Showing posts with label jeyam ravi. Show all posts
Showing posts with label jeyam ravi. Show all posts

Friday, February 19, 2016

மிருதன் - சினிமா விமர்சனம்


தனி ஒருவன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி ஜெயம் ரவியின் மார்க்கெட்டை உச்சத்துக்குக்கொண்டு போனது. 1000 தியேட்டர்களில்  முதல்  முறையாக அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு


பேய்ப்படங்கள் தமிழ் சினிமாவில் நிச்சய வெற்றி . கிட்டத்தட்ட  பேய்ப்படம் போன்றதொரு கேட்டகிரியில்  இதுவும் வெற்றிப்படமாகவே அமையும் என யூகிக்கிறேன்

 ஹீரோ  ஒரு  டிராஃபிக்  இன்ஸ்பெக்டர். அவருக்கு  ஒரு தங்கை. முன்னாள் காதலி. காதலி ஒரு  டாக்டர்.


ஊர்ல  ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலால் மனிதர்கள் பாதிக்கப்படறாங்க. அதுக்கு மாற்று மருந்து  இன்னும் கண்டுபிடிக்கலை. பாதிக்கப்பட்டவங்க சாதா மனிதனைக்கடித்தா  அவருக்கும்  வைரஸ் பரவும் .


கதைக்களம்  ஊட்டி. ஊட்டி பூரா பிளாக் பண்ணி நிலைமையைக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்குது  போலீஸ்

ஊட்டிக்கு உள்ளே வாகனங்கள் வர தடை வெளியேவும் போக முடியாது.


இப்படிப்பட்ட பர பரப்பான  சூழலில்  காதலி யும் டாக்டர் குழுவும் சட்டத்தை  மீறி  ஊட்டியை விட்டு வெளியே  கோவை போய் தான்  அந்த மருந்து கண்டுபிடிக்கும் பணி பூர்த்தி ஆக்க முடியும். நாயகன் அதுக்கு உதவறார் .

 என்ன ஆச்சு? என்பதே  மிச்ச மீதிக்கதை


 ஹீரோவா  ஜெயம் ரவி,ஓப்பனிங் சீன்ல  நியாயமான சராசரி  போலீஸ் ஆஃபீசரா அவர் வரும் காட்சிகள்  இதம். ஆனாலும் நிமிர்ந்து நில் , தனி ஒருவன் தந்த இமேஜை அவர் மெயிண்ட்டெயின் பண்ண வேண்டி இருக்கு

பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு  எல்லாவற்றிலும் நல்ல  முன்னேற்றம். பொதுவாவே வெற்றி ஒரு மனிதனை மேலும் உற்சாகப்படுத்தும் அடுத்த  வெற்றிக்கு அது தயாராக்கும், வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும், இது  ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். தனி ஒருவன் , பூலோகம் , மிருதன்






ஹீரோயினா லட்சுமிமேனன். இவருக்கு ஒரு ராசி உண்டு. இவர் நடிச்ச எந்தப்படமும் இது வரை ஃபிளாப் ஆனதில்லை. ராசியான நடிகைன்னு பேர் வாங்கிட்டார். இதுல கன்னம் உப்பலா இருக்கு. பீர் காரணமா?  போஷாக்கான சாப்பாடு  காரணமா? தெரியல .

இந்தப்படத்தில்  தனி வில்லன் என யாரும் இல்லை. சம்பளம்  மிச்சம். கண்ணுக்குத்தட்டுப்பட்ட எல்லாரும்  வில்லன் தான்.  காயம் ஆன எல்லாரையும் ஹீரோ ஷூட் பண்ணிட்டே  இருக்கனும் ம் அம்புட்டுதான் வேலை


பின்னணி  இசை  நல்லாருக்கு, ஒளிப்பதிவு  கன கச்சிதம்.  மேக்கப்மேன் க்கு ஏகப்பட்ட வேலை. எல்லார்க்கும்  கோர மேக்கப்  போடனும்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

டிராபிக் இன்ஸ் பெக்டருக்கும் ,சாதா இன்ஸ்பெக்டருக்கும் சம்பளம் 1,தான்.ஆனா டிராபிக் ல ரிஸ்க் கம்மி # மி


2 பொண்ணுங்க போற வண்டியை என்னைக்கும் டிராபிக் போலீஸ் கண்டுக்காது # மி

3 இந்த பனிக்கரடியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

நான் தாங்க மேரேஜ் புரோக்கர்


குடிச்ட்டு வண்டி ஓட்றியா?

ஜஸ்ட் பீர் தான்
பீர் ல பாலா கலந்திருக்கு?

