Showing posts with label amirkhan. Show all posts
Showing posts with label amirkhan. Show all posts

Friday, December 23, 2016

DANGAL(HINDI) - சினிமா விமர்சனம்

 Image result for dangal movie தமிழ் சினிமாவில் ஒரு கமல்ஹாசனோ, விக்ரமோ செய்ய முடியாத சில சாதனைகளை அமீர்கான் செய்துள்ளார். என்ன தான் கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்வதில் உருமாற்றிக்கொள்வதில் கமல் ,விக்ரம் இருவரும் விற்பன்னராக இருந்தாலும் தங்கள் உழைப்புக்கேற்ற வெற்றியைப்பெறுவதில் , அனைத்துத்தரப்பு ரசிகர்களிடமும் தங்கள் படைப்பை முன்னிறுத்துவதில் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறார்கள்

 இப்படிச்சொல்வதன் சாராம்சம் அவர்கள் உழைப்பைக்குறை சொல்வதல்ல. அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில் எங்கேயோ தவறு நடக்குது. ஆனால் கலை நுணுக்கம் சார்ந்த கமர்ஷியல் படைப்பு எப்படி படைப்பது? வியாபார ரீதியான பிரம்மாண்ட வெற்றியையும் பெற்று  விமர்சகர்கள் பாராட்டையும் ஒருங்கே பெறுவது என்ற செப்பிடு வித்தையை அட்டகாசமாகக்கற்றவர் அமீர்கான் என்றால் மிகை இல்லை.


ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள் ஹிட் ஆவதில் குறிஞ்சி மலர் உதாரணங்கள் தான். லகான் ,சக் தே இந்தியா , தோனி , அஸ்வினி ,  இறுதிச்சுற்று,  சென்னை 28,28-2  வரிசையில் ...



படத்தோட கதை என்ன?ஹீரோ  ஒரு மல்யுத்த வீரர் தன் துறையில் சாதிக்க ஆசைப்படறார்.ஆனா சொந்தக்காரங்க குறுக்கீடுகளால் அது முடியல. தன்னால சாதிக்க முடியாததை தன் வாரிசுகள் மூலமாவது சாதிப்போம்னு நினைக்கறார்.அவருக்குப்பிறந்த 4 பேரும் பெண்கள்.

 அவர் மூடு அவுட் ஆகி இருக்கார். ஒரு கட்டத்தில் நால்வரில் இருவர்  தன் லட்சியத்துக்கு உதவுவாங்க என எதேச்சையாக கண்டுபிடிக்கிறார்.

 அப்பறம் என்ன? ஒரே ட்ரெயினிங்  ட்ரெயினிங்  தான். அவரோட லட்சியம் ஈடேறியதா? என்பது க்ளைமாக்ஸ்

 ஹரியானா வைச்சேர்ந்த மல்யுத்த ப்ரியர்  மாவீர சிங் போகத்  வாழ்வில் நிக்ழ்ந்த உண்மை சம்பவம் தான் படம்


பொதுவாக அனைத்துத்தரப்பினருக்கும் நன்கு தெரிந்த கிரிக்கெட் , கபடி , ரன்னிங் போன்ற விளையாட்டுகளை பின்புலமாக கொண்டு படம் எடுத்து வெற்றி பெறுவது எளிது.ஆனால்; பெரும்பாலோனோர் அதிகம் அறியாத மல்யுத்தம் பின்புலம கொண்டு திரைக்கதை அமைத்து ரசிக்க வைப்பது பிரம்மப்பிரயத்தனம். அசால்ட்டாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி


ஹீரோவா அமீர்கான், ஓப்பனிங் சீனில் ஜிம் பாடியை காட்டும்போது ஆரம்பிக்கும் கை தட்டல் க்ளைமாக்ஸ் வரை அப்பப்ப ஒலிச்சுக்கிட்டே இருக்கு. சிக்ஸ் பேக் சிங்கமா , நடுத்தர வயசு தொப்பை உள்ள ஆளா என கெட்டப் சேஞ்ச் அற்புதம்.

