Showing posts with label UYARANGALIL (1984) - உயரங்களில் ( மலையாளம்) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label UYARANGALIL (1984) - உயரங்களில் ( மலையாளம்) - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, June 09, 2024

UYARANGALIL (1984) - உயரங்களில் ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

                     


எதிர் மறை  நாயகன்  ஆக  மோகன் லால்  கலக்கிய  படம்  இது . கமர்ஷியலாக  கிராண்ட்  சக்சஸ்.  எம் டி  வாசுதேவன் நாயர்  கதை , திரைக்கதை  எழுத  ஐ  வி  சசி இயக்கிய  படம் இது  

ஸ்பாய்லர்  அலெர்ட்

  டீ எஸ்டேட்டில்  நாயகன்  அசிஸ்டெண்ட்  மேனேஜர். அவருக்குக்கீழ்  பணியாற்றும்  கிளர்க் , கார்  டிரைவர்  ஆகிய  இருவர்  உதவியுடன்  ஒரு  சதித்திட்டம்  தீட்டுகிறார். மேனேஜர்  வங்கியில்  இருந்து  ஒரு  பெரிய  தொகை  வித்ட்ரா  பண்ணி  எடுத்து  வரும்போது  யாரோ  கொள்ளையர்கள்  இருவரையும்  அடித்துப்போட்டுப்பணத்தைப்பிடுங்கிச்சென்றனர்  என்று  டிராமா  போட  திட்டம்  போடுகிறார்கள் 


 இதை  எப்படியோ  யூகித்த  மேனேஜர்    பணத்தை  தன்னிடம்  வைத்துக்கொண்டு  வெறும்  பேப்பர்  கட்டுக்களை சூட்கேசில்  நிரப்பிக்கொடுத்து  விடுகிறார். வழியில்  மூவரும்  நாடகத்தை  அரங்கேற்ற  நினைக்கும்போது  மேனேஜர்  பின்னாலயே  வந்து  கையும்  , களவுமாகப்பிடிக்கிறார்


மேனேஜர்  வீட்டுக்குப்போய்  அவரை  சமாதனப்படுத்தலாம்  என  நாயகன்  மற்ற  இருவரையும்  அழைத்துக்கொண்டு  போய்  வீட்டின்  வாசலில்  இருவரை  நிற்க  வைத்து  உள்ளே  போய்  மேனேஜரைக்கொலை  செய்து  விடுகிறான் 


  மேனேஜரின்  மனவி  விதவை  ஆகிறாள் . அவளுக்குக்கம்பெனி  தர  வேண்டிய  பி எஃப்  பணம்  ரூ 82,000  (  அந்தக்கால  கட்டத்தில்  தங்கம்  ஒரு பவுன்  விலையே  ரூ 1970  தான்.இப்போது ரூ 53,000 +  அப்போ 82000  என்பது   இப்போதைய  மதிப்பு   ரூ 25   லட்சம்) 


 நாயகன்  அந்தப்பணத்தை  ஆட்டையைப்போட  நினைக்கிறான். விதவை  ஆன  மேனேஜர்  மனைவியைத்தன்  வலையில்  வீழ்த்துகிறான் . நாயகனுக்கு  ஏற்கனவே  ஒரு  காதலி  உண்டு . அவள்  அடிக்கடி  நாயகனைத்தொந்தரவு  செய்ய   அவளையும்  கொலை  செய்து  தற்கொலை    போல  செட்டப்  செய்கிறான். டிரைவர்  நாயகனுக்கு  எதிரான  சாட்சி  ஆகி  விடக்கூடாது  என  அவனையும்  ஒரு  விபத்தில்  மரணித்தது போல  செட்டப்  செய்கிறான்


 இப்போது  நாயகன்  தான்  மேனேஜர். பிரமோஷன். அந்த  எஸ்டேட்டின்  சேர்மேன்  வயதான  காரணத்தால்  ரிட்டயர்மென்ட்  எடுத்துக்கொள்ள  முடிவு  எடுத்து  தன்  மகளை  எஸ்டேட்டில்  பயிற்சி  கொடுத்து  அவளைச்சேர்மேன்  ஆக்கத்திட்டம்  போடுகிறார்


நாயகன்  தான்   சேர்மேன்  மகளுக்கு  பயிற்சியாளர். நாயகன்  இப்போது  சேர்மேன்  மகளைக்கல்யாணம்  செய்து  சொத்துக்களை  அபகரிக்க  நினைக்கிறார். அவர்  திட்டம்  நிறைவேறியதா? இல்லையா? என்பது  மீதி  திரைக்கதை. 


  நாயகன்  ஆக  மோகன்  லால் பக்கா  வில்லன்  ஆக  ஆரம்பம்  முதலே  அமர்க்களப்படுத்துகிறார். காதலி ,  விதவை , சேர்மேன்  மகள்  என  மூவரையும்  காதல்  வலையில்  வீழ்த்துவது  செம  வில்லத்தனம் . போலீஸ்  ஆஃபிசிஅர்களிடம்  சகஜமாகப்பேசுவது , அலட்டிக்கொள்ளாமல்  இருப்பது   போன்ற  லாவகங்களை  அசால்ட்  ஆக  செய்கிறார்


கார்  டிரைவர்  ஆக  நெடுமுடி  வேணு , கிளர்க்  ஆக  ரகுமான்  நடித்திருக்கிறார்கள் , இருவர்  முகத்திலும்  குற்ர  உணர்வு  அருமையாக  வருகிறது


 நாயகனின்  காதலி  ஆக  காஜல்  கிரண் , விதவை  ஆக  ஸ்வப்னா , சேர்மேன்  மகளாக  விஜி  ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் . அனைவரும்  அழகு ,  இளமை , கிளாமர்  கனகச்சிதம் 