5 ஏம்ப்பா, அவளைக்காப்பாத்துனே  சரி, ஆனா அவளைக்கட்டிப்பிடிக்காமயே அதை செஞ்சிருக்கலாமே? # மி


லேசா பசிச்சுது, அதான் லேஸ் சாப்ட்டுட்டு இருக்கேன்

 நல்லவேளை, சோம்பின்னு நினைச்சு லேசா சுட்டிருப்பேன் # மி




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.

எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்


2 11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்


3 ரசிகர்களின்.ஆரவாரக்கூச்சல் கை தட்டலுடன் ஓப்பனிங் சீனே செம த்ரில் #,மி



4 என் முன்னாள் காதலி. உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி # குட் சாங் @,மி




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   சோம்பிகள் பற்றிய முதல் தமிழ்ப்படம் என்ற முத்திரையைத்தக்க வைக்கும் அளவு  நல்ல படம் தந்தது

2 அரசியல்வாதியாக வரும் நாயகியின் அப்பா கேர்க்டர் பண்ணும் அலப்பரைகள் காமெடி. குறிப்பா சோம்பிகள் கூட்டமாக வெறி கொண்டு வரும் காட்சியில்  என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என பஞ்ச்  கொடுப்பது



3  ஹீரோவின் நண்பர் காலைக்கடித்ததா  சோம்பி என டெஸ்ட் செய்யும்போது சப்போஸ் கால்ல காயம் இருந்தா என்னை சுட்டுடாதே மாப்ளை என அவர் நாயகரிடம் கெஞ்சும் காட்சி டச்சிங் சீன்


4  நாயகி நாயகன் காதல்  காட்சிகள், டூயட் , பிரிவுக்கான சரியான காரணம் கதைக்கு அவசியம் இல்லை  என முடிவெடுத்து  ட்ரிம் பண்ணி க்ரிஸ்ப் ஆக  கொண்டு போகும்  திரைக்கதை உத்தி

5  இந்நாள் புதுக்காதலர்  நாயகியை காப்பாற்ற வராத போது உயிரைப்பணயம் வைத்துக்காப்பாற்ற வந்த முதல் காதலரின் உண்மைக்காதலைப்புஎஇந்து கொள்ளும்  தருணம்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  வேனில் இருப்பவர்களுக்கு கடி காயம் இருக்கா? என சுய பரிசோதனை செய்யச்சொல்றாங்க. எல்லாரும் செஞ்சுட்டு இல்லைங்க்றாங்க. காயம் இருந்தா  சுட்டுக்கொன்னுடுவாங்க என தெரிஞ்சும் யாராவது உண்மையை ஒத்துக்குவாங்களா? கலைஞர் டி வி 200 கோடி ஊழலை கலைஞரே ஒத்துக்கிட்டாலும் இது நடக்காதே? ஹீரோ அல்லது ஹீரோயின் ஒவ்வொருவரா செக் பண்ணி இருக்கனும், அதானே  முறை?


2  ஹீரோயின் தங்கையை கை பிடித்துக்கூட்டி வரும் ஆள் ஒரு சோம்பி. டக்னு கடிக்காம அவ கையைப்பிடிச்சு  இழுத்துட்டுப்போவது  ஹீரோ காப்பாத்த தரும் கால அவகாசம் தானே?

3  சோம்பிகளுக்கு  தண்ணீர் என்றால் அலர்ஜி என்ற உண்மை  தெரிந்த பிறகும் தண்ணீரை ஒரு ஆயுதமாக   உபயோகிக்க  போலீஸ் ஏன் ட்ரை பண்ணவே இல்லை? பின் பாதியில் ஒரு சீனில் மட்டும்  ஃபையர் சர்வீஸ் லாரியை யூசிங்

4  பாதிக்கப்பட்ட  எல்லோரும் கடி பட்ட அடுத்த நொடியே சோம்பியாக மாறும்போது  ஹீரோவின் தங்கைக்கு மட்டும் 90% பாதிப்பு  ஏற்படுவதும்  ஏதோ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் நம்பும்படி இல்லை.





சி  பி  கமெண்ட் -ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். விறு விறுப்பான ஆக்சன் த்ரில்லர் - ஆல் செண்ட்டர் ஹிட் - விகடன் மார்க் -42 , ரேட்டிங் - 3/5 



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங் = 3/5 


திருவனந்தபுரம் அஜந்தா வில்  படம் பார்த்தேன்

Thursday, January 10, 2013

ஆதிபகவன்

ஜீவா நடிக்க...

எ ஃபிலிம் பை 'ஜெயம்' ரவி!
க.நாகப்பன்
"போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, 2012ல நான் பண்ண வேலைகள் 2013ல்தான் ஸ்க்ரீனுக்கு வரும். அதிலும் 'ஆதிபகவன்’ படத்தில் நாலு படத்துக்கான உழைப்பைக் கொடுத்திருக்கேன். 2013 எனக்கு... ஏன் நம்ம எல்லா ருக்கும் ரொம்ப ரொம்ப ஜோரான வருஷமா இருக்கும்!''நம்பிக்கை வார்த்தை களுடன் பேட்டியைத் துவக்குகிறார் 'ஜெயம்’ ரவி.


