ஹீரோ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு. ஹாஸ்பிடல்ல அவர் கிட்டே ஸ்டேட்மெண்ட் வாங்க எஃப் பி ஐ ( FBI) காத்திருக்கு . ஆனா அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் நினைவு இருக்கு . நினைவு தெரிஞ்ச வரை என்ன நடந்ததுன்னா ஹீரோவுக்கு ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பெண் குழந்தை . ஒரு நாள் 3 பேர் கொண்ட கும்பல் அவர் வீட்டுக்கு வந்து சிரியாவை சின்னாபின்னப்படுத்தும், அமெரிக்கா மாதிரி அவர் குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கிடுது .
பழிக்குப்பழி வாங்கத்துடிக்கறார். தன் குடும்பத்தை சிதைச்சது யார்?னு கண்டு பிடிக்க விசாரனையில் இறங்கறார். அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கு.
அதாவது கவர்மெண்ட்டே இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணி இருக்கு . அவர் நினைவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா மூளையில் பதிவு பண்ணி வைக்குது . உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கலை . வெறும் பிம்பம் மட்டுமே அவர் மூளைல பதிவாகி இருக்கு . அதாவது பதிவு செய்யப்பட்டிருக்கு
எதுக்காக கவர்மெண்ட் இப்படி பண்ணுச்சு ? ஹீரோ இதுக்கெல்லாம் எப்படி பதிலடி தர்றாரு? என்பதை எந்த அளவு வன்முறையும் , ரத்தமுமா சொல்ல முடியுமோ அந்த அளவு வல்கரா சொல்லி இருக்காங்க .
ஹீரோ Scott Adkins ஆள் ஜம்முன்னு இருக்கார் . ஜிம் பாடி . ஃபைட் சீன்ல கலக்கி எடுத்துட்டார் . பாடி லேங்குவேஜ் ல இன்னும் சுறு சுறுப்பு காட்டி இருகலாம் . குழந்தையுடன் கொஞ்சும் காட்சிகள் , மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் காட்சிகள் இன்னும் நல்லா சொல்லி இருக்கலாம். அப்போதான் அவங்க இறந்ததன் பாதிப்பு ஆடியன்சுக்கு பாதிப்பா உணர வைக்க முடியும் .
வில்லனா சூப்பர் ஸ்டார் ஜீன் கிளாடு வேண்டம் . இவர் ஹீரோவை விட செம எக்சசைஸ் பாடி . ஃபைட் சீனில் பொறி பறக்குது .
ஹீரோயின் , அந்த குழ்ந்தை எல்லாரும் கச்சிதமான நடிப்பு .
இன்னொரு ஹீரோயின் நம்ம ஊர் இலியானாவுக்கே அக்கா மாதிரி ரொம்ப ரொம்ப மெல்லிய தேகம் ,. அய்யோ பாவம் . காம்ப்ளான் அவங்கம்மா குடுக்கவே இல்ல போல
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஒரு ஆக்ஷன் படம் , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி பேஸ் ல சொல்லப்பட்டாலும் மிக நிதானமான அணுகுமுறை திரைக்கதை ல தெரியுது . வெல்டன் . பொதுவா இந்த மாதிரி கதைல ட்ரீட்மெண்ட் ஃபாஸ்ட்டா இருக்கனும்னு நினைப்பாங்க . இவர் வித்தியாசமா ஸ்லோவா சொல்லி இருக்கார்
2. படத்தில் 2 இடங்களில் யூகிக்க முடியாத திருப்பங்கள் வருது . குட்
3. வில்லன் ஜீன் கிளாடு வேண்டம்க்கு அளிக்கப்பட்ட அதீத முக்கியத்துவம் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் , கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் மாதிரி .காக்கிச்சட்டை சத்யராஜ் மாதிரி . ஒரு படத்தில் வில்லன் ரோல் பிரமாதமாக பேசப்பட்டால் ஆட்டோமேட்டிக்காக் அது மக்கள் மனதில் தங்கி விடும் சாத்தியக்கூறுகள் அதிகம்

இயக்குநரிடம் சில கேள்விகள்:
1. ஹீரோவுக்கு எந்த பழைய நினைவுமே வரவில்லை . முதன் முதலாக அவர் நுழையும் ஒரு வீட்டில் எந்த இடத்தில் எந்த சுவிட்ச் இருக்கு என்பதை துக்ல்லியமாக தெரிந்து வைத்திருப்பது எப்படி?
2. சிவப்பு கலர் கார் ஒன்றை ஹீரோ அபேஸ் பண்ணி பல இடங்களுக்கு போறார் . அந்த கார் ஓனர் ஹீரோவை சத்தம் போடறார் . அவ்வளவுதான், அட்லீஸ்ட் போலீஸில் கூட புகார் தர மாட்டாரா? எப்படியோ போய்ட்டு போகுதுன்னு அநாமத்தா விட அது என்ன சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரா?
3. ஹீரோவுக்கு ஒரு குழப்பம் . தன் மனைவி , மக்ள் கொல்லப்பட்டாங்களா? எல்லாம் டிராமாவா? அப்டின்னு . ஏன் அவர் கல்லறை போய் செக் பண்ண எந்த முயற்சியும் எடுக்கலை?
4. அரசாங்கம் ஏற்பாடு செஞ்ச ஹாஸ்பிடல்லயே ட்ரீட்மெண்ட் எடுக்கும் ஹீரோ உண்மை நிலவரம் அறிய ஏன் வேற பிரைவேட் ஹாஸ்பிடல் ல போய் தன்னை செக் பண்ணிக்கலை ?
5. கோபமாக இருக்கும் ஹீரோவை சந்திக்க வரும் உயர் அதிகாரி கையில் எந்த ஆயுதமோ , வேறு பாதுகாப்போ இல்லாம தனிமையில் அவரை சந்திச்சு சாவது எப்படி?
6. தேவைக்கு மேல ரொம்ப ஓவரா வன்முறை , ரத்தம் எதுக்கு ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. வாழ்த்திக்கொடுத்த சாபத்தை வரமா மாத்திக்கிட்டோம்
2. இங்கேயே இரு . 10 நிமிஷத்துல நான் வந்துடறேன்
அப்படி வர்லைன்னா ?
மறுபடி ஒரு 10 நிமிஷம் இரு
3. ஞாபகங்கள் எப்பவும் நம்மை துன்புறுத்திட்டுத்தான் இருக்கும்
1. வாழ்த்திக்கொடுத்த சாபத்தை வரமா மாத்திக்கிட்டோம்
2. இங்கேயே இரு . 10 நிமிஷத்துல நான் வந்துடறேன்
அப்படி வர்லைன்னா ?
மறுபடி ஒரு 10 நிமிஷம் இரு
3. ஞாபகங்கள் எப்பவும் நம்மை துன்புறுத்திட்டுத்தான் இருக்கும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-40
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் = 2.5 / 5
சி
பி கமெண்ட் - ஆக்ஷன் , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி விரும்பிகள் பார்க்கலாம் . பெண்கள் , மைனர்கள் , மாணவ , மாணவிகள் தவிர்ப்பது நல்லது . குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய படம்
டிஸ்கி - படத்துல 3 சீன் இருக்கு , ஆனா தியேட்டர்ல பார்த்தா நோ யூஸ் , சிங்கம் ல அனுஷ்கா வுக்கு கலர் கலரா என்னமோ அடிச்சு மறைச்ச மாதிரி திரைல ஏதோ புள்ளி மாதிரி காட்டி மறைச்சுட்டாங்க , டிவிடி ல பாருங்க