Showing posts with label UNLOCK RAGHAVA (2025) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா ). Show all posts
Showing posts with label UNLOCK RAGHAVA (2025) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா ). Show all posts

Friday, February 21, 2025

UNLOCK RAGHAVA (2025) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா )

               

        7/2/2025   அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று  இருக்கும் படம் ,இன்னும் ஓடிடி யில் வரவில்லை .26 நாட்கள் காத்திருக்கவும் .இது ஜாலியான  அட்வென்ச்சர்  காமெடி  ஆக்சன்  டிராமா  கேட்டகிரியில்  அமைந்த படம் . நாயகன்  ஆன மிலிந்த்   தன முதல் படத்திலேயே  நம்ம  ஊர் ஆர் பாண்டியராஜன் போல  காமெடியில்   முத்திரை  பதித்திருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  குரு சிஷ்யன்  படத்தில்  ரஜினி சொல்வாரே ?  ப்பூ .. இதெல்லாம் ஒரு  பூட்டா? . அது மாதிரி  நாயகன் ஒரு ஜெகஜாலக்கில்லாடி .சாவியோ , டூப்ளிகேட்  சாவியோ  இல்லாமல்  ஒரு பூட்டில்  காதை  வைத்துக்கேட்டே  அதன் மெக்கானிசம் அறிந்து சுலபமாக பூட்டைத்திறந்து விடுவார் 


நாயகன்  சின்னவயதில்  தன்  க்ளாஸ் மேட்  ஆன  ஜானகியை உயிருக்கு உயிராக நேசித்தவர் .சந்தர்ப்பசூழல்  காரணமாக  நாயகி வேறு  இடத்துக்குப்போய் விட்ட்தால் இருவரும் பிரிகின்றனர் .பல வருடங்கள்  கழித்து  நாயகியின் அப்பா ஒரு  தொல் பொருள்  ஆராய்ச்சியாளர்  ஆக இங்கே   வருகிறார். ஒரு புதையல் பானையைக்கண்டு பிடிக்கிறார் . அதன்  லாக்கைத்திறக்க   நாயகனின் உதவி தேவை 


 வில்லன்  நாயகியைக்கடத்திக்கொண்டு போகிறான் . புதையல்  பானையைக்கொடுத்தால் தான் அவள் ரிலீஸ்  என்கிறான் .புதையல்  பானையை வேறு  ஒரு கும்பல் கடத்தி விடுகிறது . நாயகன் எப்படி பெண்ணையும், புதையலையும் மீட்டான் என்பது மீதி திரைக்கதை  


 நாயகன் ஆக  அறிமுக   நடிகர் மிலிந்த் அசால்ட்   ஆக நடித்திருக்கிறார் .சண்டைக்காட் சிகளில்  விஷால்   ரேஞ்சுக்குக்கலக்குகிறார் .நாயகி  ஆக ராக்சல்   டேவிட்  பரவாயில்லை ரகம் 


காமெடியன்  ஆக  அந்த   ஊர் சாது கோகிலா  நம்ம   ஊர் வடிவேலு மாதிரி   உடல் மொழியில்கலக்குபவர்  படம் முழுக்க  காமெடி செய்கிறார் 


இவர்கள்   போக  அவினாஷ் , ஷோபா ராஜ் , ரமேஷ் பட் ,வீணா  சுந்தர் , பூமி ஷெட்டி  என  அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் 


அனூப் ஸீலின்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி இசை சுமார் ரகம் .ஒளிப்பதிவு லவித . ஓகே ரகம் . எடிட்டிங்க் அஜய் குமார் . 127 நிமிடங்கள்   ரன்னிங்க் டைம் 


திரைக்கதை   எழுதி இயக்கி இருப்பவர் தீபக் மதுவனஹள்ளி 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகிக்கு   நாயகன்  தான் தன்  முன்னாள் கிளாஸ்மேட்  என்பது  தெரியும் , ஆனால்   நாயகனுக்குத்தெரியாது . இந்தமுடிச்சை  வைத்து முதல் பாதி திரைக்கதையை சுவராஸ்யமாக நகர்த்திய விதம் 


2  நாயகன்   பால் மாறுகிறானா?  என்பதை  டெஸ்ட்   வைத்து நாயகி ஆழம்பார்ப்பது 


3  திரைக்கதையுடன் இணைந்து பயணிக்கும் காமெடி டிராக் 


  ரசித்த  வசனங்கள் 

1 ஜப்பானிஷ்  ஜூஸ்சி யை  எதுக்கு நீ  குடிக்கறே? 


 இதைக்குடித்துத்தான் அவங்க புத்திசாலியா இருக்காங்க .நானும் அதே மாதிரி  ஆக வேண்டாமா? 



2  வேகமா  பேக் பண்ணு  , இல்லைன்னா இதே  சூட்கேசில் உன்னை பேக் பண்ணிடுவோம் 


3  குடும்பம் என்பது ப்ளுட்  இசை மாதிரி , அதை ஏன்  நீ பூகம்பம் ஆக்கறே  ? 



4   யார்   உனக்கு டிரைவிங்க் லைசென்ஸ் கொடுத்தது ? 


 ஹேண்ட்ஸ அப் 


ஓ .துப்பாக்கி லைசென்சும் குடுத்துட்டாங்களா? 


5    அப்பா  , உங்களையும் அறியாம என் சந்தோஷங்களை பூமிக்கு அடியில் புதைச்சுட்டீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  புதையல்   பானையை   தூக்கவே  முடியாமல் ஒருவர் தூக்கி வைப்பது போல வெயிட் உள்ளதாக முதலில் அதைக்காட்டுகிறார்கள் . பின்  அடியாள் அதை லாவகமாக , சுலபமாக தூக்கிக்கொண்டு ஓடுகிறான் . அது எப்படி ? 


2  வில்லன்   நாயகியைக்கல்யாணம்  பண்ண   நாள்   குறிப்பதும்  அந்த  மேரேஜுக்குக்காக தன மீசையை எடுத்து விட்டு  இப்போ  நான் அழகா இருக்கனா?  எனக்கேட்பதெல்லாம் ரண கொடுரம் 


3   வில்லனின்  மனைவி    வில்லன் இல்லாத போது எகிறுவதும் வில்லனைக்கண்டது பம்முவதும் ஏனோ ? . மேரேஜை பெரிதாக எதிர்க்க வில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கலகலப்பான  காமெடி ஆக்சன் டிராமா .கன்னடம்  புரிந்தால் பார்க்கலாம் . ரேட்டிங்   2.25 /5