ஸ்பாய்லர் அலெர்ட்
நகரத்தில் படித்து வளர்ந்த நாயகன் தன் அம்மாவுடன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். அங்கே நாயகியை சந்திக்கிறான். நாயகி அந்த ஊரில் ஒரு பெண்ணின் காதலுக்கு தூது போய் உதவி செய்யும் பெண்ணாக இருக்கிறார்..நாயகனும் அதே காதல் ஜோடிக்கு உதவி செய்வது போல காட்டிக்கொண்டு தன் காதலை நாயகியிடம் பிரப்போஸ் செய்கிறார். உள்ளூரக்காதல் இருந்தாலும் நாயகி அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை
காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போக முயற்சிக்கும்போது மர்மமான முறையில் இறக்கிறார்கள் .அந்த இறப்பைப்பார்த்த பால்காரன் இறக்கிறார். அந்த இறப்பைப்பார்த்த பெண்ணும் இறக்கிறார், இப்படி சங்கிலித்தொடர் போல அந்த கிராமத்தில் இறப்புகள் தொடர்ந்து நிகழ்கின்றன. நாயகன் அந்த மர்மத்தைக்கண்டு பிடிக்க களம் இறங்குகிறார்
பேய்க்கதை , பில்லி சூன்யம் போல கதை ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி க்ளைமாக்சில் கச்சிதமாக எல்லா மர்ம முஜ்டிசுகளையும் அவிழ்க்கிறார்கள்
நாயகன் ஆக சாய் தரம் தேஜ் காதல் காட்சிகளில் , ஆக்சன் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.
நாயகன் எட்டு அடி பாய்ந்தால் நாயகி 16 அடி பாய்கிறார். இந்தக்கதைப்படி நாயகிக்குத்தான் கேரக்டர் டிசைன் வலுவாக அமைந்துள்ளது. கலக்கலான நடிப்பு சம்யுக்தாவினுடையது . அவரது கண்கள் , ஹேர் ஸ்டைல் , கண்ணிய உடை , மந்தகாச சிரிப்பு அனைத்தும் பிளஸ்
146 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தில் எடிட்டிங் பக்காவாக இருக்கிறது , ஒளிப்பதிவு கச்சிதம் ,இசை பின்னணி இசை மிரட்டல் ரகம்
சுகுமாரின் திரைக்கதைக்கு கார்த்திக் வர்மா டைரக்டர் ஆக பணியாற்றி இருக்கிறார்
ஏப்ரல் 21 2023 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 1979ல் நடப்பதாகக்காட்டப்படும் கொடூரமான சம்பவம் விறுவிறுப்பாகப்படம் ஆக்கப்பட்டுள்ளது . கிராமத்து மக்களின் அறியாமை , முட்டாள்த்தனம் , நன்கு விவரிக்கப்பட்டுள்ளது
2 எரிக்கப்பட்ட அந்த குடும்பத்தின் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சை க்ளைமாக்ஸில் உணர்த்தும் இடம் அருமை
3 பைரவா என்னும் கேரக்டரை வைத்து சம்பவம் பண்ணும் காட்சிகள் பயங்கரம்
ரசித்த வசனங்கள்
1 சாஸ்திரங்களும், சம்பிராதயங்களும், சடங்குகளும் மக்கள் வாழ வழி காட்டனுமே தவிர மக்களை அழிக்க வழி காட்டக்கூடாது
2 பேச்சு எல்லையைத்தாண்டிப்போகலாம், ஆனா மனுசன் எல்லை தாண்டிப்போகக்கூடாது
3 பிரச்சனைக்குத்தீர்வா இருந்தாலும் , பரிகாரமா இருந்தாலும் சாசனத்தைத்தான் பார்க்கனும் ( ஏன் சொந்தமா யோசிச்சு யாரும் முடிவு எடுக்க மாட்டாங்களா? )
4 நம்மால முடியாதபோது நமக்கு ஞாபகம் வருவது கடவுள் தான்
5 பிரச்சனை ஆரம்பிச்ச இடத்தில்தான் அதுக்கான தீர்வும் கிடைக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 என்னதான் கிராமத்து ரயில்வே ஸ்டேஷன் என்றாலும் நம்பற மாதிரி ஆர்ட் டைரக்சன் டிபார்ட்மெண்ட் எதுனா பண்ணி இருக்கலாம். ரயில்வே டிராக் பக்கத்துல ஒரு பெஞ்ச் மட்டும் போட்டு அதைத்தான் ஸ்டேஷன்னு காட்றாங்க
2 ஊர்க்கட்டுப்பாடு எட்டு நாட்களுக்குனு அறிவித்த பின் ஊரை விட்டுப்போக அந்த காதல் ஜோடிக்கு டிக்கெட் எப்படிக்கிடைத்தது ? ஊர் மக்களுக்கு ஸ்டேஷன்ல இருந்து தகவல் போகாதா?
