கேரளாவில் ஒரு கிராமம்.அதுல ஹீரோயின் கூட்டுக்குடித்தனமா இருக்காங்க. மாமனார் ரொம்ப வயசானவர் , மாமியார் 4 வருசமா கிடைல படுத்து கிடக்கார். கணவன் ஃபாரீன்ல இருக்கார் ., வயசானவங்களைப்பார்த்துக்கறதுக்காக ஹீரோயின் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஹவுஸ் ஒயிஃபா இருக்க வேண்டிய சூழல்
அருகில் கணவர் இல்லாததால் , பணியை விட்டதால் , வயசான மாமியாரைப்பார்த்துக்க வேண்டி இருப்பதால் ஹீரோயின் மெண்ட்டல் டிப்ரஷன்க்கு ஆளாகிறார். அவருக்கான ஒரே ஆறுதல் அவரது முன்னாள் காலேஜ் மேட் இந்நாள் கள்ளக்காதலன் தான்
அப்பப்ப இரவு நேரத்தில் காதலனை வீட்டுக்கே வர வெச்சு ஜாலியாக இருக்கார் . ஒரு கட்டத்தில் மாமியாரைக்கொலை செய்தால் தான் இனி நிம்மதியா இருக்க முடியும்னு நினைக்கறார். அதுக்கு காதலன் உதவி கேட்கிறார்
திட்டமிட்ட நாளில் இரவு நேரத்தில் காதலன் நாயகி வீட்டுக்கு வர்றான். அந்த நாள் இரவில் நடக்கும் சம்பவங்களே கதை
ஹீரோயினா துர்கா கிருஷ்ணன் ஆஜானுபாவகமான தோற்றம். ஆஷா சரத் , வரலட்சுமி சரத்குமார் போல ஜைஜாண்டிக் பர்சனாக வரும் அவர் தான் படத்தின் முதுகெலும்பு , பிரமாதமான நடிப்பு . மாமியாருக்கு பணிவிடைகள் செய்வதில் சலிப்பு காட்டுவதாகட்டும் , மாமனார் காது பட குரலை உயர்த்தி பேசுவதாகட்டும் , காதலனுடன் ஃபோனில் அடிக்கடி பேசுவதாகட்டும்,கதையின் பாத்திரமாகவே மாறிவிட்டார் ,ஆக்சன் காட்சிகளில் காட்டும் ஆக்ரோசம் செம
மாமனாராக வரும் இந்திரன்ஸ் மலையாளப்பட உலகில் காமெடியனாக அறிமுகம் ஆகி கேரக்டர் ரோல் செய்தவர் இதில் அருமையான ரோல், படத்தின் முன் பாதியில் சாதுவாக , இயலாதவராக அவர் காட்டும் பாடி லேங்க்வேஜ் , பின் பாதியில் காட்டும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எல்லாம் செம
காதலனாக த்யான் சீனிவாசன் புதுமுகம் போல . பிரமாதப்படுத்தவில்லை , அதே சமயம் மோசமும் இல்லை சராசரி நடிப்பு
பின்னணி இசை , ஒளிப்பதிவு( மனோஜ் பிள்ளை) படத்தின் முதுகெலும்பு ரெண்டு மணி நேரமே ஓடும் படத்தில் தேவையற்ற காட்சிகளே இல்லை எனும் அளவு கனக்ச்சிதமான எடிட்டிங்
சபாஷ் டைரக்டர் ( ரதீஷ் ரகுநந்தன்)
1 படத்தின் முதல் 20 நிம்டங்கள் ஸ்லோவாகப்போனாலும் யார் யார் என்ன கேரக்டர் என்ன சூழல் என்பதை விளக்கிய பிறகு படம் வேகம் எடுக்கிறது . மாமியாரைக்கொலை செய்ய முடிவு எடுத்த பின் படம் ஜெட் வேகம்
2 இந்தப்படத்தில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை , ஒவ்வொருவருவருக்கும் அவர் தரப்பில் நியாயம் இருக்கிறது அதனால் ஆடியன்சுக்கு இவர் மாட்டிக்கனும் , இவர் தப்பிச்சுடனும் என்ற ஒரு சார்பு எண்ணமே வர்லை . கதையின் போக்கில் ரசிக்க முடியுது
3 மாமியாரை ஈரத்துண்டு சுற்றி கொலை செய்ய முடிவெடுக்கும் காட்சி செம திகில் என்றால் அந்த துண்டு பின் காணாமல் போக துண்டைத்தேடும் காட்சி செம பரபரப்பு
4 ஈருடல் ஓருயிராக இருக்கும் நாயகி -காதலன் இருவருக்கும் வாக்குவாதம் வருவதும் இருவருமே ஒருவரை ஒருவர் தக்குவதும் புதிய திருப்பம்
5 பெரும்பாலான படங்களில் எல்லாம் முடிஞ்சு கடைசில போலீஸ் வரும், இதில் எல்லா மேட்டரும் முடிஞ்சு , கொலை முடிஞ்சு க்ளைமாக்ஸ்ல தான் நாயகியின் கணவனே எண்ட்ரி ஆவார் செம காமெடி சீன் அது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆரோக்யமாக இருக்கும் ஒருவரைக்கொல்ல உதவி தேவை , கிடைல கிடக்கும் மாமியாரை ரொம்ப ஈசியாக நாயகியே கொல்லலாமே? எதுக்கு உதவி ?
2 கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் நாயகி தன் வீட்டுக்கே இரவு நேரத்தில் காதலனை வர வைப்பது ரிஸ்க் ஆச்சே? கார் ஓட்டும் அவர் வெளி இடங்களிலோ ,, காதலனின் வீட்டுக்கோ செல்வதுதானே சேஃப்டி? எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க் எடுக்கிறார் ?
3 கிட்டத்தட்ட 75 கிலோ எடை அஞ்சே முக்கால் அடி உயரம் உள்ள நாயகி , ஓர்ளவு திடகாத்திரமான காதலன் இருவராலும் நோஞ்சானாக 40 கிலோ எடையும் நால்ரை அடி உயரமும் உள்ள மாமனாரை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது எப்படி ?
4 பின் பாதி படத்தில் வயலென்ஸ் அதிகம். உதவிக்கு வரும் நாயகியின் காதலனின் நண்பன் மாமனாரால் தாக்கப்பட்டு இறப்பது ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைத்திருக்கலாம்
ரசித்த வசனங்கள்
1 என் அம்மாவை நாந்தான் பார்த்துக்கனும் , மீதியை தெய்வம் பார்த்துக்கும்
2 அம்மாவாக இருந்தாலும் மலம் மலம் தான் , யூரின் யூரின் தான் , சுத்தம் பண்றவங்களுக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும்
3 இளமை இருக்கும்போது அதை அனுபவிச்சு வாழ முடியாம வயசானபின் வசதியா வாழ்ந்து என்ன பயன்?
ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 27/5/22 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கு , இது விரைவில் அமேசான் பிரைம்ல ரிலீஸ் ஆக இருக்கு . அடல்ட் கண்ட்டெண்ட் ஒரு இடத்தில் இருக்கு அதனால் ஃபேமிலியோட பார்க்க முடியாது, ஃபேமிலியில் உள்ளவர்கள் தனித்தனியாக பார்க்கலாம். சிறுவர்கள் தவிர்க்கவும். ரேட்டிங் 2.25 / 5