நம்ம ஊர் ஜெமினிகணேசன் நடித்த நான் அவன் இல்லை (1974) ஜீவன் நடித்த நான் அவன் இல்லை(2007) நான் அவன் இல்லை 2 (2009) கதை போல ஒரே ஆள் பல பெண்களை காதலிக்கும் , ஏமாற்றும் கதை தான் படத்தின் முதல் பாதி . அருவி (2017) படத்தின் முதல் பாதி யின் சாயலில் படத்தின் பின் பாதி
19/1/2024 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது . தமிழ் டப்பிங்கில் இல்லை .ஆங்கில சப் டைட்டில் உண்டு விவேகானந்தன் வைரல் ஆகிறான் என்பதுதான் டைட்டிலுக்கான அர்த்தம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் என்று சொல்ல முடியாது , அதனால் வில்லனுக்கு மேரேஜ் ஆகி விட்டது . ஒரு மகள் உண்டு . அம்மா , அப்பா ,மனைவி , மகள் உடன் கூட்டுக்குடும்பம் நடத்தி வருகிறான்
வில்லன் ஒரு சாடிஸ்ட் , சைக்கோ . பெண்ணைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன். இதனால் வில்லனின் மனைவியின் உடம்பில் பல காயங்கள் உண்டு
வில்லன் ஒரு அரசுப்பணியாளன் . வாரத்திற்கு 5 நாட்கள் வெளியூரில் பணி .சனி , ஞாயிறு மட்டும் வீட்டில் இருப்பான்
சேலம் சித்த வைத்தியர் மாதிரி ஒரு டுபாக்கூர் வைத்தியர் சொன்னபடி சில லேகியங்களை சாப்பிட்டு வருபவன் .வாரத்தில் இரு நாட்கள் மனைவியைக்கொடுமைப்படுத்துவது போதாது என்று மீதி 5 நாட்கள் வெளியூரில் இருக்கும்போது ஒரு பெண்ணை ஆசை நாயகி ஆக்கி அவளையும் கொடுமைப்படுத்துகிறான்
வில்லனின் மனைவி , ஆசை நாயகி இருவரும் சேர்ந்து வில்லனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்கி றார்கள் .அவர்கள் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
வில்லன் ஆக ஷைன் டாம் சாக்கோ இதில் சைன் பண்ண அதிக வாய்ப்பில்லை . முதல் பாதி ரொமாண்டிக் பாய் ஆக அவர் செய்யும் லீலைகள் சுமார் ரகம் தான் . பின் பாதியில் இவரது கேரக்டர் டம்மி ஆகி விடுகிறது .அய்யோ பாவம்
வில்லனின் மனைவியாக சுவாசிகா பரிதாபம ஏற்படுத்தும் கேரக்ட்டர் . நடிப்பு பரவாயில்லை
வில்லனின் ஆசை நாயகி ஆக கிரேஸ் ஆண்டனி பாராட்ட வைக்கும் நடிப்பு + அதிக காட்சிகள் + ஸ் கோப் எல்லாம் இவருக்குத்தான் . பிரித்து மேய்ந்து இருக்கிறார்
,யு ட்யூபராக மெரீனா ஸ்டைலிஷான நடிப்பு வில்லனின் அப்பாவாக ஜானி ஆண்டனி , அம்மாவாக மாலா பார்வதி சிறப்பான நடிப்பு
பிஜிபாலின் இசையில் இரு பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் . பிரகாஷ் வேலாயுதத்தை ஒளிப்பதிவில் படத்தில் வரும் ஐந்து பெண் கதாபாத்திரங்களும் அழகாக தெரிகிறார்கள் .ரஞ்சசன் ஆப்ரஹாம் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் வில்லனின் அப்பா , அம்மா இருவருக்குமான பிணக்குகள் ,ஊடல்கள் அருமை .க்ளைமாக்சில் வரும் அப்பா வின் முன்னாள் காதலி டிவிஸ்ட் அழகு
2 நேர் கொண்ட பார்வை , பிங்க் படத்தின் மையக்கருவான நோ மீன்ஸ் நோ என்பதை அழுத்தமாக சொல்லி பெண்களின் கவனத்தை ஈர்த்தது
3 மெரீனா,கிரேஸ் ஆண்டனி இருவரின் அருமையான நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 இந்த லேகியத்தை தேன்ல கலந்து சாப்பிடணும்
டாக்டர் . எனக்கு தேன் அலர்ஜி
அப்ப ரம்ல கலந்து சாப்பிடு
நான் டி டோட்டலர் ஆச்சே ?
எப்பவாவது ஒரு டைம் குடிச்சா தப்பில்லை . பொண்ணுங்களுக்கு சரக்கடிக்கும் ஆண்களைப்பிடிக்கும்
2 நீங்க சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?
மருந்தா யூஸ் பண்ணிக்கலாம்னு டாகடர் சொன்னாரு
எல்லாருக்குமே இது மருந்துதான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு சான்றிதழை இறந்தவரின் மகள் வீட்டுக்கு தானே நேரில் போய் தருகிறார் .அப்படி எல்லாம் செய்ய முடியாது .ரெஜிஸ்டரில் சைன் வாங்க வேண்டும்
2 டொமெஸ்டிக் வயலன்ஸ் என்ற சொல் இப்போது புகழ் பெற்று விட்டது . மனைவியை கை நீட்டி அடித்தாலே ஜெயில் என்ற பயம் ஆண்களுக்கு உண்டு , வில்லன் அந்த பயம் எல்லாம் இல்லாமல் தெனாவெட்டாக இருப்பது எப்படி ?
3 வில்லனால் பாதிக்கப்பட்ட 4 பெண்களுமே போலீசில் புகார் கொடுக்காதது எதனால் ?
4 வில்லனின் அப்பா க்ளைமாக்சில் மட்டும் வில்லனைக்கண்டிக்கிறார்
5 கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது மாமியாரிடம் தன காயங்களை மருமகள் காட்டாதது எதனால் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி சுமாராக இருக்கு , பின் பாதி நம்பகத்தன்மை இல்லை . சொல்ல வந்த கருத்து குட் . ரேட்டிங்க் 2.25 / 5
Vivekanandan Viralanu | |
---|---|
Directed by | Kamal |
Written by | Kamal |
Produced by |
|
Starring | |
Cinematography | Prakash Velayudhan |
Edited by | Ranjan Abraham |
Music by | Bijibal |
Production company | Nediyath Productions |
Distributed by | Magic Frames |
Release date |
|
Country | India |
Language | Malayalam |