Showing posts with label kanna laddu thinna aasaiya. Show all posts
Showing posts with label kanna laddu thinna aasaiya. Show all posts

Saturday, January 26, 2013

விகடனின் தர வரிசை சரியா?பொங்கல் ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF_9gCy_7WOUEGSJB_cGQvc0G-YUxECqdQZ3vj3sqfNYdX-fEC3jc4VxlmDTVzGu6D0C3fHpXtJmXw4sV6jFdgffggj7HBVApBQKTy6J5M6gXXyOiaDWtitsBaeDKVZdv6SVE1htgmfYw/s1600/Vishal,+Trisha%27s+Samar+Tamil+Movie+New+Wallpapers,+Latest+HQ+Posters+-+www.TodaysWorld.in+(4).jpg
விமர்சனம் : சமர்

விகடன் விமர்சனக் குழு
வில்லன் யாரென்று தெரியாமல் ஆடும் கண்ணாமூச்சியே... சமர்!  

 'ப்ரேக்-அப்’ ஆன காதலி சுனைனா வைச் சந்திக்க பாங்காக் செல்கிறார் விஷால். ஆனால், அங்கு அவரை வரச் சொன்ன சுனைனா வரவில்லை. திடீரென விஷாலைக் கொல்ல ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இன்னொரு கும்பல் அவரைக் காப்பாற்றுகிறது. அவரைத் தொழிலதிபர் எனக் கொண்டாடு கிறார்கள். போலீஸ் மரியாதை, ஆடம்பர கார், நட்சத்திர ஹோட்டல் சூட் என வசதிவாய்ப்பு தேடி வருகிறது. சில நாட்களிலேயே அது பறி போகிறது. 'தனக்கு ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தவிக்கும் விஷால், தன்னைச் சுற்றிக் கட்டப்பட்ட சதிவலையை அறுப்பதே மீதிக் கதை! 
'டபுள் ஹீரோ கதையா... விஷாலுக்கு ஞாபக மறதியா... ஆள் மாறாட்டக் கதையா... அண்டர்ப்ளே கதையா?’ என்றெல்லாம் யோசிக்கவைத்து, இறுதியில் சஸ்பென்ஸ் கலைத்த விதத்தில் 'அட’ போடவைக்கிறார் இயக்குநர் திரு. கொஞ்ச காலமாக ஃபார்மில் இல்லாத விஷாலுக்கு இது முக்கியமான படம்.



 ஆனாலும், ஸ்க்ரீனில் விஷா லிடம் அந்த உற்சாகம் இல்லையே. சண்டைக் காட்சிகளில் செம ஆக்ரோஷம் காட்டும் விஷால், ரொமான்ஸ் காட்சிகளிலும், என்ன நடக் கிறது என்று புரியாமல் பதறும் காட்சிகளிலும் பரிதவிக்கிறார்.


திடீர் அறிமுகத்தில் விஷாலோடு காதல்கொள்ளும் பெண்ணாக த்ரிஷா. பாடல் காட்சிகளில் அழகாகவும், காதல் காட்சிகளில் அழுத்தமாகவும் இருக்கிறார். சுனைனா... சும்மாச் சுக்கும்ணா!



சிறிது நேரமே வந்தாலும் வில்லன்கள் ஜே.டி.சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவருமே மிரட்டி இருக்கிறார்கள். தாங்கள் சாவோமா, மாட்டோமா என்று விழப்போகும் விமானத்தில் வில்லன்கள் பெட் கட்டி விளையாடுவது ஒரு டெரர் சாம்பிள். ஆனால், எதற்கெடுத்தாலும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பது லேசான அலுப்பு.  



விஷால், சுனைனாவின் பிறந்த நாள் பரிசாகக் காட்டுக் குள் கிடைத்த மலர்களை வைத்துப் பூங்கொத்து தயாரிக்கும் காட்சி கவிதை.


 'நீ எல்லாத்துக்கும் கணக்குவெச்சிருக்கே. நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்’, 

கேம்ல பூ விழுமா? தலை விழுமா?னு கேட்டுட்டு இருக்கக் கூடாது... விழவைக்கணும்’, 


 'பயமுறுத்துனீங்க... பயந்தேன். துரத்துனீங்க... ஓடுனேன். சுத்த விட்டீங்க... நின்னேன். அதனால ஜெயிச்சேன்!’-

 எஸ்.ராமகிருஷ்ணன், திருவின் வசனங்கள் ஆங் காங்கே ரசிக்கவைக்கின்றன.



