Showing posts with label VILM. Show all posts
Showing posts with label VILM. Show all posts

Saturday, December 08, 2012

விஸ்வரூபம் - கமல் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1G1lpHhhMZi_ZqgG8AolU8YEiziJ-XnF-BrJeqrImL-eRq8JuYeUky7FKc9PjI8qT367I3-LPariQ-4_iZdDpSG5kX028NUQUTBkp4f_znLKX1RPFGoysriu1Zz3jDsZ2YG54QLKzrIQ/s1600/Viswaroopam_latest_wallpapers+%25282%2529.jpgலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.



'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை.


 திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள். கமலின் இந்த வித்தியாசமான வெளியீட்டு முயற்சிக்கு, தமிழ் திரைப்படத் துறையில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையாக ரியாக்ஷன்கள். 



கடந்த 5-ம் தேதி மாலை ஃபிலிம் சேம்பரில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, பெப்சி அமைப்பின் தலைவர் அமீர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்தான் 'விஸ்வரூபம்’ குறித்து, தயாரிப்பாளராக தான் எடுத்து இருக்கும் புதிய முயற்சியைத் தெரிவித்தார்.




''கமல் பாணியை எல்லோரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தனிப்பட்ட முறையில் கமல் பொருளாதார ரீதியாக தன்னைக் காத்துக்கொள்வார். கமல் பக்கத்தில் இருந்து பார்த்தால், அவரது நியாயம் புரிகிறது. டி.வி-யில் திரையிடுவதால் திருட்டு வி.சி.டி. வெளிவர வாய்ப்பு இருக்குமே என்று கமலிடமே கேட்டேன். திருட்டு வி.சி.டி. எடுக்க முடியாத தொழில்நுட்பத்தில் 'விஸ்வரூபம்’ படத்தைத் தயாரித்து இருப்பதாக என்னிடம் சொன்னார்'' என்று ஆதங்கப்பட்டார் ஒரு திரையுலக வி.ஐ.பி. 



தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் இதுபற்றி பேசினோம். ''தமிழ் சினிமா​வில் நடிப்பு, படைப்பில் மட்டும் இல்லை; வியாபாரத்திலும் புதுமையைப் புகுத்துகிறார் கமல். 'விஸ்வரூபம்’ படத்தை 90 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார். செலவு செய்த பணத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும். 



அதனால், 'விஸ்வரூபம்’ படத்தை யாரிடமும் விற்கவே இல்லை. அவரே நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார். பணம் கொடுத்து வாங்கினால்தானே விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டம் அடைவார்கள். இதுவரை எத்தனையோ ரிஸ்க்கான படங்களைத் தயாரித்து நடித்து இருக்கிறார் கமல். அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நயா பைசா பாக்கி வைக்காமல் செட்டில் செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். இப்போது நிறைய நடிகர்கள் தயாரிப்​பாளரிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையே திருப்பித் தராமல் டிமிக்கி கொடுப்பதை கண் கூடாகப் பார்க்கிறேன்.



எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. இன்று கமல் செய்யாவிட்டால், நாளை வேறொருவர் செய்வார். அப்போது என்ன செய்வார்கள்? கமல் முன்னோடியாக இருக்கிறார். கமலின் இந்த துணிச்சலான முயற்சி எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் புது மாற்றத்தை உருவாக்கும்.


கூட்டத்துக்கு வந்த கமலை, சின்ன பட்ஜெட் படம் எடுத்தவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய படத்தையும் அதுமாதிரி விற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு டாக்டர் நோய்க்கான மருந்தை சீட்டில் எழுதித்தான் தர முடியும். அவரே மருந்து வாங்கித்தர முடியாது!'' என்று கமல் கருத்தை ஆதரித்தார்.



கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். ''கமல் தன்னோட சொந்தப் பணம் 90 கோடி ரூபாயை முதலாகப் போட்டு 'விஸ்வருபம்’ படத்தை எடுத்து இருக்கிறார். அந்தப் படத்தை எந்த முறையில் விற்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான் உண்டு. 


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் மினிமம் கியாரன்டி கேட்டு எங்களிடம் படம் கொடுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. கமல் 'விஸ்வரூபம்’ படத்துக்கு மினிமம் கேரன்டி கேட்கவே இல்லை. ஒரே ஒருநாள் பிரிமியர் ஷோ போடுவதால், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட சந்தோஷமாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.   



