Showing posts with label andrea. Show all posts
Showing posts with label andrea. Show all posts

Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் அடுத்த சி எம் கனவில் இருக்கும் கேப்டன் நடித்த ஏ வி எம் மின் மாநகரக்காவல் ல பாரதப்பிரதமரை வில்லன் கிட்டே இருந்து ஹீரோ காப்பாத்துவாரு,அமரர் திருப்பதிசாமி இயக்கிய நரசிம்மா படத்துல கேப்டன் தீவிரவாதியா  அவங்க கூட்டத்துல ஊடுருவி  டபுள் கேம் ஆடுவாரு.இந்த 2 கதையையும் மிக்ஸ் பண்ணுனா  டக்னு நம்மாளுங்க கண்டு பிடிச்சுடுவாங்க . அதனால  மசாலாப்பொரி ல சீரகம் சேர்த்தற மாதிரி THE TRAITOR ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி தாலிபான்கள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சேர்த்தி  அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்ச TRUE LIES  படத்துல இருந்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவுனா கம கமக்கும் பர பரக்கும் ஆக்‌ஷன் மசாலா ரெடி .


4 படங்கள் பார்க்கும் செலவை ஒரே படத்துல  ஆடியன்ஸ் பார்த்துவிடுவதால் டிக்கெட் 4 மடங்கு போல .. 


ஓப்பனிங்க்ல நாட்டியக்கலைஞரா வரும் கமல் காட்டும் நளினங்கள், கண் அசைவுகள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் அட்டகாசம் . ஆல்ரெடி வரலாறு படத்துல அஜித் பண்ணின கேரக்டர்தான் என்றாலும்  கமல் டச் இன்னும் மெருகு .ஆணழகன் ல பிரசாந்த் ட்ரை   பண்ணுனார்,ஆனா இந்த அளவு நளினம் இல்லை. அந்தப்பாடலில் வரும் அட்டகாசமான 75 மார்க் ஃபிகர்கள் 6 பேரால்
   கூட காட்ட முடியாத நளினத்தை , பெண்ணின் பாவத்தை அநாயசமாய்க்கமல் காட்டி விடுகிறார்

முஸ்லீமாக  கமல் வரும் காட்சிகளில்  அசல் முஸ்லீமாகவே தெரிவது கமலின் தனிச்சிறப்பு.இந்த 2 டானிக் தவிர நடிகர் கமல் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங்க்தான். அவரை சர்வசாதாரணமாக இயக்குநர் கமல் ஓவர் டேக்கி விடுகிறார். 



 வில்லனாக வரும் ராகுல்போஸ் என்னமா  முகத்துல குரோதத்தை தேக்கி வெச்சிருக்கார் . அற்புதம் . ஆஜானுபாவகமான தோற்றம் + உயரம் அவருக்கு பெரிய பிளஸ்.. 


ஹீரோயின் பூஜா குமார் .அல்வாத்துண்டு உதட்டழகி .கிறங்க வைக்கும் மேனி அழகை அவர் ரொம்ப இறங்கி வந்து காட்டினாலும் , உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டாமலேயே எழுப்பினாலும் , தமிழ் ரசிகர்கள் இந்த அளவு இறங்கிப்போன அழகை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. அவர் இனி வரும் படங்களில் மல்லிகா ஷெராவத் , ஏஞ்சலினா ஜூலி இவர்களின்  பேடு  வைக்கும் நாலெட்ஜை கற்றுக்கொண்டால் நல்லது .


ஊறுகாயாக வரும் ஆண்ட்ரியா  பெருசா ஏதும் நடிப்பை(யும் ) காட்டலை . அவருக்கு வாய்ப்பு கம்மி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. தாலிபான்கள் வாழ்க்கையில் நிகழும் அவலங்கள் , அகதி வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம் ,குழந்தைகள் கூட தீவிரவாதப்பயிற்சி எடுப்பது, டாக்டருக்குப்படிக்க விரும்பும் சிறுவன் ஆசை நிராகரிக்கப்படுவது என முழுக்க முழுக்க ஒரு மணி நேர வரலாற்றுப்பதிவு ஆக்கியது தமிழ் சினிமா வில்  ஒரு மைல் கல். ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டதும் தமிழில் இதுவே முதல் படம் 


2. கமல் விஸ்வரூபம் எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் காட்சி அட்டகாசம் . தியேட்டரில் கரகோஷம் அடங்கவே இல்லை . இதே போல் தமிழ் சினிமாவின் அட்டகாசமான ஃபைட் காட்சிகள்  கேப்டன் பிரபாகரனில் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட் , ரன்  படத்தில் மாதவன் ஓடிப்போய் ஷட்டரை இறக்கும் காட்சி , பாட்ஷா படத்தில் ரஜினி யின் இடைவேளை ஃபைட்  அரங்கு அதிரும் உதாரணங்கள் 



