Showing posts with label akshay kumaar. Show all posts
Showing posts with label akshay kumaar. Show all posts

Friday, March 22, 2019

KESARI (HINDI - சினிமா விமர்சனம்

Image result for kesari movieஇது ஒரு  போர் முனை கதை,. வழக்கமான கதைகளைக்கண்ட ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட கதைக்களம், இது ஒரு உண்மைச்சம்பவம்.


1897 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்துகுஷ் மலை அருகே  சரஹர்ஹி போர் சம்பவங்களைத்தொகுத்து அளித்து இருக்கும் படம் தான் கேசரி


ஓப்பனிங் சீனே எம் ஜி ஆர் ஃபார்முலா.கணவனோடு வாழப்பிடிக்காத ஒரு முஸ்லீம் பெண், அவரை விட்டுப்பிரிந்து போனபோது ஒரு கும்பல் அவரைத்துரத்தி வருது.கணவனும் அந்த கும்பல்ல. துரத்துனவங்க பிடியில் மாட்டிக்கிட்ட அந்தப்பெண் கிட்டே “ கடைசி வாய்ப்பு, அவன் கூட வாழ்றியா? இல்லையா? இல்லைங்குது. உடனே கணவன் கையால் வாளால் வெட்டப்பட இருக்கும் தருணம்  நாயகன் எண்ட்ரி


ஹீரோ எண்ட்ரி சும்மா பட்டாசா இருந்த படங்களில் முக்கியமானவை கேப்டன் பிரபாகரன் , ஊமை விழிகள் , வெற்றி விழா . அதே மாதிரி இதிலும் செம எண்ட்ரி

ஹீரோவா அக்சய் குமார் அபாரமான நடிப்பு . 21 சீக்கிய வீரர்களுக்கு தலைமை தாங்கி போரை வழி நடத்தும் பாத்திரம். இந்த 21 வீரர்களைக்கொண்டு 10,000  படை வீரர்களை அழித்தார்கள் என்றால் யாரும் நமப மாட்டார்கள்< ஆனால் அதுதான் நடந்தது. நம்புற மாதிரி அதை திரைக்கதை ஆக்கியதில் இயக்குநரின் வெற்றி

இதில் காமெடி  டிராக் கிடையாது, நாயகியின் ஜெனீலியாத்தனங்கள் , பிக் பாஸ் ஜூக்லித்தனங்கள் கிடையாது, மசாலா கமர்ஷியல் ஐயிட்டங்கள் ஏதும் இல்லை., ஆனால் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் டெம்ப்போ குறையாமல்  திரைக்கதை பயணிக்கிறது


Image result for kesari movie


நச் டயலாக்ஸ்

1  உன் உயர் அதிகாரியை விட நீ சிறந்தவன் என்ற எண்ணம் உன் மனதில் இருந்தால் நீ நல்ல அடிமை ஆக முடியாது (hindi)


2 முகலாயர்களுக்கு நாம அடிமையா இருந்தோம்,இப்போ ஆங்கிலேயர்களுக்கு.நம்மை நாம் ஆள்வது எப்போது? (hindi)


3 இத்தனை நாளா என்னை ஒரு படை வீரன்னு நினைச்ட்டு இருந்தேன்.இப்பதான் உயர் அதிகாரிக்கு எந்நாளும் நாம் அடிமை என்பதை உணர்ந்தேன் (hindi)


4 நீ என் அருகில் இருக்கும்போது மட்டும் "நேர் கொண்ட பார்வை" பார்க்க முடிவதில்லை,அது ஏன் பெண்ணே !? (hindi)


5 ஒரு போர்வீரன் ட்யூட்டி டைம் ல யூனிபார்ம்ல தான் இருக்கனும். போர் நடக்குதோ ,இல்லையோ அது இரண்டாம் பட்சம் (hindi)


6 படை வீரர்கள் பட்டினியா இருக்கும்போது படைத்தளபதி சாப்பிட முடியாது (hindi)


