Showing posts with label anandhavikatan. Show all posts
Showing posts with label anandhavikatan. Show all posts

Friday, March 18, 2011

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய பெண்ணை செம ஃபிகர்,செம கட்டை என வர்ணிப்பது தவறா?ஆனந்த விகடன் அலசல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXsu1hsF-hokpG9x2WaB0l5102_tzJpThllMvUyxVKpcmzWwx9-N8VkbMioJ3fVJweBgyEQsJXW_d7Q9YWT8RIIMFjVcMvyylTRkn2ESBfLS34fXhhlUY0CyoNBrwoTdLTK6kwfSWXDcE/s400/Kanika-Plain-Silk-Indian-Saree--homelyheroines.blogspot.jpg 

சமீபத்தில் நான் ஒரு சினிமா விமர்சனம் எழுதும்போது ஹீரோயினின் அண்ணியை செம கட்டை என வர்ணித்து விட்டேன். அது பலரது மனங்களை சங்கடப்படுத்தியதாக நண்பரின் பதிவைப்படித்து வருத்தம் அடைந்தேன்.இனி அது போல் தவறு நேராமல் கவனமாக இருக்கிறேன் என பின்னூட்டம் இட்டேன்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரை பெண்களின் வலியையும்,அவர்களது மன நிலையையும் மனதை பாதிக்கும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்! 

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா?

அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!


யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும்.

அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். 
 http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Kanika_8608.jpg
ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ...  இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!
பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.

என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள்.

ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.

'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்‌ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். 

எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்! 

சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?

பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். 

ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.

விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள்.

விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’

இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். 

அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!


நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். 

பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.

ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 

'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?

கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 

10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். 

ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.

ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.

எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!

Thursday, February 03, 2011

விகடனில் விஜய் பேட்டி - காமெடி கும்மி


இந்த வார ஆனந்த விகடன்ல  அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர்  இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? # கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா)

அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.

1.;முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன்,  அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்..

இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு...அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு... நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?

2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்‌ஷன் படம் ஒண்ணு

எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..


3;இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம்
உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி




4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.


இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?

5தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க..

வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?

(ஆனா அதுல ஒண்ணு வேணா உண்மை.. ஈரோட்ல அபிராமில ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு மிரட்டல் வந்தது.. ஓனர் எதுக்கு வம்புன்னு சிறுத்தையை ரிலீஸ் பண்ணீட்டு தேவி அபிராமில காவலன் போட்டுட்டார்.)

6.  ;முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கும். இப்போ  அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது...

பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..



7ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ்  பண்ணுனேன்...

படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான் ரொம்ப கஷ்டப்படறாங்க...

8.  நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட  மிகப்பெரிய இடத்துல உக்கார வெச்சிருக்காங்க இந்த ஜனங்க


இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும் போச்சுடா... அப்படின்னு புலம்பாதீங்க..

 09-பிப்ரவரி  -2011

9.யார் பேச்சையும்  கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும் கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?


10.;யாருக்கு  எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..

கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க...

நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு மிரட்டுனா அடுத்த  வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும், பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க.. அப்படின்னு...

Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmEUbc9BYTUIzUA9-rCbmSz8CVz3JT-ImaAhQYtXZLEAekwjwNlI21wGtOfMcja_nhyYDFASb3VouAaRnqz5czS5a7H5iYBlJabpC951KwfCo9DTQnLtejqTBnuLVN4bNGOUk0ucHX2Y/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.




பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpg



அடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEcmldHYOCUV5vAwedY0gcekKirP0-wj_lb1YDjdtV2jyJB5FinTEmj6hsU46IGTtmuvMTmXux9Sc8cyIMYXFS4v3b7jcHwLkG-iUy6WTGezkXh7ICSPMA_xh6pcgHXWsjiV7zhXXYn2mI/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.