 பொதுவா ஒரு ஹீரோ தயாரிப்பாளரா ஆனா முழுக்கதையும் தன்னைச்சுற்றியே இருக்கனும் என எதிர்பார்ப்பாங்க ( உதா - கமல் , விஜயகாந்த்)ஆனா அமீர்கான் திரைக்கதையின் தேவை கருதி பல இடங்களில் அண்டர் ப்ளே பண்ணி இருக்கார்

அவருக்கு ஜோடியாக வரும் சாக்‌ஷி தன்வார் கனகச்சிதம். வசனங்கள் கம்மி,ஆனால் ஆக்டிங் ஸ்கோப் அதிகம்

 மகள்களாக வரும் சிறுமிகள் 2 பேர் பட்டையைக்கிளப்பி இருக்காங்க . பாய்ஸ் கட்டிங்கில் ஸ்கூல் போகும்போது கூனிக்குறுகுவது , பிராக்டீசில்  சக மாணவனை கலாய்ப்பது வாவ்.

இசை , பாடல்கள் , ஒளிப்பதிவு  எல்லாமே அபாரம் என்றாலும்  பேக் போன் ஆஃப் த ஃபிலிம் ஸ்டண்ட் மாஸ்டரின் அதீத உழைப்பு. மல்யுத்தம் பற்றி பக்காவாக அறிந்து அதன் ரூல்ஸ் & ரெக்குலேஷன் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணி படம் நெடுக அவர் காட்டி இருக்கும் டெடிகேஷன் அபாரம்

 திரைக்கதையில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் வருது,ஆனா அபூர்வமான குறிஞ்சி மலரை ரசிக்கும்போது அதன் குறைகளைப்பற்றி பேச நேரம் இருக்காது

வாவ் இயக்கம் 


1  கீதா  தன் கூந்தலை வளர்த்து , நெயில் பாலீஷ் போடுவது , சைட் அடிப்பது என் லேசாக பாதை விலகும்போது அவர் சகோதரி பார்க்கும் துல்லியப்பார்வை அற்புதம்


2  டெலிஃபோனில் தன் ஈகோவை விட்டு மகள் அப்பாவிடம் பேசும் உரையாடல் , வெறும் விசும்பலாக மட்டுமே ஒலிப்பது


3  தன் மகள்கள் 2 பசங்களை அடிச்ட்டு வந்துட்டாங்க என்பதை அறிந்து தன் லட்சியம் நிறைவேற பாதை தெரியுது என்பதை ஹீரோ உணரும் இடம், அப்போது ஒலிக்கும் பிஜிஎம்


4  பின் பாதி திரைக்கதையில் பெரும்பாலும் மல்யுத்தக்காட்சிகளே என்றாலும் போர் அடிக்காமல் எடுத்த விதம்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

அமீர்கான் ன் ஹிந்திப்படம் பலராலும் சிலாகிக்கப்படுகிறது.மகிழ்ச்சி.ஆனால் அது கிட்டத்தட்ட மாதவன் நடித்த "இறுதிச்சுற்று" கதை தானாம்

2 கதைத்தேர்வில் ,ஈடுபாட்டில் .உழைப்பில் அமீர்கான் =கமல் + விக்ரம்

3 உடல் பலத்துக்குத்தேவையான புரோட்டீன் சத்து சைவத்தை விட அசைவத்தில்தான் அதிகம்னு ஒரு தவறான கருத்து மறைமுகமா சொல்லப்படுது (HINDI)

4 கனகச்சிதமான திரைக்கதை ,பொருத்தமான பின்னணி இசை ,விசிலடிக்க வைக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு ,ஒருங்கிணைக்கும் இயக்கம் அபாரம் (hindi )

5 கமர்ஷியல் கலந்த கலைப்படங்கள்
1 உதிரிப்பூக்கள்
2 மகாநதி
4 DANGAL
3, MS DHONI



நச் டயலாக்ஸ்

1 வாழ்க்கைல நீ ஜெயிக்கனும்னா எப்பவும் இயங்கிக்கொண்டே இரு.தேங்கி நிற்காதே! (HINDI)

2 தயாரிப்பு நடவடிக்கைகளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஈடுபட்டால் ஆண் குழந்தைக்கு உத்தரவாதம் என்பது ஐதீகம் ( HINDI )

3 நம்மால எதை சாதிக்க முடியலையோ அதை நம் வாரிசு மூலம் சாதிக்க நினைப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம் (hindi)

4 யானையைப்போல் பலசாலியாக இருப்பதை.விட புலியைப்போல் ,சிறுத்தையைப்போல் வேகம் உடையவனாக ,நுணுக்கங்கள் கற்றவனாக ஆகு (HINDI)

