Showing posts with label VANDANA GUPTA. Show all posts
Showing posts with label VANDANA GUPTA. Show all posts

Tuesday, December 25, 2012

அஜந்தா - சினிமாவிமர்சனம்


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Sep/30/Ajantha_Movie_Press_Meet_Stills/profile_Ajantha_Movie_Press_Meet_Stillsd9214fac9792b161e0572117d49d7302.jpg
 இளையராஜா ரசிகர் ஒருத்தரு ட்விட்டர் நண்பர், அவர் ஃபோன் பண்ணி எனக்காக நீங்க அஜந்தா படம் பார்த்தே ஆகனும்னு வேண்டி விரும்பிக்கேட்டுக்கிட்டார். நான்  அவர் பார்த்து ரசித்த படம்னு தப்பா கணக்கு போட்டு படத்துக்கு போய்ட்டேன், இடைவேளைல செம காண்ட் ஆகி “ இந்தப்படத்தை எதுக்கு என்னைப்பார்க்கச்சொன்னீங்க?”ன்னு கேட்டேன். அதுக்கு அவரு “ இல்லை, போஸ்டர் பார்த்தாலே படம் குப்பைன்னு தெரிஞ்சுடுச்சு, இருந்தாலும் இளையராஜாவுக்காக படம் பார்க்க முடியுமா?ன்னு ஒரு நப்பாசை. அதான்... அப்டின்னாரு.. ஏய்யா.. உங்க ஊர் கோவில் திருவிழாவுக்கு நான் பலி கிடாவா?ன்னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டே  மிச்ச சொச்ச படத்தையும் பார்த்து தொலைச்சேன் .


25 வருஷத்துக்கு முன்னால விக்ரமன் எடுத்த புது வசந்தம் படத்தை  15 வருஷம் முன்னே வந்த கார்த்திக் நடிச்ச நிலவே முகம் காட்டு , விஜய் நடிச்ச துள்ளாத மனமும் துள்ளும் படங்களோட மிக்ஸ் பண்ணினா  அதான் அஜந்தா . இதுல என்ன காமெடின்னா இந்த எல்லாப்படங்களுக்கும் இன்ஸ்பிரேஷன் சார்லி சாப்ளின் நடிச்ச சிட்டி லைட்ஸ் தான் .


 படத்தோட கதை என்ன? ஹீரோ பாடகர் ஆகனும்னு ஆசைப்படறார். ஆனா எவனும் சான்ஸ் தர மாட்டேங்கறான். ஆர்க்கெஸ்ட்ராவுல எல்லாம் பாடி 500 ரூபா சன்மானம் வர்றது அவருக்குப்பிடிக்கலை, அடிச்சா ஆ ராசா மாதிரி பல்க்கா அடிக்கனும், அல்லது கமுக்கமா நாஞ்சில் சம்பத் , ஓபி எஸ் மாதிரி வெயிட் பண்ணி இருக்கனும்னு அவர் நினைப்பு . விழி ஒளி இழந்த ஹீரோயினை மீட் பண்றாரு. பாப்பா ஒரு பாடகி.. ஊர் முழுக்க ஏகபட்ட பேரு அநாதையா இருக்கறது எல்லாம் ஹீரோ கண்ணுக்குத்தெரியல. ஏன்னா ஹீரோயின் ஒரு  ஃபிகரு, ஃபேக் ஐ டி பெண்ணா? ஆணா?ன்னு தெரியாட்டியும்  டி பி ல பொண்ணு ஃபோட்டோ பார்த்தாலே நம்மாளுங்க டி எம் ல க்டலை போடுவாங்க . நேர்ல ஒரு ஃபிகரைப்பார்த்தா சும்மா விடுவாங்களா?
http://thelinkpaper.ca/wp-content/uploads/2012/09/vandana-gupta1.jpg


ஹீரோயினுக்கு கண் ஆபரேஷன் பண்ண 70,000 ரூபா தேவை . உடனே ஹீரோ ரோட்டு ஆர்க்கெஸ்ட்ரா, அது இதுன்னு கிடைச்ச பக்கம் எல்லாம்  பாடி பணம் சேர்த்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஹீரோயினை அனுப்பிட்டு  ஒரு கச்சேரிக்காக ஃபாரீன் போறாரு, போறப்போ ஒரு விபத்து ,  ஹீரோவுக்கு வாய்ஸ் அவுட், ஹீரோயினுக்கு கண் ஓக்கே , ஆனா விபத்துல  ஹீரோ செத்துட்டதா அந்த பேக்கு நினைச்சுக்குது

 ஆபரேஷன் பண்ணின டாக்டர் ஹாஸ்பிடல்ல மணி மணீயான நர்ஸ்ங்க எல்லாம் செம  ஃபிகரா இருக்கறது அந்த கபோதி டாக்டருக்கு கண் தெரியலை . ஹீரோயினை கல்யாணம் கட்டிக்க ஆசைப்படறாரு ப். அந்த கேனமும்  ஹீரோ செத்துப்போன துக்கம் எல்லாம் இல்லாம ஓக்கே சொல்லுது.

