Showing posts with label dabang 2. Show all posts
Showing posts with label dabang 2. Show all posts

Monday, December 24, 2012

Dabang 2 - சினிமா விமர்சனம்




தபாங் 2  படம் முமபை ஏரியாவில் செம ஹிட்னு நியூஸ் வந்ததுமே இங்கே நிறையபேரு அரண்டுட்டாங்க, காரணம் யங்க் சூப்பர்ஸ்டார் சிம்பு மறுபடியும் ஒஸ்தி 2 எடுத்துட்டா என்ன பண்ணித்தொலையறதுன்னு?மெகா ஹிட்னு சொல்லப்பட்டாலும் தமிழ்ல பல வருடங்கள் பார்த்து சலித்த மாமூல் மசாலா தான்.


ஓப்பனிங்க்லயே போலீஸ் ஆஃபீசர் ஆன ஹீரோ ரவுடிங்களைப்புரட்டி எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் , சும்மா ஒரு பஞ்ச் குடுத்தா அடியாளுங்க ஆறு கிமீ அந்தாண்ட போய் விழறாங்க . 10 நிமிஷம் ஃபைட் , அடுத்து ஒரு கொண்டாட்டப்பாட்டு , பாட்டு முடிஞ்சதும்  ஹீரோ தன் சொந்த சம்சாரத்துக்கிட்டே வந்து கொஞ்சம் கொஞ்சல் .

அடுத்து வில்லன் டெரர் இண்ட்ரோ .வில்லனுக்கு ஒரு தம்பி . அவன் லவ் பண்ற பொண்ணுக்கு வேற ஒரு பையன் கூட மேரேஜ் ஆகுது, கல்யாண மண்டபத்துல  போய் கலாட்டா பண்ணி பொண்ணை இழுத்துட்டு கிளம்பறப்போ ஹீரோ டகார்னு என்ண்டர் ஆகி அவனை போட்டெறியறாரு. இடைவேளை 






 வில்லன் பழிக்குப்பழி வாங்க ஹீரோவோட தம்பியை , சம்சாரத்தை தாக்கறார். ஹீரோ வில்லனை ஒழிச்சுக்கட்டறார். படு கேவலமான அரதப்பழசான கதை . முடியல


ஹீரோவா  முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின் முன்னாள் கலாட்டா காதலர் சல்மான் கான் . இவர் டெயிலி ஜிம்முக்குப்போறார் என்பதை எல்லாருக்கும் காட்டனும்கறதுக்காக டக் டக்னு சட்டையை பாம்பு மாதிரி கழட்டிடறாரு .பார்க்க செம காமெடியா இருக்கு.பொண்டாட்டி கிட்டே வழியும் போது நல்லா அனுபவத்தை காட்டறாரு. பஞ்ச் டயலாக் எல்லாம் விஷால் மாதிரியே பேசறாரு 


ஹீரோயின் அதாவது ஹீரோவோட சம்சாரமா சோனாக்‌ஷி சின்ஹா . பாவம் பாப்பாவுக்கு நல்லதா ஒரு ஜாக்கெட் கூட போட்டுக்க முடியாத அளவு வறுமை போல .  முதுகு ஃபுட் பால் கிரவுண்ட் மாதிரி எப்பவும் ஓபனாவே இருக்கு . முகம் பூரா 4 இஞ்ச்க்குப்பவுடர். 





 வில்லனா நம்ம பிரகாஷ் ராஜ், ஓப்பனிங்க்ல ரொம்ப டெரர் பீஸ் மாதிரி காட்டறாங்க , அப்புறம் போகப்போக காமெடி பீஸ் , பாவம்



இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஸ்டைலிஷான குழந்தைத்தனமான காட்சி , ஹீரோ கூலிங்க் கிளாசை வானத்தை நோக்கி வீசறாரு , அது 18 கிமீ மேலே போய் அரை மiநேரம் கழிச்சு வந்து கரெக்ட்டா அவரோட பின்னங்கழுத்து சட்டைக்காலர்ல கொரங்கு குரங்காட்டியிடம் தோளில் தொத்துவது போல் டக்னு உக்காந்துக்குது. கேன ரசிகர்கள் எல்லாம் விசில் அடிச்சு கைதட்டறாங்க , ஹய்யோ அய்யோ


2. ஒரு டைம் ஹீரோ ஆஃபீஸ் கிள்ம்பும்போது கூலிங்க் கிளாஸ் எடுத்துட்டுப்போக மறந்துடறாரு, அவர் சம்சாரம் அதை நினைவுபடுத்தி எடுத்துக்கொடுக்கும் காட்சி செம கிளு கிளு . அவர் போட்டிருக்கும் ஜாக்கெட் ஜெயா டி வி ல  குஷ்பூ போட்டிருந்த ஜாக்கெட்டை விட படு கேவலமா இருக்கு . 2 இஞ்ச் தான் துணியே . அதுவும் உருவாஞ்சுருக்கு முடிச்சுதான் , ஜாக்கெட் துணியே இல்லை, ரொம்ப ஏழை போல . எந்த போலீஸ் ஆஃபீசர் சம்சாரம் இப்படி ஜெயமாலினி மாதிரி முதுகை தொறந்து வெச்சுக்கிட்டு சுத்துது


