Showing posts with label ZINDAGI IN SHORT (HINDI) (2020) - வெப் சீரிஸ் விமர்சனம் @ நெட் ஃபிளிக்ஸ். Show all posts
Showing posts with label ZINDAGI IN SHORT (HINDI) (2020) - வெப் சீரிஸ் விமர்சனம் @ நெட் ஃபிளிக்ஸ். Show all posts

Thursday, September 22, 2022

ZINDAGI IN SHORT (HINDI) (2020) - வெப் சீரிஸ் விமர்சனம் @ நெட் ஃபிளிக்ஸ்


  ஒன்றுக்கொன்று  சம்பந்தம் இல்லாத  7  குறும்படங்களின்  தொகுப்பு  இது . ஒவ்வொண்ணும்  சராசரியா 16  நிமிடங்கள்  டூ 17  நிமிடங்கள்  தான்

Spoiler alert

1  பின்னி (17) - மேரேஜ்  ஆன  90% பெண்களின்  முக்கியமான  பிரச்சனை  அல்லது  அவங்க  ஆதங்கம்  என்னன்னா  அவரவர்  கணவர்  மனைவியோட  பிறந்த நாள் , வெட்டிங்  டே    இதெல்லம்  ஞாபகம்  வெச்சுக்கறதில்லை. இதை  கவிதையா  உணர்த்தும்  கதை தான்  இது . 


 ரொம்ப  சிம்ப்பிள்  நேரேஷன்.  மனைவி  காலைல  இருந்து  சமையல்  வேலைல  ஈடுபடறா. புருசன்  காரன்  காலை  எந்திரிச்சு  சாப்ட்டதும்  அரக்க  பறக்க  அஃபீஸ்  போறான். அவனுக்கு  மனைவி  பர்த்டே  நினைவு  வர்ல . மாலை  வீட்டுக்கு  வந்ததும்  நமக்கு  நாமே  திட்டப்படி  மனைவி அவளுக்கு  அவளே  ஹேப்பி   பர்த்டே  கொண்டாடிக்கறா. கணவன்  குற்ற உணர்ச்சில விழிக்கிறான்


 இதுக்கு  என்  கருத்து  என்னான்னா  பொதுவா ஆண்களுக்கு  அடுத்தவன்  சம்சாரம் , காதலி  ஆஃபீஸ்  ஸ்டெனோ , ரிசபஷனிஸ்ட்   பர்த்டே  திரட்டி  டே   எல்லாமே  ஞாபகம்  இருக்கும் , தாலி  கட்டுன  சொந்த  சம்சாரம்னா  ஒரு  அசால்ட் தான்


 மூணே  கேரக்டர்கள் . மனைவியா  பணிப்பெண்னா  கணவனா  நடிச்ச  மூணு  பேரும்  குட்  ஆக்டிங் .  மார்க்  40 /100


2  ஸ்லீப்பிங் பார்ட்னர் (22) - புருசன்  பொண்டாட்டி  ரெண்டு  பேரும்  ஒரு  வீட்ல  இருக்காங்க. புருசன்  பொண்டட்டியை  மதிப்பதில்லை  , அவள்: உணர்வுகளை   தெரிந்து  கொள்வதில்லை . சுருக்க மா  சொல்லனும்னா  இந்திய  தம்பதிகள் 75%  பேர்  எப்படி  இருக்காங்களோ  அப்படி  இருக்காங்க 


 ஒரு  நாள்  ஹீரோயின்  வீட்டுக்கு அவனோட முன்னாள்  நண்பன்  அவனோட மேரேஜ்  இன்விடேசன்  தர  வர்றான் .  அவனுக்கு  டீ  போட நாயகி  கிச்சன்  ரூம்  போறா . சமையல்  அறைக்கு  வந்தவன்  அதை  மையல்  அறையா  மாத்தறான்


இது  தொடர்கதையா    டெய்லி  நடக்குது.


ஒரு  நாள்  கள்ளக்காதலன்  நாயகிக்கு  அவங்க  2 பேரும்  நெருக்கமா  இருந்த  வீடியோவை  அனுப்பறான். நாயகி  செம  காண்ட்  ஆகறா. எதுக்கு  இதை  வீடியோ  எடுத்தே? உடனே  அதை  அழி  அப்டிங்கறா .சும்மா  ஒரு  ஞாபகார்த்தத்துக்குதான் ., என்  நினைவு  வரும்போதெல்லாம்  அதைப்பாருங்கறான் .

 கள்ளக்காதலன்  பெரிய  அரசியல்வாதியின்  மகன் . 