5 புலியிடம் போய் "நீ யானையைப்போல் பாய்ந்து தாக்கு"ன்னு சொல்வது போல் இருக்கு உங்க பயிற்சி (HINDI)

6 ஒலிம்பிக்ல ஜெயிக்க , பதக்கம் வாங்க ஆளுங்க ரெடியா இருக்காங்க,ஆனா சப்போர்ட்டுக்குதான் ஆள் இல்ல #(HINDI)




சி.பி கமெண்ட்-DANGAL(HINDI)-ரிஸ்க் ஆன கதை.ரஸ்க் ஆன திரைக்கதை.பிரிஸ்க் ஆன இயக்கம்.வாட் எ க்ளைமாக்ஸ் .ரேட்டிங் - 4 / 5


Wednesday, December 05, 2012

Talaash - சினிமா விமர்சனம்

http://wallpaperpassion.com/upload_puzzle_thumb/27015/talaash-movie-front-back-cover-wallpaper.jpgமடோனா நடித்து அட்டர் ஃபிளாப் ஆன த பாடி ஆஃப் எவிடென்ஸ் படத்தில் இருந்து கொஞ்சம் , இன்னொரு ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் , ஒரு ஒரிஜினல் டிராக் என 3 கதைகளை ஒரு படம் ஆக்கி இருக்கிறார்கள்.மும்பையில் இது செம ஓப்பனிங்க் , வசூல் கொட்டுதாம், ஆனா படம் ஸ்லோ..


ஓப்பனிங்க்ல ஒரு கார் வேகமாக நிலை தடுமாறி வந்து கடல்ல விழுது. காருக்குள்ளே ஒரு ஆள் செத்துக்கிடக்கார்.இன்வெஸ்டிகேஷன் நடக்குது, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். இது ஒரு டிராக் இதுதான் மடோனா பட கதை உல்டா .


 இன்னொரு டிராக் , ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஸ் பேக். அவரோட பையன் ஒரு விபத்துல ஏரில தண்ணீர்ல மூழ்கி இறந்துடறான். அதுக்கு தான் தான் காரணம்னு ஒரு குற்ற உணர்ச்சி ஹீரோவுக்கு , அடிக்கடி அதை நினைச்சுப்பார்த்து உருகுதே மருகுதே ஒரே நினைப்பாலே அப்டினு அல்லாடறார். இது வேற ஒரு ஹாலிவுட் படத்துல இருந்து எடுத்த டிராக் ..



3 வது டிராக் இந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உதவி செய்யும் கில்மா லேடி , அவருக்கும் , இவருக்கும் ஒரு மானசீகக்காதல். சம்சாரத்துக்கு சந்தேகம் , ஊடல் , சமாளிஃபிகேஷன்  என ஒரு டைப்பா போகுது. படத்துல க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு 


ஹீரோ அமீர்கானுக்கு போலீஸ் கேரக்டர் நல்லாப்பொருந்தி இருக்கு. ஆனா அவர் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரியோ , குருதிப்புனல் கமல் மாதிரியோ , மூன்று முகம் ரஜினி மாதிரியோ கம்பீரமா , ஸ்டைலிஷா பண்ண வாய்ப்பு இருந்தும் அண்டர் ப்ளே ஆக்ட் பண்ணி இருக்கார். ஏன்னு தெரியலை.. அவார்டு வாங்க ஐடியாவோ  என்னவோ.. அவர் தீவிர ரசிகர்க:ளுக்கு மட்டுமே பிடிக்கும்.. 



ஹீரோயின் ராணி முகர்ஜி . ஹீரோவுக்கு மனைவியா வர்றார். மேக்கப் அதிகம் இல்லாத முகம்.. பல காட்சிகளில் அமைதியாகவும் , சில காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடிச்சிருக்கார்.. 


 கில்மா லேடியாக கிட்டத்தட்ட ராணி முகர்ஜியை ஓவர் டேக்கும் விதம் கலக்கி இருப்பவர் கரீனா கபூர் . டிக்கெட்டாக வருகிறார். இவரது கொஞ்சல் பேச்சும் , மோகப்பார்வையும் அருமை.. ( இதைக்கூடப்பாராட்டலைன்னா எதைத்தான் பாராட்டுவது ? )


http://www.talaash2012movie.in/wp-content/uploads/2012/02/Talaash-7.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. ஒரு படத்தில் இருந்து உருவினால் கண்டு பிடிச்சு கழுவிக்கழுவி ஊத்திடுவாங்க என்பதால்  2 ஹாலிவுட் படங்களில் இருந்து உருவி அந்த இரண்டுடன் ஒரிஜினல் கதையை சேர்த்து 3 டிராக்கையும் ராஜேஷ் குமாரின் நாவல் போல் சாமார்த்திய,மாக இணைத்தது


