Showing posts with label highlights. Show all posts
Showing posts with label highlights. Show all posts

Thursday, October 24, 2013

ஆரம்பம் - அல்டிமேட் தகவல்கள்

Ajiths Arrambam - 10 special highlights
 

ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து!!

ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் பத்து முத்தான தகவல்கள்.


1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு  ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.

3. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

4. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

5. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

6. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

7. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.

8. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

9. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள். ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

10. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!
 Writers Suba Praises Ajith and Arrambam

ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

 
 
 
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.
 Yuvan making Theme music for Arrambam

ரெடியாகிறது ஆரம்பம் தீம் மியூசிக்!

 

அஜீத்தின் ஆரம்பம் வருகிற 31ந் தேதி தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரிலீசாகி ஹிட்டாகி உள்ளது. ஆனால் பாடல் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம் பெறவில்லை. அஜீத் இதற்கு முன் நடித்த பில்லா, மங்காத்தா படங்களின் தீம் மியூசிக் படத்தின் ஆல்பத்திலேயே இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனால் தற்போது தீம் மியூசிக்கை உருவாக்கும் பணியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறியிருப்பதாவது: "தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப ரீரிக்கார்டிங் பண்ணும்போது உருவாவது. அதனால் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறவில்லை. இப்போது யுவன் ரீரிக்கார்டிங் பணியில் பிசியாக இருக்கிறார். தீம் மியூசிக்கை வெளியிடுவது பற்றி அவருடன் ஆலோசித்து வருகிறேன். விரைவில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு தீம் மியூசிக்கை வெளியிடுவோம்" என்றார்.
 

சென்னை சிட்டியில் 20 தியேட்டர்களில் ஆரம்பம்

 
 
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி இந்த மாதம் 31ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங்குகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி போட்டியில் இருந்து இரண்டாம் உலகம் விலகிக் கொண்டதால் அந்த தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டூடியோ கிரீன் தன் தயாரிப்பான ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தியேட்டர்களை ஏற்கெனவே புக் செய்து ரிசர்வேசனையும் ஆரம்பித்து விட்டது.

இப்போது ஆரம்பம் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. படத்துக்கு எதிராக ஒருவர் கோர்ட்டுக்கு போயிருப்பதால் தியேட்டர்காரர்களிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. இப்போது அது விலகி மீண்டும் தியேட்டர் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.

சென்னையில் இதுவரை சத்யம், எஸ்கேப், ஜநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர், உதயம், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட 20 தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 தியேட்டர்கள் இந்த லிஸ்ட்டில் சேரலாம். தமிழ்நாடு முழுவதும் தனது டார்க்கெட்டில்  உள்ள தியேட்டர்களில் 80 சதவிகித்தை புக்கிங் செய்து முடித்து விட்டார்கள்.
 

பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகம் ‘ஆரம்பம்’ - விஷ்ணுவர்தன் பேட்டி!!

 

எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ... ஆரம்பம்  என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.  அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக ஆரம்பம் இருக்கும் என்பது நிச்சயம் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
a

 thanx - dinamalar


Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a




Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a


Tamil shooting spotஆரம்பம்a



Tamil shooting spotஆரம்பம் a







a



aTamil shooting spotஆரம்பம்a


 Tamil shooting spotஆரம்பம்