி உன் பக்கத்துல ஏதோ ஸ்வீட் வாய்ஸ் கேட்குதே யாரு?
அடேய்.அது எங்க அம்மா டா
FRONT டை கவர் பண்ணச்சொன்னா பேக்கை கவர் பண்றான் # இ ந ஆ


28 ஓல்டு லேடின்னு நினைச்சேன்.கோல்டு லேடியா இருக்கு # இந ஆ


29 மாப்ளை வெட்கப்படறாரு போல
பார்யா.வந்துட்டாரு ஆர்யா # இந ஆ




30 எப்டியாவது கோல் போடனும்
உணர்ச்சிவசப்படாத.கூல் # இந ஆ


31 நீ இவளை லவ் பண்ண 2 காரணம். 1 உன் பருவம் 2 அவ புருவம்.அவளோட புருவம் உன் முதல் காதலி புருவம் போலவே # இ ந ஆ



32 நீ ஏன் விளம்பரத்துக்கு அலையறே?
ஈசியா ரீச் ஆகிடலாம் இல்ல ?# உள் குத்து வசனம்

33 சொன்னா கேளுங்க.எனக்கு நடிப்பு வராது.அதுக்குன்னு நிறையப்பேரு இருக்காங்க

34 ஓசி ல வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?



35 தேடி வர்ற பிகரை விடறதும் தப்பு.
விட்டுட்டுப்போன பிகரை தேடிப்போறதும் தப்பு # இ ந ஆ பென்ச் மார்க் டயலாக்



36 ஏன் போன் கட் பன்றே?
என்னை ஹர்ட் பன்ற மாதிரி பேசினா? # இந.ஆ



37 என்ன நினைச்சே இப்போ?
நான் என்ன சொல்லனும்னு நினைச்சியோ உன் மனசில அதையே தான் என் மனசில் நினைச்சேன் # இந ஆ


38 இதுக்கெல்லாம் நான் FEEL பண்றதா இருந்தா நான் எப்பவோ செத்திருக்கனும் - சூரி # இந ஆ


39 பொதுவா பசங்க எப்போ பிகரை கழட்டி விடலாம்னு தான் யோசிப்பாங்க # இ ந ஆ



40 உனக்கு ஏற்கனவே ஒரு ப்ரியா
அவளுக்கு ஒரு ஆர்யா.அவ்ளோதாண்டா # இந ஆ



41 ஆடி மாசம் கோடி பாசம்
புதுசு புதுசா பழமொழியை உருவாக்காதீங்கடா # இந ஆ


42 ஒரு பொண்ணை மட்டும் லவ் பண்ணிட்டோம்னு வை என்ன பொழப்புடா இது ன்னு புலம்ப.விட்டுடுவாளுக # இந ஆ



43 என்னை நல்லா வெச்சு பார்த்துக்குவியா?
வெச்சுப்பேன்
டேய் # இந ஆ


44 நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?



சுருதி ,ஐஸ்வர்யா ,ப்ரியா



ம்ஹூம் சிம்பு ,பிரபு ,தனுஷ் ,ஆர்யா
அடேய் 2 பேரும் அவங்கவங்க லவ்வர்ஸ் லிஸ்ட்


45 இவ என் கிட்டேதான் இப்டி பண்றாளா? இல்ல எல்லார்ட்டயும் இப்டித்தானா?# இந ஆ


46 பரதேசி கூட வேணா வாழ்ந்துடலாம்.ஆனா பிரைவசி இல்லாம வாழ முடியாது


47 எல்லாரும் என் லவ்வை வெச்சு காமெடி பண்றீங்க.இப்போ நீ சொன்ன மாதிரி நான் சொல்லி இருந்தா எப்டி நீ feel பண்ணுவே ?# இந ஆ

48
டேய்.என் கிட்டே நீ ரொம்ப உண்மையா இருக்கே.நான் அப்டி இல்லையோன்னு FEEL பண்ண வைக்கறே # இந ஆ



49 பொண்ணுங்க சாமி மாதிரி.சாமியை கும்பிடத்தான் முடியும்.



