ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் உடன் பிறந்தவர்கள் அம்மா இல்லை , அப்பா மட்டுமே . இருவருமே அரசியலில் ஒரே கட்சியில் இருப்பவர்கள். தேர்தல் நெருங்கும்போது வார்டு மெம்பர் ஆகி கவுன்சிலர் ஆகி விட வேண்டும் எனும் கனவில் இருவரும் இருக்கும்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்று கட்சி தன் கொள்கை முடிவில் உறுதியாக இருக்கவே வேறு வழி இல்லாமல் நாயகன் வேறு கட்சியில் சேர்கிறான்
அக்கா , தம்பி இருவரும் பதவிக்காக என்ன எல்லாம் மெனக்கெடுகிறார்கள் , எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் , இறுதியில் அவர்கள் கனவு நிறைவேறியதா? என்பது மீதி திரைக்கதை
நாயகியாக மொத்தப்படத்தையும் தாங்கி நிற்பவர் மஞ்சு வாரியர் . எப்பேர்ப்பட்ட சூழலிலும் சிரித்த முகமாக பிரச்சனைகளை லெஃப்ட் ஹேண்டில் அவர் டீல் பண்ணும் விதம் அடடா! அவரது உடல் மொழி , டயலாக் டெலிவரி எல்லாம் மிக மிக யதார்த்தம், நடிப்பு போலவே தெரியவில்லை
நாயகனாக சவுபின் சாஹிர் யதார்த்தமான நடிப்பு . இள வீலா பூஞ்சிரா வில் கொலைகாரனாக நடித்தவர் , கும்பாளிங்கி நைட்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நம் மனம் கவர்ந்தவர் இதில் காமெடி கலந்த ரோலில் அசால்ட் பண்ணி இருக்கிறார்
இயக்குநருக்கு அரசியல்வாதிகள் மீது என்ன கோபமோ தெரியவில்லை , அனைத்துக்கட்சிகளையும் வாரி இருக்கிறார்.
சரத் கிருஷ்ணாவுடன் இணைந்து திரைக்கதை எழுதிய மகேஷ் வெட்டியார் படத்தை இயக்கி உள்ளார்.
படம் முழுக்க அரசியல் அரசியல் அரசியல் தான், கிளைக்கதைகளில் நாயகனான தம்பிக்கு ஒரு காதலி , நாயகியான அக்காவுக்கு ஒரு காதலர் என இருந்தாலும் மெயின் ஃபோக்கஸ் அரசியல் தான் என்பதால் ரொமாண்டிக் போர்ஷனில் கத்திரி வைத்தது நன்கு தெரிகிறது
சபாஷ் டைரக்டர்
1 நம்ம கட்சியின் இந்திரா காந்திதான் இந்த லேடி என நாயகியை ஓவரா புகழும் அந்த ஆளின் ஜால்ரா போர்சன் முடிந்ததும் கட் பண்ணி அடுத்த ஷாட்டிலெயே நாயகி இந்திராகாந்தி கெட்டப்பில் இருப்பதாக காட்டும் காட்சி காமெடி
2 கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு ஆள் சாமி ஃபோட்டோ மீது கவர் பண்ணி புரட்சி வீரர் ஃபோட்டோ வைத்திருப்பதும் ஆள் நடமாட்டம் இல்லாதப்ப பம்மிக்கொண்டே சாமி கும்பிடும் காட்சியும் திராவிடன் ஸ்டாக்ஸ் ரெஃப்ரன்ஸ்
3 இரு கட்சிகளும் எதிர் எதிரே மேடை போட்டு கட்சி ஆட்களை அங்கே இருந்து இங்கே இழுக்கும் படலத்தில் ஒரு ஆள் மதில் மேல்பூனையாக இரு புறமும் பார்த்திருக்க இரு கட்சி ஆட்களும் ஏலம் விடும் காட்சி அல்ட்டிமேட் காமெடி
4 நம்ம கட்சி ஆட்கள் பச்சைக்கலர் அண்டர் டிராயர் தான் போடனும் என கம்யூனிஸ்ட் லீடர் க்ளாஸ் எடுக்க , பின் நாயகனை செக் பண்ணும்போது அவர் காக்கி டிராயர் அணிந்திருபதும், அவரது சகா டிராயரே போடலை இன்னைக்கு என்பதும் நேச்சுரல் காமெடி
5 அவசர செலவுக்கு பணம் வேண்டும் எனும் நிலைமையில் சீட்டுப்பணம் தனக்கு வேண்டும் என சொல்லும் நாயகி குலுக்கல் சீட்டில் வேறு ஒரு லேடி பெயர் வந்தும் அந்த லேடி நாயகிக்காக விட்டுக்கொடுக்கும் காட்சி டச்சிங் சீன்
6 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 இவ்வளவு ரகசியமா அவரு எதுக்காக சாகனும்? நான் ஒரு வார்டு மெம்பர், எனக்குக்கூட விஷயம் தெரியல , அட்லீஸ்ட் சாகும்போது எனக்கு ஒரு கால் பண்ணி தகவல் சொல்லிட்டு செத்திருக்கலாமில்ல?