 ''கடகடனு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. இப்ப ரொம்ப செலெக்ட்டிவ் ஆயிட்டீங்க. முக்கியமா அண்ணன் இயக்கத்தில் ஒரு படம்கூட நடிக்கலை. ஏன் இந்த மாற்றம்?''


 
''மாற்றம் நல்லதுதானே! அண்ணன் இயக்கமோ, மத்த இயக்குநர்களோ எல்லாமே நல்ல படங்கள்தான் பண்ணேன். ஆனா, மொத்தக் குடும்பத்துக்குமான பேக்கேஜ்னு சொல்லிட்டு, ஒரு ஃபார்முலாவில் செட் ஆகிட்டேன். இனிமே பண்ற ஒவ்வொரு படமும் நமக்கே புதுசா இருக்கணும்னு முடிவுபண்ணி நடிச்ச படம்தான் 'பேராண்மை’. 




 அதுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்.... ரொம்ப சந்தோஷமா இருந் தது. இப்ப 'ஆதிபகவன்’, 'நிமிர்ந்து நில்’, 'பூலோகம்’ படங்களோட போஸ்டர்ஸ் பார்த்தீங்கன்னாலே, ஒவ்வொரு படமும் வேற வேற ஏரியானு தெரிஞ்சுக்குவீங்க.



 'ஆதிபகவன்’ ரொம்ப ரௌத்ரமானவன். அந்தப் படத்தோட கேன்வாஸுக்காகவே ஒரு வருஷம் உயிரைக் கொடுத்து நடிச்சேன். 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசைத் தாண்டின கேரக்டர்ல நடிக்குறது... ஃப்ரெஷ்ஷா இருக்கு. முதன்முதலா டபுள் ரோல் பண்றேன். 'பூலோகம்’ செம ஆக்ஷன் ஏரியா. என்ன... அடுத்தடுத்து மூணு படங்கள்ல நடிக்கிறதால, உடம்பை ஏத்த, இறக்க, ஜிம் வொர்க் அவுட்னு ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. வயசு இருக்கிறதால சமாளிக்க முடியுது. படம் வரும்போது, அதுக்கான கிரெடிட் கிடைக்கும்போது கவலை, வலி எல்லாம் மறைஞ்சிடும்!''



''சாக்லேட் பாய் இமேஜை உடைக்கத்தான் அடுத்து அடுத்து ஆக்ஷன் படம் பண்றீங்களா?''


''அப்படி இல்லை. என்னால இன்னும் பிரமாதமான ரோல் பண்ண முடியும்னு என்னைவிட என் இயக்குநர்கள் நம்பினாங்க. 'இவன் காதலிச்சுட்டே இருந்தா சரிவராது. அடுத்த லெவலுக்கு இவன் போகணும்’னு என் மேல் அக்கறையும் நம்பிக்கையும் வெச்ச ஜனா சார், அமீர் அண்ணன், கனி அண்ணன்... இவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். உதவி இயக்குநரா இருந்த நான் நடிக்க வந்ததே ஒரு நம்பிக்கையில்தானே!''  


''உதவி இயக்குநரா..? எந்தப் படத்தில் வேலை பார்த்தீங்க?''  



''இயக்குநர் ஆகணும்கிற ஆசையில்தான் லயோலாவில் விஸ்காம் படிச்சேன். அப்பவே நான் இயக்கின 'சம்மரி’ குறும்படமும் 'வேர்ல்டு பீஸ்’ ஆவணப்படமும் பாராட்டுகளைக் குவிச்சது. சரி... சினிமாவுக்குள் வந்துடுவோம், நிறையக் கத்துக்குவோம்னு நினைச்சுதான் வந்தேன். 'ஆளவந்தான்’ல சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். 



ஆனா, சினிமாவைப் பக்கத்தில் இருந்து  பார்த் தப்போ, இயக்கத்தைவிட நடிப்பு கொஞ்சம் பக்கத்தில் இருந்த மாதிரி தெரிந்தது. அப்படியே டிராக் மாறி நடிப்புப் பயிற்சி எடுத்துக்க ஆரம் பிச்சேன். இப்ப ஆர்வமா நடிச்சுட்டு இருக்கேன். ஆனா, டைரக்ஷன்தான் என் கனவு. சீக்கிரம் ஒரு படம் பண்ணுவேன். என் மனசுல ஒரு கதை இருக்கு. அந்த கேரக்டருக்கு நீதான் பொருத்தமா இருப்பேனு ஜீவாகிட்ட இப்பவே சொல்லி வெச்சிருக்கேன்... பார்க்கலாம்!''  



