100 கோடி பட்ஜெட்ல படம் எடுத்து அதுக்கு மேல 50 கோடி மார்க்கெட்டிங் செலவு பண்ணி டோட்டல் இன்வெஸ்ட்மெண்ட் 150 கோடில 60 கோடி நட்டம் பார்க்கும் இந்த கால கட்ட கோலிவுட் படங்களுக்கு இடையே ஸ்டார் வேல்யூவை நம்பாமல் முழுக்க முழுக்க திரைக்கதையை மட்டுமே நம்பி லோ பட்ஜெட்டில் படம் எடுத்து 10 மடங்கு லாபம் சம்பாதிக்கும் ஒரு கமர்ஷியலான கலக்கல் படம் தந்த புது முக இயக்குநர் நித்திலன் அவர்களுக்கு பாராட்டுகளுடன் விமர்சனத்துக்குள் போவோம்
5 கோடி ரூபா மதிப்புள்ள ஒரு ஐம்பொன் சிலை நடராஜர் சிலை கடத்தப்படுது.தஞ்சாவூர்ல இருக்கும் வில்லன் தன் பால்ய நண்பன் மூலம் நண்பருக்கே தெரியாம நண்பர் மூலமா அந்த சிலையை கை மாற்ற பார்க்கறார். காசுக்கு ஆசைப்பட்டு அடியாளுங்க டபுள் கேம் ஆட அந்த சிலை எங்கெங்கே பயணிக்குது என்பதை மிக சுவராஸ்யமா சொல்லி இருக்காங்க .
ஹீரோவா மைனா விதார்த். கோலிவுட்டில் கதைத்தேர்வில் கலக்குபவர்கள் விஜய் சேதுபதி , விஜய் ஆண்ட்டனி , விதார்த் இவர்கள் மூவரும் தான் . கமல் , விக்ரம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கதைத்தேர்வில் சறுக்கும்போது இவர்கள் மட்டும் தெளிவாக இருப்பது சிறப்பு , வியப்பு
விதார்த் கெட்டப் பக்கா. அந்த கால கட்ட கமல் போல் ட்ரிம்மாக இருக்கிறார்வ் , காதல் காட்சிகளில் அவர் முகத்தில் தர்மசங்கடம் தான் தெரியுது , அது ஏனோ . ஆனால் அப்பாவை நினைத்து அழும் காட்சிகளில் விட்ட இடத்தை பிடிக்கிறார். சேசிங் காட்சிகளில் ஓக்கே ரகம்
ஹீரோயினாக புது முகம். அவர் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான அழகு/ சபாஷ் காட்சிகள் பல அவருக்குபஸ்ஸில் ஹீரோவுக்கு இடம் கொடுப்பதும் அதை தொடர்ந்து வரும் ரொமான்ஸ் காட்சிகளும் அபாரம்
ஹீரோவின் அப்பாவாக வரும் இயக்குநர் பாரதிராஜா அபாரமான நடிப்பு . குணா படத்தில் அந்த சிங்கிள் ஷாட் வசனம் பேசப்பட்டது போல் இதில் பாரதிராஜா பேசும் ஒரு கடந்த கால நினைவுக்காட்சியை பகிரும் காட்சி செம கலக்கல்
கே பாலச்சந்தர் பாணியில் சின்ன சின்ன கேரக்டர்களை எல்லாம் மெருகேற்றும் இயக்குநர் டச் அபாரம்/
அந்த பிக்பாக்கெட் திருடன் , வில்லன் , போலீஸ் என ஆங்காங்கே போகிற போக்கில் அனைவரும் அப்ளாஸ் பெறுகிறார்கள் . வித்தியாசமான பல காட்சிகள் தியேட்டரில் ஆடியன்ஸ் அப்ளாஸ் மழையில் நனைகிறது
சபாஷ் இயக்குநர்
1 திரைக்கதை தெளிவாக சொல்லப்பட்ட விதம் , நான் லீனியர் முறையில் இருந்தாலும் ஆல் செண்ட்டர் ஆடியன்சுக்கும் புரியும்படி சொன்ன விதம்
2 ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்
3 பிக் பாக்கெட் திருடன் , வில்லன் பாத்திரப்படைப்பு நடிப்பு அற்புதம்
4 எடிட்டிங்க் , பின்னணி இசை , ஒளிப்பதிவு எல்லாம் அருமை
5 படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் எல்லாம் தங்கள் பணத்தேவை பற்றி புலம்பும்போது வில்லன் மட்டும் நான் என் நண்பனுக்காக வந்தேன் என்பது
6 ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்தது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஒரு டெட் பாடி மற்றும் இறந்த உடலின் தலை ஒரு பையில்; இருந்தால் அதிலிருந்து ஊரையே தூக்கும் வாடை வராதா?
