Showing posts with label love thriller. Show all posts
Showing posts with label love thriller. Show all posts

Sunday, January 13, 2013

சமர் - சினிமா விமர்சனம்

tamil-cinema-samar-movie-first-look04.jpg (575×861)

சிம்பு மாதிரி ரொமாண்டிக்கா இருக்க ஹீரோவுக்கு தெரில .லவ்வுன்னா பொய் சொல்லனும், உருகனும், அட்லீஸ்ட் உருகற மாதிரி நடிக்கனும். நம்ம ஹீரோவுக்குஅதெல்லாம் வர்லை. டக்னு ஹீரோயின் ஹீரோவை  கழட்டி விட்டுட்டு பாங்காங்க் போயிடறா. 3 மாசம் கழிச்சு அவ கிட்டே இருந்து லெட்டர். உன்னை என்னால மறக்க முடியல . வா அப்டினு சொல்லி . கூடவே  பாங்காங்க்க்கு டிக்கெட் இன் கூரியர் கவர் . 


 ஹீரோ பாங்காங்க் கிளம்பறார். அங்கே போனா ஏகப்பட்ட ட்விஸ்ட். ஹீரோயின் அவரை வரவே சொல்லலை . வேற யாரோ கேம் பிளான் பண்ணி இருக்காங்க . இன்னொரு ஹீரோயின் அறிமுகம் . முத லவ்வுதான் புட்டுக்கிச்சு, சரி 2 வது லவ்வையாவது மெயிண்ட்டெயின் பண்ணலாமா?னு ஹீரோ யோசிகும்போது   ஹீரோவோட 2 வது லவ்வரோட  முதல் லவ்வர் எண்ட்டர் ஆகறார். என்ன தலை சுத்துதா? நயன் தாரா கதை மாதிரி இருக்கா? 


 எல்லாத்துக்கும் பின்னால  2 வில்லன்களோட பிளான் இருக்கு. ஆல் டிராமா..  ஏன் அப்டி பண்ணாங்க ? ஹீரோ ஓவர் ஹீரோயிசம் எல்லாம் காட்டாம அண்டர்ப்ளே சாக்சம் செய்வது எப்படி? என்பதை திரையில் காண்க .


 படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான். டபுள் ஹீரோ ஆள் மாறாட்டக்கதையோ?  தாதா கதையோ என்றெல்லாம் யோசிக்க வைத்து  கடைசியில் செல்வராகவன் பாணியில் சைக்கோ வில்லன்கள் கேம் என திரைக்கதை அமைத்தது புத்திசாலித்தனம்.


s1.jpg (800×600)


 ஹீரோ முன்னாள் புரட்சித்தளபதி விஷால் . ஆள் ரொம்ப டல் ஆகிட்டார். அவர் முகத்துல பழைய உற்சாகம் மிஸ்சிங்க் . டோண்ட் ஒர்ரி பாஸ். நல்ல கதையா செலக்ட் பண்ணா வின் பண்ணலாம்.. சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில்  ஜோடி தன் தோழி த்ரிஷா தான் என்றாலும் அவரிடம் உற்சாகம் இல்லாதது ஏனோ? ஷூட்டிங்க்  ஸ்பாட்ல ராணா இருந்திருப்பாரோ? 


 ஹீரோயின்  த்ரிஷா . மாடர்ன் ட்ரஸ்சிலும் சரி , சேலையிலும் சரி அழகான தோற்றம் தருபவர் .10 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறார்,. பாராட்டுக்கள் . சிவப்புக்கலர் புடவை அணிந்து ஒரு பாடல் காட்சியில் ரொமாண்டிக் பிரமாதமா பண்ணும்போதும் சரி, சிந்தாமணிக்கலர் பனியன் போட்டிருக்கும்போது ட்ரான்ஸ்பேரண்ட் சீன் காட்டும்போதும் சரி சபாஷ் போட வைக்கிறார்.  ஒரு சீனில் வில்லன்கள் முன் பேய் லுக் விடும்போது செம . வெல்டன் 3 ஷா.. 


 ஓபனிங்க் காதலியாக சில காட்சிகள் மட்டுமே வரும் அவசரக்குடுக்கை  அல்டாப் ராணியாக  சுனைனா.  இவர் தோன்றும்  7 காட்சிகளில் 6 காட்சிகள் செம லோ கட் . கண்டு களியுங்கள் மக்களே என்று சொல்லாமல் சொல்றார். நடிப்பு காட்ட டைம் இல்லை.. நாங்க யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. 