தன்னை  மதிக்காத  புருசன்  ,  தன்னை  இக்கட்டில்  மாட்டி  விட்ட  கள்ள்க்காதலன்  ருவரையும்  அசால்ட்டா  எப்படி  பழி  வாங்கறா  நாயகி  என்பதே  க்ளைமாக்ஸ்  


 இதுல  லைட்டா  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கு   , மார்க் 50 /100


3  சன்னி  சைடு  ஊபர் (18)-  டைட்டிலைப்பார்த்தா  ஏதோ  ரயில்வே  ரிசர்வேஷன்  கோச்  பொசிசன்  மாதிரி  இருக்கு 

 ஹீரோயின்  ஒரு  டாக்டர் . ஒரு  நாள்  அவ  டபுள்  ட்யூட்டி  பார்க்கறா . கேன்சர்  பேஷண்ட்  முதல்  எல்லா  வகையான  பேசண்ட்டையும்  டீல்  பண்றா

  எப்படா   ட்யூட்டி  முடியும்  எப்படா  ரிலாக்ஸ்  ஆவோம்னு  நினைக்கறா


  ட்யூட்டி  முடிஞ்சதும்  முதல்  வேலையா  பாய்  ஃபிரண்டை  மிட்  ப்ண்றா


  இதுவரை  வந்த  தத்துவ  வசனங்களை  எல்லாம்  கேட்டு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டா   ஹீரோயினுக்கு   ஆக்சிடண்ட்  நடக்கப்போகுதுனு  யூகிச்சேன்  ஆனா...


 ரசித்த  வசனங்கள் 


1    வாழ்க்கை  எதிர்பாராத  திருப்பங்களைக்கொண்டது . எப்போ  நமக்கு  டர்னிங்  பய்ண்ட்  கிடைக்கும்  அப்டினு  நாம  எதிர்பார்க்க  முடியாது 


2  என்னோட      4 வது  வெட்டிங்  டேவும்  உன்  கூட தான்  கொண்டாட்றேன்னு  நினைச்சா  வருத்தமா  இருக்கு 


 இதே  ஜோக்கை 4  வருசமா  சொல்லிட்டு  இருக்கே 


  மார்க் 45 / 100


4 நானோ சோ  போஃபியா (16)- ஒரு  அபார்ட்மெண்ட்ல  ஒரு  வயசான  லேடி. ஒரே  ஒரு  வயசு  அச்சுன்னா  அது  பாப்பாதானே?னு  கடிக்கக்கூடாது. லேடி  தனியா  இருக்கும்போது  ஒரு  திருட்ன  வந்துடறான். பீரோல  இருக்கற  நகை  ப்ணம்  எல்லாம்  எடுங்கறான்


 லேடி  அவன்  சொன்னதெல்லாம்  செய்யறா. அவன்  ஏமாந்த  தருணத்துல  அவனை  ரூம்ல  லாக்  பண்ணி  வெளீல  வந்து  அய்யொ  திருடன்  திருடன்  போலீஸ்க்கு  கால்  ப்ண்ணுங்கனு  கூப்பாடு  போட்றா

 ஆனா  யாரும்  கண்டுக்கலை. நமக்கு  ஒரு  ஷாக் 


 அப்போதான்  ஒருத்தி  சொல்றா.. பாட்டி   கடந்த  6  மாசத்துக்கு  முன்  உங்க  வீட்ல  வேலை  செஞ்சுட்டு  இருந்தவன்  கொள்ளை  அடிச்ட்டுப்போய்ட்டான்  அதுல  இருந்து  மன  ஃநிலை  பாதிக்கப்பட்டு  டெய்லி  இபடிதான்  கத்திட்டு இருக்கீங்க  அப்டீங்கறாங்க 

  அடுத்து  ஒரே  ஒரு  நிமிசம்  தான்  க்ளைமாக்ஸ்

மார்க் 44 /100


சாஜூ  கே  தஹி  பலீ- (16) ஓப்பனிங்ல  அம்மாவும்  மகளும்  பேசிக்கறாங்க  அப்போ  மக  சொல்றா   நான்  ஒரு  சீக்கியப்பையன்  அல்லது  முஸ்லீம்  பையனைத்தான்  மேரேஜ்  பண்ணிக்குவேன்


ஏதோ  ஒரு  டேட்டிங்  ஆப்  மூலமா  ஒரு  சீக்கியப்பையன்  சிக்கறான் ரெண்டு  பேரும்   சேட்  பண்ணிக்கறாங்க . குறிப்பிட்ட  ஒரு  இட்த்துல  மீட்  பண்ணிக்கலாம்னு  பிளான்