2 ஆகஸ்ட் 15 அன்னைக்குத்தானே காந்தி ஜெயந்தி ? என்னை யாரும் ஏமாற்ற முடியாது
3 சேச்சி , ஒரு ஐநூறு ரூபா கிடைக்குமா?
சரியா கேட்கல., என்ன சொன்னீங்க ?
1000 ரூபா பணம் வேணும்
ஐநூறு தானே முத்ல்ல கேட்டீங்க?
4 தார் ரோடு போடும் ரோடு ரோலர் வண்டி ல லிஃப்ட் கேட்ட முதல் அ அள் நீ தான்
5 தெரு விளக்கே இல்லாத ஊருல சிசிடிவி கேமரா எதுக்கு ?
6 இப்போ எதுக்கு வெளிநடப்பு பண்றிங்க ?
டீ , பன் சாப்பிடத்தான் , ஸ்னாக்ஸ் டைம்
7 இப்போ கட்சி மாற காலடி எடுத்து வைக்கிறோம், அதனால வலது கால் வேணாம், இடது காலை எடுத்து வைப்போம்
8 ஃபுல் கை சட்டை முழங்கை வரை மடிச்சு விட்டுக்கனும், மடிப்புல பீடியோ தீப்பெட்டியோ வெச்சுக்கலாம்
9 தோழரே! நீங்க சரக்கு அடிப்பீங்களா>
கம்யூனிசம் சரக்குக்கு எதிரானதல்ல, எனக்கு 50 மிலி ஊத்து . தண்ணி மட்டும் வேண்டாம், தண்ணீர் மிக்ஸ் செய்வது கம்யூனிசத்துக்கு எதிரானது
10 கட்சில ஒரு ஆள்மட்டும் செஞ்சா அது ஊழல், எல்லாருமே செஞ்சா அது ஃபேஷன்
11 அரசியலில் நிரந்தர பிரச்சனைனு ஒண்ணு இல்லை புதிய பிர்ச்சனை எழும்போது மக்கள் பழைய பிரச்சனையை மறந்துடுவாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தன் வீட்டின் முன் எதிர்க்கட்சி பேனர் கட்டப்பட்டு இருப்பதைப்பார்த்து அதைக்கழட்டி தரையில் போட்டு தீக்குச்சியால் பற்ற வைக்கிறார். பெட்ரோல் ஊற்றப்பட்ட பேனர் போல் குப்பென்று பற்றுகிறது.
2 நாயகி தன் வார்டை சாராத ஒரு பெண்ணுக்கு பண உதவி செய்வதாக வாக்கு கொடுக்கிறார். ஆனால்ல் அந்த[பெண்ணின் குழந்தை இறந்து விடுகிறது. மாற்றுகட்சியினர் இவரை வில்லியாக சித்தரிக்கின்றனர்.இவர் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை , ஏன் ? நீங்கள் உதவி இருக்கலாமே? நானா வேணாம்னேன் என சொல்லி இருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பப்பாங்கான படம் தான் , ஆனால் அரசியல் சட்டையர் காமெடி அதிகம் இருப்பதால் பெண்களுக்குப்பிடிப்பது சிரமம், மற்றபடி கண்ணியமான காமெடி மெலோ டிராமா . ரேட்டிங் 2.75 / 5
Vellaripattanam | |
---|---|
Directed by | Mahesh Vettiyaar |
Written by | Sarath Krishna Mahesh Vettiyaar |
Starring |
|
Production company | Fullon Studios |
Release date |
|
Country | India |
Language | Malayalam |