Showing posts with label UPGRADED (2024 ) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label UPGRADED (2024 ) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, February 28, 2024

UPGRADED (2024 ) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்


தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக  அமேசான்  பிரைம் ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆன  படம் . தமிழ்  சினிமாவில் ஏழையாக  இருக்கும்  நாயகன்  தான்  ஒரு  பெரிய  பணக்காரன்  என்பது  மாதிரி  பில்டப்  கொடுத்து  நாயகியைக்காதலிப்பான், அதையே  உல்டாவாக  ஏழையாக  இருக்கும்  நாயகி  தான்  ஒரு  பணக்காரி  என்பது  போல  பில்டப்  கொடுத்து  செல்வந்தனைக்காதலித்தால்  அதுதான்  மேம்படுத்தப்பட்ட  அப்கிரேடட்



ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகி  ஒரு  சாமானயப்பெண் . ஆர்ட்  கேலரி  ஒன்று  சொந்தமாக  வைக்க  வேண்டும்  என்பதுதான்  அவரது  லட்சியம் . ஃப்ளோரிடா    மாநிலத்தில்  வசிக்கும்  அவர்  ஒரு  இண்ட்டர்வ்யூ  அட்டெண்ட்  செய்கிறார். ஏலம் நடத்தும்  இடத்துக்கு   ஏல  உதவியாளர்  பணிக்கான  நெர்முகத்தேர்வு 


  அதில்  நாயகி  தேர்வாகி  விடுகிறாள் . கம்பெனி  எம்  டி  யின்  பாராட்டைப்பெறும்  அளவு   நாயகி  யாரும்  கண்டு பிடிக்காத  ஒரு  குறையை , மைனஸ்  பாயிண்ட்டை  குறித்த  நேரத்தில்  பாயிண்ட்  அவுட்  செய்து  நல்ல  பேர்  வாங்குகிறாள் 


 இதனால்  எம்  டி  உடன்  ஃபிளைட்டில்   லண்டன்  செல்லும்  வாய்ப்புக்கிடைக்கிறது.  எம்  டி யின்  அசிஸ்டெண்ட்  ஆக  ஃபிளைட்டில்  செல்லும்  அவர்   அங்கே  ஃபிளைட்டில்  நாயகனை  சந்திக்கிறாள்.  இருவருக்கும்  இடையேயான  உரையாடலில்   நாயகி  தான்  எம்  டி  என  நாயகன்  தவறாக  நினைத்து  விடுகிறான்


 நாமா  பொய்  சொன்னோம் ? அவன்  தானே  தப்பாகப்புரிந்து  கொண்டான்  என  நாயகியும்  அந்தப்பொய்யை  மெயிண்ட்டெயின்  செய்கிறாள் . லண்டன்  சென்றதும்  நாயகன்  தன் அம்மாவிடம்  நாயகியை  அறிமுகம்  செய்து  வைக்கிறான். அம்மாவுக்கும்  நாயகியைப்பிடித்து  விடுகிறது 


 ஒரு  கட்டத்தில்  இருவரும்  காதல்  வசப்படுகிறார்கள் . ஆனால்  நாயகி  எம்  டி   அல்ல , சாதா  அசிஸ்டெண்ட்  தான்  என்ற  உண்மை  தெரிய  வரும்போது  நாயகன்  பொய்  சொன்னதற்காக  நாயகியை  வெறுக்கிறான் . இவர்கள்  காதல்  கை  கூடியதா ? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆனா  ஆக   கேமிலா  மெண்டஸ்  அபாரமாக நடித்துள்ளார் ,. அவரது  அழகான  முகமும், களையான  ஹேர்  ஸ்டைலும் , கண்ணியமான  ஆடை  வடிவமைப்பும்  அவருக்கு  பெரிய  பிளஸ் 


 நாயகன்  ஆக  ஆர்ச்சி  ரேனக்ஸ்   அர்விந்த்சாமி போல  மாதவன்  போல ஏ  செண்ட்டர்  ஆடியன்சுக்கான  நாயகன்  ஆக  முகத்துலயே  பணக்காரக்களையுடன்  கலக்கி  இருக்கிறார்


 நாயகன் - நாயகி  இருவருக்குமிடையேயான  கெமிஸ்ட்ரி   நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


  நாயகனின்  அம்மா ,  நாயகியின்  எம்  டி இரு  பெண்களும்  ஒவர்  ஆக்டிங் . மற்ற  கதாபாத்திரங்கள்  தங்களுக்குக்கொடுக்கப்பட்ட  பாத்திரத்தைக்கச்சிதமாக  செய்திருக்கிறார்கள் 


 ஒளிப்பதிவு ,  ஆர்ட்  டைரக்சன் , லொக்கேஷன் , இசை , பின்னணி  இசை   போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  குட்  104  நிமிடங்கள்  டைம் டியூரேஷன் வரும்படி  டிரிம்  செய்யப்பட்டு  இருக்கிறது 


