அலைகள் ஓய்வதில்லை நாயகி ராதா தன் அலை ஓய்ந்தாலும் தன் வாரிசு கள் அலை ஓயக்கூடாதுன்னு முடிவு பண்ணி கார்த்திகாவை மலையாளத்தில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய படம் தான் மகர மஞ்சு . இதை அப்படியே தமிழ் ல வெளியிட்டா மகர ராசி மஞ்சு வா?ன்னு தமிழன் நாக்கு மேல பல்லைப்போட்டு கேட்டுடுவான், அதனால கொஞ்சம் கிளுகிளுப்பை சேர்த்து அப்சரஸ் அப்டிங்கற டைட்டில்ல தமிழ் ல டப் பண்ணி இருக்காங்க .
ஓப்பன் பண்ணினதும் நமக்கு 2 அதிர்ச்சி காத்திருக்கு . இது ஓவியர் ரவிவர்மாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட உண்மைக்கதை . அடுத்து படத்தோட ஹீரோ மணிரத்னத்தின் பிராண்ட் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் ஹீரோ , மது அம்பாட் தான் படத்துக்கு கேமரா மேன்
படத்தோட கதை என்ன ? ஓவியர் ரவி வர்மா உலகத்தில் வரைய 1008 இயற்கை காட்சிகள் இருந்தாலும் , கோடிக்கணக்கில் ஆம்பளைங்க இருந்தாலும் அதை எல்லாம் கண்டுக்காம பொண்ணுங்களா தேடிப்பிடிச்சு வரையறாரு. எதுக்குன்னா ஓவியம் வரையும் போது முகத்தை இப்படி வை , முந்தானையை அப்டி சொருகு அப்டினு கரெக்சன் பண்றேன்கற பேர்ல பிகரை கரெக்ட் பண்ணிடலாம் பாருங்க . இந்த மாதிரி உயர்ந்த லட்சியத்தோட அண்ணன் ஓவியம் வரையறாரு.
இவர் ஓவியம் வரைய மாடலா எந்தப்பொண்ணு வருதோ அந்தப்பொண்ணு கூட குடும்பம் நடத்தி அந்தப்பொண்ணை குடும்பப்பொண்ணா ஆக்கிடும் நல்லவர் . ஆனா மேரேஜ் மட்டும் பண்ணிக்க மாட்டார் . ஏன்னா மேரேஜ் பண்ணீனா சம்சாரத்துக்கு சமைச்சுப்போடனும் , சம்பாதிச்சுத்தரனும், ஆஃபீஸ் ல டிராப் பண்ணனும் . இத்தனை பிக்கல் பிடுங்கல் இருப்பதால் அண்ணன் வந்தமா ஓவியம் வரைஞ்சமா , ஒரு டைம் குடும்பம், நடத்துனமா போனமா , அடுத்த பிராஜெக்ட் ரெடி பண்ணமா? அப்டினு இருக்காரு .
இந்த மாதிரி அவர் 3 பொண்ணூங்களை கரெக்ட் பண்ணினது எப்படி? என்பதே கதை . இது என்ன ஒரு மாதிரி கதையா இருக்கேனு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு ஒரு வரலாற்றுக்கதையை ஹீரோயினுக்கு சொல்வது போல் சொல்லி சமாளிச்சு இருக்காங்க .
ஹீரோவா சந்தோஷ் சிவன் . மனுசன் ரொம்ப சந்தோசமா நடிச்சிருப்பார் போல . இவருக்கு 3 பேர் கூடவும் குஜாலா இருக்கவே நேரம் போதல . எங்கே போய் நடிக்க ? அப்டியே நடிச்சாலும் யார் பார்க்கப்போறாங்க ?
நாயகிகள் 3 பேர் . அடர்த்தியான புருவ அழகி நித்யா மேனன் . இவர் தான் ஓப்பனிங்க் பவுலிங்க் விமன் . முன் பின் அறிமுகமே இல்லாத ஓவியர் சேலையை அட்ஜஸ் பண்ணி அப்புறம் என்ன என்னமோ செய்யும்போது கூட தடுக்காம ஜஸ்ட் வெட்கம் மட்டும் படும் நல்ல கேரக்டர் ரோல் . சிறப்பா செஞ்சிருக்கார் . கேரளா ஜரிகைகாட்டன் சேலையில் இவர் தேவதை மாதிரி இருக்கிறார்
அடுத்தது பவுர்ணமி அன்னைக்குப்பார்த்தாலும் சரி , அமாவாசை அன்னைக்குப்[பார்த்தாலும் சரி பரி பூரண அழகு கொட்டும் உதட்டழகி பூரணா . இவருக்கு காட்சிகள் கொஞ்சமே . தமிழன் புரிஞ்சுக்குவான் என நினைக்கிறேன்
கடைசியா க்ளைமாக்ஸ் கோல் போடுவது வில் போன்ற இயற்கையா? செயற்கையா? என கணிக்க முடியாத அபூர்வ புருவ அழகி கார்த்திகா . இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஒளிப்பதிவாளர் கேமராவை க்ளோசப்பில் இடையில் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி விடுகிறார் .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு தான் படத்துக்குப்பெரிய தூண் . பிரமாதப்படுத்தி இருக்கிறார். அந்தக்கால கட்டத்தை கண் முன் கொணரும் இயற்கை அழகுடன் பெண்கள் , ஆறு , கட்டிடங்கள் , ஓடைகள் என கேமராவுக்கு தீனி போடும் வாய்ப்பு
2 போஸ்டர் டிசைனில் 3 நாயகிகளைப்போட்டு தமிழனைக்குழப்பாம்ல் கார்த்திகாவை மட்டுமே டார்கெட்டாக வைத்தது
3 திரைக்கதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டா , ரொம்ப லைட்டா கதை சொன்னது
4 ரசிகர்களின் பொறுமையை ரொம்ப சோதிக்காம ஒண்ணே முக்கால் மணீ நேரத்தில் படத்தை முடித்தது
5 இது ஏதோ கலைப்படம் , உலகப்ப்டம்னு எல்லாரையும் நம்ப வெச்சு கால்ஷீட் வாங்கிய சாமார்த்தியம் . இது கிட்டத்தட்ட ஒரு கில்ம்பாப்படம் தான்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. அந்நியன் விக்ரம் மாதிரி கார்த்திகா 2 வேறு பர்சனாலிட்டில கேள்வி கேட்டு பதில் சொல்லும் காட்சியில் உப்பு சப்பு உரைப்பு 1 % கூட இல்லை . சம்பளம் தர்லையா?