2 துரோகம் செய்யும் அடியாள் தன் வீட்டுக்கு்ள்ளேயே சிலை , பணத்தை வைத்திருப்பது எப்படி சேஃப்டி ஆகும்?
3 லாரியில் பின் கட்டப்பட்ட குழந்தை என்ன ஆச்சு? தகவலே இல்லை
4 போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விபத்து செயற்கைத்தனம்
5 சர்வ சாதாரணமாக துப்பாக்கி சூடு நடைபெறுவது
6 ஹோட்டலில் முகம் தெரியாத பெண்மணி ஹீரோவிடம் செல்ஃபோனை ஒப்படைப்பது செயற்கை
7 கஞ்சா கறுப்பு வால் க்ளாக் சீன் வாட்சப் ல சுட்டது
நச் வசனங்கள்
1 மிஸ் , உன்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கலாமா? #KuranguBommai
2 ஜோசியரே, எனக்கு ஜோசியம் பார்க்கனும்
என்ன தொழில் பண்றே?
ஐசிஐசிஐ பேங்க்ல....
டேய்
சரி , பிக்பாக்கெட் அடிக்கற தொழில்தான் #KuranguBommai
3 ஏழைகளிடம் ஏமாறுவதில் ஒரு சுகம் இருக்கு #KuranguBommai
4 சார்..
ம், சொல்லுங்க
இங்கே பக்கத்துல எதுனா நல்ல போலீஸ் ஸ்டேசன் இருக்கா? #KuranguBommai
5 ஹலோ ,. சார், மிஸ் ஆன அந்த பேக் என்னுதுதான்
சரி
எங்கே வந்து அதை வாங்கிக்கனும்?
எங்கே மிஸ் பண்ணுனீங்களோ அங்கே வந்து #KuranguBommai
6 ஏண்ணே , உடம்பு நல்லாதானே இருக்கு? ஏன் இருமறே?
காலைல சிகரெட் குடிச்சப்ப இரும மறந்துட்டேன் #KuranguBommai
7 நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? ஏவிஎம் சரவணனே என் கிட்டே கை கட்டி தான் பேசுவார் #KuranguBommai
8 அண்ணே , நல்லாருக்கீங்களா?
இல்லை, நாண்டுக்கிட்டு இருக்கேன் #KuranguBommai
9 நானே கட்டப்பஞ்சாயத்து பண்ணி , கந்து வட்டிக்கு பணம் குடுத்து உழைச்சு சம்பாதிச்ட்டு இருக்கேன் ,இவன் வேற #KuranguBommai
10 ஊருக்குதான் அவன் கெட்டவன் , எனக்கு அவன் நல்லவன் #KuranguBommai
11 எந்த ஊரு?
பீகார்
பீகார்ல எந்த ஊரு?
க்யா?
நல்ல ஊருதான் #KuranguBommai
சி பி கமெண்ட் - குரங்கு பொம்மை− எளிமையான,அபாரமான திரைக்கதை,இயக்குனரின் கதை சொல்லும் உத்தி,நெறியாள்கை அற்புதம்,விகடன் 55 ,ரேட்டிங் 4/5,ஆல் செண்ட்டர் ஹிட்