 மேலும்  மூவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  தனியே  இயக்கி  இருக்கிறார்   கர்ல்சன்  யங்க் 


சபாஷ்  டைரக்டர்


1   காக்கா  உட்காரப்பனம்பழம்  விழுவது  போல  நாயகிக்கு  தானாகவே  அதிர்ஷடம்  தேடி  வருகிறது  என்பதை  தொடர்ந்து  பல  காட்சிகளில்  நிரூபித்த  விதம் 


2   நாயகன் - நாயகி  இருவருக்குமிடையே  ஆன  கான்வர்சேஷன் , கெமிஸ்ட்ரி , காதல்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  லண்டன்ல  நீ  வாழனும்னா  ரெண்டு  முக்கியமான  விஷயங்களைத்தெரிஞ்சுக்கனும் 

1   எப்ப  வேணா  மழை  வரலாம், தயாரா  இருக்கனும் 

2  யார்  வேணா  உன்னை  ஏமாத்தலாம்  எச்சரிக்கையா  இருக்கனும் 


2  பிறந்த  நாள்னா  ஒரு  வாரம்  கொண்டாடனும், ஒரே  நாளில் அது  முடிவதை  அ வமானமா  நினைக்கிறேன்


3    பணம்  மனிதர்க்ளை  மாற்றிப்பார்த்திருக்கேன், அரக்கர்களாக்கிப்பார்த்திருக்கேன், ஆனா  நீ  எப்பவும் நீயாதான்  இருந்திருக்கே


4  ஒரு  முட்டாளின்  முட்டாள்தனமான  கருத்து   நாம்  நம்  மீது  நம்பிக்கை  இழக்க  போதுமானதாக  இருக்க  விடலாமா? 


5  நான்  நானாக  இல்லாமல்  வேறு  யாரோவா  இருந்ததில் எனக்கு  மிக்க  வருத்தம் 


  நான்  நடிப்பை  ரசிக்கிறேன். இன்னொருவராக  நடிப்பது  எவ்ளோ  கஷ்டம்  தெரியுமா? 


6  என்  கிட்டே  எதுவுமே  இல்லை , எந்தத்திறமையும்  இல்லை  என்பதை  என்னைத்தவிர  வேற  யாருக்கும்  தெரியக்கூடாது  என்பதில்  உறுதியா  இருக்கேன் 

7   சன்மானம்  கொடுக்காம  பாராட்டு  மட்டும்  கொடுத்து  என்ன  பயன் ? இவங்க  சொல்ற  வெல்டன், பிரமாதம்  போன்ற  வார்த்தையை வெச்சு  நான்  வீட்டு  வாடகை  கட்ட  முடியுமா? 


8  இங்கே  எதுவுமே  உண்மை  இல்லை , யாரையும்  நம்பாத


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    நாயகன் -  நாயகி  இருவரிடமும்  யதார்த்தமான  நடிப்பை  வாங்கிய  இயக்குநர்  நாயகனின்  அம்மா ,  நாயகியின்  எம்  டி  இருவரிடமும்  ஓவர்  ஆக்டிங்கை  கண்டு  கொள்ளாமல்  விட்டது  ஏனோ ? 


2  நாயகியின்  ஐ  டி  கார்டைப்பார்க்காமலேயே  நாயகன்  ஏமாறுவது  எப்படி ? 


3  உளவியல்  ரீதியாக  பெண்கள்  வேண்டுமானால்  வசதியான  ஆள்  தான்  வேண்டும்  என  நினைக்கலாம், ஆனால் பொதுவாக  செல்வந்த  ஆண்கள்  அழகான  பெண்  போதும்  என்று  தான்  நினைப்பான் . நாயகி  ஏழை  என்பது  தெரிந்து  அவர்  விலகுவது  நம்ப  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  க்ளீன்  யூ , ஆனால்  லிப்    லாக்  காட்சிகள்  2  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி  ஆன  ரொமாண்டிக்  காமெடி  டிராமா ,. பொறுமையாக  இருப்பவர்கள்  நாயகியின்  அழகு  முகத்துக்காகப்பார்க்கலாம்  . ரேட்டிங் 2.5 / 5


Upgraded
Release poster
Directed byCarlson Young
Written by
  • Christine Lenig
  • Justin Matthews
  • Luke Spencer Roberts
Produced by
  • Mike Karz
  • William Bindley
  • Lena Roklin
  • Piers Tempest
Starring
CinematographyMike Stern Sterzynski
Edited byBruce Green
Music byIsom Innis
Production
companies
Distributed byAmazon Prime Video
Release date
  • February 9, 2024
Running time
104 minutes[1]
CountryUnited States
LanguageEnglish