2 உலகத்தில் வேறு ஆண்களே இல்லாத மாதிரி எல்லாப்பொண்ணுங்களும் ரவி வர்மா மேல வந்து வந்து விழுவது ஏனோ ? ( ஸ்டொமக் பர்னிங்க் தான் )
3 சீதை , சரஸ் வதி போன்ற சாமி ஓவியங்கள் விதவை , தாசி , வேசி இவங்களை மாடலாக போட்டு வரையப்பட்டவை தான் என்பது போன்ற வசனங்கள் இந்துக்கள் மனதைப்புண் படுத்துமே , எப்படி சென்சார் ல விட்டாங்க ?
4 அந்த லேடிக்கு விதிக்கப்ட்ட சாபப்படி ஹீரோ வை மின்னல் வெளிச்சத்தில் நிர்வாணமா பார்த்தா தேவலோகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும் . இது பாப்பாவுக்கு தெரிஞ்சும் ஆல்ரெடி பல டைம் இருட்டுல பார்த்த ஹீரோவை மின்னல் வெளிச்சத்தில் ஏன் அந்த பர்ட்டிகுலர் ப்ளேஸ் ல பாக்கனும் ? அது என்ன லிங்கா படமா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஒருவரோட மரணம் நிச்சயிக்கப்பட்டதுன்னா அது எப்படி நடக்கும் ? என்பதும் ஆல்ரெடி நிச்சயிக்கப்பட்டிருக்கும்
2 உனக்கு வரையத்தெரியும் , எனக்கு வியாபாரம் தெரியும் , நாம ரெண்டு பேரும் சேர்ந்தா சம்பாதிக்கலாம்
3 இந்தியக்கலாசாரம் மாறாத எத்தனையோ பெண்களைப்பார்த்த ஒரே ஆள் நீங்க தான்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. புருவ அழகி கார்த்திகா வின் மகர மஞ்சு ( அப்சரஸ்) ,தாராபுரம் பெண் இயக்குநர் ன் பூவரசம்பீப்பி # இன்றைய டார்கெட் @ திருச்சி ி
2. ரவிவர்மன் உண்மைக்கதை னு டைட்டில் போடறாங்க.அய்யய்யோ .அப்போ இது சைவப்படமா? மாட்டிக்கிட்டமா? # மகரமஞ்சு (அப்சரஸ்)
3. ஹீரோயின் நித்யா மேணன் மல்லிகைப்பூச்செடில இருந்து 36 உதிரி மல்லிகையை 10
நிமிஷமா பறிச்சுட்டே இருக்கு.இது ஆர்ட் பிலிமா? ஏதாவது குறியீடு ?
4. ஓவியர் ரவிவர்மர் ஓவியம் வரையறதைத்தவிர மத்த எல்லா வேலையும் செய்யறாரு # மகரமஞ்சு
5. ஹீரோயின் மழைல நனைஞ்சுக்கிட்டே ஹீரோ வீட்டுக்கு வருது.அது கைல ஒரு டர்க்கி
டவல் கொடுத்தா போதாதா? ஹீரோவே துவட்டி விட்டுட்டு இருக்காரு
6. கார்த்திகா இன்ட்ரோ.புருவத்தை புல்லா ஷேவிங் பண்ணி ஐ டெக்ஸ் மையால வரஞ்சி வெச்சிருச்சோ?
7. நடு நிசி 12 மணிக்கு பேய் மாதிரி ஹீரோ வீட்டுக்கு வரும் நாயகி " உங்களுக்குப்பிடிக்கலைனு சொன்னா நான் திரும்பிப்போய்டறேன்"குது
8. படம் போட்டு ஒரு மணி நேரம் ஆகுது.இப்போ தியேட்டர்க்குள்ளே ஒரு காதல் ஜோடி.ஏன் லேட்? னு கேட்கலாமா ?
9. ஒளிப்பதிவு மது அம்பாட்.ஆனா ஒரு பய கேமரா வை கவனிக்கலை
10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்
10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்
சி பி கமெண்ட் -மகர மஞ்சு ( அப்சரஸ் ) - மலையாளம் = 3 நாயகிகள் நடிச்ச கிட்டத்தட்ட ஒரு கில்மாப்படம் - ரேட்டிங்க் =2.25 / 5 ( 0.75 * 3 = 2.25)
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40 ( இதுக்கு நோ விமர்சனம்)
குமுதம் ரேட்டிங்க் = ok