 ஹீரோ ரிட்டர்ன் வர்றாரு . ஹீரோயின் ரிசப்ஷன்;ல ஆல்ரெடி ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ஒண்ணா இருந்தப்போ பாடுன கேவலமான ஒரு பாட்டை பாடறாரு , ஹீரோயின் டாக்டரை அம்போன்னு விட்டுட்டு ஸ்லோமோஷன்ல ஓடி வந்து ஹீரோவை கட்டிக்குது.

படத்தோட சஸ்பென்சை ஏன் உடைச்சேன்னு ஒரு பயலும் கேட்க முடியாது . ஏன்னா இந்தப்படம் இப்போ எந்த தியேட்டர்லயும் ஓடலை . திருட்டு டி விடல கூட வர்லை , வராது . லாஸ் தான் ஆகும் .


ஹீரோவா ரமணா ,“புதுப்புது அர்த்தங்கள்’ ரகுமான் போல இருக்கிறார்.சாயலில், நடிப்பில் சுமார் .படம் பூரா ஏன் இவர் தாடி வெச்சிருக்கார்னு தெரியலை .சிம்பதி க்ரியேட் பண்ணவா?


ஹீரோயின் வந்தனா குப்தா இந்தி ரங்கீலா  ஊர்மிளாவின்  சித்தி பொண்ணு மாதிரி இருக்கார். இவர் விழி ஒளி இழந்தவரா வர்றதால அவரை கிளு கிளுப்பான பார்வைல ரசிக்க முடியல , சோ நோ வர்ணனை . நல்ல ஹோம்லி லுக் 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120930170319000000.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்   


1. இவர் செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயம் இளையராஜா வை இசைக்கு புக் பண்ணினதுதான் 
இசைஞானியின் பாடல்கள் நம்மை அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. 


1.  “எங்கே இருந்தாய் இசையே...’ (ஜேசுதாஸ் மற்றும் மஞ்சரி குரல்களில் )

2 “யாருக்கு யார் என்று பிரம்மாதேவனே...’ (உன்னிகிருஷ்ணனின் மயக்கும் குரலில் அட்டகாசமான மெலடி.)


3.  “கையில் ஒரு கீ போர்டும்..’ (திப்பு குரலில் அசத்தல் பாட்டு. “)


4. போடுடா சக்கை போடு , அப்படி போடாட்டி வெட்கக்கேடு 


5. யாரும் தொடாத ஒன்றை


6. வந்தது யார் என் மனதில் நின்றது யார் என் உயிரில் 

 என  பாடல்கள் ஆறு , அத்தனையும் தேனாறு என சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனா முடியல  3 பாட்டு ஹிட்..  அஜந்தா’வுக்கு இளையராஜா போட்டுக் கொடுத்தது 36 ’பாடல்களளாம் அவ்வ்வ்வ் அத்தனையும் படமாக்கியிருந்தால், படம் மூணு காட்சி போட முடியாது. ஒரே காட்சிதான்.தேவதாஸ் மாதிரி ஆகி இருக்கும்


Vandana Gupta - Ajantha




மனம் கவர்ந்த வசனங்கள் 


1, எல்லோரும் பிள்ளையை தத்தெடுப்பாங்க. ஆனா, இவன் ஒரு தாயை தத்தெடுத்தான்!’ 


2. வீழ்வது வெட்கம் அல்ல, வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம் 


3. கோயில் உண்டியல்ல கோடி கோடியா பணத்தைப்போடறவன் நம்மை மாதிரி ஏழைங்களூக்கு கொஞ்சம் குடுத்தா ஒரு வேளை கஞ்சிக்கு வழி பண்ணிக்கலாம் 


4. திறமைசாலிகளுக்கு சோதனை அதிகம் , ஆனா கைவிடப்படமாட்டாங்க 


5. உங்களைப்பற்றித்தான் இந்நா வரை பேசிட்டு இருந்தோம் 

 என்ன?னு


 ஹவுஸ் ஓனர் கடன் காரன் வாடகை வாங்க வர்ற நேரம் ஆகிடுச்சுன்னு 



6. நீங்க சிங்கரா? 

 ஆமா. நீங்க?

 நானும் சிங்கர்தான் , அதாவது அப்படி ஆகனும்னு நினைச்சுட்டு இருக்கேன் 


7. சிட்டில அசுத்தக்காற்று , கிராமத்துல சுத்தக்காத்து , மரம் நடுன்ன்னா எவன் கேட்கறான்?


8. இருட்லயும் எப்படி கரெக்டா லொக்கேஷன் தெரிஞ்சுக்கறீங்க>? 


