Showing posts with label V1 MURDER CASE -வி1 மர்டர் ஸ்டோரி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label V1 MURDER CASE -வி1 மர்டர் ஸ்டோரி - சினிமா விமர்சனம். Show all posts

Monday, June 15, 2020

V1 MURDER CASE -வி1 மர்டர் கேஸ்- சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )



2019ல்  ரிலீஸ் ஆகி சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் , இது ஓவர் ஹைப் ஆக இருக்கே என சிலராலும்  விமர்சிக்கப்பட்ட இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் புதுமுகங்கள் நடிக்க புதுமுக இயக்குநரால் படைக்கப்பட்டது என்பது தனி சிறப்பு.அமேசான் பிரைம்ல கிடைக்குது


ஹீரோ தடயவியல் துறைல பணி ஆற்றுபவர்  ஹீரோயின் ஒரு போலீஸ் ஆஃபீசர் . இருவரும் நண்பர்கள் . ஒரு கொலை கேசில் நாயகனின் உதவியை நாயகி கேட்கிறார் இருவரும் இணைந்து அந்த கேசை எப்படி டீல் பண்ணாங்க என்பதே கதை


மேரேஜ் பண்ணிக்காம லிவ்விங் டுகெதரா  ஒரு வீட்டில் வசிக்கும் லவ் ஜோடி . சின்ன சின்ன மனத்தாங்கல்கள்  வருது. திடீர்னு ஒரு நாள் அந்தப்பொண்ணு நடு ரோட்டில் கொலை செய்யப்படுது. அந்தக்கொலையை செய்தது அவள் காதலனா? இன்னொரு பாய்  ஃபிரண்டா? பொண்ணுங்க யாரா இருந்தாலும் அவங்க பின்னாடியே போற ப்ளே பாயா? என சந்தேக லிஸ்ட்டில் வரும் ஒவ்வொருவரையும் விசாரித்து பின் கொலையாளியை கண்டு பிடிக்கறாங்க


 ஹீரோவா  ராம் அருண் கேஸ்ட்ரோ நல்லா பண்ணி இருக்கார் . ஓப்பனிங்  சீனில் தன் டீம்க்கு எப்படி ஒரு கொலையை புலனாய்வு செய்வது என டீச்சிங் கொடுக்கும் சீன் அருமை . அந்த சீன்லயே இயக்குநரிடம் ஏதோ சரக்கு இருக்குப்பா என  தெரிந்து விடுகிறது. 

 விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் , சேரன் நடித்த  ராஜாவுக்கு செக் படங்களில்  ஹீரோ  திடீர்னு தூங்கிடுவார் என காட்டப்பட்டது ,இதில் ஹீரோவுக்கு   இருட்டைக்கண்டால் பயம்  எனும் கான்செப்ட்  பயன்படுத்தப்பட்டிருக்கு . அவரு எதுனா சாகசம் பண்றதுன்னா பகல்லயே பண்ணிடனும். ஓப்பனிங்க்ல அவர்  கனவு காண்பது , உயர் அதிகாரியிடம் ரொம்ப பிகு பண்ணுவது எல்லாம் கொஞ்சம் எரிச்சல் .

 விக்ரம் படத்தில் கமல் இது போல் பிகு பண்ற சீன் வந்தா அவரு பெரிய ஹீரோ , ஏத்துக்கிட்டோம். இவரு  பண்ற பில்டப் எல்லாம்....


இவரோட கேரக்டர் ஸ்கெட்சில்  இயக்குநர் கொஞ்சம் குழம்பி இருக்கிறார், இவரை  தடய வியல் அதிகாரியா காட்டுவதா? போலீஸ் ஆஃபீசர் போல் காட்டுவதா? என்பதில் குழப்பம்


 நாயகியாக  போலீஸ் ஆஃபீசராக வரும் விஷ்ணுப்பிரியா கச்சிதமான நடிப்பு . போலீஸ் யூனிஃபார்மிலும் சரி , கலர் ஃபுல் டிரசிலும் சரி , வைஜெயந்தி ஐபிஎஸ்  விஜயசாந்தியின் கம்பீரம் காட்டி இருக்கிறார்

காதலனாக , காதலியாக வருபவர்கள் நல்ல நடிப்பு . விசாரணை அறையில் காதலன் எடுத்ததுமே நான் தான் சார் அவளை கொலை செஞ்சேன் என ஷாக் கொடுத்து  பின் அவர்  புலம்பும் காட்சிகள் யதார்த்தம்


ஜொள் ஜக்கு வாக வரும் அந்த ப்ளே பாயின் அலட்டல் ரசிக்க வைக்கும் காமெடி . சரியான அரை லூஸ் கேரக்டர் 


 பின்னணி இசை கலக்கி இருக்கனும், ஆனா சொதப்பல் ரகம். பாடல்கள் இல்லாதது ஒரு ஆறுதல் . ஒளிப்பதிவு பக்கா , எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம் பண்ணி இருக்கலாம்

 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  எதிர்பாராதாது . க்ரைம்  த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் 

சபாஷ் இயக்குநர்


1  ஹீரோ - ஹீரோயின் இருவருக்குமான  ரிலேஷன் ஷிப்  ரொம்ப நல்லாருந்தது, லவ் இல்லை   நட்பு மட்டும் , நாயகி நாயகனுடன் தனிமையில் இருக்கும்போது வாடா போடா என உரிமையாக பேசுபவர் ஆஃபீசில் 4 பேர் முன்னிலையில் மரியாதை கொடுப்பது நல்ல அண்டர்ஸ்டேண்டிங். இந்த  ரிலேசன்ஷிப் புதுசா காட்டி இருக்காங்க 


2  ஓப்பனிங்  சீன்லயே நேரா கதைக்கு வந்தது. பாடல்கள் , டூயட் , மொக்கை காமெடி டிராக் வைக்காதது 


3  கூர்மையான வசனங்கள்  , புத்திசாலித்தனமான  காட்சிகள் 


4  ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு அபாரம் . படத்தின் பெரும்பகுதி அந்த விசாரணை அறையில் நடைபெற்றாலும்  போர் அடிக்காத வண்ணம் எடுத்தது


நச் வசனங்கள் 

1  கில்லரோட எதிரி  யாரு?

 போலீஸ்?

 கொல்லப்பட்டவனின்   ரத்தம்


2   புலனாய்வுத்துறைக்கு வந்துட்டா எல்லாமே எவிடென்சா தெரியனும், டெட்பாடி உட்பட 


3  ஒருத்தர் கை நீட்டிப்பேசறப்ப   கையும் , பார்வையும்  ஒரே நேர் கோட்டில் இருக்கனும், இல்லைன்னா அவர் பேசுவது உண்மை இல்லை 


 வார்த்தையை வெச்சு எதையும் முடிவு பண்ணிடக்கூடாது , டியர் கஸ்டமர்னு டெய்லி ஆஃபீஸ்ல 1000  பேருக்கு டியர் போடறோம்( டைப் பண்றோம்) , ஆனா அவங்க  டியர் ஆகிட முடியாது


5  வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கு 


6 நம்மை நேசிச்சவங்க நம்ம கூடவே வரனும்னு நினைக்கறோம் , நடக்கலை , அட்லீஸ்ட் அவங்க நினைவுகளாவது கூட வரனுமில்ல? 


7  டைம்க்கு கிடைக்காத எந்த ஒரு ஜஸ்டிசும்  யூஸ்லெஸ்


8 நான் சொல்றதுல நம்பிக்கை  இல்லைன்னா நான் லவ் பண்ணூன எல்லா(!!) பொண்ணுங்க கிட்டேயும் கேட்டுப்பாருங்க 

9  ஒருவரோட பார்வையையும் , பேசரதையும்  வெச்சு பாதி உண்மையை கண்டு பிடிச்சிடலாம், மீதி உண்மையை அவர் பாடி லேங்க்வேஜ் காட்டிக்குடுத்துடும்


10  மனசுல வலி இருந்தா இடது கண்ணில் இருந்துதான் முதல் கண்ணீர் வரும் 


11  ஒரு பொண்ணு கொலை ஆகி இருந்தா 955  அவ  க்ளோஸ் சர்க்கிள்ல  யாரொ ஒருத்தராதான் காரணகர்த்தாவா இருக்கும்  

12  பாப்பா பிறந்தா என்னைக்கண்டுக்க மாட்டே இல்ல?


நீதான்மா என் முதல் பாப்பா 


13   எல்லா மாற்றத்துக்கும் ஒரு தொடக்கம் வேணும்


14  அவன் ரொம்ப பிரில்லியண்ட்டா இருக்கான்

 ஓஹோ, அப்போ நான் கேர்லெஸா?


15   பெத்த பொண்ணு சாகக்கிடக்கும்போது கூட என் ஜாதி ரத்தம் தான்  ரத்த தானமா வேணும்னு அடம் பிடிக்கறவங்க உண்டு 



 லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1    ஓப்பனிங் சீனில் ஹீரோவுக்கு வரும் கனவு . அவருக்குண்டான வியாதி பற்றிய  டீட்டெய்லிங் தேவை இல்லை 


2   உயர் அதிகாரியை ஹீரோ மதிப்பதே இல்லை , அவருக்கே ஆர்டர் வேற போடறார்


3  உயர் அதிகாரியிடம் மீட்டிங்கில் இருக்கும்போது அடிக்கடி ஹீரோவுக்கு ஃபோன் கால் வருது. அது கடுப்படிக்குது. சைலண்ட் மோட்ல ஃபோனை வெச்ச பின் தான்  மீட்டிங்கே நடக்கும் 


4 அனாதைக்குழந்தையை ஹீரோ தத்து எடுப்பது, அவங்க அடிக்கடி  ஃபோன் பண்றது , இவர் பதில் சொல்றது எல்லாம்  ட்ரிம் பண்ணி இருக்கலாம். கதைக்கு ஸ்பீடு பிரேக்


5   ஒரு பணக்காரப்பையன் செலவுக்காக  ரோட்டில் பெண்ணிடல் செயின் பறிக்கும் காட்சி வருது. ஜீரணிக்கவே முடியலை  அவன் அவனோட வீட்லயே திருடுவதுதான் சேஃப். இப்டி யாரும்  ரிஸ்க் எடுக்க  மாட்டாங்க 


6  காதலியுடன் சரியான புரிதல் இல்லாமல் அடிக்கடி சண்டை போடும்  காதலன் பிறகு காதலியின் கொலைக்குப்பின் தான் தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை 

7   ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன நபர்  அவரை வீட்டில் வைத்தோ நாலு சுவருக்குள் வைத்தோ கொலை செய்வதுதான் அவருக்கு சேஃப்டி . நடு  ரோட்டில் கொலை பண்ணுவது ரிஸ்க்


8  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில் கொலையாளி மீது ஆடியன்சுக்கு வெறுப்பு வரனும் , பரிதாபம் தான் வருது இது பின்னடைவு 


சி.பி கமெண்ட் =   முன் பாதி விறுவிறுப்பு , பின் பாதியில்  முன் பாதி ஸ்லோ ,  கடைசி 30 நிமிடங்கள் செம ஸ்பீடு . பார்க்கலாம். 
 -ரேட்டிங் - 3 / 5