தினமலர் விமர்சனம் » டெசி கத்தே (இந்தி)
சுனில் ஷெட்டி, ஜெய் பான்சாலி, அகில் கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் மோசமான படம் தான் டெசி கத்தே.
ஒரு
கிராமத்தில் அருகருகே வசிக்கும் கயானி(ஜெய் பான்சாலி), பாலி(அகில் கபூர்)
என்ற சிறுவர்கள், வளர்ந்து பெரியவர்களானதும் துப்பாக்கி தொடர்பான தொழில்
கைதேர்ந்தவர்களாகி, அந்த ஏரியா ரவுடியாகிறார்கள். இவர்களது திறமையை
பார்த்து அந்த ஏரியாவில் இருக்கும் பெரிய ரவுடிக்கும்பல் ஒன்று இவர்களை
சேர்த்து கொண்டு வளர்த்து விடுகிறது. சின்ன வயதில் பெரிய ரவுடியாக
வேண்டும் என்ற தாங்கள் கண்ட கனவு நனவானதை எண்ணி ஜெய் பான்சாலியும், அகில்
கபூரும் குதூகலிக்கின்றனர்.
இதற்கிடையா
சூர்யகாந்த் ரத்தோராக வரும் சுனில் ஷெட்டி, துப்பாக்கியில் இவர்களது
திறமையை பார்த்து இவர்களை துப்பாக்கி சுடுதல் சாம்பியனாக்க நினைக்கிறார்.
இதற்காக அவர்களுக்கு உரிய பயிற்சியும் கொடுக்கிறார். இதுதான் அவர்களது
வாழ்க்கையை சிறப்பாக்கும் தருணமாக அமைக்கிறது. ஆனால் அதில் ஒருவர்
நாட்டுக்காக துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க எண்ணுகிறார்,
மற்றொருவர் குற்றச்செயல்களிலேயே ஈடுபட நினைக்கிறார். இருவரில் யார் வெற்றி
பெற்றார்கள் என்பது படத்தின் கதை.
படத்தில்
சுனில் ஷெட்டியின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து அவரது
நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை, பழைய நிலையே தான் நீடிக்கிறது.
செல்லுலாய்டு படத்தை காட்டிலும் டெசி கட்டி படத்தில் சிறப்பாக
நடித்திருக்கிறார் ஜெய் பான்சாலி, ஆனாலும் அவரது நடிப்பு ரசிகர்களை
கவரவில்லை. அதேப்போல் படத்தில் அசுதோஸ் ராணாவிற்கு குறைந்த காட்சிகளே
உள்ளன.
படத்திற்கு ப்ளஸ் என்று சொன்னால்
எஸ்.ஆர்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு மட்டும் தான். கைலாஷ் கெரின் இசை ஓ.கே.,
மற்றபடி ஆனந்த் குமாரின் இயக்கத்தில் படம் பெரிதாக சோபிக்கவில்லை.
கற்பனைக்கு எட்டாத கதை, மோசமான நடிப்பு மற்றும் வசனங்களால் படமே குழப்பமாக
சொல்லப்பட்டுள்ளது.
மொத்தத்தில், டெசி கத்தே - தெளிவற்ற இயக்கமும் - கேவலமான வசனங்களாகவும் தான் இருக்கிறது.
ரேட்டிங் - 1/5
thanx - dinamalar