 அது நமக்குத்தேவை இல்லாத சமாச்சாரம், சீனை மட்டும் சொல்றேன்.ஹீரோயின் அவரோட ஜாக்கெட்ல அந்த கூலிங்க் கிளாசை சொருகி ஹீரோவுக்கு தன் ஓப்பன் முதுகை காட்டறார். ஹீரோ கெக்கே பிக்கே ந்னு சிரிச்சுக்கிட்டே டிக்கி லோனா கேம் மாதிரி பேக் டூ பேக் முதுகை வெச்சு தேய்க்கறாரு, அந்த கூலிங்க் கிலாஸ் அப்படியே ட்ரான்ஸ்ஃபர் ஆகி இவர் முதுகுக்கு வந்துடுது  , மணி ட்ரான்ஸ்ஃபர் மாதிரி ..



3. போலீஸ் ஆஃபீசர் கொஞ்சம் கூட  வெட்கமே இல்லாம நடு ரோட்டில் ஒரு டிக்கெட் கூட ஐயிட்டம் சாங்க் ஆடறாரு , அதை நேரில் பார்க்கும் அவரோட தாலி கட்டுன சம்சாரம் கேனம் மாதிரி பல்லைகாட்டிக்கிட்டு அதுவும் கம்ப்பெனி தந்து ஆடுது. ஊர்ல இருக்கற ஆம்ப்ளைங்க எல்லாம் போலீஸ் ஆஃபீசர்  சம்சாரத்தை லோ ஹிப் ம் லோ கட்  , ஃபுல் முதுகு எல்லாம்  ஓ சில சீன் பார்த்துக்கிட்டு ஜொள் விடறாங்க, ஹய்யோ அய்யோ



4. பிரகாஷ் ராஜ் தான் வில்லன் ,அவரை அதிகமா கேவலப்படுத்தாம முடிஞ்ச வரை கவுரமா கேவலப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது 









இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹையர் போலீஸ் ஆஃபீசரான ஹீரோ எப்போ பாரு போலீஸ் யூனிஃபார்ம்ல மேல் சட்டை பட்டன் ஒண்ணை கழட்டி விட்டிருக்காரே? அதான் ஸ்டைலா? கண்றாவி



2. ஹீரோ ஒரே ஒரு ரிவால்வரை வெச்சுக்கிட்டு வில்லன் கேங்க்ல ஊடால பூந்து 69  பேரை கொல்றாரு. வில்லன்க எல்லாரும் மெஷின்கன் வெச்சிருக்காங்க, ஆனா ஒரு சிங்கிள் குண்டு கூட ஹீரோ மேல படலை, ஏன்?


3 க்ளைமாக்ஸ்ல வில்லன் பிரகாஷ் ராஜ் கைல ரிவால்வர் வெச்சுக்குட்டு தேவாங்கு மாதிரி பார்த்துட்டு தேமேன்னு நிக்கறாரு, ஹீரோ ஸ்லொ மோஷன்ல 2 கிமீ ஓடி வர்றதை லாங்க் ஷாட்ல காட்டும்போது அவர் ஏன் டக்னு சுடலை ? வேடிக்கை பார்த்துட்டே நிக்கறாரு. அவர் 2 கிமீ ஓடி வந்து பிரக்ச்ஷ் ராஜை உதைக்கற வரை பார்த்துட்டே நிக்கறாரு


4. வில்லன் பிரகாஷ் ராஜ் செம காண்ட்ல இருக்கார் , அப்போ ஒரு மலைக்கோயிலுக்கு ஹீரோவின் சம்சாரம் வருது . அப்பவே அவரை சூட் பண்ணா வேலை முடியுது . அவரை பிடிச்சு கீழே தள்ளி விடறார். ஹீரோயின் 78 படிகள் உருண்டு வந்து கீழே விழறாங்க , முறைப்படி சட்னி ஆகி இருக்கனும். ஆனா நெத்தில ஒரே ஒரு  கீறல் மட்டும்



5. வில்லன் ஹீரோயினைப்பிடிச்சு வசனம் பேசி தள்ளும் வரை 10 நிமிஷம் வேடிக்கை பார்க்கும் ஹீரோவின் தம்பி  ஹீரோயின் அதாவது அண்ணி கீழே உருண்டு விழுந்த பின் டேய்ய்ய்ய்ய்ய்ய் அப்டினு கத்திக்கிட்டு ஓடி வர்றாரு, அதை முன்னமே செஞ்சிருந்தா காப்பாத்தி இருக்கலாம்


6. வில்லன் ஒரு தாதா , ஹீரோ அந்த ஊருக்கு புதுசா வர்றாரு , அட்டூழிங்களை அழிக்கறாரு, இதே மசாலா தோசையை எத்தனை பேரு எத்தனை டைம் திருப்பி திருப்பிப்போடுவீங்க? 






 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35 

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார் 

 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங்க் -  2 / 5


சி.பி கமெண்ட் - சல்மான்கான் ரசிகர்கள் , தியேட்டர் ஆபரேட்டர்ஸ் மட்டும் பார்க்க வேண்டிய மகா மட்டமான மசாலா குப்பை