7 சமூக சேவைங்கறது மனமுவந்து தானா செய்யறது.பலவந்தப்படுத்தி ஒருவரை சேவை செய்ய வைக்கக்கூடாது,முடியாது (hindi)


8 எப்படியும் நீ ஜெயிக்க முடியாது,சரணடைஞ்சுட்டா உயிராவது மிஞ்சும்


போராடறதுன்னா இறுதி வரை போராடனும்.இறுதி மூச்சு இருக்கும் வரை போராடனும்,அதுதான் போர் வீரனுக்கு அழகு (hindi)



சபாஷ் டைரக்டர்

1  ஒரு படை வீரன் தப்பு பண்றான், அவனுக்கு அசைவ உணவு  2 நாட்கள் கட்னு தண்டனை. உடனே மற்ற வீரர்கள் நாங்களும் சாப்பிட மாட்டோம் என அடம் பிடிக்க படைத்தளபதியும் சாப்பிடாமல் இருப்பது  உருக்கமான காட்சி


2   ஆங்கிலேயர்களை எதிர்த்து எழுதபப்ட்ட வசனங்கள்  அக்மார்க் புரட்சி ரகம்

3  படைவீரர்களாக வரும் அனைவரின் நடிப்பும் அருமை

4   திரைக்கதையில்  75% போர்க்காட்சிகளே என்றாலும் போர் அடிக்கவில்லை என்பது ஆச்சரியம்




லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  நம்ம மூன்றாம் கலைஞர் சுமதி என்ற் இயற்பெயர் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியனை அழகி என பாராட்டி ஓட்டுக்கேட்டது எப்படி தேவை இல்லாத ஆணி என அவங்க கட்சிக்காரர்க்ளாலேயே விமர்சிக்கப்படுதோ அது மாதிரி படத்தில் அந்த  நாயகி வரும் காட்சிகள்  தேவை இல்லாத தாவணி. போர்க்காட்சிகள் ஆக்ரமித்து இருப்பதால் ஒரு ரிலாக்ஸ்க்கு லவ் சீன் இருக்கட்டும் என இயக்குநர் நினைத்து இருக்கக்கூடும், ஆனால் ராங்க் மூவ்


2 இந்தப்படத்துக்கு 8 இசை அமைப்பாளர்கள்., அஷ்டமத்துல சனி. இளையராஜாவா இருந்தா ஒத்தை ஆளு ஆனா துவம்சம் பண்ணி இருப்பாரு. படத்தில் பல +களுக்கு நடுவே பிஜிஎம்  அந்த அளவு பிரமாதம் இல்லை


3   திருநங்கை  மாதிரி தோற்றத்தில் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது எதுக்கு? மாற்றுத்திறனாளிகள், திருநந்கைகள் இவர்களை வில்லன்களாக காட்டாமல் இருப்பது சமூகப்பொறுப்புணர்வு


4   அந்த  வில்லன் கடும் வெய்யிலில்  பாலைவனத்தில்  போர் புரியும்போது அவருக்கு மட்டும் க்ளோசப் காட்சியில் ஓவர் மேக்கப் துருத்திக்கொண்டு தெரியுது. போர்க்களத்தில்  பவுடர் அடிக்க எல்லாம் டைம் இருக்கா?



சி.பி கமெண்ட் -kesari ( hindi) முழுக்க முழுக்க போர் முனையில் திரைக்கதை பயணிக்கிறது.ஏ சென்ட்டர் பிலிம்.வசனம் ,ஒளிப்பதிவு,நடிப்பு அருமை.பிஜிஎம் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.அக்சய்குமாருக்கு இது (நிஜமான) 300 கோடி கலெக்சன் படமாக அமையும், ரேட்டிங் 3 / 5


கேரளா கோட்டயம் தன்யா வில் படம் பார்த்தேன். மொத்தம் 8 பேர்தான் ஆடியன்ஸ். டோட்டல் கெபாசிட்டி 468 சீட்ஸ். பாவம் எப்படி கட்டுபடி ஆகுதோ, இது ல ஏசி வேற