யுவன்ஷங்கர் ராஜாவின் இசையைவிட அதிக மாக ஈர்க்கிறது தரண்குமாரின் பின்னணி இசை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு பாங்காக் அதிரடியையும், த்ரிஷாவின் அழகியலையும் அள்ளிக் கொடுக்கிறது.


தன்னை டீலில் விட்ட, அவ்வளவு பெரிய வில்லன் கும்பலை எதிர்க்க விஷால் எவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும்? ஆனால், போகிற போக்கில் த்ரிஷாவைச் சாலையில் நிற்கவைத்துக் காய் நகர்த்துவது... போங்க பாஸ் போங்கு!


டெரர் கதையில் 'மிரட்டல் டான்’ என்று ஸ்ரீமனைக் காட்டி ஆங் காங்கே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். வில்லன் அண்ட் கோவில் உறுப் பினராக இருக்கும் ஜெயப் பிரகாஷ், சம்பத், ஸ்ரீமன் திருந்துவது எதற்கு என்றே தெரியவில்லையே?


லாஜிக் பார்க்காவிட்டால், பார்க்க சுவாரஸ்மான த்ரில்லர் விளையாட்டு இந்த சமர்!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0DIpRyX5E5n1HMtG445elK9KEY7FK5mrUOqZazlgoRvb0WnqcWi8TsBW81OGOF6rY7-8SJdgnkXPITRGl3BCD323KeVNqz1srocrHW2iWFcfMMGu7ndf1Fv1g6hF9R7PLX9fF_MD30g/s1600/Kanna+Laddu+Thinna+Aasaiya+Audio+Release+Posters+Cinema65+(6).jpg





விமர்சனம் : கண்ணா லட்டு தின்ன ஆசையா

விகடன் விமர்சனக் குழு
திர்வீட்டு அழகியை மூன்று வெட்டி ஆபீஸர்கள் கரெக்ட் பண்ண முயல, ஃபிகர் யாருக்கு என்பதே கதை. 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதையா அல்லது சந்தானத்தின் 'மனதில் உதித்த கதை’யா என்பது... பஞ்சாயத் துக்கு உட்பட்டது.


 'காமெடியே துணை’ என்று முடிவெடுத்த பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரை இறங்கி தகர அடி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.


'கல்யாணம் டு காரியம்’ வரை கான்ட்ராக்ட் எடுத்துச்செய்யும் 'கேக்கே’ சந்தானம், காதல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லி நண்பர்களுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துச் சாய்ப்பது, 'பர்பி கீழே கிடக்குது’ என்று பவர் ஸ்டாரின் குடும்பக் கௌரவத்துக்கு ஜிஞ்சர் கொடுப்பது என வழியெங்கும் ரகளை. 'நான் காமெடியன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீயோ காமெடியன்னு தெரியாமலே பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கியே!’ என்று ரீலுக்கு ரீல் பவருக்கு பல்பு கொடுத்தும் பட்டாசு கிளப்புகிறார். 


கண் கூசும் கலர்களில் டி-ஷர்ட், த்ரீ-ஃபோர்த், குண்டக்க மண்டக்க ஹேர்ஸ்டைல் எனப் படம் முழுக்கக் காமெடிக் கூத்து கட்டுகிறார் பவர் ஸ்டார். நடிப்பு, டான்ஸ் என எதுவுமே பவருக்கு வரவில்லை. ஆனால், காமெடி பாடிலாங்குவேஜ் முழுக்க ஜாலிலோ ஜிம்கானா. நடன வகுப்பில் ரசிகர்களைக் கூட்டி அலப்பறை செய்வதும், பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்து மிரட்டுவதுமாக தன்னைத்தானே கிண்டல் அடித்துக்கொண்டு, நம்மையும் சிரிக்கவைப்பது பவரின் 'பவர்’. (அட... பவர் நடிப்புக்காக தியேட்டரில் நிஜமாகவே 'ஓடுகிறது’ இந்தப் படம்.) உள்ளூர் விளம்பர மாடலாக சேது ஓ.கே.



இந்தி வாத்தியாருக்குப் பதில் சங்கீதச் சக்ரவர்த்தி, டிரில் மாஸ்டருக்குப் பதில் பரத குரு, ரேஷன் அரிசிக்குப் பதிலாக பிரியாணி எனப் புதிய பாத்திரத்தில் பரிமாறப்பட்டு இருந்தாலும், 'இ.போ.நா.வா’-வில் இருந்த இனிப்பும் இன்னொசன்ஸும் இந்த லட்டில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரிஜினலைக் கிண்டலடிக்கும் லொள்ளு சபா தொனி பிரதிபலித்ததையும் தவிர்த்து இருக்கலாம்.



