Showing posts with label complaint. Show all posts
Showing posts with label complaint. Show all posts

Tuesday, January 08, 2013

கண்ணா! ஜெயிலில் களி தின்ன ஆசையா? கே பாக்யராஜ் கேள்வி, போலீசில் புகார்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg 
நடிகர் சந்தானம், இயக்குனர் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரிக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கே.பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பாக்யராஜ் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:



1981ம் வருடம் என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் நடித்து இயக்கிய படம் "இன்று போய் நாளை வா". மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணை காதலிக்க போட்டியிடும் கதை அம்சம் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நெகட்டிவ் உரிமை, திரையீடு உரிமையும் வேறு சிலரிடம் இருந்தாலும் இதன் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. 




அதை நான் தமிழில் ரீமேக் செய்ய யாருக்கும் விற்கவில்லை. ஆனால் 99 வருட திரையீடு உரிமை பெற்றுள்ள ஓ.கே.பிலிம்ஸ் பி.வி.மணி கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறி தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமிக்கு அதனை விற்றுள்ளார். இதனை புஷ்பா கந்தசாமி என்னிடம் சொன்னபோது நான் இந்தக் கதையை என் மகனை வைத்து மீண்டும் தயாரிக்கப்போகிறேன். அதனால் கதை உரிமையாக யாருக்கும் தர மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் கதை உரிமை என்னிடம் இருப்பது தெரிந்தும் ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கி அதனை ராம.நாராயணனுக்கு விற்றுள்ளார். ராமநாராயணன் தற்போது எனது கதையை நடிகர் சந்தானத்தை வைத்து "கன்னா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை எடுத்து வருகிறார். 


http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg




கதை உரிமை என்னிடம் உள்ளது தெரிந்தும், ராமநாயராணன், புஷ்பாகந்தசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து எனது கதையை படம் எடுத்து வருகிறார்கள். கன்னா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை. இன்று போய் நாளை வா கதைதான் என்று படத்தின் ஹீரோ சந்தானமும், இன்னொரு  நடிகரும் பேட்டியில் கூறி உள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 



கதை என்னுடையது இல்லை என்றால் படத்தை போட்டுக் காட்ட சொன்னேன். அதையும் செய்யாமல் அவசர அவசரமாக திரையிட முயற்சித்து வருகிறார்கள். என் மகனின் எதிர்காலத்திற்காக நான் வைத்திருந்த கதையை இவர்கள் படம் எடுத்துவிட்டதால் எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடங்க உள்ளேன். எனவே போலி ஆவணங்கள் மூலம் எனது கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தை நிறுத்தி வைத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


 நன்றி - தினமலர் 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg