கணவன் - மனைவி இருவரும் ரிட்டையர்டு ஆன ஆசிரியர்கள் . இருவருக்கும் ஒரே ஒரு மகன்/. ஃபாரீனில் இருக்கிறான். இவர்களுக்கு இருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டை அடமானம் வைத்துக்கடன் வாங்கி அவனைப்படிக்க வைக்க வெளிநாடு அனுப்புகிறார்கள் . வாங்கிய 15 லட்ச ரூபாய்க்கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்
இவரிடம் சேமிப்புப்பணமாக 10 லட்சம் தான் இருந்தது , ஆனால் மகனின் வற்புறுத்தலால் 25 லட்ச ரூபாய் ரெடி செய்து தர வேண்டிய சூழலில் 15 லட்சம் பிரைவேட் பார்ட்டியிடம் கடன் வாங்கி மகனைப்படிக்க வைத்தார்
ஆனால் மகன் பெற்றோர் மீது பாசமும் இல்லாமல் தனக்காகத்தான் அவர்கள் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்ற அக்கறையும் இல்லாமல் அவர்களை மதிக்காமல் இருக்கிறான். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சரியாகப்பணம் அனுப்புவதில்லை . அவன் மனைவி அதாவது தம்பதியின் மருமகள் அவனை விட மோசம், அவர்களிடம் ஆன் லைன் வீடியோ காலில் பேசுவதற்குக்கூட சம்மதிப்பதில்லை . நேரம் கூட செலவழிக்காதவளா பணம் செலவழிக்கப்போகிறாள்?
வயதான தம்பதிக்கு பிள்ளை , மருமகள் பாசம் தான் கிடைக்கவில்லை , வீட்டிலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா? வட்டிக்குப்பணம் கொடுத்தவன் மிரட்டுகிறான். அவன் மோசமான ரவுடி . தம்பதியின் வீட்டுக்கு வரும்போது ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்து அவர்கள் வீட்டை இலவச லாட்ஜ் ஆக பயன்படுத்திக்கொள்கிறான். தம்பதியின் பக்கத்து வீட்டில் 12 வயது சிறுமி ஒருத்தி இருக்கிறாள் . அவள் மீது ரவுடி தப்பான பார்வை வைக்கிறான்
தொடர்ந்து ரவுடியின் டார்ச்சரால் கோபம் அடைந்த அந்த வயதான நபர் ஒரு கட்டத்தில் அந்த 12 வயது சிறுமியை வட்டிக்குப்பதிலாக தாரை வார்த்துக்கொடு என்று கேட்கும்போது கோபத்தில்; அந்த ரவுடியைக்கொலை செய்து விடுகிறார்
த்ரிஷ்யம் படத்தில் வருவது போல சாமார்த்தியமாக அந்தக்கொலையை எப்படி மறைத்தார்? போலீசிடம் இருந்து அவர் தப்பினாரா? என்பது மீதி திரைக்கதை
வயதான தம்பதி ஆக சஞ்சய் மிஸ்ரா மற்றும் நீனா குப்தா இருவரும் அருமையான நடிப்பு . இயலாமையில் தவிப்பதை , மகனிடம் இருந்து அன்பு மறுதலிக்கப்படுவதை கண்களாலேயே கடத்தி இருக்கிறார்கள்
போலீஸ் இன்ஸ்பெக்டராக மானஜ் விஜ் கம்பீரமாக வில்லனை எதிர்கொள்வதிலும் சரி , தன் அந்தரங்க வீடியோ அவனிடம் சிக்கியபின் பம்மும்போதும் சரி இரு விதமான மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்
வில்லனாக சௌரப் சச்தேவா நமக்கு வெறுப்பு ஏற்படுத்தும் அளவில் நடித்துள்ளார்
ஜஸ்பால் சிங்க் சாந்து மற்றும் ராஜீவ் பர்ன்வால் இருவரும்தான் திரைக்கதை ,இயக்கம்
ஒளிப்பதிவு கனகச்சிதம் , குவாலியர் எனும் ஊரின் அழகை படம் படித்துக்காட்டி உள்ளார் சப்பான் நாருலா
முதல் ஒரு மணி நேரம் திரைக்கதை மிக மெதுவாகவும் கொலை நிகழ்ந்த பின் வரும் 50 நிமிடங்கள் பரபரப்பாகவும் நகர்கிறது
110 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் நெட் ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது . மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆஃபீசில் 60 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோபத்தில் கொலை செய்வது கூட ஓக்கே , ஆனால் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்துவது , எலும்புகளை அரவை மிஷினில் கொடுத்து பவுடர் ஆக்குவது எல்லாம் ஓவர்.
