அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்?
"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.
நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"
சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை
சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில்
பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான்
கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை
இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக்
கொண்டிருக்கின்றனர்.
முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என
தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல்
இரண்டு வரிகள்.
அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும்
அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப்
பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத
ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த
வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த
பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும்
நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த
பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு
எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே
பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து
வருகின்றன.
திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி.
ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப்
பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச்
சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.
ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு,
அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும்,
நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி,
பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று
யாருக்கும் தெரியாது.
அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக
அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என
லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய
எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான
போக்கு தானா?
இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும்,
சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய்
இருப்பதை அனுமதிப்பது எப்படி?
சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது
இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால்
பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்?
இணையத்தில் இப்படியான அதிகபட்ச கேலி, கிண்டல், நக்கல்கள், கலாய்ப்புகள் ஆரோக்கியமானதா? - உங்கள் பார்வை என்ன?
thanx - theindu
- Ragupathy Deivasigamani at Sengunthar Engineering College, TiruchengodeI strongly condemn this filthy move. If there is a facility to express your voice use it n d right way or else keep quite. That's my attitude.24 minutes ago · (0) · (0) · reply (0) ·
- Rj Durai Vetti officer at Velai Illa Pattadhaari
கற்பனையே இல்லாத ஒரு படைப்புக்கு இவ்வளவு பெரிய பிரபலமும் பேட்டிகளும் தேவைதானா? இதற்க்கு முதலில் தங்களின் கருத்தை கூறிவிட்டு ரசிகர்களிடம் கேள்வி கேளுங்கள்... பிழையை செய்துவிட்டு இப்படி முட்டாள்தனமாக மீண்டும் இவ்வாறு பேட்டிகொடுதுவிடகூடாது என்பதை இனியாச்சும் நினைவில் வைக்க ஒரு பாடம்... இது போன்ற தேவையற்ற படைப்புகளால்தான் அதே நேரத்தில வெளிவந்த சில அருமையான படைப்புகள் காணமல் போயின... திறமை இல்லாமல் வெறும் விளம்பரத்தையும் பெரிய ஹீரோ பெரிய டைரக்டர் என்ற பேனர் என்ற பெயரைமட்டுமே தாங்கி வரும் நிறைய படங்கள் திறமையான வித்யாசமான கதையம்சமும் கொண்ட படனகளை நசுக்குகிறது என்பதே கசக்கும் உண்மை...... எதிர்காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் திட்டம் ஏதேனும் லிங்குசாமிக்கு இருந்தால் இளம் இயக்குனர்களிடம் துணை இயக்குனராக சேருவது உத்தமம் என்பதே என் கருத்து... ஒரு ரசிகனாகவும் படைப்பை பற்றி யோசிப்பவனாகவும் இருந்து இதைவிட ஒழுக்கமான முறையில் என்னால் கூற முடியாது.....27 minutes ago · (1) · (0) · reply (0) · - Ashok James
லிங்கு சாமீ : முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.. அஞ்சான் சரியாய் ஊடாததுகு ரொம்ப சாரி!!!31 minutes ago · (1) · (0) · reply (0) · - RT Amudhan
