Showing posts with label chandu champion (2024) -ஹிந்தி /தமிழ் -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label chandu champion (2024) -ஹிந்தி /தமிழ் -சினிமா விமர்சனம். Show all posts

Monday, August 19, 2024

chandu champion (2024) -ஹிந்தி /தமிழ் -சினிமா விமர்சனம் (பயோ கிராபிக்கல் ஸ்போர்ட்ஸ் டிராமா ) @ அமேசான் பிரைம்

         


             கற்பனை கலந்து எழுதப்படும் புனைவு சிறுகதைகள் , நாவல்களுக்குக்கிடைக்கும் வரவேற்பு  சுயசரிதை நூல்களுக்கோ ,சுய சிந்தனைக்கட்டுரை நூல்களுக்கோ கிடைப்பதில்லை .இந்த உண்மையை  உணர அரசு பொது நூலகங்கள் சென்றால் போதும் .சுஜாதா , பாலகுமாரன் ,ராஜேஷ் குமார் , பிகேபி , சுபா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் அழுக்காக , கிழிந்து , சேதமுற்று  இருக்கும் . சுயசரிதை நூல்களும்  ,சுய சிந்தனைக்கட்டுரை நூல்களும்  புத்தம் புதிதாக அப்படியே இருக்கும் .யாரும் படித்திருக்கமாட்டார்கள் . ஆனால் அந்த நூல்கள் தான்  நாம் படிக்க வேண்டிய நூல்கள் 



அது மாதிரி தான் சினிமாவிலும்  ஆக்சன் மசாலாக்கள் ,க்ரைம் த்ரில்லர்கள் , காதல் கதைகள் வெற்றி பெறுவது  போல்  மோட்டிவேஷனல் டிராமாக்கள்  ஹிட் ஆவது இல்லை . 140 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம்  தரமான படமாக இருந்தும் 85 கோடி ரூ மட்டுமே வசூலித்து உள்ளது 14/6/24 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப் படம் இப்போது 9/8/24 ,முதல அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது . ஹிந்திப்படமான இது தமிழ் டப்பிங்கில் உள்ளது 


உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியவீரர் ஆன  முரளிகாந்த் பெட்கரின்  போராட்ட வரலாறு தான் இப்படம் . ஆனால் ஒரு  காட்சி கூட போரடிக்காமல்  கமர்ஷியல்  படம் போலவே எடுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


60+ வயதான பெரியவர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷன்  வந்து கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஜனாதிபதிகளாக இருந்த அனைவர் மீதும் ஒரு புகார் வைக்கிறார் . தனக்கு  அர்ஜுனா  விருது தந்திருக்க வேண்டும் , ஆனால் தரவில்லை .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்  அபப்டி என்ன சாதனை அவர் செய்தார் எனக்கேட்கும்போது  பிளாஷ்பேக் விரிகிறது 


நாயகன் 8 வயது சிறுவனாக இருக்கும்போது அவன் கண்டகாட்சி அவன் மனதில் ஆழப்பதிகிறது . ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கிய ஓருவரை இந்த உலகமும், மீடியாக்களும் கொண்டாடுவதைப்பார்த்து தானும் அதே போல் ஒலிம்பிக் கோல்டு மெடலிஸ்ட் ஆக வேண்டும் என நினைக்கிறான் 



இளைஞன் ஆனதும் குஸ்தி சண்டை பயில்கிறான்  . சிறப்பாக  பயிற்சி பெற்று அதில் தேறுகிறான் .மிலிட்டரியில் சேர்ந்தால் தான் அவன் கனவு நனவாகும் என தெரிய வந்த;பின்  பெற்றோரின் எதிர்ப்பை மீ றி   மிலிட்ரியில் சேர்ந்து  பாக்சிங்க் வீரன் ஆகிறான் 



முக்கியமான ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பைனலில் தோற்கிறான் . இதற்குப்பின் நடந்த போர் தாக்குதலில்  நாயகனின் உடலில் 9 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து  தெய்வாதீனமாக  உயிர் பிழைக்கிறான் . ஆனால் இடுப்புக்குக்கீழே  பாகங்கள் செயல் இழக்கின்றன 


மனம் தளராமல் பயிரசி பெற்று  நீச்சல் வீரர் ஆக முன்னேறி  ஒலிம்பிக்கில் தங்கபபதக்கம் வெல்வதுதான் மீதி கதை 


நாயகன் ஆக கார்த்திக் ஆரியன் பிரமாதமாக நடித்தி ருக்கிறார் சூப்பர் ஹீரோக்களைப்பார்த்த நமக்கு யதார்த்த மனிதன் சாதிப்பதைப்பார்க்கும்போது  சந்தோஷமாக இருக்கிறது 


நாயகி , காதலி  என யாரும் இல்லை 


 நாயகனுக்குப்பயிற்சி  அளிக்கும் வீரராக விஜய் ராஜ் பிரமாதப்படுத்தி இருக்கிறார் 


பத்திரிக்கையாளர்  நயன் தாரா வாக பாக்ய ஸ்ரீ போஸ்  நல்ல அழகு . ஆரம்பத்தில் இவர் தான் நாயகி என நினைக்க வைத்தது , ஆனால் ஏமாற்றம் 


நாயகனைப்பற்றிக்கட்டுரை எழுதும் பெண் நிருபர்  சோனாலி குல்கர்னி கச்சிதமான நடிப்பு .இவரும்  அவருக்கு ஜோடி இல்லை 


