தலைவா பிரச்னை - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

தலைவா படம் விரைவில் வெளியாகும், அதுவரை ரசிகர்கள் பொறுமையுடனும்,
கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள்
விடுத்துள்ளார். தமிழகத்தில் தலைவா படம் வெளியாகதாதல் அவரது ரசிகர்கள்
சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோவையில் அவரது ரசிகர் ஒருவர் தற்கொலையே
செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் விஜய்
வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, நான் நடித்த தலைவா படம் ஆகஸ்ட்
9ம் தேதி திரையிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில
காரணங்களால் அந்த தேதியில் படம் வெளிவர முடியவில்லை.
என் மீது பாசமும், அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதவாக நான் அறிந்தேன். இது நமக்கு நல்லதல்ல, தலைவா படம் விரைவில் திரைக்கு வரும். அதுவரை ரசிகர்கள் பொறுமையுடனும், கண்ணியத்தோடும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்

தலைவா படத்திற்கு வரிவிலக்கு கிடையாது - தமிழக அரசு!!

விஜய் நடித்துள்ள தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு தர முடியாது என
தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கத்தில், நடிகர்
விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் நேற்று வெளியாக வேண்டியது. ஆனால் சில
பல பிரச்னைகளால் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும்,
வெளிநாடுகளிலும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான
முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவா படத்திற்கு யு
சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேளிக்கை வரியில் இருந்து விலக்கு
அளிக்கக்கோரி தமிழக அரசிடம் படக்குழுவினர் கேட்டிருந்தனர்.
அதன்படி படத்தை பார்த்த 7பேர் கொண்ட தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு குழுவினர், படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். படத்தில் சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், யு சான்று பெற்றாலும், ஆங்கில கலப்பு வசனங்கள் நிறைய இருக்கிறது என்றும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும், சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணத்தில் விஜய்யின் வசனங்கள் இருப்பதாலும் தலைவா படம் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்றும் தேவேந்திர பூபதி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 7பேர் கொண்ட உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறி அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே படம் ரிலீஸாவதில் சிக்கல் உள்ள நிலையில், படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பது ‘தலைவா’வுக்கு மேலும் ஒரு ‘தலைவலி’யை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வரூபத்திற்கு வந்த அதே நிலை தலைவாவுக்கு - கருணாநிதி அறிக்கை

விஜய்யின் தலைவா படம் ரிலீஸாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தி.மு.க.
தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தலைவா படம்
பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த படத்தில்
தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும்
ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசை தாக்குவதை போல இருப்பதாகக் கூறி, அந்தப்படம் வெளிவரும் தியேட்டர்களுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் முதல்– அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் வரி விலக்கு கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி - தினமலர்