சைக்கோ வில்லன்களாக தெலுங்கு சத்யா ஹீரோ சக்ரவர்த்தி + இன்னொரு ஆள் . கேனத்தனமான நடிப்பு . சைக்கோ கேரக்டர்ல நடிக்கும்போது இப்படி லூஸ் தனமா விளையாட்டு காட்டிட்டு இருக்கக்கூடாது . செல்வராகவன் , கவுதம் மேனன் ரூமில் ஒரு நாளாவது தங்கி வந்தால் ஆட்டோமேட்டிக்காக ரியல் சைக்கோவாக வே மாறி  விடலாம். ஜஸ்ட் மிஸ். 


 காமெடி டிராக் என்ற பெயரில் அடிஷனல் அட்டாச்மெண்ட் எல்லாம் இல்லாதது ரொம்ப நிம்மதி 



Samar-Movie-Stills-42-255x300.jpg (255×300)


 இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 




1. ஹீரோ ஓப்பனிங்க் சீனில் காட்டுக்குள் கிடைச்ச மலர்கள், புல் எல்லாம் வெச்சு ஆன் த ஸ்பாட் ஒரு பூங்கொத்து ரெடி பண்ணும் லாவகம் கவிதை யான காட்சி 




2. ஏர்போர்ட்டில் த்ரிஷா காட்டும் பதவிசு , அவர் டிரஸ்சிங்க் சென்ஸ் பிரமாதம் . வெளிநாட்டுக்காட்சிகள் , ஏர்போர்ட் காட்சிகள் எடுத்த விதம் கனகச்சிதம் 



3.  படத்துக்கு பெரும் பலம் சேர்ப்பது எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள்.  த்ரில்லர் மூவி என்பதால்வசனத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , கிடைச்ச கேப்ல கிடா வெட்டி இருக்கார் , வெல்டன் 



4. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அழகு . 3 பாடல்கள் நல்லாருக்கு .  த்ரிஷாவின் அழகு மிக நளினமாக வெளிப்பட்ட மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று


samar_tamil_movie_stills_1007120942_022.jpg (1024×681)


இயக்குநரிடம் சில கேள்விகள்





1. ஹீரோ எப்பவும் டியூட்டி நினைவா இருக்கார். ஹீரோயினை கண்டுக்கலை. ஜஸ்ட் அப்போதான் எதிரே வந்து நிற்கும் ஹீரொயின் போட்டிருக்கும் டிரஸ் என்னன்னு கூடவா நினைவு இருக்காது?  அவ்ளவ் தத்தியா? அப்படி டியூப்லைட்டா இருப்பவர் கடைசில எப்படி  புத்திசாலித்தனமா ஆகறாரு?




2.  ஓப்பனிங்க் ஃபைட் சீனைப்பார்த்தா ஹீரோ காட்டிலாகா அதிகாரி மாதிரியும் படமே சந்தன மர தேக்கு மர கடத்தல் மாதிரி பில்டப் எதுக்கு?



3.  ஹீரோ விஷால் ஒரு சீன்ல தூங்கி எந்திரிச்சு அப்பதான் பெட்ல இருந்து எந்திரிக்கிறார் , ஆனா பேண்ட் சர்ட்  போட்டு இன் பண்ணி கைல வாட்ச் கூட கட்டி இருக்கார்..  அப்படி யாராவது தூங்குவாங்களா?



4.  லவ்வர் சுனைனா கேரக்டர் சரியா சொல்லப்படலை . ஓப்பனிங்க் ஃபைட் சீனை கட் பண்ணிட்டு இருவருக்குமான காதல் காட்சி வெச்சிருக்கலாம்.  காதலன் தன்னை சரியா வாட்ச் பண்ணலை , ரொமாண்டிக்கா இருக்கத்தெரியலை என்பதற்காக எல்லாம் ஒரு பொண்ணு காதலனை கழட்டி விடுவாளா?



5.   சுனைனா பாங்காங்க்ல இருந்து கூரியர்ல ஒரு கவர் அனுப்பி இருக்கார். அதுல அட்ரஸ், ஃபோன் நெம்பர் எதுவும் இல்லை. விளக்கம் கேட்டு பதில் அனுப்பி அப்புறமா கிளம்புவாங்களா? சிக்னல் கிடைச்ச்சா போதும்னு உடனே முன்னே பின்னே தெரியாத ஊருக்கு போவாங்களா?




6. பாங்காங்க் ஹோட்டல் நிஜமா அங்கே எடுத்ததா? இங்கே  செட்டிங்க் போட்டு எடுத்ததா? ஃபாரீன் அழகி கம் ரிசப்ஷனிஸ்ட் இண்டியன் மேடு ரோட்டமேக் லெட் பேனா யூஸ் பண்ணுது



7. சுனைனா டுபாக்கூர்னு தெரிஞ்ச பின் ஹீரோ அந்த கவர் வெச்சு கூரியர் ஆஃபீஸ்ல போய் விசாரிக்கவே இல்லையே?


8. ஒரு சீன்ல ஹீரோ கார்ல இன்னொருவர் கூட உக்காந்திருக்கார். பின் கண்ணாடி வழியா த்ரிஷா கார்ல கடத்தப்படறார். டக்னு காரை திருப்பி சேஸ் பண்ணாம காரை  விட்டு இறங்கி  காரைத்துரத்திட்டு ஓடறாரே?  அவர் என்ன ஸ்பைடர்மேனா?


9.  தரண் பில்லா தீம் மியூசிக்கை எதுக்கு பல இடங்கள்ல யூஸ் பண்ணி இருக்கார்?


10. க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை . ஷார்ட் & ஸ்வீட்டா முடிச்சிருக்கலாம்.

Trisha-hot-sey-photo.jpg (880×1248)

11. சைக்கோக்களா வரும் 2 வில்லன்களும் கேனம் மாதிரி சிரிச்சுட்டு வர்றாங்க , கதையோட சீரியஸ்னெஸ் தெரியாம.. அவங்களுக்கு சம்பளம் சரியாத்தர்லையா?



12. படத்தோட மார்க்கெட்டிங்க் மகா மோசம் .  புரமோ சரி இல்லை



13. படத்துக்கு சமர் என டைட்டில் வெச்சது ராங்க்.  இந்தப்படத்துக்கு என்  செலக்சன் - சுழல்  , இறுதி வரை உன்னோடு  இப்படி டைட்டில் ஓக்கே


14. ஒரு மசாலாப்படத்துல ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் எப்படி காதல் மலருதுன்னு காமிக்கத்தேவை இல்லை. ஆனா லவ் சப்ஜெக்ட்ல அது முக்கியத்தேவை, ஏன்னா காதல் மலரும்  தருணம் அற்புதமானது . அதை காட்சிப்படுத்துவது அவசியமானது , இந்தப்படத்துல சுனைனா , த்ரிஷா 2 பேருமே ஹீரோவிடம் ஏன் காதல் வசப்பட்டார்னு காட்சிப்படுத்தவே இல்லை


15. சில சீன்களில் பில்லா பாதிப்பு , கிடத்தட்ட திரையில் ஹீரோவைத்தவிர எல்லாரும் கூலிங்க் கிளாஸ்ல .. முடியல


16 . ஹீரோ 3ஷா காதலை ஏத்துக்கவே இல்லை . மனசுல காதல் இருப்பதாவும் நமக்கு காட்டலை, ஆனா  அவரோட முதல் லவ்வர் வந்ததும் கத்தியை எடுத்து குத்தப்போவது ஓவர். அந்தளவு தீவிரம் ஒரு காதலனுக்குத்தான் வரும். அதனால சிம்ப்பிளா ஹீரோவுக்கு த்ரிஷா மேல லவ் வந்தாச்சுன்னு ஒரு சீன் காட்டி இருக்கனும் .


17. த்ரிஷா லவ் டிராமா திருட்டுபயலே சோனியா அகர்வால் போர்ஷன் உல்டா



18. பொதுவா யார் செத்தாலும் டெட் பாடியை நேர்ல பார்க்கனும். சும்மா வீடியோ காட்சியை மட்டும்  பார்த்து செத்ததா வில்லன்க எப்படி நம்பறாங்க?



19. இந்தக்கதைக்கு ஃபாரீன் லொக்கேஷன் எதுக்கு ? ஜஸ்ட் வில்லன்க  மும்பை மாதிரி ஒரு ஏரியான்னு காடி இருக்கலாம்.. புரொடியூசர் செலவுல பாங்காங்க் போயிட்டு வந்துட்டீங்க..



Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg (940×625)





மனம் கவர்ந்த வசனங்கள் 




1. நீ எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிருக்கே.நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்



2. பொண்ணுங்க அளவுக்கு பசங்களால எல்லாத்தையும் நினைவு வெச்சுக்க முடியாது.அதுக்காக அவங்க மனசுல உண்மையான காதல் இல்லைனு சொல்லிட முடியாது 

3.  எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம்


 எது? பொண்ணுங்களை ஃபாலோ பண்றதா? 


 நோ, ஃபிளைட்ல போறது 



4.  காபில  உப்பு போடுங்க 


 வாட்?


 காபி ஷாப்க்கு டெயிலி  300 பேர் 400 பேர் வருவாங்க.. பேரர் எல்லாரையும் நினைவில் வெச்சிருக்க முடியுமா?  இப்போ பருங்க, என் பேரை , நினைவு வெச்சிருப்பார்.. 




5. நீ ட்ரிங்க் பண்ண மாட்டியா? 