இப்படி கிண்டல் செய்வது தவறு .... ஒருவரின் கடின முயற்சி தோல்வி அடைந்தால் அவரை கிண்டல் செய்வது பெரும் தவறு ..... இந்திய அணி கேப்டன் தோனி பல தோல்விகளை சந்தித்த போதும் சிறிதும் வெட்கமில்லாமல் அவரது ரசிகர்கள் ''தோனி டா தல டா'' என்றனர் .... அனால் அதே போல் ஒரு தோல்வியை மற்றொருவர் சந்தித்தால் கிண்டல் அடிக்கின்றனர் ....Points220 - DHANANJAYAN
Ivara aatharikura magaangal yaar sir. 120₹ kuduthu theatre ku poi mokka vangunavanuku thaan sir theriyum antha vali. Ithula vera interview. Motha vithayum irukarenu .Points125 - adhi sankar
Idhu pondra kindalgal thevaiyatradhu...mothathil adhu oru cinema enbadhiyum thandi rasigargalin oru pirvinar seyalpaduvadhu sammandhapattavarai manavedhanai paduthum alavirku selvadhu rasigargalin varaiyarai meerum seyal...cenemavuku thanikkai irupadhu bol samooga valaithalangalukum anaithu karuthukalum oru varaiyarai kuzhu uruvaakka pariseelikalam....about an hour ago · (0) · (0) · reply (0) · - Manoj Prabahar
வாயால வட சுட்டா இப்டிதான் கத்து கிட்ட மொத்த வித்தையும் இறக்கி கலாய்போம்about 2 hours ago · (1) · (0) · reply (0) · - Manoj Prabahar
வாயால வட சுட்டா இப்டி தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி கலாய்போம்about 2 hours ago · (0) · (0) · reply (0) · - Thalapathi Thalapathi
காசு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல பாத அனைவருக்கும் கலாய்க்கும் உரிமை உண்டுabout 2 hours ago · (74) · (2) · reply (0) ·
Boopathi-D Up Voted - Thalapathi Thalapathi
காசுகுடுத்து தியேட்டர்ல படம் பாத்தா அனைவர்க்கும் கலாய்க்கும் உரிமை உண்டுabout 2 hours ago · (39) · (1) · reply (0) ·
Boopathi-D Up Voted - UnmaiyaiUrakaSol
எவர் ஒருவரை பற்றி நாம் அதிகம் பேசுகிறோமோ அவர் நம்மை வெல்பவர் ஆவர். இப்படி லிங்குசாமியை வெற்றி பெற செய்த அணைத்து memeers கும் அவர் தன் மனதில் நன்றி குறிகொண்டு இருப்பார். பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களது உற்பத்தியை வியாபாரம் செய்ய என்ன சொன்னாலும் நம் பற்களை இளித்த வாறு வாங்கி கொண்டு தான் இருக்கிறோம். ஏன் நமக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை என்றால் interviewer இடம் நாமும் நம்மை பற்றி BUILDUP தான் செய்கிறோம். இது தான் லிங்குசாமி பேட்டியிலும் நடந்திருகிறது. இது நம்மை சிரிக்க மட்டுமே வைக்கும். ஆழ்ந்து யோசித்தால் ஒரு வகையில் நாமே அவரை பெரிய அளவில் விளம்பரம் செய்து இருக்கிறோம்.about 2 hours ago · (28) · (1) · reply (0) ·
- pachaiyappan
தம்மை இனங்காண இயலாது என்று நினைத்து கலாய்ப்பது ஒரு குழு, எதிர் நிலை கொண்ட குழு, தொழில் முறை போட்டி குழு , பொறாமை கொண்ட குழு, தவிர்த்து இயல்பான வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களே உண்மை நிலையை அறிய முடியும்.about 3 hours ago · (8) · (10) · reply (0) ·
- Arul Chellappa Editor at Libott Medical Publishers
வித்யுத் ஜம்வல் பிரஸ்ட் டைம் அ ஸ்டுண்ட் காட்சி இல்லாம செத்து போனது இந்த படமா தான் இருக்கும்about 3 hours ago · (16) · (1) · reply (0) · - Padmanabhan
டீசருக்கு சக்சஸ் மீட் வேச்சதுலாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது , பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆகையால் ரசிகர்கள் டியுன் ஆகி அவர்கள் விதையை இறக்கி விட்டார்கள்.about 3 hours ago · (43) · (1) · reply (0) ·
- kirukkuppayal
அந்தப்பேட்டில அவரே சொல்லிருப்பாரு: "ரசிகர்கள் ஒவ்வொரு கலைஞனைப் பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க. இந்த மாதிரி ஒரு combination-ல ஒரு படம் வருதுன்னா என்னவெல்லாமோ எதிர்பார்ப்பாங்க" ன்னு. Hype ஏத்துறேன்னு சொல்லி teaser-க்கு success meet வச்சா இப்பிடித்தான் ஆகும். படம் ஹிட் ஆயிருந்தா இதே online comments படத்துக்கு பெரிய level-ல உதவியிருக்கும். Marketing Strong Movie Weak. அதான் மாட்டிகிட்டு முழிக்கிறாரு.about 3 hours ago · (40) · (0) · reply (0) ·
- Shahul
இதில் இரண்டு விதமான பார்வை இருக்கிறது... ஒன்று - அளவிற்கு அதிகமான கிண்டலும் கேலியும் சிலரின் மனதை முடக்கி போட்டு விடும். இதே நிலை தனக்கு ஏற்பட்டால் என்ன ஆகும் என்று ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும். இரண்டு - பழைய புளித்த மாவையே போட்டு அரைத்து தள்ளி விட்டு, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் உண்டான விபரீதத்தை இனிமேலாவது திரை உலகினர் உணர வேண்டும்