Wednesday, January 05, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfaWtp6YYKUgMoIcSDTaKQqc_cm0aIF_a34-SMkAX_p2jKno8RN1x-zUuvxfDgRImLdLXyIO7fHL5jrcNm-k6K3gi5g3a-VrrPrcnoeR0lDd6yUcyUDwpmoJscx9fzjh1BZF8w5ddBn-I/s200/vikatan.jpg 
கோடம்பாக்கத்திலும் சரி,இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் வட்டத்திலும் சரி ஆனந்த விகடனில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கு கிடைக்கும் 
மரியாதையே தனி.எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டம் ஆனந்த விகடனின் பொற்காலம் எனலாம்.மற்ற இதழ்களில் 10 ஜோக்ஸ் வருவதும் ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வருவதும் ஒன்றுதான்.

அதே போல் கவிதைகள் கணையாழி இதழில் வந்தால் பெருமைதான் என்றாலும் ஆனந்த விகடனில் வந்தால் 8 லட்சம் வாசகர்களை அது சென்றடைகிறது என்பதால் அதன் வீச்சு அதிகம்.

படைப்பு அனுப்பி 7 நாட்களில் பரிசீலித்து பிரசுரம் செய்து விடுகிறார்கள் என்பது மற்ற பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில் செம ஸ்பீடு.வாரா வாரம் வியாழன் அன்று விகடன் வருகிறது என்றால் நாம் புதன் கிழமை ஒரு படைப்பை அனுப்பினால் அது பிரசுரிக்க தகுதி பெற்றால் அடுத்த வியாழன் அன்று பிரசுரம் ஆகி விடும்.

முகவரி - ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை,சென்னை 600008. மெயில் அட்ரஸ் [email protected]

1.ஜோக்ஸ் - அந்தந்த வாரத்தில் டாப்பிக்கல் மேட்டர் என்ன என்று பாருங்கள்.அதை நையாண்டி செய்து எழுதுங்கள்.அரசியல் நையாண்டிகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.டாக்டர் ராம்தாஸ்,கலைஞர், ஜெ ,கேப்டன் இவர்களது அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.(அதுவே செம காமெடியாக இருக்கும் )அதை நக்கல் அடித்து எழுதினால் போதும்.உதாரணத்துக்கு ஆ ராசா மேட்டர் பாப்புலர் ஆன வாரத்தில் ஜோக்பாட் அந்தஸ்துடன் ரூ 300 பரிசு பெற்ற  ஒரு ஜோக் 

என் பையனை ராசா மாதிரி வளர்க்கப்போறேன்..

வேணாம்ங்க.. நல்ல படியா வளருங்க..

மேட்டர் ரொம்ப சிம்ப்பிளாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்த கருத்தை நச் என சொல்லி இருப்பதையும் பாருங்கள்.தனி மனித அந்தரங்க தாக்குதல்கள் இல்லாமல் பொது வாழ்க்கை பற்றி மட்டும் எழுதுங்கள்.ஏ ஜோக்குகள்,வக்கிர எழுத்துக்கள் இவற்றை தவிர்க்கவும்.உத்வேகத்துடன் எழுத வேண்டும்.ஒரு ஜோக்கிற்கு ரூ 100 சன்மானம் தர்றாங்க.இதில் என்ன காமெடி என்றால் ஆனந்த விகடன் ரூ 6 என விற்கப்பட்ட போதும் சன்மானம் ஒரு ஜோக்கிற்கு ரூ 50 என தந்தார்கள்.இரண்டரை மடங்கு விலை ஏறிய பிறகு விலை ஏற்ற மற்றும் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ரூ 250 தர வேண்டும். ஆனால் அப்படி எல்லா, காசை கணக்கு பார்த்து எழுதினால் முன்னேற முடியாது.

நமது படைப்பு பிரசுரம் ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுத வேண்டும்.பொதுவாக ஒரு துறையில் நாம் இறங்கி வெற்றி பெற வேண்டும் எனில் அதே துறையில் வெற்றி பெற்ற மற்ற சாதனையாளர்களை கவனிக்க வேண்டும்.காப்பி அடிக்க அல்ல. இன்ஸ்பைரேஷனுக்காக. 
ஆனந்த விகடனில் ஜோக் எழுதி சாதனை படைத்தவர்கள் 3 பேர்.
1. ஹாய் மதன்.  2 படுதலம் சுகுமாரன் 3 . வி சாரதிடேச்சு

