புதிய பாதை எனும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஆர் பார்த்திபன் பொண்டாட்டி தேவை யில் சறுக்கினார் , பிறகு சுகமான சுமைகள் படத்தில் செம லாஸ் , ஆர்ட் ஃபிலிம் டைப்பே வேணாம் என இறங்கி அடிக்க ஒரு போலீஸ் ஃபார்முலா படம் எடுத்தார் அதுதான் உள்ளே வெளியே , 16/4/1993 அப்போ ரிலீஸ் ஆச்சு படம் செம ஹிட் வசூலை அள்ளிக்குவிச்சுது. ஐஸ்வர்யா வின் கில்லி லோ கட் சீன் செம அப்ளாஸ் , படம் பூரா டபுள் மீனிங் வசனம் தான்
அந்தப்படத்தின் கதையை அட்லீ வேலை ( திருட்டு வேலை) செஞ்சு தெலுங்குல ஜூனியர் என் டி ஆரை வெச்சு டெம்ப்பர்-னு ஒரு படம் எடுத்தாங்க, படம் ஹிட் . அந்தப்பட தெலுங்கு ரீமேக்கை உரிமை வாங்கி எடுத்த மடத்தனமான படம் தான் அயோக்யா. இதுக்கு ஆர் பார்த்திபன்கிட்டேயே 50,000 ரூபா தந்தா ரீமேக் உரைமை தந்திருப்பார் , மடத்தனமா 4 கோடி கொடுத்து தெலுங்கு ரீமேக் உரிமை தண்டச்செலவு
இதுல இன்னொரு கொடுமை என்னான்னா உள்ளே வெளியே ஹீரோ பார்த்திபனையே இந்தப்படத்துல வில்லனாப்போட்டதுதான் ( கதை கேட்டிருந்தா அவருக்காவது தெரிஞ்சிருக்கும்
ஹீரோவா புரட்சித்தளபதி விஷால் , சிங்கம் சூர்யா மாதிரி 6 மடங்கு சவுண்ட் , சாமி விக்ரம் மாதிரி போலீஸ் கெத்து , சிலம்பாட்டம் , வல்லவன் ல சிம்பு போட்ட டான்ஸ் ஸ்டெப்ஸ் இவ்ளோதான் விஷால் , அவரோட ஹேர்ஸ்டைல் படு கண்றாவின்னா அவரோட மீசை இல்லா கெட்டப் ரொம்ப கேவலம், அவன் இவன் படத்துல திருநந்கை கேரக்டர் பண்ணார், அதே கெட்டப்
ஹீரோயினா ராசி கண்ணா , பாவம் ராசி இல்லா கன்னி போல கேனம் மாதிரி சிரிக்குது , சம்பந்தமே இல்லாம ஹீரோவை லவ்வுது, 2 டூயட் அவ்ளோதான்
வில்லனா ஆர் பார்த்திபன்.. நானெல்லாம் சொர்ணமுகி படத்துல அவரோட வசனத்துக்கு கை தட்டுன ஆளு , இதுல பாவமா வந்து போறாரு
க்:ளைமாக்ஸ் ரமணா வில் இருந்து உருவி இருக்காங்க
டெக்னிக்கல் மேட்டர்ஸ் எல்லாம் சராசரி தரம்
பாராட்ட வேண்டிய ஒரே நடிகர் கே எஸ் ரவிக்குமார் தான் . கச்சிதமான நடிப்பு
அவரு ஓப்பனிங் சீன்ல ஹீரோவுக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்னு வீராப்பா சொல்லும்போது தியேட்டர்ல ஒரு 5 வயசுப்பொடியன் க்ளைமாக்ஸ்க்குள்ளே இவரு சல்யூட் அடிப்பார் பாருங்க அப்டிங்கறான் நடந்துச்சு
நச் டயலாக்ஸ்
1 வர்றவன் பேருதான் கர்ணன்,ஆனா குடுக்க மட்டான்,காசு ,பணம்னு எடுத்துக்குவான்,சுருக்கமா சொல்லனும்னா கரப்ஷனுக்கே செல்லப்பிள்ளை. #ayogya
2 சோறும் ,வயசும் சூடா இருக்கும்போதே சாப்பிட்டுடனும் #ayogya
3 என் ego என்னைச்சுத்தி ஒரு பைப்லைன் மாதிரி ஓடிட்டிருக்கு. #ayogya
4 எப்படிப்பிழைக்கனும்னு பாக்கக்கூடாது
எப்படி வாழனும்னு பாக்கனும் #Ayogya
5 இந்த பூமில பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஒரு கடமை இருக்கு,அந்தக்கடமை யை செய்துமுடிக்காம யாரும் சாகமாட்டாங்க #ayogya
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 சிலம்பாட்டம் ல சிம்பு போட்ட ஸ்டெப்பை இன்னும் எத்தன பேரு தான் அட்லீ வேலை பார்ப்பாங்களோ? #ayogya
2 புரட்சித்தளபதியோட ஓவர் ஆக்டிங்,கேரக்டர் ்ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கே? நமக்கும் தளபதிகளுக்கும் செட் ஆகறதில்ல #ayogya
3 ஜூனியர் NTR ன் டெம்பர் தெலுங்குப்பட அதிகாரப்பூர்வ ரீமேக்கான அயோக்யா @ கேரளா பத்தணம்திட்டா செங்கன்னூர் சிர்ரி 1 pm ஷோ #ayogya
சபாஷ் டைரக்டர்
சொல்லிக்க ஒண்ணுமில்ல
லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)
1 லாஜிக் மிஸ்டேக் 1 −− ஒரு பொண்ணைக்கடத்த பிராஜெக்ட் போடறவங்க பொண்ணோட போட்டோவை அடியாளுங்க கிட்டத்தராம குறிப்பிட்ட பைக் ல வருவா னு சொல்றது மடத்தனம்.ஆள்மாறாட்டம் நடக்கறதுக்கு ஒரு சால்ஜாப்பு #ayogya
2 லாஜிக் மிஸ்டேக் 2 −− ரேப் கேசின் முக்கிய சாட்சியான வீடியோ டேப்பை கோர்ட்டில் சப்மிட் பண்ணும் முன் ஒரு செட் காபி பண்ணி வெச்சுக்க மாட்டாங்களா? #Ayogya
3 லாஜிக் மிஸ்டேக் 3− அந்த வீடியோவை காபி பண்ண முடியாதுனு ஒரு சமாளிபிகேஷன் டயலாக் வருது.அப்போ அந்த வீடியோவை முக்கிய ஆபீசர்கள் 4 பேருக்கு போட்டுக்காட்டி அதை ஒரு வீடியோவாக எடுத்து அதை ஒரு சாட்சியாக வைக்கக்கூடாதா? #Ayogya
4 போலீசின் சாட்சி கோர்ட்டில் செல்லாது , இந்த சட்ட நுணுக்கம் கூடத்தெரியாம திரைக்கதை எழுதி இருக்காரு
சி.பி கமெண்ட் -அயோக்யா − ரேப்பிஸ்ட்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரப்போராடும் இன்ஸ்பெக்டரின் ஆக்சன் மசாலா.க்ளைமாக்ஸ் ரமணா சாயல் , படம் பூரா சவுண்ட் விட்டுட்டே இருக்காரு ஹீரோ,காது ஜவ்வுக்கு ஆபத்து,விகடன் 40 , ரேட்டிங் 2.25 / 5 #Ayogya