தினமலர் விமர்சனம்
46 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த பெண்ணை தேடி செல்லும் ஒரு போஸ்ட்மேனின் பயணம் தான் ஃபைண்டிங் ஃபேனி படத்தின் ஒருவரிக்கதை!
கோவா
அருகே போகொலிம் எனும் அழகான சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள்
ஏஞ்சி(தீபிகா படுகோனே), பிரெடி(நஸ்ரூதீன் ஷா), சேவியோ(அர்ஜூன் கபூர்), டான்
பெட்ரோ(பங்கஜ் கபூர்), ரோசலினா(டிம்பிள் கபாடியா). போஸ்ட் மாஸ்டரான
நஸ்ரூதீன் ஷா, 46 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த பெண்ணுக்கு காதல் கடிதம்
ஒன்று வரைந்து அதை அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளாமல் போக அதை எண்ணி இப்போதும்
மனம் வருந்துகிறார். இந்நிலையில் நஸ்ருதீன் ஷாவின் மனகவலையை போக்க தீபிகா
எண்ணுகிறார். அதற்காக அவர் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்க எண்ணுகிறார்.
தீபிகாவின் இந்த எண்ணத்திற்கு அர்ஜூன் கபூர், பங்கஜ் கபூர், டிம்பிள்
கபாடியா ஆகியோரும் உதவுகின்றனர். பிறகு இந்த ஐவரும் ஒரு காரில் அந்த பெண்ணை
தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர், இறுதியில் அந்தப்பெண்ணை கண்டுபிடித்து
நஸ்ருதீன் ஷாவின் மனக்கவலையை இவர்கள் தீர்த்தார்களா.? என்பது படத்தின்
அழகிய கதை.
படத்தில் நஸ்ரூதீன் ஷா, கள்ளகபடமற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
பங்கஜ்
கபூரின் நடிப்பை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு நடிப்பு அவரது
கதாபாத்திரத்தில் வெளிப்படுகிறது. ரசிகர்கள் அவரது கேரக்டரை என்றும்
மறக்கமாட்டார்கள் அந்தளவுக்கு நடித்துள்ளார் மனிதர்.
படம் முழுக்க மனநிறைவு அளிக்கின்றன கேரக்டரில் நடித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதேப்போல் அர்ஜூன் கபூரின் நடிப்பு பிரமாதம்.
படத்தின்
திரைக்கதை மற்றும் வசனங்களும் பிரமாதம். படத்தின் ஹைலைட்டே இயக்குநர் ஹோமி
அட்ஜானியா தான். அவரது எழுத்தும்-இயக்கமும் பிரமாதம். படத்தின் கதையை
அற்புதமாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார், அதற்கு படத்தில் நடித்த
நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்து இருக்கின்றனர். ஒளிப்பதிவு,
படத்தொகுப்பு, இசை உள்ளிட்டவைகளும் பிரமாதம். ஆனால் படத்தில் அடுத்து என்ன
நடக்கபோகிறது என்பதை முன்னரே யூகிக்க முடிவது சற்று பலவீனமாக தெரிகிறது.
படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக செல்கிறது, ஆனால் பின்பாதி சற்று மெதுவாக
செல்வது ரசிகர்களை சோர்வாக்குகிறது.
''பைண்டிங்
பேனி'' படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மசாலா படம்
போன்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்காது,
ஆனால் உண்மையாக சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாக
பிடிக்கும். அப்படி நேசிப்பவர்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை மிஸ்
பண்ணமாட்டார்கள், அவர்களுக்கு பிடிக்காமல் இருக்காது.
மொத்தத்தில், ''ஃபைண்டிங் ஃபேனி - ஃபென்டாஸ்டிக்!''
ரேட்டிங் ஸ்டார் - 3.5/5