Showing posts with label VIJAYKANTJH. Show all posts
Showing posts with label VIJAYKANTJH. Show all posts

Sunday, October 28, 2012

கேப்டனை டம்மி ஆக்க மம்மி செய்யும் தகிடுதித்தங்கள்

கோப்புப் படம்:
சட்டசபையில், தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், ஒரு சீட்டை பிடிக்கும்தே.மு.தி.க.,வின் திட்டத்திற்கும்வேட்டு வைக்க வேண்டும்' என்ற, இரண்டு திட்டங்களின் அடிப்படையில் தே.மு.தி.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வேலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க., மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.




கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி, அக்கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்த, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., தோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டவாரியாக நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்களில், விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தனர்.



தங்களதுதோழமையால், அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றதே.மு.தி.க.,வை, தங்களது து@ராகியாக கருதிய அ.தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க., விடம் இருந்து பறிக்கவேண்டும் என, திட்டமிட்டுள்ளது.அதன் விளைவாக, தே.மு.தி.க., வில் அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ., க்களை, கூண்டோடு இழுக்கும், "ஆப்ரேஷன் 10' என்ற, உடைப்பு திட்டத்தை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது.



முதல் கட்டமாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், தே.மு.தி.க., பொருளாளருமான சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழரசனையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட இழுக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று பேராவூரணி எம்.எல்.ஏ.,வும், நடிகருமான அருண் பாண்டியன், ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


"ஆப்ரேஷன் 10' திட்டப்படி, 10 எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால், தே.மு.தி.க., உடைந்து விடும். தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்து இழக்க நேரிடும். எதிர்க்கட்சி அந்தஸ்து தி.மு.க.,வுக்கு கிடைத்து விடும்.



அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள, ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், தே.மு.தி.க., ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஒரு எம்.பி., சீட் பெற, 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அந்த எம்.பி., சீட், தன் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கவும், விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.


ஆனால், அத்திட்டத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தாலும், தே.மு.தி.க., வுக்கு எம்.பி., சீட் கிடைக்காத அளவுக்கு, அக்கட்சி எம்,எல்.ஏ., க்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:அடுத்த ஆண்டு, ஜூலை மாதத்தில், தி.மு.க., வில் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., வில் மைத்ரேயன், இளவரசன், காங்கிரசில் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவி காலம் முடிவடைகிறது. 


சட்டசபையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களின் பலத்தின் அடிப்படையில், நான்கு ராஜ்யசபா எம்.பி., க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள இரு எம்.பி.,க்களுக்கு, மற்ற கட்சிகள் மத்தியில் போட்டி உருவாகும் நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வை ஆதரித்தால், அக்கட்சிக்கு ஒரு எம்.பி., கிடைக்கும். இதனால், தே.மு.தி.க., வின் எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை குறைக்க முயற்சிகள் துவங்கியுள்ளது.


அதேசமயம், தே.மு.தி.க., வை, தி.மு.க., ஆதரிக்குமானால், தே.மு.தி.க., வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தே.மு.தி.க., வை பொறுத்தவரையில், தி.மு.க., வையும் எதிரி கட்சியாக கருதுவதால், தி.மு.க., வின் ஆதரவை நாடுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., வை பொறுத்தவரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது. ஆக, மொத்தத்தில், இரு எம்.பி., சீட்டுகளை கைப்பற்றுவதில், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக சென்று சந்தித்து வருவதால், தே.மு.தி.க., கட்சியினர் ஆவேசம் அடைந்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரித்தனர். திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர், நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதற்கு, தே.மு.தி.க.,வில் எதிர்ப்பு கிளம்பயுள்ளது.விஜயகாந்தின் ரசிகர் மன்றம், தே.மு.தி.க., கட்சியாகச் செயல்படத் துவங்கிய காலம் முதல், பல ஆண்டுகளாக உறுப்பனர்களாக இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., “சீட்’ தராமல், திடீரென வந்த சினிமா தயாரிப்பாளரான, மைக்கேல் ராயப்பனுக்கு, “சீட்’ கொடுத்தனர். அவரும் எம்.எல்.ஏ., ஆன பன், சட்டசபையில் பெரிய அளவில் பேசவில்லை.