2 கொலை நடப்பது வீட்டில் நடு ஹாலில். பாத்ரூமில் பாடியைக்கொண்டு போய் கட் பண்ணி டிஸ்போஸ் செய்வதுதான் புத்திசாலித்தனம். வாஷிங் , க்ளீனிங் எல்லாவற்றுக்கும் அதுதான் உகந்ததாக இருக்கும், நடு ஹாலில் இந்த வேலையை செய்தால் என்னதான் வாட்டர் வாஷ் செய்தாலும் ரத்த வாடை போகாது. போலீஸ் வந்தால் சந்தேகம் வரும்
3 டெட் பாடியின் துண்டுகளை ஒரு சாக்குப்பையில் கட்டி மக்கள் கூட்டம் உள்ள பஸ்சில் கொண்டு போவது எல்லாம் ரிஸ்க். நாம சாதாரணமா துணி , காய்கறி லக்கேஜ் கொண்டுபோனாலே கண்டக்டர் ஓப்பன் பண்ணி காட்டு, உள்ளே என்ன இருக்கு? செக்கிங் ஆஃபீசர் வந்தா நான் தான் பதில் சொல்லனும் என்பார், ஆனால் பெரியவர் ரொம்ப அசால்ட்டாக சாக்கு மூட்டையை பஸ்சில் கொண்டு போவது நம்பகத்தன்மையே இல்லை
4 பஸ்சிலோ, ரயிலிலோ எளிதில் தீப்பற்ரக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை, ஆனால் பெரியவர் இரவு நேரத்தில் பெட்ரோல் கேனில் பெட்ரோலுடன் பயணிக்கிறார். கண்டக்டர் எப்படி அதை அனுமதித்தார். அட்லீஸ்ட் கட்டைப்பையில் மறைத்தாவது கொண்டு போவதாக காட்டி இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும்
5 கொலை ஆன வில்லனின் மனைவி தன் குழந்தையுடன் நாயகன் வீட்டுக்கு வந்து விபரம் கேட்கும்போது வசனகர்த்தா ஒரு பிழை செய்து விட்டார். கொலை ஆன அடுத்த 2 வது நாளே வந்த மனைவி “ இந்த குழந்தை அப்பா எங்கெ?னு தினமும் கேட்டுட்டு, நச்சரிச்சுட்டு இருக்கா, அவளுக்கு என்ன பதில் சொல்ல? இந்த வசனம் தவறு. இனி வரும் காலங்களில் டெய்லி கேட்பாளே? என்ன பதில் சொல்ல என்பதே சரியான வசனமா இருக்கும்
6 கணவன் மிஸ் ஆகி விட்டான் என வருத்தத்தில் இருக்கும் ,மனைவி ஃபுல் மேக்கப்பில் லிப்ஸ்டிக் உட்பட உலா வருவது உறுத்துகிறது. மேக்கப் மேன் டல் மேக்கப் போட்டிருக்கலாம்
7 ஒப்புதல் வாக்குமூலம் தந்த நாயகனின் வாக்கை நம்பாமல் போலீஸ் அவரை திருப்பி அனுப்புவதில் லாஜிக்கே இல்லை, அவங்களுக்கு ஒரு கேஸ் முடியுது , அந்த வாய்ப்பை ஏன் இழக்கறாங்க ?