அடுத்து கமல் பாணியில் 'அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை வெளியிட இப்போதே பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாம்!


நன்றி - ஜூ வி 

 http://middaytimes.com/wp-content/uploads/2012/06/kamal-hassan-viswaroopam-photos00-640x960.jpg


சென்னை: ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம். இந்த பலம் இருக்கும்வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார் கமல்ஹாஸன்.



கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடந்தது.



இதற்காக கமல்ஹாசனும், படக்குழுவினரும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதலில் மதுரைக்கு சென்றார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் காலை 10-30 மணிக்கு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்ரிநாத் பெற்றுக்கொண்டார்.



மதுரை விழா முடிந்ததும் கமல்ஹாசனும், படக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார்கள். மாலை 3 மணிக்கு கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், பாடல் வெளியீட்டு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய ரசிகைகள் இரண்டு பேர் பெற்றுக் கொண்டார்கள்.


கோவை விழாவை முடித்துக்கொண்டு கமல்ஹாசனும், படக்குழுவினரும் அதே ஹெலிகாப்டரில் சென்னைக்கு வந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 8 மணிக்கு விழா தொடங்கியது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய மூவரும் மேடையில் தோன்றினார்கள். மைதானம் முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.




கமல் பேசுகையில், "இது பொங்கலா, தீபாவளியா என்று தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் என் மூத்த சகோதரர்-அண்ணன் இளையராஜாவுக்கு நன்றி. என்மீதான் அன்பு மட்டுமே அவரை இங்கே வரவைத்திருக்கிறது. இந்தப் பெருமையைத் தந்த அவருக்கு நன்றி. நீங்கள் (ரசிகர்கள்) சந்தோஷப்படுகிற மாதிரி ‘விஸ்வரூபம்' படத்தை எடுத்து இருக்கிறேன்.




ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சந்தோஷம். எவ்வளவு கரகோஷம் எழுந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பேராசை ஏற்படும். அதற்கான அருகதை இருக்கிறதா? என்று கூட யோசிப்பதில்லை.
மதுரையிலும், கோவையிலும் நடந்த விழாக்களில், அங்குள்ள சகோதரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லோரும் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது, இவர்களுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆர்வமும், பயமும் வருகிறது.



என்னை குழந்தையாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். வளர்ந்தபின் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் என் மீது அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள். அந்த அன்புதான் என் ஆணிவேர்-அச்சாணி என நினைக்கிறேன். நான் கழன்றுவிடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன்,'' என்றார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL7a_UzKoKBUj43j4EKqdeIK0Z-pnX3NoCkydSi-PV9G7NjkgNvz93EdG9uaUz3GPfPiGTiD1RdANPoI2z8iwsNtBJbxYBsNoty0bfuj3hVsWGo8ypD7O6fqsZdOTNmm7EplHedjyYE9c/s1600/viswaroopam+movie+stills+%25284%2529.jpg



சென்னை: புதுமைப் பித்தர்களாக நினைத்துக் கொண்டு படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் சினிமாக்காரர்கள், நிஜமாகவே ஒரு புதுமையான விஷயத்தை செயலுக்குக் கொண்டு வந்தால் மட்டும் ஏற்க மனம் வருவதில்லை.



சினிமாக்காரர்களிடம் போய் உங்களது தலையாய பிரச்சினை என்ன என்று கேட்டால் ஒரே குரலில் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூக்குரலிடாத குறையாக சொல்வது திருட்டு விசிடி மற்றும் டிவிடி பிரச்சினையைத்தான். சரி இதை ஒழிக்க என்ன நடவடிக்கை என்று அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டால், அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.




ஆனால் உண்மையில் திருட்டு விசிடி-டிவிடியை ஒழிப்பது என்பது சினிமாக்கார்ரகளின் கையில்தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை அல்லது முன்வருவதில்லை.



திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல்ஹாசன் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். இதை இதுவரை திரையுலகைச் சேர்ந்த யாருமே ஆமோதித்ததும் இல்லை, கருத்துச் சொன்னதும் இல்லை. அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அரசையே அண்டி வருவதை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளனர்.