அவர் தொகுதிக்காக எதுவும் செய்யாமல், கட்சிக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி, நேற்று அவரது உருவ பொம்மையை, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மாவட்ட மாணவர் அணி செயலர் சுடர் தலைமையில், தே.மு.தி.க.,வினர் எரித்தனர்.திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட இடங்களிலும் மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க, அக்கட்சியினர் திரண்டனர்.


இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை கடற்கரை பகுதியில், கார்னெட் மணல் அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தின் மண்ணையும் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த், நாகர்கோவில் கூட்டத்தில் பேசினார். ஆனால், அந்த நிறுவனத்தினருடன் மைக்கேல் ராயப்பனுக்கு இருந்த தொடர்பு காரணமாகவே, தற்போது அவர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்துள்ளார்’ என, தெரிவித்தனர்.இன்று, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தே.மு.தி.க.,வினர், மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMn7qmXgCQeALmg7hbKjZ-MOvHXgLktrUPnsvFvZbu5ArjMjtGkSJGjKQ3Yn-U68iwTtFROwZETjOenn_cZKangZJ-c7muDXDLapQWBNwr2Lzemk5A29DZP7fZNcNaYGbCDX3DxIFmiOo/s1600/0.jpg


செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்:


தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது, விஜயகாந்த் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர் ஒருவர் கொடுத்த புகார் மீது, விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


பக்ரீத் பண்டிகைக்கு, குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து

நேற்று காலை 10:40 மணிக்கு, விமானத்தில் மதுரை சென்றார். காலை 10:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வந்தனர்.விமான நிலையத்தின், உள்நாட்டு முனையத்தில் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த், விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரிடம் பேட்டி காண, செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். செய்தியாளர் பாலு, காரில் இருந்து இறங்கிய விஜயகாந்திடம் சென்று, "செய்தியாளர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றனர். பேட்டி கொடுங்கள்' என்றுகேட்டார்.


இதற்கு, "நீ யார்? செய்தியாளர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஓரமாக போ' என்று, கோபமாக கூறினார். விஜயகாந்த் அருகே வந்த செய்தியாளர்கள், "உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கருத்து சொல்லுங்கள்' என்று கேட்டனர்.


இதற்கு, "நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. மின்வெட்டால் தமிழகமே இருளில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஜெயலலிதாவிடம் சென்று கேளுங்கள்' என்று, கூறினார். தொடர்ந்து விஜயகாந்திடம், செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க, ஆத்திரமடைந்த விஜயகாந்த், "போங்கய்யா, அங்கே போய் கேளுங்கள்' என்று, கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.
 
 

அப்போது செய்தியாளர் பாலுவை பார்த்து, தகாத வார்த்தைகளால் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அனகை முருகேசன், செய்தியாளர் பாலுவை கீழே பிடித்து தள்ளினார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், விஜயகாந்தை விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். தன்னை தகாத வார்த்தைகளால் பேசிய விஜயகாந்த், கீழே பிடித்து தள்ளிய எம்.எல்.ஏ., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலு, விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuRHui4kYSRXLEeC9Bzy-iXbSQohHhfngCGvJ93CngNRSMJQyD9MfAl_V42-FplVMptT0OOqhJGNkg_L3XiStO3j9-hcrqQrdq4bzCPWdjBNDa1-AstD0_xU2eSE6b9FjeHdjQYrXYK18/s1600/19ramana.jpg

இந்த நாடகத்தை எப்படி முடிக்கிறேன் பாருங்கள் விஜயகாந்த் ஆவேசம் :



ஒரு நாடகம் நடக்கிறது. அதை எப்படி நான் முடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் ஆவேசமாக பேசினார்.பக்ரீத் பண்டிகையையொட்டி, தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: நான் அனைத்து மதத்தினருக்கும், சேவை செய்துவருகிறேன். தெய்வம், மக்களை நம்பியுள்ளேன். யார் பத்திரிகையாளர்கள் என எனக்குத் தெரியும். வீட்டிற்கு வரச்சொன்னால் தெரிந்துவிடும் என, கோட்டைக்கு வரச்சொல்லி நாடகம் நடத்துகின்றனர். அந்நாடகத்தை, நான் எப்படி முடித்து வைக்கப் போகிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.