 உங்களுக்குத்தான் இருட்டு , எனக்கு 24 மணி நேரமும்  வெளிச்சம் தான்  மனசுல 


9. குழந்தையை ஏன் அடிக்கறே? 


 என் குழந்தை, நான் அடிக்கறேன் , நான் அடிக்காம பக்கத்து வீட்டுக்காரனா வந்து அடிப்பான்? 


 இது பக்கத்து வீட்டுக்குழந்தை தான்  



10. அழகுன்னா என்ன? 

 கண்ணுக்கு அழகாத்தெரியும் எல்லாமே அழகுதான்

 எனக்குத்தான் கண்ணே தெரியாதே? 



11. அவ என்னை லவ் பண்றா , மேரேஜ்க்கு ஓக்கே சொல்வா ந்னு எப்படிம்மா சொல்றே?


இத்தனை நாளா கார்ல உன் கூட எப்படி வந்தா? 

 பின் சீட்ல 


 இப்போ ?

 முன் சீட்ல 


 அதுக்கு ஓக்கேன்னு அர்த்தம் 


12. வாழக்கை ல தியாகம் பண்னலாம், வாழக்கையையே  தியாகம் பண்ண்லாமா? 


http://cine-talkies.com/movies/tamil-actress/vandana-gupta/vandana-gupta-105.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


 செத்த பாம்பை அடிச்சு பிரயோஜனம் இல்லை, ஆனாலும் நமக்குப்பின்னால வர்ற சந்ததிகள் இதுல மட்டும் ஏன் கேள்விகள் கேட்கலைன்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடக்கூடாதே.. அதனால 



1. ஹீரோயின் ஹீரோவை நேர்ல பார்த்ததில்லை , கண் ஆபரேஷனுக்குப்பின் ஹீரோ யார்னு தெரிஞ்ச ஒரே சாட்சி அந்த ஆபரேஷன் செஞ்ச டாக்டர்தான். ஹீரோ ஏன் டாக்டரைப்போய்ப்பார்த்து உண்மையை அவ கிட்டே எடுத்து சொல்லுங்கன்னு கேட்கலை? 



2. ஹீரோவுக்கு ஹீரோயின் - டாக்டர் மேரேஜ் ஃபிக்ஸ் ஆன மேட்டர் பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கறார், தன் நண்பன் கிட்டேயும் தான் யார்ங்கற உணமையை யார் கிட்டேயும் சொல்ல்க்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கறார். அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயின் ரிசப்ஷன்ல இருவரும் பாடிய பழைய பாட்டை ரிப்பீட்றார்? ஹீரோயினுக்கு தன் குரல் அடையாளம் தெரிஞ்சுடும்னு தெரியாதா? 


3. பேஷண்ட்டை டாக்டர் பார்க்கும்போது சாதாரணமாத்தான் பார்க்கறார், ஸ்டெப்  பை ஸ்டெப்பா அவர் மேல் லவ் வர்ற மாதிரி காட்னாத்தான் நம்பகத்தன்மை வரும்? டபார்னு நாஞ்சில் சம்பத் மாதிரி கால்ல போய் விழுந்தா எப்படி? 


4. ஹீரோ இறந்த செய்தி கேட்டப்ப ஹீரோயின் ரீ ஆக்‌ஷன் என்ன? என்பதைக்காட்டவே இல்லையே? ஒரு சீனாவது அவர் அழுவது மாதிரி காட்னாத்தானே அவருக்கு மனசுல லவ் இருப்பது தெரியும்? 


5. ஹீரோயின் நைட் டைம்ல யாருக்கும் தெரியாம நைசா போய் ஹீரோ சர்ட்டை எடுத்து போட்டுக்கறார், அதை ஹீரோவின் நண்பர் பார்க்கறார். அதை ஏன் அன்னைக்கே சொல்லலை? க்ளைமாக்ஸ் வரும்போதுதான் சொல்ரார், ஏன்? 


6. ஹீரோ பேருக்கு  60,000 ரூபாய்க்கு ஒரு இசை அமைப்பாளர் செக் போட்டு கொடுக்கறார். அந்த செக்கை அப்படியே கொண்டு போய் ஹீரோ டாக்டர்ட்ட கொடுக்கறாரே, எப்டி? இவர் அக்க்வுண்ட்ல கலெக்‌ஷன் போட்டு இவர் தனி செக் தானே தர முடியும்?



எதிர்பார்க்கும் ஆனந்த விக்டன் மார்க் - 34


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ம்ஹூம், தேறாது


 சி.பி கமெண்ட் - கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங்க் =    2 / 5


ஈரோடு பள்ளிபாளையம் ராயல் ல இந்த  இசைக்காவியத்தைப்பார்த்தேன்



 http://moviegalleri.net/wp-content/gallery/ajantha-movie-hot-stills/ajantha_movie_hot_stills_1199412.jpg