3 ரயில் வர்ற நேரம்னு தெரிஞ்சும் அந்த காதலன் ஏன் ரயில்வே ட்ராக்ல நின்னு டயலாக் பேசறான் ?
4 தேன் கூடு எ[ப்பவும் மரத்துல உயரமான இடத்துல தான் இருக்கும் . ஆனா அந்தப்பொண்ணு முகத்தில் படும்படி அவளவ் கீழே எப்படி தேன் கூடு கட்டியது ?
5 ஊரை விட்டு யாரும் போகக்கூடாதுனு ஊர்க்கட்டுப்பாடு போட்ட பின் காரில் தன் மகள் திருமணத்துக்குப்போகும் ஆளை ஊர் மக்கள் தடுக்கறாங்க . ரைட்டு, இந்த சம்பவம் நடந்து ரெண்டு மணி நேரம் கழிச்சு நாயகிக்கு காக்கா வலிப்பு வந்த போது ஊர்க்கட்டுப்பாடு ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. அதுக்குள்ளே மருந்தைக்கொண்டாந்துடனும்னு சொல்றாங்களே? அப்போ அந்த டைம்க்குள் அந்த மேரேஜ்க்குப்போக வேண்டிய ஆளையும் அனுப்பி இருக்கலாமே? ,
6 ஒரு காட்சியில் நாயகனின் அக்கா தன் குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கும்போது வாசலில் லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி இருட்டா இருக்கு , உள்ளே வீட்டில் பிரகாசமா ட்யூப் லைட் எரியுது. ஒண்ணா உள்ளே போய் வெளிச்சத்துல ட்யூஷன் எடுக்கனும், இல்லைன்னா வாசல் விளக்கைப்போடனும்
7 நாயகியின் அக்கா வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேட்குதுனு காட்டுக்குள்ளே 2 கிமீ தூரம் இருட்டுக்குள்ளே போகுது , ஏம்மா ஏம்மா? பேசாம வீட்லயே இருக்கலாமில்ல?
8 நாயகனின் அக்கா ஒரு சாவை நேரில் பார்த்து ஆ அப்படினு கத்தறாங்க, அடுத்த நொடியே ஒரு ஆள் ஓடி வர்றான், பின்னாலயே ஊர் ஜனங்களும் ஓடி வர்றாங்க . அந்த நேரத்துல அவ்ளோ சீக்கிரம் அந்த இடத்துக்கு எப்படி வர முடியும் ? அந்த அக்காவே 2 கிமீ தூரம் கொஞ்சம் கொஞ்சமா நடந்துதான் அந்த இடத்துக்கு வர்றாங்க
9 ஒரு ஆள் தற்கொலை செய்து கொள்வதை நேரில் பார்த்த ஒரே ஆள் நாயகனின் அக்கா, அவங்க அதிர்ச்சில எதுவும் பேசல, ஆனா அப்போ அங்கே வந்த ஊர் மக்கள் அது தற்கொலைதான்னு எப்படி கண்டுபிடிக்கறாங்க ?பேயாக்கூட இருக்கலாம், கொலையாவும் இருக்கலாம், அந்த அக்காவாக்கூட இருக்கலாம்
10 நாயகியின் அக்கா தையல் மிஷின் தைப்பதை அடிக்கடி க்ளோசப்ல காட்றாங்க , ஆனா அப்போ ஒலிக்கும் பிஜிஎம் மாவு மிஷின் ஓடற சத்தம் மாதிரி இருக்கு ,சாதா மெரிட் அல்லது உஷா மிஷின் அவ்ளோ சவுண்டா குடுக்கும் ?
11 நாயகனின் அக்கா ஏதோ சாக்குப்பை மாதிரி ஒண்ணை தைச்சுட்டு இருக்கு , ஆனா மிஷின்ல இருக்கற நூல் கண்டு ஜாக்கெட் தைக்கற சாதா நூல்.
12 சுதா என்ற பெண் ஊரை விட்டு ஓடிப்போக நைட் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருது . பொதுவா எந்த ஊர்லயும் பாசஞ்சர் ட்ரயின் நைட் 11 மணிக்கு எல்லாம் இயங்காது . அதே மாதிரி மிட் நைட்ல இறந்த அந்தப்பெண் சுதாவை பால் ஊற்றப்போகும் பால்காரன் பார்த்ததா ஃபிளாஸ்பேக்ல சொல்றாங்க / அதிகாலை 5 டூ 6 தான் பால் ஊற்றப்போவாங்க . நைட் இறந்த சுதாவை அதிகாலையில் காப்பாற்ற பால்காரன் எப்படி முயற்சிக்க முடியும் ?