 பிறகு  நடப்பதுதான்  க்ளைமாக்ஸ்  . டைட்டில்  மீனிங்  நம்ம  ஊர்ல  மினி  சோலாபூரி  தட்டுல  வெச்சு  சாஸ்  ஊத்தி  சாப்பிடற  மாதிரி  லாஹூர்ல  தயிர்  ஊற்றி  சாப்பிடுவாங்க  அந்தகக்டைல  தான்  மீட்ட்ப்  நடக்குது 


மார்க்  25 /100


தப்பட் (17)  அக்காவும்  தம்பியும்  ஸ்கூலுக்குப்போறாங்க  வர்றாங்க  இதை  காட்டவே  10  நிமிசம்  ஆகிடுது . அவ்ளோ  ஸ்லோமோஷன்  ஷாட்


 தம்பி  கிட்டே  4  ப்ச்ங்க  வந்து  அவனுக்குப்பிடிச்சமான  காமிக்ஸ்  புக்  தர்றாங்க   வேற  எதுக்கு ? அவங்க  2  நாட்களில்  வர  இருக்கும்  காதலர்  தினத்தன்னைக்கு  அக்காவுக்கு  லவ்  லெட்டர்  தர  ரெடி  பண்றாங்க 


  தம்பிக்காரன்  அக்காவுக்கு  எப்படி  பளார்  கொடுப்பது?னு  ட்ரெய்னிங்  தர்றான். அதுக்குப்பிஜ்ன்  க்ளைமாக்ஸ் 


  ஏம்ப்பா  இது  நெட்  ஃபிளிக்ஸா? அம்புலிமாமா , ர்த்னபாலா , பாலமித்ரா  கம்பெனியா?   எப்பேர்ப்பட்ட  படம்  எல்லாம்  ஓட்னீங்க .? இப்படி  குழந்தைங்க  ஸ்கூல்ல  காட்ற  பட்த்தை .... 


 மார்க் 25 / 100


7   ஸ்வாஹா (16)-  ஒரு  பார்ட்டி  நடக்குது. ஒரு  தம்பதி   டான்ஸ்  ஆடிட்டு  இருக்காங்க , புருசன்  செம  சரக்கு . அப்போ  ஒரு  ஆள்  புருசன்  கிட்டே  வந்து  உங்க  சம்சாரத்துக்கு  வேற  ஒரு  அஃபேர்  இருக்குனு  பத்த  வைக்கிறான்


 உடனே  புருசன்  செம  காண்ட்  ஆகி   சம்சாரம் கிட்டே  வந்து  யார்   அந்த இ எம் ஏ  பர்சன்?னு  கேட்கறான்


 2  பேருக்கும்  வாக்குவாதம்  வருது . ஒரு  கட்டத்துல  சம்சாரம்  புருசன்  கிட்டே  நமக்குப்பிறந்த  3  குழந்தைகளில்  ஒரு  குழந்தை  உன்னுது  இல்லை  அப்டினு  குண்டைத்தூக்கிப்போடறா. இதுக்குபின்  என்ன  நட்ந்தது  என்பது  க்ளைமாக்ஸ்


 இந்தக்கதை  ஒரு  சர்தார்  ஜி  ஜோக்கை  பட்டி  டிங்கரிங்   பண்ணி  இருக்காங்கனு  தோணுது 


ரசித்த வசனங்கள் 


1  சமீபத்தில்  ந்டந்த  ஆராய்ச்சிப்படி  யாரும்  ஒரே  ஒருவர்  கூட மட்டும்  கடைசி  வரை  வாழ  முடியாதுனு  ப்ரூவ்  ஆகி  இருக்கு 


2  என்னை  மட்டும்  யரையாவது  லவ் பண்ணி  இருக்கியா>னு  கேட்கறீங்களே? உங்களைப்பத்தி  சொல்லுங்க , நீங்க  யாரையும்  லவ்  பண்ணதே  இல்லையா?>  மார்க் 48 /100


 சி பி எஸ்   ஃபைனல்  கமெண்ட் -   2 வது  கதையும்  7  வது  கதையும்  தான் யூத்ங்க  பார்க்கற  மாதிரி  இருக்கு , மீதிக்கதை  எல்லாம்  குழந்தைங்க  பார்க்கற  ஸ்கூல்  டிராமா  மாதிர்  இருக்கு . ரேட்டிங்  2.5 / 5