படத்துக்கு ஒரு முடிவு வேண்டுமே? சிம்புவை வம்பாக உள்ளே இழுத்திருக்கிறார்கள்.


ஜெராக்ஸ் பிரதிதான். ரைமிங் டைமிங் டயலாக் காமெடிதான். இருந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது காமெடிச் சரக்கு பக்காவாக வொர்க் அவுட் ஆவது இந்த லட்டுவின் ஹிட்டு!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSkimcGdyM87ycDl3kItNxigqFi9t1ENeVMS51nfb5Iys5h0H6qA4FPm4n5M4rrucbARCDruqRzAmsDPdZQUlAEEvpgGfJBv17VM7VKjbgiH1TZyV8e_Cb-3Uu0UFSeForbTFcok0ryQM/s1600/Alex+Pandian+Latest+Movie+stills+(1).jpg





விமர்சனம் : அலெக்ஸ் பாண்டியன்

விகடன் விமர்சனக் குழு
நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவரின் மகளை அலேக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர்’ கார் கதை. அதில் மசாலா பெயின்ட் அடித்து, குத்துப் பாடல்களைப் போட்டு, கிளாமர் ரூட்டில் கியர் போட்டால்... அதுதான் 'அலெக்ஸ் பாண்டியன்’.



 அமெரிக்காவின் மோசடியான மருந்து கம்பெனி தமிழகத்தில் மருந்து விற்க அனுமதி கேட்கிறது. நேர்மையான முதல்வர் விசு மறுக்கிறார். அவரைச் சம்மதிக்கவைக்க, அவரது மகள் அனுஷ்காவை  கார்த்தி மூலம் கடத்துகிறது  



வில்லன் குரூப். காதலில் விழும் கார்த்தி அனுஷ்காவைக் காப்பதே கதை.   ஹாலிவுட் காப்பி கதையில், ஏற்கெனவே தமிழ் சினிமாவில் நாம் பார்த்த காட்சிகளைப் புகுத்தி இது அந்தப் படமா, இந்தப் படமா என்று குழம்பவைத்த வகையில் வெற்றிபெற்றிருக் கிறார் இயக்குநர் சுராஜ். மற்றபடி எதுவுமே லேது.


எதிரிகளைப் பந்தாடும்போது கார்த்தியின் முறைப்புக் கண்களும், விறைப்பு உடம்பும் செம. மத்தபடி காமெடி (என்று நினைத்து)  டயலாக்குகள், பாடி லாங்குவேஜ் அத்தனையும் உஷ்ஷ்ஷப்பா... என்ன ஆசையோ, 'வேட்டைக் காரன்’ எம்.ஜி.ஆர், 'டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன்’ ரஜினியை இமிட்டேட் செய் கிறார்.


டைட்டில் போடும்போது வருகிற அனுஷ்கா, நடுவில் காணாமல் போய், இன்டர்வெல்லின்போதுதான் மீண்டும் தலைகாட்டுகிறார். என்ன ஆச்சு? அழகான அனுஷ்கா இதில் கொஞ்சம் டயர்டாகவும், கொஞ்சம் முதிர்ச்சியாகவும் தெரிகிறாரே?


கதைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கிளாமர் காட்டிவிட்டு பை பை சொல்கிறார். ஆரம்பத்தில் மூன்று தங்கைகளைக் காப்பாற்ற சந்தானம் படும்பாடு சிரிப்ஸ் என்றால், அதுவே முன்பாதி முழுக்க இழுப்பது செம கடுப்ஸ். சந்தானத்துக்கு டபுள் மீனிங் டயலாக் பேச சொல்லித் தர வேண்டுமா? இதில் மூன்று தங்கச்சி ப்ளஸ் 'ஏ’டாகூட விளையாட்டுக்கள்.


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.


ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காட்சிகளே அடி பின்னி எடுப்பதால், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் ஒட்டாத பாடல்களும், சரவணனின் கிறுகிறு சுற்றல் கேமராவும் பெரிய தவறாகத் தெரியவில்லை.
இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள்... ஆந்திரா டைப் காரசாரப் படங்களை ஆந்திராவில் எடுங்கள். தமிழ்நாடு பாவம் பாஸ்!



 http://www.cinemalead.com/photo-galleries/anushka-stills/wmarks/anushka-stills02.jpg



மக்கள் கருத்து 


1. என்னுடைய நண்பன் ஒருவன் டிக்கெட் எடுத்து விட்டேன் என்று சொன்னதால் அலெக்ஸ் பாண்டியன் போய் பார்த்தேன். பேராசையின் மொத்த உருவம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் . தெலுங்கில் ஒரு 80 கோடி தமிழில் ஒரு 50 கோடி , கல்லா கட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
படம் பார்க்கும் யாராவது லாஜிக்கோ கதையோ கேட்டால் செருப்பால் அடிப்பது என்று முடிவு எடுத்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டில் வந்த மிக மோசமான தமிழ்ப்படம் என்று இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை தைரியமாக சொல்லலாம். எல்லா காமெடியும் டபுள் மீனிங் காமெடி, காதில் ஒரு வரி கூட நிக்காத பாடல்கள், கதை என்ற வஸ்து மருந்துக்குக்கூட இல்லை, பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன காட்சிகள், அதைவிட புளித்துப் போன சண்டை காட்சிகள்……………………..சுருக்கமாகச் சொன்னால்……………………………………………

இந்த மாதிரி ஒரு மகனும் இப்படி சில உறவினர்களும் வாய்த்திருப்பதற்கு சிவகுமார் எத்தனை தடவை கம்ப ராமாயணம் படித்தாலும் பாவம் போகாது.



2. தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.




3. அலெக்ஸ் பாண்டியனுக்கு, மதுரை டாக்டர் பி. சரவணனின் அகிலன் எவ்வளவோ தேவலாம். ஏன் கார்த்திக்கு இவ்வளோ கொலவெறின்னு தெரியலை. அதுலவும் இது முழுக்க ஆந்திரா பக்கமே எடுத்த படம் போலிருக்கு (மொட்டை போடும் காட்சியில் வரும் கோவிலில் காணப்படும் போர்டுகளைப் பாருங்கள்). சந்தானம் வழக்கம் போல இதில் சாக்கடையைக் கழுவிக் கழுவி ஊத்தியிருக்கிறார். க.ல.தி.ஆ.ல கூட இரட்டை அர்த்தம் இல்லை. இதில் ஏன் இவ்வளவு? ஓ, ஒரு வேளை சொந்தப் படம்ன்றதால அடக்கி வாசிச்சிட்டாரோ?



4. படமா இது?!காமெடியா இது?!பெண்கள் கேவலப்படுத்தப் படுகின்றனர்;அசிங்க வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.லட்டு தின்ன ஆசையா கூட ஒரு விதத்தில் பரவாயில்லை...மனோபாலாவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!



நன்றி - விகடன் 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPPh8A3WloGporEBJThMjLiZ9VggSYHprh9ITvLfKTGzQ12ox2QdpBu2owdD0WEGUMiRuXGT9lVSo28vshEmImhboQARcLRiFTRVmfGBwElFyE55J4inJ9ebLyHfoglbuVgQMUrXhmGO0/s1600/tamil_hot_actress_trisha_sexy_in_saree_navel_showing_image.jpg

Wednesday, January 23, 2013

கே பாக்யராஜ் VS சந்தானம் - ஜெயிக்கப்போவது யாரு?

லட்டு யாருக்குச் சொந்தம்?

வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை! 


''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில் வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

a



பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’ படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர் நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும் சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று போய்  


நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய் நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால், நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன். 


'உங்க படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி, படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ் ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
 
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்


ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன்.


 நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில் எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று கொந்தளித்தார்.


படத்தின் தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி உரிமம் பெற்று இருந்தார். அவரிடம்  அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம் எடுத்தோம். 



நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம். நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ் சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.



தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். '' 'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன் தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச் சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய் இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.



தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!



மக்கள் கருத்து 


1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.

ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். 
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின் வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர் அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால் பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள் அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில் வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம் வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின் ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம் தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம் பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம் தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும் உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.

ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன? 
6.
Prathap Venugopal7 Hours ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா..இன்று போய் நாளை வாவில் உள்ள காமெடியில் பாதி அளவு கூட இல்ல.. கவலைப் படாதீங்க பாக்யராஜ்!
7.
Appan8 Hours ago
சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதன் தயாரிப்பாளர்கள் பாகியராஜிர்க்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
 நன்றி - ஜூ வி