பூஜா குமார் அதே ஃபைட் சீனை நினைத்துப்பார்ப்பதும் அது ஸ்லோ மோஷனில் வருவதும் தமிழ் சினிமாவுக்கு முதல் முறை ) ஆல்ரெடி சிறையில் பூத்த சின்ன மலர் -ல் கேப்டன்  40 செகன்ட் அப்படி ஸ்பீடு , ஸ்லோ மோஷன் என டபுள் எண்ட்ரி ட்ரை பண்ணி இருந்தாலும் இது டியூரேஷன் , மேக்கிங்க் உலகத்தரம் .ஜாக்கிசானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் பட ஃபைட்டை நினைவு படுத்தியது .ஸ்டண்ட் மாஸ்டர் , பின்னணி இசை அமைப்பாளர் , கமலின் உழைப்பு மூன்றுக்கும் ஒரு  ராயல் சல்யூட்



3. கமலின் மனைவி கேரக்டர் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது போல் நடிப்பது கடந்த 20 வருட கமல் சினிமா வாழ்வில் இது முதல் முறை . இமேஜ் பார்க்காமல் நடித்தது குட்.. ( 20 வருடங்களுக்கு முன் அவர் நடிச்ச படங்கள்ல ஒரு வேளை இருந்திருக்கலாம் ) 


4. ஒரு மீடியமான ஆக்‌ஷன் படத்தை உலக  அளவில் கவனத்தை ஈர்த்த விதம் , 100 கோடி ரூபாய் செலவு பண்ணினாலும் கிடைக்காத நெகடிவ் பப்ளிசிட்டி , அப்படி தடை பண்ணும் அளவு என்னதான் படத்துல இருக்கு என சாமான்ய ரசிகனையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய சாமார்த்தியம்  எல்லாம் கமலுக்கே போய்ச்சேரவேண்டிய கிரடிட்.. 

5. உனைக்காணா பாட்டில் கமல் காட்டும் அபிநயங்கள், பாடல் இசை எல்லாம் அற்புதம் . அதே போல் யார் என்று புரிகிறதா? பாட்டும் நல்ல மேட்சிங்க் 






இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?






 மனம் கவர்ந்த வசனங்கள்( காதுக்கு கேட்ட கொஞ்சமாச்சும் புரிஞ்ச வசனங்கள் )




1. நான் கெட்டவ இல்லை டாக்டர் 


இங்கே வர்ற பேஷண்ட்ஸ்  யாரும் கெட்டவங்க கிடையாது




2. பிடிக்காத விஷயத்தை எப்படி ரசிச்சு செய்யறீங்க?



 என் மனைவிக்கு சிக்கன்  ரொம்பப்பிடிக்கும் , எனக்கு என் மனைவியை ரொம்பப்பிடிக்கும் . மணவாட்டியே மணவாளன் பாக்கியம் இல்லையா? 



3. ஒபாமா ரேட்டிங்கை ஏத்திக்கறார்

 இது தப்பில்லையா? 




4.  அப்பா இல்லாத பசங்க சராசரி ஆளுங்களை விட  உஷாரா இருப்பாங்க உன்னை மாதிரி .. தமாசு 



அப்பா யாருன்னே தெரியாத  பசங்க எல்லாரையும் விட உஷாரா இருப்பாங்க , உன்னை மாதிரி , இதுவும் தமாசு 


5.  என்ன மொழி பேசுனாலும் என் மகன் போராளியாத்தான் வருவான், என்னை மாதிரி 


6. பொம்பள நீ முக்காடு போடு , உடம்பை மூடு , ஊரை விட்டு ஓடு 




7. நீங்க உங்கப்பாவை விட நல்லவரா? 


 நோ


 ஏன் அப்டி இல்லை?


8. கடவுள் தான் காப்பாத்தனும் 


 எந்தக்கடவுள் ?


9.  என் வாழ்க்கைல நான் நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன் , ஐ ஆம் எ ஹீரோ அண்ட் ஐ ஆம் எ வில்லன் 



10. அல்லா நம்மை மன்னிக்கவே மாட்டார் 


 நம்மை? உங்களைன்னு சொல்லுங்க 



11.  என் கடவுளுக்கு 4 கை 


 அப்போ எப்படி சிலுவைல அறைவீங்க? 




சி.பி கமெண்ட் -  கமல் ரசிகர்கள் , போர் அல்லது  போராளிகள் பற்றிய படம் விரும்பிப்பார்ப்பவர்கள்  இந்த இரு தரப்பு மட்டுமே படம் பார்க்கலாம். மற்றபடி படத்தில் வன்முறைக்காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் பெண்கள் , மைனர்கள் , மாணவ மாணவிகள் பார்க்க முடியாது . 


ஆனந்த விகடன் ஆல்ரெடி 46 மார்க் போட்டுட்டாங்க. கம்மி. ஏழாம் அறிவுக்கே 48 கொடுத்தவங்க இதுக்கு  தாராளமா 50 மார்க் கொடுத்திருக்கலாம்



 ரேட்டிங்க் - 7 / 10 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 


 



டிஸ்கி - இன்னைக்கு சண்டே , படம் போட்டு 3 நாட்கள் தான் முடிஞ்சிருக்கு , ஆனா 30 % சீட் தான் ஃபுல் ஆகி இருக்கு . கமல் ன் விஸ்வரூபம் ரஜினி யின் எந்திரனை மட்டுமல்ல விஜய் ன் துப்பாக்கியை கூட தாண்ட முடியாது # தமிழ்நாட்டில்.ஆனால் வசூலில் ஆல் ஓவர் த வோர்ல்டு  100 கோடியை அள்ளிடும்