8 செல் ஃபோனில் இருந்து சிம் கார்டை தனியா கழட்டி எடுத்திருந்தால்தான் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா என குரல் வரும், பேட்டரி டவுன் ஆகி செல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டால் குரல் ஸ்விட்ச்டு ஆஃப் என்று தான் வ்ரும். ஆனால் போலீஸ் ஆஃபீசர் வில்லனின் செல்லுக்கு ஃபோன் செய்யும்போது அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா என குரல் வருகிறது
9 ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நாயகன் வந்தபோது ஹெட் கான்ஸ்டபிளோடு 2 கான்ஸ்டபிள்களும் பெஞ்ச்சில் வேறு இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களும் சாட்சியே . ஆனால் நாயகன் நான் அப்படி எல்லாம் வாக்கு மூலம் தரவில்லை என பல்டி அடிக்கும்போது ஆதாரம் இருக்கிறது என போலீஸ் சொல்லவிலையே?
10 சைக்கிள் ரிக்ஷாக்காரன் போலீஸில் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும்போது நாயகன் வழக்கமா பேரம் பேசுவார், சம்பவம் ந்டந்தபோது பேரம் பேசலை என சொல்றான், ஆனா சாக்கு மூட்டைல பிணம் இருந்ததால அந்த வாடை அடிப்பது பற்றி எதூவும் சொல்லலை. அதே போல [பஸ்சில் ப்யணிக்கும்போதும் அந்த பிரச்சனை நாயகனுக்கு வரவில்லை
11 வில்லன் தன் செல் ஃபோனில் போலீஸ் ஆஃபீசரின் அந்தரங்க வீடியோ க்ளிப் கேலரியில் வைத்திருக்கிறான், ஆனால் ஃபோன் லாக் செய்யாமல் இருப்பானா? அவனது ஃபோனை நாயகன் ஓப்பன் பண்ணி எப்படிப்பார்க்க முடிந்தது ?
12 போலீஸ் ஆஃபீசர் ஒரு பெண்ணுடன் இருப்பதை வீடியோ எடுத்து வைத்து பொலீசையே ரவுடி மிரட்டி வருகிறான் என்பதும் நம்பும்படி இல்லை . அப்பவே அவனை லாக்கப்ல தள்ளி ஃபோனை பிடுங்கி இருந்தா மேட்டர் ஓவர்
13 டெட் பாடியை அவ்வளவு கனகச்சிதமாக அப்புறப்படுத்துபவர் தான் கொலை செய்த நபரின் செல் ஃபோன் தன் வீட்டில் கிடப்பதை கவனிக்கவில்லை என்பதும் நம்பகத்தன்மை இல்லை
ரசித்த வசனங்கள்
1 இந்த நகர வாழ்க்கைல குளிக்கறதுக்குக்கூட தண்ணீர் கிடைக்க மாட்டேங்குது , ரேஷன் கடைல தர்ற மாதிரி அளந்து ஒரு பக்கெட் தண்ணீர்தான் கிடைக்குது, அடுத்த ஜென்மத்துல செடி, கொடி ,மரமாப்பிறந்தாலாவது தண்ணீர் இஷ்டம் போல கிடைக்கும்
2 ஸ்கூலில் ஒரு மாணவனை அடித்த போது மூன்று நாட்கள் தூங்க முடியாம இருந்தேன், ஆனா இவனைக்கொலை செஞ்ச பின்னும் நிம்மதியா என்னால தூங்க முடிஞ்சுது
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - மிக மெதுவாக நகரும் திரைக்கதை என்பதால் ஸ்லோ பர்ன் த்ரில்லர் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், வன்முறைக்காட்சிகளோ, , அடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகளோ இல்லை . ரேட்டிங் 2.25 / 5
Vadh | |
---|---|
Directed by | Jaspal Singh Sandhu Rajiv Barnwal |
Written by | Jaspal Singh Sandhu & Rajiv Barnwal |
Produced by | Luv Ranjan Ankur Garg Neeraj Ruhil Nymphea Saraf Sandhu Subhav Sharma |
Starring | |
Cinematography | Sapan Narula |
Edited by | Bharat S Rawat |
Music by | Gurcharan Singh |
Production companies | |
Distributed by | Yash Raj Films |
Release date |
|