தியேட்டருக்கு படம் வரும் அதேசமயத்தில் டிவி சேனல்களுக்கும் ரைட்ஸ் கொடுத்து ஒரே நேரத்தில் வெளியிடுவது, டிவிடி, இன்டர்நெட் உரிமைகளையும் ஹோல்சேலாக கொடுத்து விடுவது என்பது நிச்சயம் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடும் என்பதோடு அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைவதால், திருட்டு விசிடி, டிவிடிகளுக்கு வேலையில்லாமல் போகும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.



புதிய விஷயம் எப்போதுமே ஆரம்ப கட்ட சிக்கல்களையும், சிரமத்தையும் கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் அதைக் கொண்டாடத் தொடங்கி விடலாம். கமல்ஹாசன் கிட்டத்தட்ட தனது மிகப் பெரிய படத்தையே அடகு வைத்து, பெரும் ரிஸ்க் எடுத்து களத்தில் இறக்கத் தயாராக இருக்கும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகிறது.




நிச்சயம் கமல்ஹாசனைத் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வராது என்பது ஒருபுறம் இருக்க அவர் செய்யப் போகும் முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் கூட உட்கார்ந்து கவனிக்க தைரியம் இல்லை என்பதை ஆச்சரியம்தான்.




இதே கமல்ஹாசன்தான் டிவியால் சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அது உண்மையாகவும் உள்ளது. டிவி வந்ததால் சினிமாக்காரர்களுக்குத்தான் நிறைய லாபம் கிடைத்துள்ளது. அபரிமிதமான விளம்பரங்களையும், 'பில்டப்'களையும் செய்ய இன்று டிவியை விட்டால் வேறு மீடியாவே இல்லை. மேலும் ஓடாத குப்பைப் படங்களையும் கூட உச்சாணிக்குக் கொண்டு போய் விளம்பரம் செய்து ஓட வைக்க இன்று டிவிதான் சினிமாக்காரர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.


கமல்ஹாசன் செய்யப் போகும் முயற்சியை சற்று விட்டுத்தான் பார்ப்போமே... துணிச்சலா சப்போர்ட் பண்ணுங்க சினி்மாக்காரர்களே... அது சரி 'இன்டர்நெட்' என்பதையே 'இன்டர்காம்' என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும்போது கமல்ஹாசனை ஏற்க எப்படி இவர்களுக்கு மனம் வரும்...!


சென்னையில் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாஸனிடம் கேள்வி என்ற பெயரில் அபத்தமாகக் கேட்டு, அசடு வழிந்தார் நடிகர் ஜெயராம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தார் கமல்.


அவரோ, கமலைப் புகழ்கிறேன் என்ற பெயரில், விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்துக் கொண்டிருந்தார்.


கமல் பேசி முடித்ததும். அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். அது கமலையே நெளிய வைப்பதாக இருந்தது.


‘‘நீங்கள் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறீர்கள். அங்கு யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? ஜூலியா ராபர்ட்ஸுக்கா, ஏஞ்சலினா ஜோலிக்கா அல்லது வேறு யாருக்கு?'' என்று கேட்டார்.



அதற்கு கமல்ஹாசன், ‘‘அதற்காகவா ஹாலிவுட் போகிறேன்? இங்கிருந்து அங்கபோறது எச்சில் பண்றதுக்காகவா...? முடிந்தால், நல்ல நடிப்பை காட்டலாம் என நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYOnK1mFxnsnkiFs7gpR-CRM_bnO5I6-u5PtB_TAjgzSGrXbX7eLAydW1TrQhzVVwdAbChM1YPM8gtjPR5wrJvXYKmNOikenq9eS-MvWQoDL52kY090gMzQtWCmabeexcoPR52G1Lo4Gkl/s1600/334034-viswaroopam.jpg


 நன்றி -தட்ஸ் தமிழ்


கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.


ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.


இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.


முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம்.
 
 
சென்னை: டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.


இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.



அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.



அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:



'விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்' என்று கூறினார்.



வேண்டுகோள்



என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.



எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.


திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.




ஒத்துழைப்பு கிடையாது


இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.


கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தகவலை சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.