''ஹீரோக்கள் மத்தியில உங்க ஃப்ரெண்ட்ஸ் கேங் ரொம்ப ஆரோக்கியமான விஷயம். என்னல்லாம் பேசிக்கு வீங்க?''



''கார்த்தி, சிபிராஜ், ஆர்யா, ஜீவா, விஷால், நான்... இது செம குபீர் ஜாலி பிரதர்ஸ் டீம்! இவங்கள்ல ஒருத்தன் சிக்கிட்டா, எல்லாரும் அவனைக் கலாய்ச்சுக் கிண்டலடிச்சுக் காலி பண்ணிருவோம்.



' 'எங்கேயும் காதல்’ படத்தில் அழகா இருக்கடா... டான்ஸ் நல்லாப் பண்ற’னு என்னைப் பாராட்டினாங்க. இன்னொரு படத்துல நடிச்சதுக்கு, 'ஏன்டா... கதையே இல்லாத படத்துல நடிச்ச?’னு செம பரேடு வாங்கினேன். சினிமாபத்திக் கொஞ்சம்தான் பேசிக்குவோம். மத்த அரட்டை, சேட்டைதான் நிறைய. நான், ஆர்யா, விஷால், ஜீவா நாலு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு வெங்கட் பிரபு சொல்லியிருக்கார். அந்தப் படத்துக்காக நாங்க நாலு பேருமே வெயிட்டிங்!''




''புதுசா வந்த ஹீரோ, ஹீரோயின்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''  



'' 'பரதேசி’ டிரெய்லர்லயே மிரண்டுட்டேன். அதர்வா நல்லாப் பண்றார். சமந்தா பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப க்யூட்!''



''சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. என்னலாம் கத்துக்கிட்டீங்க?''



''கத்துக்கிட்டே இருக்கேன். ரொம்பக் கொஞ்சம்தான் கத்திருக்கேன். இன்னும் நிறையக் கத்துக்கணும். யார் உண்மையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பொய்யானவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு படத்துலயும் என்னை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கேன். நடிப்பு, டான்ஸ், ஃபைட் மட்டும் நல்லாப் பண்ணாப் போதும்னு நினைக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்தில் நடிகன்கிறதைத் தாண்டி, ஓர் உதவி இயக்குநராகவும் வேலை பார்ப்பேன்.



'பேராண்மை’ படத்தில் என் கேரக்டருக்கு எங்கேயும் ரெஃபரன்ஸ் இல்லை. என்.சி.சி. ஆபீஸர், பழங்குடி இளைஞன், உறுதியான உடம்பு, அதீதப் புத்திசாலித்தனம்... அவன் எப்படி இருப்பான்... என்ன பண்ணுவான்? ஜனா சார் சுருக்கமா சொன்னார், 'பலரோட தாய்ப் பால் குடிச்சு வளர்ந்தவன். காட்டுப் பழங்கள் சாப் பிட்டு வளர்ந்தவன். ஆரோக்கியமா இருப்பான். அதே சமயம், இரும்பு மாதிரி இருப்பான்’னு சொன்னாரு. 



அப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துக்காக அமுல் பேபி மாதிரி இருந்தேன். சில வாரங்கள்ல அப்படியே ஆளே மாறினேன். ஒரு செட் பிராப்பர்ட்டி எப்படி இருக் கணும்னு இயக்குநர் நினைக்கிறாரோ, ஒரு நடிகனையும் அப்படித்தான் எதிர்பார்ப்பார். அந்த எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கணும்னுதான் நான் ஓடிட்டே இருக்கேன்.




எனக்குப் பக்கத்துல இருக்கிற ரோல் மாடல் அமீர் கான். சினிமாவில் சகல துறைகளிலும் அவர் மாதிரி வித்தியாசமான முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி என்னைத் தகுதிப்படுத்திட்டு இருக்கேன்.''


நன்றி - விகடன்

Thursday, January 03, 2013

பூலோகம் - ஜெயம்’ ரவி, த்ரிஷா -இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர். பேட்டி

 http://kollycafe.com/wp-content/uploads/2012/09/boologam-movie-onlocation05.jpg
 
 
வடசென்னையின் ரிங் கிங்!

கி.கார்த்திகேயன்
 
நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க?'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும்மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று
 
 
 
ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.  
 
  ''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க.



நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்!''




''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே?''



''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான்.



அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்கு பெஸ்ட் ஓப்பனிங்!''

 http://redcapsica.com/gallery_images/original/image_3174.jpg


'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா?''



''நிச்சயமா! ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும்? அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு.
 
 
 
 
 சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு!'' 


நன்றி - விகடன்


http://www.southdreamz.com/wp-content/uploads/2012/05/Trisha-Hot-in-Dammu-Stills-1.jpg