2.  ராணி முகர்ஜியை குடும்பப்பாங்காகவும் , கரீனாவை கில்மா லேடியாகவும் கேரக்டர் அமைத்து ஏரியாவை ஒதுக்கி பேலன்ஸ் செய்தது



3. அமீர்கானின் சொந்தபப்டம் என்பதற்காக அவருக்கு தேவையற்ற பில்டப் காட்சிகள் ஏதும் வைக்காதது



http://latestupdates.in/bollywood/wp-content/uploads/2012/11/Hona-Hai-Kya-song-lyrics-talash-movie-poster-hd-wallpapers-download-free.jpg



  மனம் கவர்ந்த வசனங்கள்



1. கில்மா லேடி - உங்களைப்பார்த்தா ஆறுதல் தேவைப்படும் ஆள் மாதிரி தோணுது 


 ஹீரோ -  ஐ ஆம் எ போலீஸ் இன்ஸ்பெக்டர்



 கி லே - ஏன்? போலீஸ்க்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா? 



2. வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏமாற்றங்கள் , தோல்விகள் , இழப்புகள் தாங்க முடியாதவை , ஆனா நாம வாழ்ந்துதான் ஆகனும் , எல்லாத்தையும் சகிச்சுக்கனும். மனப்பக்குவம் வேணும்



http://media.glamsham.com/download/wallpaper/movies/images/t/talaash-the-answer-lies-within-03-12x9.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. இந்தப்பட ஹீரோ கேரக்டருக்கும் , பிரபுதேவாவின் ரியல் லைஃப் கேரக்டருக்கும் பொதுவா ஒரு கேள்வி கேட்கறேன். உங்க வாழ்க்கைல உங்க குழந்தை இறந்த சோகம் தாங்காம இருந்தப்ப ஏற்பட்ட ஆறுதல் தான்  புது லேடியுடன் ஆன பழக்கம்னு ஆர்கியூ பண்றீங்களே.. இதே டய்லாக்கை உங்க வாழ்க்கைத்துணைவி சொன்னா ஏத்துக்குவீங்களா? அதே சோகம் தானே அவங்களுக்கும் ? என்னங்க.. நம்ம குழந்தை இறந்த  துக்கம் தாளலை.. அந்த சோகத்தைப்பகிர வீட்டுதோட்டக்காரன் தோள் கிடைச்சுது சாஞ்சுக்கிட்டேன், சாரின்னா எத்துக்குவீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம் உங்க மனைவ்விக்கு ஒரு நியாயமா?



2. ஒரு சீன்ல வீட்டு  ஹால் ல ஒரு சிம் கார்டு கீழே கிடக்கு . காலை சாய்ச்சு சாய்ச்சு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளி ( வில்லன் ) அப்படியே அந்த சிம்மை கடந்து போகையில் போகிற போக்கில் சிம்மை கால் விரலில் மெட்டி சென்று விடுகிறான். இது சாத்திய்மே இல்லை.. ஒருவர் சிம் கார்டின் மீது நின்றுகொண்டே 2 நிமிடங்களில் அப்படி செய்ய முடியுமே தவிர ஆன் த வே நடக்கும்போதே எடுக்கவே முடியாது..அதுவும் 2 பேர் அவரை பார்த்துக்கொண்டிருக்கும்போது , பிராக்டிகலாக நானே ட்ரை பண்ணிட்டேன் 



3. அதே போல் அப்படி வெளீயே போன ஆள் அப்பவே ஒளிஞ்சிருந்து தம்பதிகள் என்ன பேசிக்கறாங்கன்னு கதவு இடுக்கில் ஒளிஞ்சிருந்து பார்க்க்றான். இதுக்கும் வாய்ப்பே இல்லை.. அப்போதான் அவன் போறான்.. தம்பதிகள் கவனிக்காம அப்படி கொஞ்சிட்டு இருப்பாங்களா? 