சத்ரியன்  படத்தில்  வில்லன்  ஆகக்கலக்கிய  திலகன்  இதில்  சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்  ஆக  வருகிறார். வீணடிக்கப்பட்ட   மகா கலைஞன்


சப்  இன்ஸ்பெக்டர்  ஆக ரத்தீஷ்  கச்சிதம் . கொலை  செய்யப்படும்  மேனேஜர்  ஆக   ஜெகதி  ஸ்ரீ  குமார்   நடித்திருக்கிறார்


ஷியாமின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசையில்  இன்னும் கவனம் ச் எலுத்தி இருக்கலாம் 


ஒளிப்பதிவு  ஜெயனன்  வின்செண்ட் ,மூன்று  கதாநாயகிகளையும்  அழகாகக்காட்டி  இருக்கும்  கேமரா  நாயகனை  மட்டும்  அதிக  முறை  க்ளோசப்  ஷாட்களில்  படம்  பிடித்திருக்கிறது 


கே  நாரயனன்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது  


சபாஷ்  டைரக்டர்


1   நான்  லீனியர்  கட்டில், ஃபிளாஸ்பேக்  உத்தியில்  எல்லாம்  கதை  சொல்லாமல்  சிம்ப்பிளாக, நேரடியாகக்கதை  சொன்ன  விதம்  குட் 


2   மூன்று  நாயகிகளையும்  சரியாக  , முறையாகப்பாயன்படுத்திய  விதம் 


3  மோகன்  லாலின்  வில்லத்தனம்  கலந்த  நடிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


1    இந்த  முகத்தைப்பார்த்துமா  உங்களுக்குக்குற்ற  உணர்ச்சி  வர்லை 


 இந்த  அழகான  முகத்தைப்பார்த்தா  எனக்கு  காதல்  உணர்ச்சி  தான்  வருது 


2  பெண்  என்பதால்  கிடைக்கும்  தனிச்சலுகை  எனக்குத்தேவை  இல்லை 


3   திரமையும், அங்கீகாரமும்  சில ச் அமயம்  தனித்தனி  திசைகளில்  பயணிக்கும். ஆனால்  திறமை சாலிக்கு  அங்கீகாரம்  முக்கியம், 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , இடைவேளை  ட்விஸ்ட்  என்பதெல்லாம்  எதுவும்  இல்லை . அதற்கு  இயக்குநர்  மெனக்கெடவுமில்லை 


2  நாயகன்  தன்  காதலியுடன்  பப்ளிக்  ஆக  ஊர்  சுற்றுகிறான்,  அவள்  சாகும்போது  3  மாத  கர்ப்பம். போலீஸ்க்கு  நாயகன்  மீது  ஏன் சந்தேகம்  வரவில்லை ?


3   ஒரு  ஆஃபீசில் / கம்பெனியில்  பல  வருடங்களாகப்பணி  ஆற்றும்  அசிஸ்டெண்ட்   மேனேஜர்  ஒரு  நாள்  கூடவா  மேனேஜர்  வீட்டுக்குப்போய்  இருக்க மாட்டார் ?. மேனேஜர்  சாகும்  வரை  மேனேஜர்  மனைவியைக்கண்டதே  இல்லை  என்பது  நம்பும்படி  இல்லை . ஒரு  பார்ட்டி ,  ஒரு  ஹோட்டல்  என  பார்க்கும்  வாய்ப்பு  உண்டே ?


4    நாயகனால்  கொலை செய்யப்படும்  கார்  டிரைவரின்    இளவயது  மகள்  அடிக்கடி  ஆஃபீசுக்கு  வருகிராள் ,. அவள்  மூன்று  நாயகிகளை  விடவும்  அழகாக, இளமையாக  இருக்கிறார். ஆனால்  நாயகனின்  பார்வை  அவள்  மீது  ஏன் விழவில்லை ? 


5  சேர்மேன்  மகள்  முன்  நாயகன்  மேனேஜர்  மனைவியான  விதவையை  அறிமுகம்  செய்யும்போது  ஜஸ்ட்  லைக்  தட்  விதவை  என்று  மட்டுமே  சொல்கிறார். அப்போது  அப்பெண்  ஏன்  சேர்மேன்  மகளிடம்  இவரின்  காதலி  , வருங்கால  மனைவி  என  சொல்லவில்லை ? 


6  நாயகனுக்கு  எதிரான  இரண்டு  சாட்சிகளில்  ஒருவர்  கார்  டிரைவர்., அவரைக்கொலை  செய்யும்  நாயகன்  ஏன்  ரகுவை  மட்டும்  விட்டு  விடுகிறார் ? 


7  சேர்மேன்  மகளுடன்  நாயகன்  ஆஃபீசில்  இருக்கும்போது  ஒரு  காட்சியில்  வெறும்  பர்முடாசுடன்  இருக்கிரார். இதுத்கான்  கம்பெனியின்  டிரஸ்கோடா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ /ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    அந்தக்கால  த்ரில்லர்  படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம். ட்விஸ்ட்  ஏதும்  இல்லை . ரேட்டிங் 2.75 / 5 


Uyarangalil
Directed byI. V. Sasi
Written byM. T. Vasudevan Nair
Produced byS. Pavamani
StarringMohanlal
Nedumudi Venu
Rahman
Ratheesh
Kajal Kiran
Swapna
CinematographyJayanan Vincent
Edited byK. Narayanan
Music byShyam
Production
company
Prathap Chithra
Distributed bySheeba Films
Aishwarya Release
Release date
  • 30 November 1984
CountryIndia
LanguageMalayalam