சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல
நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில்
தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த
செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
மனக்கசப்பில் இருந்தார்:
ம.தி.மு.க.,வில்
வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம்
சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில
நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத்
கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே
செல்லவில்லை.
இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை
அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு
பேரிழப்பாக அமைந்துள்ளது.
திருவட்டார்: திருவட்டார் அருகே
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவரின் உருவபொம்மையை மதிமுகவினர் தீ
வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன்
இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல
என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு
கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு
அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ்
தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை
எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில்
சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி
அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து
கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து
தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள்
பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார்.
இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார்
என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த
போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.
சென்னை: மலரக்கூடாது என்று
மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது
என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி
சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை
ஏற்படுத்தி வருகிறார் வைகோ என்று கூறியுள்ளார் மதிமுகவின் முக்கியப்
பிரமுகரான நாஞ்சில் சம்பத்.
விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...
என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை
18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.
மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.
இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.
நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.
இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.
நன்றி - நக்கீரன் , தட்ஸ் தமிழ்