ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி ஆகிய இருவருமே சின்ன வயதில் இருந்தே ஃபிரண்ட்ஸ், இருவருக்குள்ளும் பரஸ்பரம் காதல் இருந்தும் இருவருமே வெளிப்படுத்திக்கொள்ளவில்லை . நாயகனுக்கு அம்மா மட்டும் உண்டு . அவர்கள் வீடு கடனில் இருக்கிறது . குறிப்பிட்ட நாளுக்குள் வீட்டை மீட்கா விட்டால் வீடு கை மாறி விடும் அபாயம் இருக்கிறது
நாயகிக்கு திடீர் என கிட்னி யில் பிராப்ளம். கிட்னி ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷனுக்கு ரூ 6 லட்சம் தேவைப்படுகிறது .. இந்த இக்கட்டான சூழலில் நாயகன் கை வசம் ஒரு மேஜிக் கில்லர் பேனா கிடைக்கிறது . அதன் சக்தி பற்றி நாயகனுக்கு முதலில் தெரியாது
நாயகனின் நண்பர்கள் இருவர் அவனிடம் அந்தப்பேனாவை வாங்கி ஏதோ எழுதி விடுகிறார்கள் . அடுத்த நாளே விபத்தில் இறந்து விடுகிறார்கள் . முதலில் அது பற்றீய ப்ரிதல் இல்லாத நாயகன் அதை செக் செய்து பார்க்க நினைக்கிறான்
நாயகியின் ஆஃபீஸ் மேனேஜர் ஒரு ஜொள்ளு பார்ட்டி . அவன் நாயகியை தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பதாக நாயகி புகார் செய்ய நாயகன் அந்த மேனேஜரிட்ம் மேஜிக் கில்லர் பேனாவைக்கொடுத்து ஆட்டோகிராஃப் கேட்கிறான்
மெனேஜ்ருக்கு என்ன ஆனது ? நாயகன் வீட்டை கபளீகரம் செய்த வில்லன் க்ரூப்பையும் இதே பாணியில் பழி வாங்கினானா? மேஜிக் பென் விபரம் தெரிந்த இன்னொரு நண்பனுக்கு என்ன கதி ஆனது ? நாயகனின் அம்மா, நாயகி இருவருக்கும் நடக்கும் விபரீதங்கள் என்ன? என்பதல்லாம் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ரோஹித் நந்தா அப்பாவி ஆக , சைக்கோ ஆக , வில்லன் ஆக , காதலன் ஆக மாறுபட்ட பல பரிமாணங்களில் நடிக்க நல்ல வாய்ப்பு . நாயகி ஆக ஆனந்தி. சிரித்த முகத்துடன் அழகிய கண்களூடன் மனதைக்கவர்கிறார்.
நாயகனின் நண்பன் நடிப்பும் குட் / வில்லன்களாக வருபவர்கள் அக்மார்க் தெலுங்கு மசாலாப்பட வில்லன்கள் போல ..... மனதில் பதியவில்லை
ஸ்ரீ காந்த் ரங்கநாதன் , ஸ்ரீநாத் ரங்கநாதன் ஆகி இருவரும் தான் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்கள் . கதைக்கரு ஏதோ கொரியன் மூவியில் இருந்து உருவி இருக்கலா,ம்.
எடிட்டிங் படு ஷார்ப். ஒன்றே முக்கால் மணி நேரம் தான் டைம் டியூரேசன் . பின்னணி இசை பரவாயில்லை ரகம், ஒளிப்பதிவு சுமார் ரகம் . க்ளைமாக்ஸ் தான் சொதப்பல்
சபாஷ் டைரக்டர்
1 மேஜிக் கில்லர் பென் ஐடியாவும், அதை வைத்து நகரும் சஸ்பென்ஸ் காட்சிகளும் குட்
2 நாயகன், நாயகி , நண்பன் ஆகிய மூவரை வைத்து பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்த விதம்
ரசித்த வசனங்கள்
1 வேலை செய்யற இடத்துல பிரச்சனை இல்லாம இருக்குமா? பிரச்சனைகளை சரி செய்யப்பார்க்கனுமே தவிர வேலையை விட்டுப்போயிடலாமா?னு பார்க்கக்கூடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் ஆக வரும் மேனேஜர் தன் ரூம் கதவின் மேல் இடுக்கில் காசை வைத்து யார் கதவைத்திறந்தாலும் அது கீழே விழுவது போலவும், பெண்கள் அதைக்குனிந்து எடுக்கும்போது லோ கட் சீன் பார்ப்பது போலவும் காட்சி . ரெகுலராக இது நடந்தால் ஆஃபீஸ் பெண்களுக்கு சந்தேகம் வராதா?
2 நாயகனுக்கு சொந்தமாக ஒரு வீடும் , நிலமும் இருக்கு . அதை அடமானமாக வைத்து கடன் கொடுத்த நபர் இறந்து விடுகிறார். நாயகிக்கு ஆபரேஷன் செலவுக்கு 6 லட்சம் ரூபாய் தேவைப்படும்போது வீட்டுப்பத்திரத்தை பேங்கில் அடமானமாக வைத்துக்கடன் வாங்கி இருக்கலாமே? சோர்சே இல்லைங்கறார்?
3 நாயகன் வில்லனைக்கொலை செய்த பின் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் அப்படியே நடந்தே தன் வீட்டுக்கு வருகிறான். வழியில் யாரும் அவனை கவனிக்க வில்லையா?
4 நாயகன் எப்போதும் தன் கழுத்தில் அவ்ளோ பெரிய டேப்ரிக்காரருடன் சுற்றிக்கொண்டிருப்பது ஏனோ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். ரேட்டிங் 2.25 / 5