பிரித்தம்  இசையில்  பாடல்கள் .பின்னணி  இசை ஜுலியஸ் பாஸ்கர் .கச்சிதம் . ஒளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி . எழுதி இயக்கியவர் கபீர் கான் 

சபாஷ்  டைரக்டர்


1   முன் அனுபவமோ , பயிற்சியோ இல்லாத நாயகனை  குஸ்தி போட்டியில் பலிகடாவாக  இறக்கி விட நாயகன்  அந்தபோட்டியில் வெல்லும் காட்சி கூஸ்பம்ப் மொமெண்ட் 


2  மிலிட்டரியில் சேர்ந்த நாயகன் ஹையர் ஆபீசரிடம் நல்ல பேர் வாங்கும் காட்சி


3  சீனர்கள் போல  ஸ்போர்க் , கத்தி யுடன் சாப்பிட்டுபழக்கம்  இல்லாத நாயகன் வெட்டி பந்தாவுக்காக முயற்சிக்கும்போது  நோஸ்கட் பெறும் காமெடி காட்சி 


4   முதன்முதலாக  டி வி பேட்டி அளிக்கும் நாயகன் இங்க்லிஷ் தெரியாத போதும்  நண்பன் உதவியுடன் சமாளிக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1  அர்ஜுனா  அவார்டு கிடைக்காதது தானே பிரச்சனை ?அதுக்கு அர்ஜுன் மேல கேஸ் போடாம எதனால ஜனாதிபதி மேல   கேஸ்  ;போடணும்? 

2 வாழ்க்கைல எந்தப்பிரச்சனை வந்தாலும் பயந்து ஓடக்கூடாது ,  எதிர்த்துப்போராடனும்,அப்போதான் ஜெயிக்க முடியும் 

3இதுவரைக்கும்  யாரும்  ஜெயிக்கமுடியலைன்னா யாராலும் ஜெயிக்கமுடியாதா? 

4 உன் பேரு தானே  டைகர் ?உன் பேரையே மறந்துட்டியா? அவனுக்கு உன் பேரை வெச்சிருக்கே? 

இது பெரிய டைகர் , அவன் சின்ன டைகர் 

5  நீ குடிச்சிருக்கியா?

 ச்சே ச்சே , நான் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் .தண்ணி  அடிச்சா லிவர் டேமேஜ் ஆகிடும் 

6 மெக்சிகன் பாக்சர்ஸுக்கு  டிபன்ஸ் என்றால் என்னன்னே தெரியாது , அட்டாக் , அட்டாக்  ஒன்லி  அட்டாக் 

7   சார்  , முதல் தடவை  செய்த தப்புக்கு மன்னிப்பு கிடையாதா? 

8  இது சூதாட்டம் இல்லை , விதியின் விளையாட்டு 

இரண்டும் ஒண்ணுதான் 

9  போர் ரொம்பமோசமானது  போர் தொடுப்பவனுக்கு   எந்த நஷ்டமும் இல்லை , நஷ்டம் எல்லாம் போரில் சண்டை போடுபவனுக்குத்தான்  

10   வாழ்வதை இன்னும் விடலைன்னா  போராடுவதை , கனவு காண்பதை என் விடணும்? 

11   நாம் கனவு காண்பதை நிறுத்தும்போதுதான் கனவு நின்னு போகும் 

12  உண்மையான வெற்றி மத்தவங்களைத் தோற்கடிப்பதில் இல்லை , உண்மையான வெற்றி என்பது தோற்று விட்டேன் என்ற குமுறலை தோற்கடிப்பதில்தான் இருக்கு 

13   இங்கே வந்திருக்கும் எல்லாருமே  உன்னால முடியாது உன்னால முடியாது   என பலரால் அவநம்பிக்கை ஊட்டப்பட்டவர் தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


நல்ல படங்கள் வருவதே  அரிது .அதிலும் குறை கண்டுபிடித்தால் நல்லாருக்குமா? எனவே ஆக்சன் மசாலாக்களில் மட்டுமே  இந்த வேலையை வைப்பது என நினைக்கிறேன்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரும் நிச்சயமாகப்பார்க்கவேண்டிய மோட்டிவேஷனல் டிராமா .உங்களுக்கு ஒரு உதவேகம் தரும் . ரேட்டிங்க்  3.5 / 5 


சந்து சாம்பியன்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்கபீர் கான்
எழுதியவர்கபீர் கான்
சுமித் அரோரா
சுதிப்தோ சர்க்கார்
தயாரித்ததுசஜித் நதியத்வாலா
கபீர் கான்
நடித்துள்ளார்கார்த்திக் ஆர்யன்
விஜய் ராஸ்
புவன் அரோரா
விவரித்தார்சோனாலி குல்கர்னி
ஒளிப்பதிவுசுதீப் சட்டர்ஜி
திருத்தியதுநிதின் பைட்
இசைபாடல்கள்:
ப்ரீதம்
ஸ்கோர்:
ஜூலியஸ் பாக்கியம்
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுபென் மருதர் பொழுதுபோக்கு
வெளியீட்டு தேதி
  • 14 ஜூன் 2024
இயங்கும் நேரம்
142 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட  70–140 கோடி [ 2 [ 3 ]
பாக்ஸ் ஆபிஸ்மதிப்பிடப்பட்ட ₹88.73 கோடி [ 4