பின்னே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மியா அடிக்க முடியும் ?# இந ஆ


50 வண்டியை தூசு படாம பார்த்துக்கோ


அப்போ ஷோ ரூம்ல தான் வைச்சிருக்கனும் # இந ஆ


51 எல்லாருக்கும் லவ் பண்ற பொண்ணைக்கட்டிக்கும் பாக்யம் கிடைப்பதில்லை # இந ஆ



52 சம்பந்தி.உங்க சம்சாரம் தான் நீங்க லவ் பண்ணின முத பொண்ணுனு இப்போதானே சொன்னீங்க?
அது தண்ணி அடிக்கும் முன் சொன்னது #,இந ஆ



53 அடேய்.எமன் கைல லெமன் கிடைச்ச மாதிரி உன் கைல பொண்ணு கிடைச்சது # இந ஆ



54 கிஸ் அடிக்கறதுல நீ பிஹெச்டி முடிச்சவன் ஆச்சே.உனக்கு எதுக்கு கமல் பட ரெப்ரன்ஸ் ?# இந ஆ



55 ஜில்லுனு காத்து
நீ கொஞ்சம் ஜன்னலை சாத்து # இந ஆ



56 உன்னைப்பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது
எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் இதே டயலாக் தாண்டா சொல்றீங்க? # இந ஆ






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பயாலஜி மிஸ் பவித்ரா = DNA ரிப்போர்ட் என்ன சொல்லுது?



சினிமா ரசிகன்.=ஊரே INA ரிப்போர்ட் பாசிட்டிவ்னு சொல்லிட்டிருக்கு


2 இது நம்ம ஆளு =137 நிமிடம் # இன்னும் 6 நிமிசம் சேத்துனா 143 ,மேட்ச்க்கு மேட்ச் லவ் சப்ஜெக்ட்

3 குறளரசன் இன்ட்ரோ.அமைதி அடக்கம்.அடடே #,இ ந ஆ

4 சிம்பு டீசன்ட் லுக் நயன் சிம்ப்பிள் கிக் கேக்

5 முடியலையே பாட்டு சீனில் சிம்பு நயன் காஸ்ட்யூம் டிஸைன் பக்கா


6 ஆன்ட்ரியா இன்ட்ரோ அழகு


7 ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்ட போன்லெஸ் ராக்கெட் ஆன்ட்ரியா

8 பாண்டிராஜ் வசனம் எழுத ரொம்பவே மெனக்கெட்டு இருக்கார்.இடைவேளை வரை 70 நிமிடப்படத்தில் 38 ஷார்ப் டயலாக்ஸ் # இ ந ஆ


9 இது நம்ம ஆளு.இடை வேளை வரை ஓக்கே. முக்கோணக்காதல் கதை.போர் அடிக்காமல் சுவராஸ்யமாகப்போகும் திரைக்கதை.ஒன் லைனர்.வசனங்கள்.+

10 அஜித் ரசிகர் படத்தில் விஜய் ரெப்ரன்ஸ் - தெறி ஸ்டெப் போட வெய்ட்டிங்

11 இது நம்ம ஆளு ரொமான்டிக் காமெடி பிலிம்.ஹிட் என தகவல்.சிம்பு & ரசிகர்களுக்கு வாழ்த்து




சபாஷ் டைரக்டர்


1  திரைக்கதைக்கு  அதிகம் மெனக்கெடாமல்   சிம்பு வின் டைரியிலிருந்து சில பக்கங்கள் எடுத்துக்கிட்டது


2  சிம்பு - நயன் 2 பேரையும் எதுனா பேசுங்க என சொல்லி விட்டு அதையே ஷூட் பண்ணி 6 ரீல் எடுத்துக்கொண்டது


3   சிம்பு  நயன் தாரா வுக்கு தாலி கட்டும் சீன் வெச்சு சிம்புவையும்  அவர்  ரசிகர்களையும் விசில் அடிக்க வெச்சது

4  ஷார்ப்பான வசனங்கள் சமீபத்திய ஹிட்ஸ்
1 ஒரு கல் ஒரு கண்ணாடி ( 117)
2 பில்லா-2 ( 28)
3 இதுநம்ம ஆளு (63)



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   ஆண்ட்ரியா அவ்ளவ் சின்சியரா லவ் பண்ணிட்டு அப்பா சொன்னதும் அசால்ட்டா விட்டு விடுவது நம்பும்படி இல்லை


2 பின் பாதி திரைக்கதையில்  நயன்  சிம்பு சம்பந்தப்பட்ட ஃபோன் உரையாடல்கள்  , எஸ் எம் எஸ்  அனுப்பும் காட்சிகள்   போர் அடிக்குது. இழுவை


3   க்ளைமாக்சில்  நயன் கை மணிக்கட்டில் கட் பண்ணி தற்கொலைக்கு முயல்வதாய் மிரட்டல் விடும் காட்சி அமெச்சூர்த்தனம்.இதெல்லாம் 1980 லயே பார்த்தாச்சு பாஸ்


4 சம்ப்ந்திகள்  இருவரும்  சரக்கு அடித்து விட்டு பேசும் காட்சியில்  பழைய காதல் பற்றி பகிர்வது செயற்கை. அருகில் கிச்சன்  ரூமில் மனைவியை வைத்து பேசுவது நம்ப முடியாதது.  அதை அப்போதே அவுட் செய்வதும் டிட்டோ ரகம். செயற்கை


5  திரைக்கதையில்  போடாபோடி,  சிவா மனசுல சக்தி  சாயல் இருப்பதை தவிர்த்திருக்கலாம்



சி.பி கமெண்ட் -இது நம்ம ஆளு - முன் பாதி காதல் காமெடி பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.வசனம் செம.இசை பக்கா. விகடன் =42 ,ரேட்டிங் = 3/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= ok



Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க .ஹீரோவோட அக்கா  தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு  கோவிச்சுக்கிட்டு மதுரையில்  இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை  போறாரு ஹீரோ . 


 எதிர் வீட்டில் ஹீரோயின் . பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும் ,இல்லைன்னா கட்டினவன் காலை த்தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட்  விட்டுட்டு இருக்காரு 


 ஹீரோயின் கூடவே  ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான்.  எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும்  ஹீரோயின் நம்பலை . பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்ப மாட்டாங்க .


இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி , ஃபேமிலி செண்டிமெண்ட் ஸ் கலந்து சொல்லி  இருக்காரு  சுந்தர பாண்டியன் இயக்குநர் 



 ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும்  கூட . இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும்  கூட இந்த  பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப்  சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது  தான் . சபாஷ் . முதல் படத்தை  விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில்  சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும்  ஓக்கே. சில காட்சிகளீல்  காமெடி  கூட ட்ரை பண்ணி  இருக்காரு . 


 ஹீரோயின் நயன்  தாரா .மாமழை போற்றும் , பல  மாநிலம் ஏற்கும், மாநிற அழகி .  குடும்பப்பாங்கான தோற்றத்தில்  யாரடி  நீ மோகினி யில் வந்தவர் அதே பாணியில்  கண்ணியமாக வந்து  போகிறார். நடிப்புக்கான  ஸ்கோப் கம்மி என்றாலும்  வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின் படி  கிளாமர்  டிரஸ் .


 ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம் இதில்  வழக்கம் போல்  ஹீரோவுக்கு நண்பன் . காதலுகு ஐடியா  குடுக்கும் ஐடியா அய்யா சாமி.  ஓக்கே ஓக்கே வில் 117  ஜோக்குகளுடன் கலகலப்பு  ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்குக்காரணம் இயக்குநர்  ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு  ஒரு ஜோடியும் உண்டு 


 தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி  ஹீரோயின்  தோழியாக வரும் கேரளா பொண்ணு  ஹீரோயினை விட அழகாக இதிலும்  இருக்கார் . இவர் சந்தானத்துக்கு  ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு  சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட்  மிஸ்டு 


மயில் சாமி க்ளைமாக்ஸ்  டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே . 



படத்தில் வரும்  கேரக்டர்  ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட். 



ஹாரிஸ்  ஜெயராஜ்  இசை   மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி  இசை  ரொம்ப சாதாரணமா  இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால்  பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது  கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும் 

ஒரு பாடல் காட்சியில் ( அன்பே அன்பே ) தாமரைக்குளத்தில்  தாமரை  இலை  மீது  சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில்  மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம் 


 நச் டயலாக்ஸ் 


1/.  நடை சாத்துன பிறகு கோயிலுக்குப்போலாம்னு கூப்பிடறதும் ,கடை சாத்துனபின் கட்டிங் அடிக்கலாமா?னு கூப்பிடறதும் உன் பழக்கம்டா #,சந்தானம்



இப்பவெல்லாம் பொண்ணுங்க பொய்யா கவிதை சொல்றவனைத்தான் நம்புதுங்க # சந்தானம்



3 பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க.டக் டக் னு பையனை ஈசியா மாத்திடறாங்க - சந்தானம்