முன்ஜாக்கிரதை முத்தண்ணா,சிரிப்புத்திருடன் சிங்காரவேலு போன்ற தலைப்புகளில் மதனின் ஜோக்குகள் பக்கம் பக்கமாக வந்து ஹிட் ஆனது. இவருக்கு கார்ட்டூன் போட வரும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.ஆனால் நாம் ஜோக் மட்டும் கார்டில் எழுதி அனுப்பினால் போதும் .ஒரு கார்டுக்கு 2 ஜோக் மட்டும் எழுதவும்.எழுதி கீழே உங்கள் பெயர் ,ஊர் பெயர் எழுதவும்,பின் பக்கத்தில் அட்ரஸ் எழுதவும்.ஊரின் மெயின் போஸ்ட் ஆஃபீசில் போஸ்ட் செய்யவும்.

எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடனில் வந்த அட்டைப்பட ஜோக்கிற்காக அதன் ஆசிரியர் ஒரு நாள் சிறையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜோக்கை எழுதி புகழ் பெற்றவர் படுதலம் சுகுமாரன்,

வி சாரதி டேச்சு வார்த்தை ஜால ஜோக் எழுதுவதில் கில்லாடி.ஒரு சாம்ப்பிள்.,
நானும் ,ரஜினியும் ஒரே இலைலதான் சாப்பிட்டோம்.

நிஜமாவா? அவ்வளவு நெருக்கமா?

ம்ஹும்,அவரும் வாழை இலைலதான் சாப்பிட்டார்,நானும் வாழை இலைலதான் சாப்பிட்டேன்.

நீங்க 10 ஜோக் எழுதுனா அதை உங்க நண்பர்கள்,நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஏன்னா நாம எது எழுதுனாலும் நம்ம மனசுக்கு அது பிரமாதம் என்றுதான் தோன்றும்.மற்றவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்..

டாக்டர்கள் ஜோக்,சினிமா சம்பந்தப்பட்ட ஜோக் ஈசியா செலக்ட் ஆகும்.சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக்கண்டு நாம் பொங்கி எழுவோமே,அந்தக்கோபத்தைக்கூட ஜோக்காக மாற்றலாம். 2 பக்க கட்டுரையை விட 2 வரி ஜோக்கின் வீரியம் அதிகம்.

ஒரு பத்திரிக்கையை வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி பிடிக்கும்,ஆனால் எல்லோருக்கும் பிடித்த பகுதி ஜோக் தான்.சிந்திக்க ,எழுத எல்லாத்துக்கும் ஜோக்தான் பெஸ்ட்.

ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதி வந்தேன்..அது மக்களை போய் அதிகம் ரீச் ஆகவில்லை(ஒரு வேளை எனது சரக்கு சரி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்)பிறகுதான் என் ரூட்டை மாற்றினேன்.

ஆனந்த விகடனில் வந்த எனது முதல் ஜோக்

ஜட்ஜ் - பஸ்ல மணிபர்சை  பிக்பாக்கெட்அடிச்சியா?

கைதி - மணி பர்சை பாலு அடிச்சான்,கந்தசாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த எனது முதல் ஜோக்

என் ரத்தத்தின் ரத்தமே அப்படின்னு மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன் தலைவரே?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு.

2. கவிதை 

ஆனந்த விகடனில் கவிதை எழுதி வரவைப்பதும் ,அரசியல்வாதியை நேர்மையாக நடக்கவைப்பதும் ஒன்றுதான். மிக அரிது. ஆனால் ஆதலையூர் சூர்யகுமார்,நாவிஷ் செந்தில்குமார்,டி அய்யப்பன் போன்றவர்கள் சர்வசாதாரணமாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்க கவிதைக்கு ரூ 300 தர்றாங்க. கவிதையின் சைஸை பொருத்து ரூ 100 ,  ரூ 200 என மாறும்.

ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி கவரில் வைத்து அனுப்பவும்.காதல் கவிதைகள் எழுதுவதை விட வித்தியாசமான அனுபவங்கள், சமூக அவலங்கள்,பெண்கள் மனது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அதிகம் வருகிறது.