13 நாயகி கிணற்றில் விழுந்து கிடக்கும்போது நாயகன் அங்கே வந்து காப்பாற்றுகிறார். அது 20 அடிக்கிணறு, கயிறே இல்லை , உதவிக்கு ஆட்கள் இல்லை , நாயகி விழுந்த அடுத்த கணமே நாயகன் குதிச்சு காப்பாற்றுவது எப்படி ? எப்படி மேலே வந்தார் ?
14 கிணற்றில் விழுந்து பின் காப்பாற்றப்பட்ட நாயகிக்கு குங்குமம் , பவுடர் , மேக்கப் எதுவுமே கலையாமல் இருப்பது எப்படி ?
15 ஓப்பனிங் ஷாட்ல இருந்து நாயகி எப்போதும் இடுப்பில் ஒரு சாவிக்கொத்துடன் இருப்பது போல் காட்றாங்க , கிணற்றில் விழுந்து காப்பாற்றப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருக்கும் நாயகிக்கு வழக்கமாக வரும் காக்கா வலிப்பு வந்ததும் அவர் இடுப்பில் சாவிக்கொத்தை எடுத்து கைல கொடுக்கறாங்க , 10 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த நாயகியின் இடுப்பில் சாவிக்கொத்து அப்படியே இருந்தது எப்படி ?
16 பைரவா எனும் பையனை நடு ராத்திரில பார்த்து கண்டிச்ச ஆளை ஏதோ மந்திரம் போட்டு அவன் என்னமோ பண்ணிடறான், பக்கவாதம் வந்து அவரு படுத்த படுக்கை ஆகிடறாரு. இந்த விஷயம் எப்படி வெளீல தெரிஞ்சுது ? பாதிக்கப்பட்ட ஆளால பேச முடியாது . பாதிப்பு ஏற்படுத்துன ஆளை தேடிட்டு இருக்காங்க . அந்த காலகட்டத்துல சிசிடிவி கேமராவும் இல்லை
17 கிறித்துவர்களைத்தான் சவப்பெட்டில வெச்சு அடக்கம் பண்ணுவாங்க , நாயகியை மயக்க நிலைல பெட்டில வெச்சு எரிக்கனும்னு ஏன் சொல்றாங்க ? எரிக்கறதுனு ஆகிப்போச்சு, அப்படியே ஆளை மட்டும் எரிக்கறதுதானே?
18 கிராமத்து மக்கள் எல்லாரும் ரத்த தர்ப்பனம் பண்ணுங்கனு சாமியார் சொன்னதும் எல்லாரும் வரிசையா வந்து கோடாலியால கையைக்கிழிச்சு ரத்தம் ஊத்தறாங்க . சும்மா குண்டூசில குத்தி ரத்தம் எடுத்து ரெண்டு சொட்டு விட்டாப்போதாதா? கோடாலியால அத்தனை பேரும் கிழிச்சுக்கிட்டா எல்லார் உடம்பும் செப்டிக் ஆகிடுமே? அங்கே ஹாஸ்பிடலும் இல்லை . ஊர்க்கட்டுப்பாடு வெளீல எங்கேயும் போக முடியாது
19 க்ளைமாக்ஸ்ல நாயகன் தன்னைத்தானே கத்தியால வயிற்றில் குத்திக்கறாரு, ஆனா அவர் சாகலை , ஆனால் நாயகி முதுகில் சோல்டர் பக்கமா குத்தறாரு , ஆனா நாயகி செத்துடுது . வயிறுதானே அபாயமான இடம் ?
20 க்ளைமாக்ஸ்ல நாயகி நாயகன் கிட்டே நான் சொல்றதைக்கேட்கறீங்களா?ங்குது , அவரும் ம் -ங்கறாரு , லிப் கிஸ் கொடுத்துட்டு நாயகி செத்துடுது. எதுவுமே சொல்லலையே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இரண்டு காட்சிகளில் லிப் லாக் சீன்கள் மட்டும் இருக்கின்றன
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மந்திரவாதி , பேய் , பில்லி சூன்யம் வகைப்படங்கள் ரசிப்பவர்கள் பார்க்கலாம் ரேட்டிங் 2.75 / 5
Virupaksha | |
---|---|
Directed by | Karthik Varma Dandu |
Screenplay by | Sukumar |
Dialogues by |
|
Story by | Karthik Varma Dandu |
Produced by |
|
Starring | |
Cinematography | Shamdat Sainudeen |
Edited by | Navin Nooli |
Music by | B. Ajaneesh Loknath |
Production companies |
|
Release date |
|
Running time | 146 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Box office | ₹103 crore[2] |