தே.மு.தி.க., மீது எவ்வளவு பயம் வந்துள்ளது என்பதைகாணும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல் ஊர் ஊராக முதல்வர் ஜெயலலிதாவால் சுற்ற முடியுமா? ஒன்றரை ஆண்டுகளாக செய்யாததை, இனிமேலா செய்யப் போகின்றனர்.மின் தட்டுப்பாட்டை ஓராண்டில் சீர் செய்வேன் என்றார்; அது நிறைவேறவில்லை. பல மணி நேரம் மின்தடை நீடிக்கிறது. 1991 லிருந்து தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மாறி மாறி ஆட்சி புரிகின்றனர். ஆனால், காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை இல்லை. இலவசங்களை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர்.எனக்கு கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். தி.மு.க.,- அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



பிரேமலதா பேசியதாவது:முகவரி அளித்தவர்களுக்கு, துரோகம் செய்வோர் எந்த நாட்டிற்கும், ஊருக்கும் செல்ல இடமில்லை. 29 எம்.எல்.ஏ.,க்கள் அல்ல; இன்னும் 200 எம்.எல்.ஏ.,க்கள் உருவாகப் போகிறார்கள். உண்மையை பற்றி, ஒரு மணி நேரம் பேசலாம். துரோகம் பற்றி ஒரு நிமிடம் கூட பேசி, நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நான் பேசினால், குடும்ப கட்சி என்பர்.


கடந்த லோக்சபா தேர்தலில், குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கவில்லை. குற்றவாளிகள், போலிகளுக்கு கட்சியில் இடமில்லை. தொகுதி வளர்ச்சிக்காக செல்கிறோம் என்பவர்கள், சுயநல வாதிகள். தங்களை பாதுகாக்க, வருவாயை பெருக்கச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg


மக்கள் கருத்து
M Sekar - Puthukottai,இந்தியா

  ஜெயலலிதா மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த நாடகத்தை நிறைவேற்றி உள்ளார். மின் வெட்டு, டெங்க்கு காய்ச்சல் என்று மக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியுடன் உள்ளனர். இதை சரிக்கட்டவே இந்த நாடகம். ஜெயா புத்திசாலி என்றால் தேதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சியை உடைக்க ஆரம்பித்தால் விஜயகாந்துக்கு அனுதாபம் உண்டாகும். பார்க்கப்போனால் திமுக ஆட்சியே தேவலை என்று உள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் இருந்தது உண்மை. கட்சி பிரமுகர்கள் அராஜகம் இருந்ததும் உண்மை. ஆனால் மின் வெட்டு 2 மணி நேரம்தான் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தது. அதிமுக ஆட்சியில் எல்லாம் சர்வ நாசம். மந்திரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிர்வாகத்திறன் பூஜ்யம். அம்மாவை பிரதமர் ஆக்குவேன் என்று சொல்லித்திரியும் அதிமுக கட்சிக்காரர்கள் ஒன்றரை ஆண்டுகள் என்ன சாதனை செய்தார்கள்? பின் தங்கிய மானிலமாக இருந்த பீகாரில் கூட முன்னேற்றங்கள் இருக்கிறது என்று செய்தி வருகிறது. முன்னேறிய மானிலமாக இருந்த தமிழகம் அதிமுக கையில் சிக்கி சீரழிகிறது. மீண்டும் காங்கிரஸ் + திமுக கூட்டணி தமிழகத்தில் பாராளு மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றால் ஆச்சர்யப்பட முடியாது. ஜெயலலிதா கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்.

Govind - Delhi,இந்தியா

  ஜெயா செய்யும் மிக பெரிய தவறாக இருக்கும் தி மு தி க வில் விஜயகாந்த்தை தவிர யாரையுமே மகளுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அந்த கட்ச்சியை உடைத்து தேவை இல்லாமல் ஒரு பகையை மோசமாக்கி அதனால் மேலும் தனக்கு கெட்ட பெயர் உண்டாக்கி கொண்டால் என்ன செய்வது. அந்த ஒரு MP சீட்டை அவர்கள் ஜெயிபாதால் இவர்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை, தேவை இல்லாமல் பகைவர்களை உண்டாக்குவது மிக பெரிய தீங்கினை உண்டாக்கும். 
 
 thanx - dinamalar

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijtRTfqhT7DycsFP82hXBHcVDp6-7YpjgNMjERb8ggoaMFlhrwqv6fL7kKTuc8WBOk6xoc-B5Jq-xj4N1JOQFfEqyeGcz_s9arXMv1GpPY2VSAs6_lOPFaO4SCCDbJ5p_f7Cg99AgW3-zh/s1600/tamilmakkalkural_blogspot_viji1.jpg