3. சிறுகதை - முன்பெல்லாம் விகடனில் 4 கதை வந்தது.இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு. கதையை யாரும் விரும்ப்பி படிக்கறதில்லை,பொறுமையும் இல்லை.மேம்போக்காக புரட்டுவதே  ஃபேஷன் ஆகிடுச்சு. ஏ4 ஷீட்டில் 8 பக்கம் வரும்படி எழுதினால் விகடனில் 3 பக்கம் வரும்படி அமையும். 2 மாதம் கழித்து வரும் (செலக்ட் ஆனா) . நீங்கள்  படைப்பு அனுப்பி 1 மாதத்தில் உங்களுக்கு தகவல் வந்துடும். உங்க கத செலக்ட் ஆகி இருக்கு. இந்த கதை வேறு புக்குக்கு அனுப்பலை, என் சொந்தக்கற்பனையே என உறுதி மொழிக்கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
பொதுவாக விகடனில் கட்டுரைகள் எழுத உள்ளேயே ஆள் இருக்காங்க. அதனால அதை விட்டுடுங்க. இப்போ புதுசா அலை பேசுதே என்ற பகுதியில் ட்விட்டரில் நம் மக்கள் ட்வீட்டுவதை போடறாங்க, இதில் சாதனை படைக்கும் அளவு படைப்புகள் வந்தது பரிசல்காரன் கிருஷ்ணகுமார், திருப்பூர்.இவரை எனக்கு 15 வருடங்கள் முன்பே தெரியும். மாத இதழ்களில் கவிதையில் கலக்கியவர். கே பி கிருஷ்ணகுமார் திருப்பூர் என வரும், பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் ஊஞ்சல் மாத இதழில் பின்னி எடுத்தார்.
சிலர் பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும்போது எடிட்டருக்கு கவரிங்க் லெட்டர் வைத்து அனுப்புவது உண்டு. டியர் சார் ஒரு கவிதை அனுப்பி இருக்கேன் ,தயவு செஞ்சு பிரசுரிக்கவும்  என இருக்கும் இது தேவை இல்லாதது. அதே போல் பத்திரிக்கைக்கு ஃபோன் போட்டு சார் நான் அனுப்புன மேட்டர் வந்துச்சா? செலக்ட் ஆச்சா? எனவும் கேட்க வேண்டாம் . 

தகுதி உடைய படைப்புகள் தானாக தேர்வு பெறும். ஆர்வக்கோளாறில் நம் தகுதியை இழக்கக்கூடாது.

வலைப்பூக்கள் நடத்தும் பதிவர்கள் அனைவரும் பத்திரிக்கை உலகை கலக்க வேண்டும் என்பதே என் ஆசை.ஏன் எனில் பதிவுலகம் அதிக பட்சம் 10,000 பேர் படிக்கறாங்க. அதிலும் நம்ம எழுத்தை எல்லாம் அதிக பட்சம் 2000 பேர்தான் படிக்கறாங்க. ஆனால் பத்திரிக்கை யில் எழுதினால் அது குறைந்தபட்சம் எட்டு லட்சம் மக்களை சென்றடைகிறது என்பதை மறக்க வேணாம்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

டிஸ்கி - 1. அடுத்த வாரம் என்றதும் அப்பாடா ,பிளாக் 6 நாள் லீவா?தப்பிச்சோம்டா சாமி என யாரும் மனப்பால் குடிக்கவேண்டாம் (அதென்ன மனப்பால்?மன டீ ,மன காப்பி எல்லாம் கிடையாதா?) இந்தத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் வரும் , மற்றபடி எனது மொக்கை ஜோக்குகள்  தினமும் தொடரும்

டிஸ்கி 2 - சிலர் என்னை வம்புக்கு இழுத்து பதிவு போடறாங்க,நான் கோபப்பட்டு பதிலடி கொடுப்பேன்,பதிவுலகில் அடுத்த சண்டையை ஆரம்பிப்போம் என ,அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சாரி எனக்கு சண்டை போடத்தெரியாது,மொக்கை பதிவுகளை மட்டுமே எழுத தெரியும்.எந்த எழுத்து நல்ல எழுத்து என்பதை காலம் தீர்மானிக்கும்.