4 புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும் ,பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும் # சந்தானம்


5வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்க ளைக்கூட கரெக்ட் பண்ணிடலாம் , ஆனா எப்பவும் உஷாரா  இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது  ரொம்ப கஷ்டம்






 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 



1. தமிழ் நாட்டின் அடுத்த சி எம் மே! னு ஒரு குரல் # நயன் தாரா இன்ட்ரோ # இது கதிர் வேலன் காதல்



2 பகுத்தறிவுப்பகல்வர் தமிழ் இனத்தலைவர் பேரன் ஆஞ்ச நேய பக்தராக ஓப்பனிங் சீன் லயே சாமி கும்பிடற இன்ட்ரோ # தமிழா தமிழா



3 அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் சந்தானம் இன்ட்ரோ.ஓப்பனிங் சாங் உடன் .பல்லாக்கு தேவதை # இ க கா



4 நயன் வரும்போதெல்லாம் மெல்லிய இசை # ஹாரீஸ் ராக்ஸ்


5  ஹலோ டைரக்டர் சார்.எந்த கேரளா பிகர் சந்தனக்கலர் ஜரிகைக்காட்டன் சேலைக்கு சம்பந்தமே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டதைப்பாத்தீங்க?



6  இயற்கை தேவதை அளித்த அழகிய புருவத்தை ட்ரிம் பண்ணி அழகைக்குறைப்பது ஏனோ? #நயன் ன் திருத்தப்பட்ட புருவம்



7 டைரக்டர் கம்யூனிஸ்ட்டா? எல்லா லேடி கேரக்டர்சும் சிவப்பு ஜாக்கெட்டா போட்டுட்டு வராங்க?



8 திருடா திருடி மன்மதராசா டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. உதயநிதி சார்.



9 இது கதிர் வேலன் காதல் @ இடை வேளை .இதுவரை டைம் பாஸ்.ஓகேஓகே பாகம் 2 ,ம் ம்


10  ஹீரோயின் நயனை விட தோழியா வரும் கேரளா பிகர் 10 மார்க் கூட


11 ஹாரீஸ் இசையில் எல்லாப்பாட்டும் மெலோடி.நல்லா தான் இருக்கு.ஆனா தியேட்டர்ல கத்தறாங்க # தமிழேண்டா ஏண்டா?


சில  கேள்விகள் 



1.  மயில் சாமி மிமிக்ரி டிராமா   ரொம்ப ரொம்ப நாடகத்தனமா  இருக்கு . என்ன தான்  எதிர்  வீடுன்னாலும்  இந்த  வீட்டு  ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது  நம்ப  முடியல ( ஆனா ஆடியன்ஸ்  ரசிக்கறாங்க )


2  கூடவே  ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி  நயனுக்குத்தெரியாம  இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே  ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?


3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும்  வில்லன்  நயனுக்கு  ஈசியா  போதை மருந்து கலந்து  கொடுத்தோ, மயக்க மருந்து  செலுத்தியோ  எண்ணத்தை  நிறைவேற்றி   இருக்கலாமே? ஏன்  அழகிரியைத்துரத்தி  விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும்  ?




சி பி கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே  2 +  செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை , லேடீஸ்க்குப்பிடிக்கும் 



எதிர்பார்க்கும் விகடன் மார்க் =41 ,



ரேட்டிங் =2.75/5


 குமுதம் ரேங்க்கிங் = ஓக்கே


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

Thursday, December 06, 2012

Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.businessoftollywood.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-1.jpgநயன் தாரா தெலுங்குப்படத்துல  நடிச்சிருக்கார், சரி ஸ்ரீ ராம ராஜ்யத்துல காட்ட முடியாத பல திறமைகளை இதுலயாவது காட்டுவார்னு நினைச்சுப்போனா இனிமே தெலுங்கு குப்பை மசாலாப்படத்துக்கு வருவியா? வருவியா? என பிரம்பால் அடித்து துரத்துகிறார் , படு குப்பையான , அரதப்பழசான பாடாவதிக்கதை .

ஹீரோவோட தாத்தா எம் ஆர் ராதா, சோ  மாதிரி ஒரு நாடகக்கலைஞர்  .தன் பேரனை நடிக்க வெச்சு ஒரு நாடகம் போடுவதுதான் அவரோட கடைசி ஆசை.. ஆனா பாருங்க ஹீரோவுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை.நாடகத்துல எல்லாம் நடிச்சுட்டு இருந்தா சோத்துக்கு சிங்கி அடிக்கனும்கறார். சோகத்துல  தாத்தா அவுட். அவரோட கடைசி ஆசை அவரோட அஸ்தியை  துங்கபத்ரா நதிலதான் கரைக்கனுமாம். 