4. சென்னை, பெங்களூர் , மும்பை போன்ற சிட்டிகளில் அபார்ட்மெண்ட்களில் யார் காலிங்க் பெல் அடிச்சாலும் யாரு>? என கேட்டு கன்ஃபர்,ம் பண்ணிட்டுதான் கதவை திறப்பாங்க. ஆனா இந்தப்படத்துல யார் காலிங்க் பெல் அடிச்சாலும் அதிமுக கட்சி தலைமை மாதிரி டக் டக்னு கதவு திறந்துக்குது. என்னமோ நாஞ்சில் சம்பத்தோ , கேப்டனோ கட்சில சேர வந்ததை வரவேற்பது போல் காட்றாங்க, முடியல


http://mimg.sulekha.com/hindi/talaash/stills/talaash-cinema-035.jpg


 5.ஏற்காடு , கிஷ்கிந்தா , போன்ற தமிழ்நாட்டு நீர் நிலைகளில் போட்டிங்க் போறப்ப சேஃப்டி பெல்ட் அல்லது மிதவை சாதனங்களை இடுப்புல கட்டி விடுவாங்க. மும்பை தமிழ் நாட்டை விட பின் தங்கிய கிராமமா?



6. ஹீரோ ஆஃபீஸ் டென்ஷன்ல கண்ணை மூடி படுத்திருக்காரு . ஹீரோயின் அதாவது ஹீரோவின் மனைவி அவர் பக்கத்துல உக்காந்திருக்காங்க. பசங்க
 ஏரிக்கரைக்கு ஓடும்போது ஹீரோ கவனிக்கலை , ஓக்கே ஹீரோயின்? பொதுவா ஒரு அம்மாவுக்கு கண்கள் , புலன்கள் எல்லாம் குழந்தையை சுத்தித்தானே இருக்கும்? இருக்கனும? அந்த விபத்துக்காட்சி படமாக்கப்பட்ட விதம் சரி இல்லை



7. போலீஸ் ஆஃபீசர்னா கெத்து வேணும் , ஹீரோ வித்தியாசமா பண்றதா  நினைச்சுட்டு எல்லா சீனிலும் கையை கட்டிக்கிட்டு  அடக்கமா வர்றார்? அவர் என்ன ஏ வி எம் சரவனனா? கல்யாண மாலை நடராஜனா? ஏன் பம்மனும்?


8. ஹீரோ கில்மா லேடியோட ஹோட்டல் ரூம் போகலாம்னு திட்டம் போட்டுட்டாரு , திடீர் முடிவல்ல . அப்புறம் ஏன் யூனிஃபார்மல போகனும்? எதிர்கள் யாராவது பார்த்து மாட்டி விட்டுட மாட்டாங்களா பொதுவா போலீஸ் ஆஃபீசர்ங்க தப்பு பண்றப்போ  சிவில் டிரஸ்ல தான் இருப்பாங்க.. இப்படி பட்ட வர்த்தமா யூனிஃபார்ம்ல இருக்க மாட்டாங்க..


9. க்ளைமாக்ஸ் காட்சி அப்பட்டமான ஆணாதிக்கம். ஹீரோவுக்கு அந்த கில்மா லேடி கிடைக்கலை. சோகமா உக்காந்திருக்காரு . மனைவி வந்து ஆறுதல் படுத்தறாங்க, கோபத்தை , ஊடலை விட்டுட்டு சேர்ந்துக்கறாங்க. ஏய்யா அந்த லேடி கிடைச்சா அவ கூட போய் இருப்பே? நான் நடுத்தெருவுல நிக்கனுமா? அப்டி னு கேள்வி கேட்காம  போய் கட்டிக்கறா.. !


http://www.bollywoodpinup.com/data/media/4/kareena-kapoor-hot-pictures-3.jpg




சி.பி கமெண்ட் - அமீர்கான் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றபடி புதிய முயற்சி என்று சொல்லி விட முடியாது . படம் செம ஸ்லோ . ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்.பட உல்டா தகவல் - 
3rd track is from one Harrison Ford movie. drowned or something!


டிஸ்கி - இந்தப்படத்தின் மூன்று கதைகளில் ஒரு கதையின் மூலம்


மடோனாவின் பாடி ஆஃப் எவிடென்ஸ் விமர்சனம்

http://www.adrasaka.com/2012/10/body-of-evidence-18.html



http://1.bp.blogspot.com/-WagboiykadY/T1H8EGiU4JI/AAAAAAAAC0U/hBw3AYvbSuA/s1600/rani-mukherjee-hot-93d83.jpg