 ம், பட் லேடீஸ் இத்தனை பேர் இருக்காங்க.. அதான் தயக்கமா இருக்கு 




6. காட்டையே சுத்திட்டு இரு , காத்லியை கண்டுக்காத 



7.  லவ் ஈஸ் பிலைண் ட்னு சொல்வாங்க.. எனக்கு கலர் பிலைண்ட் போல. நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேனு  தெரியாம போச்சு 




trisha-new-hot-wallpaper03.jpg (1024×685)



8. கிதார் ப்ளே பண்ற  பசங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப  பிடிக்கும் , ஒரு ஃபீல் வரும் 



9. சண்டையே போடாத பொண்ணு , சரக்கே அடிக்காத பையன் கிடைப்பது ரொம்ப சிரமம்



10. பொண்ணுங்களுக்குன்னு தனி டாஸ்மாக் , தனி பார் ( BAR)  வரும் நாள் வெகு தொலைவில் இல்லை 




11. காதலி கிட்டே ஆல்ரெடி இருக்கறதை கொடுக்கறமா? இல்லாததைக்கொடுக்கறமா? இது முக்கியம் இல்லை, ஏதாவது பரிசு கொடுக்கனும், அதான் காதல் 



12.  ஒரு பெக் அடிச்சா காதலி மேல லவ் வரும் ,  2 பெக் அடிச்சா காதலி  மேல சந்தேகம்  வரும் ,3 பெக் அடிச்சா வேற ஒரு பொண்ணு  மேல லவ் வரும் ,   4 பெக் அடிச்சா தூக்கம் வரும்


 எத்தனை பெக் அடிச்சாலும் எனக்கு காதலி மேல நம்பிக்கை வரும் , காதல் மேலயும் 




13.  அவ வரவே மாட்டா-னு முடிவு பண்ணீட்டீங்களா? 


 இல்லை, ஊருக்கு போகலாம்னு  முடிவு பண்ணிட்டேன் 




14. தமிழ் சினிமாவுல எனக்கு பிடிச்ச டயலாக் - குத்துங்க எஜமான் குத்துங்க , இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்  ( சிவப்பு ரோஜாக்கள் - கே பாக்யராஜ் வசனம், டயலாக் டெலிவரி பை கவுண்டமணி ) 



15.  இன்னும் ஒரு நாள் இங்கே நான் இருந்தா என்னையே  நான் சந்தேகப்பட வேண்டி வரும் 



16.  ஒரே மாதிரி 2 பேர் ஓக்கே , ஒரே மாதிரி சிக்னேச்சர் சாத்தியமே இல்லையே? எங்கேயோ தப்பு நடக்குது 




Sunaina%2520hot%2520in%2520green%2520bra%252C%2520Sunaina%2520without%2520saree%252C%2520Sunaina%2520in%2520bra.jpg (405×512)




17.  லவ்ல தோத்துப்பாரு , நீயும் குடிப்பே 




18.  கேம்ல பூ விழுமா? தலை விழுமா? னு கேட்டுட்டு இருக்கக்கூடாது , விழ வைக்கனும் 




19. நான் அவன் கிட்டே “ உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்”ன்னு சொல்லி இருக்கேன்


 விடு, எல்லாப்பொண்ணுங்களும்  அவங்கவங்க லவ்வர் கிட்டே அப்படித்தான் சொல்றாங்க 




20. நீ இன்னும் மத்தவங்களை அட்ராக்ட் பண்றதுக்காக காபில உப்பு போட்டு குடிச்சுட்டு இருக்கியா? 





21.  இப்படிப்பேசிபேசியேதான்  எல்லாப்பொண்ணுங்களும் பசங்களை சாகடிக்கறீங்க? 



22.  முதல் காதலை விட 2 வது காதல் ஈசியா வரும் 




23. இந்த உலகத்துல எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு 




24. ஹீரோ பேசும் ஒரே பஞ்ச் டயலாக் - பயமுறுத்துனிங்க, பயந்தேன் ,  துரத்துனீங்க.. ஓடுனேன் , சுத்த விட்டீங்க.. சுத்தலை நின்னேன். நின்னு ஜெயிச்சேன்  ( அண்ணன் யாருக்கோ என்னமோ சொல்ல வர்றாரு ) 


actress-sunaina-hot-beach-photos-5.jpg (1024×683)




எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 43


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  7 / 10



 சி.பி கமெண்ட் -த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு .  கொஞ்சம் பொறுமையா பார்க்கனும் . இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இல்லைன்னு மைண்ட்ல செட் பண்ணிட்டு படம் பார்க்கனும் . ஈரோடு சண்டிகாவுல படம் பார்த்தேன்



டிஸ்கி - பலரும் ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. இதுலயே பதில் சொல்லிடறேன். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா , பின்னணி இசை  தருண்




சமர் - த்ரில்லர் மூவி ரிவ்யூ - வீடியோ -பை - சி பி எஸ் 






Trisha-Hot-Cleavage-Show-Pictures-Stills-Spicy-Pics-Navel-Show-4.jpg (741×563)