 ஹீரோ டூ இன் ஒன் வேலையா அஸ்தியையும் அங்கே கரைச்சு அந்த நாடகத்தையும் அரங்கேற்றம் பண்ணனும்னு முடிவு பண்றார்.அங்கே 2 கேனத்தனமான வில்லன்கள் . 1008 விஜய் , விஷால் படங்கள்ல பார்த்து சலித்த மோதல்கள் . ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் ஆல்ரெடி குடும்பப்பகைன்னு காட்டிக்க ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக்.சொல்ல மறந்துட்டனே , ஹீரோயின் மீடியாவுல கேமராவுமன் கம் ரிப்போர்ட்டர். ஆம்பளைங்களையே பார்க்காத ஆள் மாதிரி ஹீரோவைப்பார்த்ததும் பல் இளிக்குது.


ஹீரோ எப்படி அந்த கிறுக்கு ஹீரோயினை க்ரெக்ட் பண்றார்? மூளையே இல்லாத 2 வில்லன்களையும் எப்படி அதகளம் பண்றார் என்பதை படு கேவலமான திரைக்கதை மூலம் சொல்லி பாடாப்படுத்தி இருக்கார் இயக்குநர் . 


ஹீரோ ராணா. ஆள் அர்னால்டு மாதிரி ஜிம் பாடியாத்தான் இருக்கார். ஆனா அவர் முகம் பாறாங்கல்லு மாதிரி இருக்கு. ஒரு உணர்ச்சியும் வர மாட்டேங்குது. வில்லன்களைப்பார்த்து பஞ்ச் டயலாக் பேசும்போதும் , ஹீரோயினைப்பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும்போதும் ஒரே மாதிரி முக பாவம் . சத்தியமா இங்கே தேற முடியாது,. ஆனா ஆந்திராவில் வருங்காலத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடலாம். 



ஹீரோயின் நயன் தாரா .ஐயா படத்துல கும்முன்னு கேரளா கொழாப்புட்டு மாதிரி இருந்தவர் இதுல 10 நாளா பட்டினி இருந்த பெருந்துறை ஈமுக்கோழி மாதிரி படு கேவலமா ஒல்லியா காய்ச்சல் வந்த  காயலான் கடை தட்டு முட்டுச்சாமான் மாதிரி இருக்கார். ( இந்த லட்சணத்துல ஒரு கோடி சம்பளமாம். பேராசை , ஆனா அதைக்கொடுக்கவும் ஆளுங்க இருக்காங்களே? ) 


 காமெடிக்கு பிரம்மானந்தம். ஆனா ஒரு சீன்ல கூட சிரிப்பு வர்லை. எரிச்சல் தான் வருது. அட்லீஸ்ட் காமெடி டிராக் எழுதக்கூடவா ஆள் இல்லை? வெரி பேடு .

 இசை மணிசர்மா . பின்னணி இசையில் பாஸ் மார்க். பாடல்களில் சிங்கிள் டிஜிட் மார்க் .


http://www.cafeandhra.com/webpreviews/iX96tDo21z.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைன் சூப்பர் . மழையில் நனைந்து ஹீரோயின் சிரிப்பது போல் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பவர்க்கு அது ஏதோ காதல் சப்ஜெக்ட் படம் என்றோ , கில்மாப்படம் என்றோ நினைக்க வைக்கும். தியேட்டரில் ஓப்பனிங்க் கிடைக்க நல்ல யுக்தி 



2. ஸ்டார் வேல்யூவுக்காக வெங்கடேஷை ஒரு குத்தாட்டத்தில் நடிக்க சாரி நடனமாட வைத்தது . இதுல என்ன காமெடின்னா  மகனை  விட அப்பா இளமையாத்தெரியறார். 



3. கிளாம்ருக்கு நயன் தாரா , காமெடிக்கு பிரம்மானந்தா என புக் பண்ணியது 



http://www.andhrareporter.com/images/gallery/Krishnam-Vande-Jagadgurum/Krishnam-Vande-Jagadgurum-12.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. நயன் தாரா ஒரு வீடியோ கேமரா எடுத்துக்கிட்டு வில்லன் பிளேஸ்ல என்னமோ டூர் ஸ்பாட் வந்த மாதிரி அசால்ட்டா வீடியோ எடுத்துட்டு இருக்கார். அந்த தடியன்க எல்லாம் தேமேன்னு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஏன் ? 


2. காதல் வர்ற மாதிரி காட்டனும்னா ஹீரோயின் ஹீரோ கண்ணை அல்லது முகத்தைப்பார்க்கனும். ஹீரோயின் ஏன் ஹீரோ ஜிம் பாடியை ஆசையாப்பார்க்கறார்? மலையாள கொரில்லாப்படத்துல பிரமீளா ஹீரோவை ஏக்கமாப்பார்க்கற மாதிரி? அவர் ( கதைல ) முன்னே பின்னே ஆம்பளைங்களையே பார்க்காதவரா? 


3. நாடக்க்காட்சி ஒண்ணு கூட உருப்படியா வர்லை.. அண்ணனுக்குத்தான் நடிப்பு வர்லைங்கறது நல்லா தெரியுதுல்ல? அதுக்கு தக்க படி திரைக்கதையையோ, ஹீரோவோட கேரக்டரையோ மாற்றி இருக்கலாமே? 


4. படத்தோட பின் பாதி அதாவது இடைவேளைக்குப்பிறகு தட்டுத்தடுமாறுது. எப்படி கதையை கொண்டு போறதுன்னு தெரியாம தள்ளாடுது திரைக்கதை 



5. பாடல் காட்சிகள் சம்பந்தமில்லாத பிட்டு  அதாவது சீன் இல்லாத பிட்டா வருது . முடியல 



6. இந்த பாடி கெமிஸ்ட்ரி பாடி கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே அது மருந்துக்குக்கூட இல்லை 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லனை கொல்ல வர்றார்னு தெரிஞ்சும் வில்லன் ஏன் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்? ஓட வேண்டியதுதானே? 



http://www.breezemasti.com/gallery/data/media/51/nayanthara-hot-pics-in-krishnam-vande-jagadgurum-movie-1.jpg

மேக்கப் போட்ட ஈமு இதுதான் மாமு


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( மோசமானவங்கள்ல நாங்க முக்கியமானவங்க)


1. ஹீரோ - இன்னைக்கு நைட் நீ ஃபிரீயா? 


 ஹீரோயின் - இடியட்


 வாட்? ஃபிரீயா இருந்தா வெளில போலாம்னு கேட்டேன் 

 ( இந்த கேவலமான மொக்கைக்கு ஹீரோயின் கெக்கேபிக்கேன்னு 3 நிமிஷம் இளிக்குது )



2.  மீடியான்னா சர்க்கஸ்னும், ரிப்போர்ட்டர்னா கோமாளின்னும் நினைச்சுட்டியா? 



 சி.பி கமெண்ட் -  எனக்கு என்ன காமெடின்னா இவ்வளவு கேவலமான குப்பையை ஆங்கில வலைத்தளங்கள் 13 , ஆங்கில இதழ்கள் 3 , தெலுங்குப்பத்திரிக்கைகள்  6 எல்லாம் மனசாட்சியே இல்லாம ஆஹா , ஓஹோ , செம படம்  அப்டினு பாராட்டி இருக்கறதுதான் . கவர் கை மாறுச்சா? அல்லது அவங்க டேஸ்ட்டே அவ்ளவ் தானா? அப்டினு தெரியல. இந்தபப்ட்த்தை போன வாரம் வெள்ளிக்கிழமை  ரிலீஸ் அன்னைக்கு  நைட்  ஈரோடு அண்ணா வில் பார்த்தேன் , சனிக்கிழமை காலைல எடுத்துட்டாங்க. வெற்றிகரமா 4 காட்சிகள் ஓடி இருக்கு.. கி கி கி ;-))


டைட்டிலுக்கான விளக்கம் - ரொம்ப முக்கியம் , ஹீரோ நடிக்கும் படு கன்றாவியான அந்த நாடகத்தின் டைட்டில் தான் படம் டைட்டில் 



http://1.bp.blogspot.com/-Hd6vdM5NWAw/TjqAOUHqGRI/AAAAAAAABYA/jYLO42s66og/s1600/Hot-Actress-Nayanthara03.jpg
ஐயா  ஸ்டில் - எப்படி இருந்த நான் ....